####அறிவோம்####
லோக் ஆயுக்தா லோக் ஆயுக்தா ஊழலுக்கு எதிராக விசாரனை செய்யும் ஒரு மாநில நீதியமைப்பாகும். ‘லோக்பால்’, தமிழ்நாட்டில் லோக்ஆயுக்தா என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் 2018 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தவறு செய்த பொது ஊழியர்கள் மீது புகார் அளிக்கலாம். அந்தப் புகார்களை லோக்ஆயுக்தா அமைப்பு விசாரிக்கும். லோக்ஆயுக்தா தலைவர் மற்றும் ஊறுப்பினர்கள் கவர்னரால் பணி அமர்த்தப்படுவர். அவர்களை தேர்வு செய்யும் தேர்வு குழுவின் தலைவராக முதல்வர்இருப்பார். சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஊறுப்பினராக இருப்பர். லோக்ஆயுக்தா: இதன் தலைவராக உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது முன்னால் நீதிபதி அல்லது ஊழல் தடுப்புக் கொள்கை பொது நிர்வாகம் விழிப்புணர்வு நிதி மற்றும் சட்டத்தில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். லோக் ஆயுக்தாவின் ஊறுப்பினராக 4 பேர் இருப்பர். அவர்களில் 50% பேர் நீதித்துறையை சேர்த்தவராக இருக்க வேண்டும். லோக்ஆயுக்தா அமைப்பில் தலைவர் அல்லது ஊறுப்பினராக இருப்பவர் எம்.பி.யாகவோ எம்.எல்.ஏவாகவோ குற்றம் செய்ததற்காக...