####அறிவோம்####
 
  புதிய தலைமை செயலாளர்           தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் நாளையுடன் ஓய்வு பெறுகின்றனர். இதையடுத்து அந்த பதவிகளுக்கு புதிய அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது.      சண்முகம் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக  பொறுப்பேற்றார். 1981ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமனம் செய்யப்பட்டார்.   இவர் 1985ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். மேலும் கூட்டுறவு துறை முதன்மை செயலாளராக பதவி வகித்துள்ளார்.