####அறிவோம்####
சுயமரியாதை இயக்கம் சுயமரியாதை இயக்கம் (self-respect movement) சமுதாயத்தின் பிற்பட்ட மற்றும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, மக்களின் வாழ்வியல் உரிமைக்காகவும் அவர்களின் மனித சமத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும் 1925 ஆம் ஆண்டு பெரியார் ஈ வெ இராமசாமி அவர்களால் இந்தியாவின், தமிழகமாநிலத்தில் (அப்போதைய சென்னை இராஜதானி) தொடங்கப்பட்டது. இவ்வமைப்பு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுகத்தினரின் சுயமரியாதையை வலியுறுத்தி, வர்ணாசிரம தர்ம தத்துவத்தில் ஊறிய சமூகத்தினிடமிருந்து இவர்களை மீட்டெடுக்கவும், அவர்களை சமுதாயத்தின் மேல்மட்டத்திற்கு உயர்த்தவும் பாடுபட்டது. இவ்வியக்கத்தின் கொள்கை தமிழகத்தில் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் என்று அனைவரிடமும் பரவியது. சிங்கப்பூரில் தமிழவேள் ஜி சாரங்கபாணி தலைமையில் பரவியது. 1944 ம் ஆண்டு முதல் இவ்வியக்கம் திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டு திராவிடர்களின் நலன்களில் அக்கறை கொண்ட கட்சியாகச் செயல்பட்டது. சுயமரியாதை இயக்கத்திலிருந்து தோன்றிய கட்சிகள் பின்னா