####அறிவோம்####
என்சிசி ( NCC ) -யின் 71-ஆவது அமைப்பு தினம் உலகிலேயே மிகப்பெரிய சீருடை இளையோர் அமைப்பான தேசிய மாணவர் படை (என்சிசி)-யின் 71-ஆவது அமைப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டங்களை நேற்று தொடங்கிய பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார், என்சிசி தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜென்ரல் ராஜீவ் சோப்ரா ஆகியோர் தேச சேவையில் தியாகம் செய்தவர்களுக்காக புதுதில்லியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய போர்நினைவு சின்னத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். ஒட்டுமொத்த என்சிசி சார்பில் அவர்கள் மலர்வளையம் வைத்தனர். என்சிசி அமைப்பு தினம் நாடு முழுவதும் படைப்பிரிவினரின் பங்கேற்புடன் அணிவகுப்புகளாக, கலாச்சார நிகழ்வுகளாக, சமூக மேம்பாட்டுத் திட்டங்களாக கொண்டாடப்பட்டன. இந்த ஆண்டு மகாராஷ்டிரா, பீகார், கேரளா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது, நிவாரண நடவடிக்கைகளில் என்சிசி மாணவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தினர். தூய்மைத் திட்டம், தூய்மைக்கான சைக்கிள் பேரணி, மாபெரும் மாசுத்தடுப்பு இருவார நிகழ்வு ஆகியவற்றிலும் இவர்கள் முழுமனதோடு ஈடுபட்டனர். டிஜிட்டல் கல்வியறிவு, சர்வதேச யோகா ...