####அறிவோம்####
கண்ணன் பாட்டு 6. கண்ணன் என் சீடன். (ஆசிரியப்பா) யானே யாகி என்னலாற் பிறவாய் யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய் யாதோ பொருளாம் மாயக் கண்ணன், என்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும், என்னைத் துணைக்கொண்டு, என்னுடை முயற்சியால் ... 5 என்னடை பழகலால் என்மொழி கேட்டலால் மேம்பா டெய்த வேண்டினோன் போலவும், யான்சொலுங் கவிதை என்மதி யளவை இவற்றினைப் பெருமை யிலங்கின வென்று கருதுவான் போலவும், கண்ணக் கள்வன். ... 10 சீடனா வந்தெனைச் சேர்ந்தனன், தெய்வமே! பேதையேன் அவ்வலைப் பின்னலில் வீழ்ந்து பட்டன தொல்லை பலபெரும் பாரதம்; உளத்தினை வென்றிடேன்; உலகினை வெல்லவும், தானகஞ் சுடாதேன் பிறர்தமைத் தானெனும் ... 15 சிறுமையி னகற்றிச் சிவத்திலே நிறுத்தவும், தன்னுள்ளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும் உற்றிடேன்; இந்தச் சகத்திலே யுள்ள மாந்தர்க் குற்ற துயரெலாம் மாற்றி இன்பத் திருத்தவும் எண்ணிய பிழைக்கெனைத் ... 20 தண்டனை புரிந்திடத் தானுளங் கொண்டு, மாயக் கண்ணன் வலிந்தெனைச் சார்ந்து, புகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும், பல்வகை யால்அகப் பற்றுறச் செய்தான்; வெறும்வாய் மெல்லுங் கிழவிக் கிஃதோர் ... 25 அவலாய்மூண்டது; யானுமங் ...