####அறிவோம்####
கண்ணன் பாட்டு 3. கண்ணன் என் தந்தை. (நொண்டிச் சிந்து) ப்ரதான ரஸம் - அற்புதம் பூமிக் கெனைய னுப்பி னான்; - அந்தப் புதுமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு; நேமித்த நெறிப்படி யே - இந்த நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே போமித் தரைகளி லெல்லாம் - மனம் போலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார், சாமி இவற்றினுக் கெல்லாம் - எங்க தந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன். ... 1 செல்வத்திற்கோர் குறையில்லை; - எந்தை சேமித்து வைத்த பொன்னுக் களவொன் றில்லை; கல்வியில் மிகச் சிறந்தோன் - அவன் கவிதையின் இனிமையொர் கணக்கி லில்லை; பல்வகை மாண்பி னிடையே - கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு; நல்வழி செல்லு பவரை - மனம் நையும்வரை சோதனைசெய் நடத்தை யுண்டு. ... 2 நாவு துணிகுவ தில்லை - உண்மை நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே; யாவருந் தெரிந்திடவே - எங்கள் ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு. மூவகைப் பெயர் புனைந்தே - அவன் முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்; தேவர் குலத்தவன் என்றே - அவன் செய்திதெரி யாதவர் சிலருரைப்பார். . ... 3 பிறந்தது மறக் குலத்தில்; - அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்; சிறந்தது பார்ப்பன ருள்ளே; - சில செட்டிம