####அறிவோம்####
குடும்ப விளக்கு பகுதி 3 திருமணம். 1. திருமணம் வேடப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு வில்லியனூர் மாவரசு, மலர்க்குழல், நாவரசு, நகைமுத்து ஆகியோர் மணவழகன் வீட்டுக்கு விருந்தினராய் வந்தபோது மணவழகன் மகனான வேடப்பனின் உள்ளங் கவர்ந்து சென்றாளன்றோ நகைமுத்து?-இங்கு... ப·றொடை வெண்பா புதுவை மணவழகன் பொன்னின் பரிதி எதிரேறு முன்னர் இனிய உணவருந்திப் பட்டுக் கரைவேட்டி கட்டி,நீளச் சட்டையிட்டுச் சிட்டைமுண்டு மேல்துவளச் சென்று கடைச்சாவி ஓர்கையால் தூக்கி ஒருகை குடையூன்றி ஆரங்கே என்றழைத்தான் தங்கம் அருகில்வந்தாள். 'ஆளும் கணக்கருமோ அங்குவந்து காத்திருப்பார் வேளையடு சென்று கடைதிறக்க வேண்டுமன்றோ? பாடல் உரைகேட்கப் பச்சைப் புலவரிடம் வேடப்பன் சென்றுள்ளான் வந்தவுடன், வில்லியனூர் சின்னா னிடம்அனுப்பித் தீராத பற்றான ஐந்நூறு ரூபாயை அட்டியின்றிப் பெற்றுவரச் சொல்' என்று சொல்லிநின்றான் தூய மணவழகன். 'நல்லதத்தான்' என்று நவின்றாள் எழில் தங்கம்! காலிற் செருப்பணிந்து கைக்குடையை மேல்விரித்து மேலும் ஒருதடவை மெல்லிமுகம் தான்நோக்கிச் சென்றான் மணவழகன். செல்லும் அழகருந்தி நின்றாள், திரும்பினாள் நெஞ்சம் உருகி