####அறிவோம்####
மொழிவாரி மாநிலம் உருவாக்க கமிட்டி மொழிவாரி மாநிலம் அமைக்க ஏற்படுத்தப்பட்ட முதல் கமிட்டி ஏஸ்.கே. தார் கமிட்டி. இது 1948 நவம்பரில் அமைக்கப்பட்டது. இது மொழிவாரியாக மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து 1948ஆம் ஆண்டு இறுதியில் ஜெ.வி.பி கமிட்டி அமைக்கப்பட்டது. ஜெ.வி.பி என்பது ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீத்தராமலு ஆகியோரின் முதல் எழுத்துக்கள் சுருக்கமாகும். இக்கமிட்டியும் மொழிவாரி மாநிலங்கள் அமைக்க ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தனி ஆந்திர மாநிலம் உருவாக்க கோரி போராடிய பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் மரணமடைந்ததால் ஏற்பட்ட பதற்றத்தை தனிக்க ஆகஸ்ட் 1, 1953இல் ஆந்திர மாநிலம் உருவாகியது. மொழிவாரிய பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் ஆந்திர மாநிலம். ஆந்திராவை தொடர்ந்து பிற மாநிலங்களை மொழிவாரியாக பிரிக்க மாநில மறுசீரமைப்பு கமிட்டி 1953இல் டிசம்பர் 22இல் பாசில் அலி தலைமையில் தொடங்கப்பட்டது. இதன் இரு உறுப்பினர்கள் எச்.என்.குன்ஸ்ரு மற்றும் கே.என்.பணிக்கர். இது 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க இந்தியாவை பரிந்துரை செய்தது. இதையடுத்து மாநில மறுசீரமைப்ப...