####அறிவோம்####
குடும்ப விளக்கு பகுதி 4 மக்கட் பேறு மக்கட் பேறு அறுசீர் விருத்தம் "நகைமுத்து வேடப் பன்தாம் நன்மக்கள் பெற்று வாழ்க! நிகழுநாள் எல்லாம் இன்பம் நிலைபெற! நிறைநாட் செல்வர் புகழ்மிக்கு வாழ்க வாழ்க!" எனத் தமிழ்ப் புலவர் வாழ்த்த நகைமுத்து நல்வே டப்பன் மணம்பெற்று வாழ்கின் றார்கள். மிகுசீர்த்தித் தமிழ வேந்தின் அரசியல் அலுவற் கெல்லாம் தகுசீர்த்தித் தலைவ னான வள்ளுவன் அருளிச் செய்த தொகுசீர்த்தி அறநூ லின்கண் சொல்லிய தலைவி மற்றும் தகுசீர்த்தித் தலைவன் போலே மணம் பெற்றின்புற் றிருந்தார்! "மிகுசீர்த்தி........வள்ளுவன்" என்றது எதற்கு எனில் வள்ளூவன் என்பது அந் நாளில் அரசியல் அலுவலகத்தின் தலைவனுக்குப் பெயர் என்பதைக் குறிப்பதாகும். நாளெலாம் இன்ப நாளே! நகைமுத்தைத் தழுவும் வேடன் தோளெலாம் இன்பத் தோளே: துணைவியும் துணைவன் தானும் கேளெலாம் கிளைஞர் எல்லாம் போற்றிட இல்ல றத்தின் தாளெலாம் தளர்தல் இன்றி நடத்துவர் தழையு மாறே! பெற்றவர் தேடி வைத்த பெருஞ்செல்வம் உண்டென் றாலும், மற்றும்தான் தேட வேண்டும் மாந்தர்சீர் அதுவே அன்றோ? கற்றவன் வேடப் பன்தான் கடல்போலும் பலச ரக்கு விற்றிடும் கடையும் வைத