####அறிவோம்####
கிலாபத் இயக்கம் கிலாபத் இயக்கம் அல்லது கிலாஃபட் இயக்கம் 1919-1924 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின்முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஓர் இயக்கம். முதலாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு ஆதரவாகப் போரிட்ட உதுமானியக் கலீபகம், போரில் ஏற்பட்ட தோல்வியினால் அழியும் நிலைக்கு ஆளானது. வெற்றி பெற்ற நேச நாடுகள் உதுமானியக் கலீபகத்தைப் பிரிவினை செய்து கலீபாவின் அதிகாரத்தை அழிக்க முடிவு செய்தனர். கலீபாவினை தங்கள் சமய அதிகாரத்தின் சின்னமாகக் கருதிய உலக முசுலீம்களிடையே இது பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. கலீபகத்தைப் பாதுகாக்க அலி சகோதரர்கள் என அழைக்கப்பட்ட முகமது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் 1919ம் ஆண்டு இந்தியாவில் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர். விரைவில் கிலாபத் இயக்கம் இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது. ஒட்டோமானிய கலீபகத்தைப் பாதுகாக்கும்படி பிரித்தானிய அரசை வலியுறுத்தியது. காங்கிரசு அப்போது துவங்கியிருந்த ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டது. ஒத்துழையாமை இயக்கத்துக்கு இந்திய முசு