####அறிவோம்####
ஓரெழுத்து ஒருமொழி அ அழகு, சிவன், திருமால், எட்டு, சுட்டு, அசை, திப்பிலி ஆ ஆசாரம், அற்பம், மறுப்பு, நிந்தை, துன்பம், வியப்பு, இரக்கம், ஓர் இனம், சொல், வினா, விட சொல், பசு, ஆன்மா, வரை, நினைவு, உடன்பாடு இ அன்மைச்சுட்டு, இங்கே, இவன் ஈ அம்பு, அழிவு, இந்திரவில், சிறுபறவை, குகை, தாமரை, இதழ், திருமகள், நாமகள், தேன், வண்டு, தேனீ, நரி, பாம்பு, பார்வதி, கொடு உ சிவபிரான், நான்முகன், உமையாள், ஒரு சாரியை, ஓர் இடைச்சொல், சுட்டெழுத்து ஊ உணவு, இறைச்சி, திங்கள், சிவன், ஊன், தசை எ குறி, வினா எழுத்து ஏ ஓர் இடைச்சொல், சிவன், திருமால், இறுமாப்பு, அம்பு, விளிக்குறிப்பு, செலுத்துதல் ஐ அசைநிலை, அரசன், அழகு, இருமல், கடவுள், கடுகு, குரு, கோழை, சர்க்கரை, கண்ணி, சிவன், கிழங்கு, தலைவன், தும்பை, துர்க்கை, பருந்து, தந்தை ஓ ஒழிவு, மதகு, உயர்வு, இழிவு, கழிவு, இரக்கம், மகிழ்ச்சி, வியப்பு, நினைவு, அழைத்தல், ஐயம், நான்முகன் ஓள பாம்பு, நிலம், விளித்தல், அழைத்தல், வியப்பு, தடை, கடிதல் க அரசன், நான்முகன், தீ, ஆன்மா, உடல், காமன், காற்று, கதிரவன், செல்வன், திருமால், தொனி, நமன்,