####அறிவோம்####
நடப்பு நிகழ்வுகள் CURRENT AFFAIRS 21/06/2018 இந்தியா ராஜஸ்தானில் ஒரே நேரத்தில் 1.05 லட்சம் பேர் யோகா செய்து கின்னஸ் சாதனை!! உலக யோகா தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தானில் நடந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 1.05 லட்சம் பேர் இணைந்து யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-வது வருடமாக இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில், அம்மாநில முதல்மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவும், யோகா பயிற்சியாளாரான ராம்தேவ் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.05 லட்சம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் அதிகம் பேர் ஒன்றிணைந்து யோகா பயிற்சி மேற்கொண்ட இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. கொல்கத்தா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் உதவியாளராக திருநங்கை: ...