நடப்பு நிகழ்வுகள்
நவம்பர் 2018
01/11/2018 முதல் 15/11/2018 வரை
1. கேரள அரசாங்கத்தின் மிகஉயரிய இலக்கியப்பரிசான எழுத்தச்சன் புரஸ்காரம் விருதுக்கு, நடப்பாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
M. முகுந்தன்.
2. இந்தோ - திபெத்திய எல்லைக் காவல்படையின் புதிய தலைவர் யார்?
S.S.தேஸ்வால்.
3. அதிகாரப்பூர்வமாக ICC கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் இணைக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
ராகுல் டிராவிட்.
4. அண்மையில் 'சௌரா ஜலநதி' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
ஒடிசா.
5. உலக வங்கியின் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலுள்ள நாடுகளின் பட்டியலில் (Ease of Doing Business Index) இந்தியா ஏத்தனையாவது இடத்தில் உள்ளது?
77ஆவது.
6. ஆசிய ஸ்னுக்கர் சுற்றுப்பயண நிகழ்வில் வெற்றிபெற்ற முதல் இந்திய வீரர் யார்?
பங்கஜ் அத்வானி.
7. உலகின் முதல் இறையாண்மை நீலப் பத்திரத்தை அறிமுகம் செய்துள்ள நாடு எது?
செஷல்ஸ்.
8. கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பின் கீழ் வரும் யூனியன் பிரதேசம் எது?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்.
9. BBCஇன் 21ம் நூற்றாண்டின் சிறந்த 100 பிறமொழி திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய படம் எது?
பதேர் பாஞ்சாலி.
10. உலகின் மிக உயரமான 'ஒற்றுமை சிலை'யை வடிவமைத்த இந்திய சிற்பி யார்?
ராம் V சுதார்.
11. செயல்பாட்டிலிருந்து நிறுத்தப்பட்ட எந்த விமானந்தாங்கிய கப்பல், இந்தியாவின் முதல் கடல்சார் அருங்காட்சியகமாகவும், கடல்சார் சாகச மையமாகவும் மாற்றப்பட்டுள்ளது?
ஐ என் எஸ் விராட்.
12. ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய செயற்கைக்கோள் வழிகாட்டல் முறை எது?
கலீலியோ ( Galileo ).
13. இரண்டு மேம்படுத்தப்பட்ட கிரிவக் 3ஆம் வகுப்பு பீரங்கி போர்க்கப்பல் வாங்குவதற்காக எந்த நாட்டுடனான $950 மில்லியன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
ரஷ்யா.
14. 2018 FIH ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பையின் அதிகாரப்பூர்வ பங்குதாரராக உள்ள இந்திய நிறுவனம் எது?
டாடா எஃகு.
15. எந்த மாநிலத்தில் 'தர்மா கார்டியன் - 2018' என்ற முதல் இந்திய - ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி தொடங்கியுள்ளது?
மிசோரம்.
16. 23ஆவது உலக பெருநிறுவன விளையாட்டுகளை நடத்தும் நாடு எது?
கத்தார்.
17. அண்மையில் எந்த தேதியில் உலக சைவ உணவுப்பழக்க தினம் கடைப்பிடிக்கப்பட்டது?
நவம்பர் 1.
18. ஒடிசாவில் ஜர்சுகுடா விமான நிலையம் அம்மாநிலத்தின் எந்த விடுதலைப் போராட்ட வீரரின் பெயர் கொண்டு மாற்றப்பட்டுள்ளது?
சுரேந்திர சாய்.
19. அண்மையில் காலமான டோசகே ஷங்கே (Ntozake Shange), எந்த நாட்டை சேர்ந்த நாடக ஆசிரியரும், கவிஞரும் ஆவார்?
அமெரிக்கா.
20. நவம்பர் 1 அன்று அதன் மாநில உதய தினத்தை கொண்டாடாத மாநிலம் எது?
ஜார்க்கண்ட்.
21. 13 ஆவது உலக சாம்பியன் ஷிப் தங்கப்பதக்கங்களை வென்ற முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆன சிமோன் பைல்ஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அமெரிக்கா.
22. NBFC பத்திரங்களுக்கு PCE வழங்க சமீபத்தில் வங்கிகளுக்கு RBI அனுமதியளித்துள்ளது, இதில் PCE என்றால் என்ன?
Partial Credit Enhancement.
23. ஐ.நா.வின் நடப்பாண்டு உலக நகரங்கள் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
Building Sustainable and Resilient Cities.
24. மேற்கு வங்கத்தில் துர்கா அழுத்தக் தேக்க கட்டுமானத்தை மேற்கொள்வதற்காக ரூ.18.17 கோடி மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் இந்தியாவும் எந்த நாடும் கையெழுத்திட்டுள்ளது?
ஜப்பான்.
25. அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property) பற்றிய முதலாவது இந்திய - அமெரிக்க பேச்சுவார்த்தை சமீபத்தில் எந்த நகரத்தில் தொடங்கியது?
புது தில்லி.
26. 2018 பெண்கள் உலக குத்துசண்டை சாம்பியன் ஷிப்பின் விளம்பர தூதர் யார்?
மேரி கோம்.
27. நடப்பாண்டு இந்திய சர்வதேச செர்ரிப்பூக்கள் திருவிழா நடைபெறயுள்ள நகரம் எது?
ஷில்லாங்.
28. ஓலா இடம்பெயராற்றல் நிறுவனத்தின் (OMI) நடப்பாண்டு ‘Ease of Moving’ அறிக்கையில் பொதுக் போக்குவரத்தில் முதலிடம் பெற்றுள்ள நகரம் எது?
கொல்கத்தா.
29. 2018 ரோம் திரைப்பட விழாவில் இந்தியா சார்பாக தெரிவான ஒரே திரைப்படம் எது?
மேரே பியாரே பிரைம் மினிஸ்டர்.
30. அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ் குடியரசுத்தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்கிறார்?
பிரிவு 124.
31. ஆயுர்வேத மருத்துவத்தில் தொழில்முனைவு மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்ற நகரம் எது?
புது தில்லி.
32. கடன் பெறுவோரின் விவரங்களை சேகரிப்பதற்காக PCR’ஐ அமைப்பதற்கான பணிகளை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. இதில் ‘PCR’ என்றால் என்ன?
Public Credit Registry.
33. இந்தியாவில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக எந்த AR / VR குழுவை IAMAI அமைத்துள்ளது?
நம்ரிதா மஹிந்ரோ குழு.
34. சமீபத்தில் எந்தத் தேதியில் உலக சுனாமி விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது?
நவம்பர் 5.
35. அனைத்திந்திய ''செயலி வழி முன்பதிவில்லாத பயணச்சீட்டு'' பெறும் வசதியை (UTS on
Mobile) இந்திய ரயில்வே – CRIS உருவாகியுள்ளது CRIS இன் தலைமையகம் எங்குள்ளது?
புது தில்லி.
36. சமீபத்தில் காலமான மூத்த விடுதலை போராட்ட வீரரும், இந்திய தேசிய ராணுவத்தின் உறுப்பினருமான V.ரத்தினம், எந்த மாநிலத்தவராவார்?
தமிழ்நாடு.
37. எந்த நகரத்தில் காற்று மாசு மற்றும் சுகாதாரம் பற்றிய WHO வின் முதலாவது உலகளாவிய மாநாடு நடத்தப்பட்டது?
ஜெனீவா.
38. அண்மையில் எந்த நகரத்தில் 'லிட்டில் இந்தியா கேட்' திறக்கப்பட்டது?
மேடான் ( இந்தோனேசியா ).
39. அண்மையில் எந்த நகரத்தில் ''சிக்னேச்சர் பாலம்'' என்ற இந்தியாவின் முதல் சமச்சீரற்ற வடங்கள் தாங்கும் பாலம் திறந்துவைக்கப்பட்டது?
தில்லி.
40. குடிமக்கள் சேவைகளுக்காக மின்னாளுகை திட்டமான ‘CCTNS' ன் கீழ் எந்த மாநில காவல்துறைக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது?
அசாம்.
41. புகழ்பெற்ற ராஜாராம் மோகன் ராய் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிக்கையாளர் யார்?
N.ராம்.
42. 18 ஆவது IORA வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற்ற இடம் எது?
டர்பன்.
43. இந்தியாவின் முதல் பிளாக்செயின் வழி கடன் சான்று (LC) பெற்றுள்ள நிறுவனம் எது?
ரிலையன்ஸ் தொழிற்சாலைகள்.
44. எந்தெந்த பயிர்களுக்கு பசுமை செயல்திட்டம் (Operation Greens) அமல்படுத்துவதற்கான நெறிமுறை உத்திகளுக்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது?
தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு.
45. ஈரானுக்கான இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
கத்தம் தர்மேந்திரா.
46. ரோலக்ஸ் பாரிஸ் மாஸ்டரில் நடப்பாண்டு ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
கரண் கச்சனோவ்.
47. “The Fire Burns Blue: A History of Women’s Cricket in India” என்ற நூலை எழுதிய விளையாட்டுத் துறை பத்திரிக்கையாளர் யார்?
காருண்யா கேசவ்.
48. நடப்பாண்டு இந்திய தேசிய ஆயுர்வேத தினத்தின் கருப்பொருள் என்ன?
Ayurveda for Public Health.
49. எந்த நகரத்தில் புதிதாக கட்டப்பட்ட இகானா கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது?
லக்னோ.
50. பாஸ்டனில் இந்தியா குளோபலால் ‘Distinguished Fellow’ விருது யாருக்கு வழங்கப்பட்டது?
