####அறிவோம்####
வாரன் ஹேஸ்டிங்ஸ் ( 1772 - 1785 ) video link :- https://youtu.be/pjBuHl15jvk ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு 1600 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் ஆங்கிலயேய கிழக்கிந்திய வணிகக்குழு நிறுவப்பட்டது. இதற்கு அரசு பட்டயத்தை இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வழங்கினார். 1608 ஆம் ஆண்டு கேப்டன் ஹாக்கின்ஸ் என்பவர் முகலாய பேரரசர் ஜஹாங்கிரிடம் சூரத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கு அனுமதி கோரியது ஆனால் ஜஹாங்கிர் மறுத்து விட்டார். 1613 ஆம் ஆண்டு அனுமதி வழங்கினார் ஜஹாங்கிர். சர் தாமஸ் ரோ என்பவர் வணிக நிலையத்திற்கு சலுகைகளும், உரிமைகளையும் வாங்கித்தந்தார். 1639 ஆம் ஆண்டு பிரான்சிஸ்டே என்பவர் சென்னையை நிறுவி அங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அமைத்தார். 1668 ஆம் ஆண்டு அரசர் இரண்டம் சார்லெஸிடம் ஆண்டுக்கு 10 பவுண்ட் வாடகைக்கு வணிகக்குழு மும்பை தீவை பெற்றது. 1690 ஆம் ஆண்டு ஜாப் சார்னாக் வணிகக்குழு முகவர் சுதநூதி, கோவிந்தபூர், காளிகட்டம் ஆகிய மூன்று கிராமங்களை விலைக்கு வாங்கினார் அதுவே பின்னர் கொல்கத்தா நகரமாக வளர்ச்சியடைந்தது. ஆங்கில அரசர் மூன்றாம் வில்லியம்ஸ் நினைவாக வ...