####அறிவோம்####
கண்ணன் பாட்டு 17. கண்ணம்மா என் காதலி - 2. (பின் வந்து நின்று கண் மறைத்தல்) நாதநாமக்கிரியை - ஆதிதாளம் சிருங்கார ரசம் மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்; மூலைக் கடலினையவ் வான வளையம் முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்; நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி, நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே சாலப் பலபல நற் பகற்கனவில் தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். ... 1 ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே, ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே, பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன். பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன், ஓங்கிவரு முவகை யூற்றி லறிந்தேன்; ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்; வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா! மாய மெவரிடத்தில்? என்று மொழிந்தேன். . ... 2 சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே திருமித் தழுவி என்ன செய்தி சொல் என்றேன்; நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்? நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்? திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்? சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்? பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே பெற்ற நலங்கள் என்ன? பேசுதி என்றாள். ... 3 ந