####அறிவோம்####
தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்காக காமராஜர் ஆற்றிய பணிகளை ஆராய்க
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்:
பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படுகிறது. சென்னையில் உள்ள காமராஜர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
கல்வியறிவு தினத்தை காங்கிரஸ்,. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கொண்டாடி வருகின்றன.
எழுத்தறிவித்தவன் இறைவன்
அந்தக் காலத்தில் போதிய வருமானம் இல்லாததால் பிள்ளைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப மிகவும் கஷ்டப்பட்டனர். பிள்ளைகளை பள்ளிக்கு வரவைக்க தான் பிறந்த எட்டயபுரத்திலேயே பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார், காமராஜர். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதற்கிணங்க, இலவச கல்வி, மதிய உணவு, சீருடை என கல்வி வளர்ச்சி ஒன்றே இந்த நாட்டின் வளர்ச்சி என கருதி செயல்பட்ட காரணத்தினால், கல்விக்கண் திறந்த கடவுளாக போற்றப்படுகிறார், பெருந்தலைவர் காமராஜர்.
நம் நாடு முன்னேற நாளும் உழைத்த தலைவர், நாட்டு மக்களுக்கு பணியாற்றுவதில் தொய்வு ஏற்படக் கூடாது என்று கல்யாணமே செய்துக் கொள்ளாத தலைவர்.
இன்றைக்கு தமிழகம் கல்வி, ஐ.டி. தொழில்நுட்பத்தில் மேம்பட்டு திகழ காமராஜர் ஏற்படுத்தி கொடுத்த அடிப்படை கல்வி என்றால் மிகை இல்லை.
காமராஜர் எப்போதும் எளிமையான வாழ்க்கை நடத்தினார். வேட்டி, சட்டை அணிந்தார். அதிகமாக பேச மாட்டார். ஆனால், மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கேட்பார்.
பொற்கால ஆட்சி..!
தமிழக கிராமங்கள் பள்ளிக் கூடங்கள், பேருந்துகள், மின்சார விளக்குகளை பெற்றது காமராஜரின் ஆட்சியில்தான்.காமராஜர் ஆட்சியில் தொடக்கக் கல்வி எழுச்சி பெற்றது.
கல்வியில் தமிழகம் முன்னோடி
இந்தியாவில் 12% பேர் மட்டுமே உயர்கல்விக்குச் செல்கிறார்கள்.ஆனால் தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 17 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது.படிக்காத மேதையான காமராஜர் கல்விச் செல்வத்தை தான் பெரிதாக நினைத்தார். தனக்கு கிடைக்காத அந்தச் செல்வம் மற்றவர்களுக்கு கிடைக்க பாடுபட்டார்.
மாணவர்கள், மதியம் உணவு கிடைக்கிறது என்பதற்காகவது பள்ளிக் கூடத்துக்கு வருவார்கள் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். வாழும் போதே சிலைகள் எழுப்பப் பெற்ற தலைவர்கள் வெகுசிலரே. 1961, அக்டோபர் 9-ம் தேதி சென்னையில் காமராஜர் சிலையை பிரதமர் நேரு திறந்து வைத்து பெருமை சேர்த்தார். தன் குருவான காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி (ஆண்டு 1975) காமராஜர் காலமானார்.
கறுப்பு காந்தி என்று அழைக்கப்பட்ட காமராஜர் தியாகத்தின் மறு உருவமாக விளங்கினார் என்றால் மிகையில்லை!
Popular posts from this blog
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை யாவரு
Comments
Post a Comment