####அறிவோம்####
பொதுத் தமிழ் ஆறாம் வகுப்பு வாழ்த்து திருவருட்பா 1. திருவருட்பாவை எழுதியவர்? இராமலிங்க அடிகளார் 2. சிறப்பு பெயர்? திருவருட்பிரகாச வள்ளலார் 3. பிறப்பிடம்? கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தார் 4. பெற்றோர்? இராமையா - சின்னம்மையார் 5. வாழ்ந்த காலம்? 05/10/1823 - 30/01/1874 6. எழுதிய நூல்கள் ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம். 7. பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது? அறச்சாலை. 8. அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது? ஞானசபை. 9. சமர சன்மார்க்க நெறிகளை வழங்கினார். 10. இவர் பாடிய பாடலின் தொகுப்பு திருவருட்பா. 11. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர். 12. வள்ளலார் பாட்டை மருட்பா என்று அழைத்தவர்? ஆறுமுக நாவலர்.