####அறிவோம்####
வார்தா கல்வித் திட்டம் வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. சிறப்பு அம்சங்கள் அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...