####அறிவோம்####
நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 2018 01/11/2018 முதல் 15/11/2018 வரை 1. கேரள அரசாங்கத்தின் மிகஉயரிய இலக்கியப்பரிசான எழுத்தச்சன் புரஸ்காரம் விருதுக்கு, நடப்பாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? M. முகுந்தன். 2. இந்தோ - திபெத்திய எல்லைக் காவல்படையின் புதிய தலைவர் யார்? S.S.தேஸ்வால். 3. அதிகாரப்பூர்வமாக ICC கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் இணைக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யார்? ராகுல் டிராவிட். 4. அண்மையில் 'சௌரா ஜலநதி' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது? ஒடிசா. 5. உலக வங்கியின் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலுள்ள நாடுகளின் பட்டியலில் (Ease of Doing Business Index) இந்தியா ஏத்தனையாவது இடத்தில் உள்ளது? 77ஆவது. 6. ஆசிய ஸ்னுக்கர் சுற்றுப்பயண நிகழ்வில் வெற்றிபெற்ற முதல் இந்திய வீரர் யார்? பங்கஜ் அத்வானி. 7. உலகின் முதல் இறையாண்மை நீலப் பத்திரத்தை அறிமுகம் செய்துள்ள நாடு எது? செஷல்ஸ். 8. கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பின் கீழ் வரும் யூனியன் பிரதேசம் எது? அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள். 9. BBCஇன் 21ம் நூற்றாண்டின் சிற...