####அறிவோம்####
அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும் 1. அம்மீட்டர் - மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுகிறது. 2. அலிமோ மீட்டர் - காற்றின் வேகமும், வீசும் திசையும் அளந்தறிய உதவும் காற்று வீச்சளவி. 3. ஆடியோ மீட்டர் - கேள்வித்திறனை அளக்க உதவும் கேளொலி அளவி. 4. ஆல்டி மீட்டர் - குத்துயரங்களை அளக்க உதவும் ஒருவகை சிறப்பு திரவமில்லா அழுத்தமானி. 5. எலெக்ட்ரோஸ்கோப் - மின்னேற்றம் கண்டு துலக்க உதவும் மின்காட்டி. 6. கம்யுடேட்டர் - மின்னோட்டத் திசையை மாற்ற அல்லது திருப்ப உதவும் மின் திசை மாற்றி, டைனமோ இயந்திரத்தில் மாறு மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவது. 7. கோலரி மீட்டர் - நிறங்களின் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் நிற அளவி. 8. கலோரி மீட்டர் - வெப்பத்தை அளக்க உதவும் வெம்மையளவி. 9. கால்வனோமீட்டர் - மின்னோட்டத்தை அளக்க உதவும் நுண் மின்னளவி. 10. கிளினிக்கில் தெர்மோமீட்டர் - மனித உடல் வெப்ப நிலையை அளக்க உதவும் நோயறி வெப்ப அளவி. 11. குரோனா மீட்டர் - கடல்பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிந்து கொள்ள உதவும் கருவி போன்று துல்லியமாகக் கால அளவைக் காட்டும் கால அளவி....