அனுபம் கேர்.
51. எந்த மாநிலத்திற்கு தனி உயர்நீதிமன்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு உச்சநீதிமன்றம் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது?
ஆந்திரப்பிரதேசம்.
52. சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (AIBA) புதிய தலைவர் யார்?
கபூர் ரகிமோவ் (Gafur Rakhimov).
53. தொழிற்நுட்பங்கள் அடிப்படையிலான மற்றும் குடிமக்கள் தோழமைமிகு 'மோ பேருந்து' சேவையை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
ஒடிசா.
54. ஆந்திர மாநிலத்தில் நிலையான வேளாண்மை மேற்கொள்வதற்காக எந்த சர்வதேச அமைப்பு அண்மையில் $172 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
உலக வங்கி.
55. எந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய (ITU) கழகத்தின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?
2019 முதல் 2022 வரை.
56. ஈரானிடம் இருந்து எண்ணெய் பெறுவதற்கு அமெரிக்கா எந்ததெந்த நாடுகளுக்கு விலக்கு அளித்துள்ளது?
சீனா, தைவான், கிரேக்கம், ஜப்பான், தென் கொரியா, இந்தியா, இத்தாலி, துருக்கி.
57. மக்களவையின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
சினேகலதா ஸ்ரீவஸ்தாவா.
58. குவைத்தில் நடந்த 2018 ஆசிய ஷாட்கன் சாம்பியன் ஷிப்பில் ஆடவர் ஸ்கீட் தங்கத்தை வென்ற இந்திய வீரர் யார்?
அங்கத் வீர் சிங் பஜ்வா.
59. ஆந்திர பிரதேச சீரமைப்பு சட்டம் 2014 இன் எந்தப் பிரிவின் கீழ் அம்மாநிலத்தில் மத்திய பழங்குடி பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது?
13ஆவது.
60. அண்மையில் காலமான லாலன் சரங் எந்தப் பிராந்திய திரையுலகை சேர்ந்தவராவார்?
மராத்தி.
61. எந்த நாட்டில் 5 ஆவது உலக புத்த மன்றம் நடைபெற்றது?
சீனா.
62. இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே 25 ஆவது “SIMBEX – 18” என்ற கடல்சார் பயிற்சி தொடங்கியுள்ளது?
சிங்கப்பூர்.
63. ''மாற்றுத்திறனுடைய இளையோருக்கான உலகளாவிய IT சவால்கள் - 2018'' என்னும் நிகழ்வை எந்த நாட்டுடன் இணைந்து இந்தியா நடத்துகிறது?
தென் கொரியா.
64. எந்த நாட்டில் தீர்வுகளை மையமாகக்கொண்ட முதல் ''உலகளாவிய குளுமை புத்தாக்க மாநாடு – Global Cooling Innovation Summit” நடைபெறவுள்ளது?
இந்தியா.
65. உலகின் முதல் AI செய்தி அறிவிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ள செய்தி நிறுவனம் எது?
சின்குவா.
66. எந்தக் துறைமுகக் கூட்டணிக்கு இந்திய தூர்வாரல் கழக நிறுவனத்தில் உள்ள இந்திய அரசின் 100% பங்குகளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது?
பாராதீப் துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகம், ஜவஹர்லால் நேரு துறைமுகம்.
67. இந்திய போட்டி ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
அசோக் குமார் குப்தா.
68. அண்மையில் பிரான்ஸின் மிகஉயரிய குடிமக்கள் விருதான “Knight of the Legion of Honour” விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்தியர் யார்?
ஜவஹர் லால் சரின்.
69. அண்மையில் எந்தத் தேதியில் இந்தியாவில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் (National Cancer Awareness Day) கடைப்பிடிக்கப்பட்டது?
நவம்பர் 7.
70. 500 கி.கி திறன்கொண்ட எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய சூரிய ஆற்றலில் இயங்கும் குளிர்பதன சேமிப்பு சாதனத்தை உருவாக்கியுள்ள ஐஐடி எது?
ஐஐடி மெட்ராஸ்.
71. நடப்பாண்டு பூச்செள சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் வென்றவர் யார்?
கெண்டோ மொமோடா (Kento Momota).
72. 65 கி.கி பிரிவில் உலகத்தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய மல்யுத்த வீரர் யார்?
பஜ்ரங் புனியா.
73. அண்மையில் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட M777 Howitzers, எந்த நாட்டிலிருந்து வாங்கப்பட்டது?
அமெரிக்கா.
74. புகழ்பெற்ற ஸ்ட்ராத்கிளைட் பல்கலையால் அண்மையில் கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்திய மலையேற்ற வல்லுநர் யார்?
அருணிமா சின்ஹா.
