####அறிவோம்####
கண்ணன் பாட்டு 4. கண்ணன் என் சேவகன். கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்: வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்; 'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால் பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்; வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; ... 5 பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்; ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்; தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்; உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்; என்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்; ... 10 சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்; சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை. இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்; எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்; மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன் ... 15 வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்; சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்; சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்; காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்; ... 20 இரவிற் பகலிலே எந்நேர மானாலும் சிரமத்