75. நடப்பாண்டு உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அறிவியல் தினத்தின் (World Science
Day for Peace and Development) கருப்பொருள் என்ன?
Science, a Human Right.
76. பொது நலவாழ்வுக்கான யோகா குறித்த சர்வதேச மாநாடு நடைபெறும் நகரம் எது?
பனாஜி.
77. “Jashn-e-Virasat-e-Urdu” விழாவை கொண்டாடும் மாநில அரசு எது?
தில்லி.
78. INSPIRE 2018’ன் போது EESL மற்றும் ADB ஆகியவை ஒரு EERFஐ அமைக்க $13 மில்லியன் உலகளாவிய சுற்றுசூழல் வசதி மானியத்திற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுதிட்டன இதில் EERF என்பது எதை குறிக்கிறது?
Energy Efficiency Revolving Fund.
79. சமீபத்தில் காலமான ஆனந்த் குமார் எந்த மத்திய அமைச்சராகத்தில் பொறுப்பு வகித்தார்?
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம்.
80. 33 ஆவது ASEAN மாநாட்டின் கருப்பொருள் என்ன?
Resilient and Innovative ASEAN.
81. பவளப்பாறைகளை அழிக்கும் நச்சு மிகுந்த சூரிய ஒளிகாப்பு களிம்புகளை (Sunscreen) தடை செய்துள்ள உலகின் முதல் நாடு எது?
பலாவு.
82. துணிச்சலுக்கான நடப்பாண்டு லண்டன் பத்திரிகை சுதந்திர விருது பெற்ற இந்திய ஊடகவியலாளர் யார்?
சுவாதி சதுர்வேதி.
83. தேசியப் பொருளாதார ஆராய்ச்சி செயலகத்தின் (NBER) அண்மைய ஆய்வறிக்கையின் படி இந்தியாவின் மிகவும் நெரிசலான நகரம் எது?
பெங்களூரூ.
84. ஏழைகள் மற்றும் நலிந்தோருக்கான இலவச சட்ட உதவியை அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு எது?
பிரிவு 39A.
85. “Notes of a Dream the Authorized Biography of A.R. Rahman” என்ற நூலின் ஆசிரியர் யார்?
கிருஷ்ணா திரிலோக்.
86. உயர்கல்வி ஆசிரியர்களுக்கான ‘LEAP’ என்ற திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதில் ‘LEAP’ என்றால் என்ன?
Leadership for Academicians Programme.
87. தனித்துவமிக்க பிரிவில் பாதுகாப்புக்கான நடப்பாண்டு UNESCO ஆசிய - பசிபிக் விருது வென்றுள்ள இந்தியாவின் மறுசீரமைப்பு திட்டம் எது?
LAMO மையம்.
88. இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே முதலாவது இருதரப்பு கடற்படைபயிச்சியான 'சமுத்திர சக்தி - 2018' தொடங்கியுள்ளது?
இந்தோனேசியா.
89. 2019 பொதுத்தேர்தலில் இளையோரின் ஈடுபாட்டை அதிகரிக்க டுவிட்டர் இந்தியா எந்த சமூக முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது?
#PowerOf18.
90. அண்மையில் காலமான ஸ்டான் லீ எந்த நாட்டை சார்ந்த புகழ்பெற்ற காமிக் புத்தக எழுத்தாளராவர்?
அமெரிக்கா.
91. பப்புவா நியூ கினியாவில் உள்ள கிலுவே மலையில் ஏறிய இந்தியர் யார்?
சத்யரூப் சித்தந்தா.
92. ASEAN பொருளாதார சமூக சபையில் 17 ஆவது கூட்டம் நடைபெற்ற நாடு எது?
சிங்கப்பூர்.
93. யாருக்கு நடப்பாண்டின் முனின் பார்கோடோகி இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது?
தேபாபூசன் போராஹ்.
94. அண்மையில் இந்தியாவின் எந்தக் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்கு வசதியை அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது?
பாடூர.
95. 38ஆவது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் (IITF-2018) பங்குதாரர் நாடு எது?
ஆப்கானிஸ்தான்.
96. நடப்பாண்டுக்கான உலக நீரிழிவு தினத்தின் கருப்பொருள் என்ன?
The Family and Diabetes.
97. எந்த ஆற்றின் மீது இந்தியாவின் முதல் பல்வகை முனையம் திறக்கப்பட்டுள்ளது?
கங்கை.
98. நடப்பாண்டு உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்க சந்தை மாநாட்டை நடத்தும் நாடு எது?
இந்தியா.
99. உலக சுங்க அமைப்பின் பிராந்திய கூட்டம் நடைபெறும் இந்திய நகரம் எது?
ஜெய்ப்பூர்.
100. 9ஆவது துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு 2019இல் பங்குதாரர் நாடு எது?
ஐக்கிய அரபு நாடுகள்.
Comments
Post a Comment