####அறிவோம்####
அறிவியல்
- 550 பவுண்ட் எடையை ஒரு வினாடியில் ஒரு அடி உயரம் நகர்வதற்கு தேவைபடும் சக்தியே ஒரு குதிரை சக்தி எனப்படும்.
- ஆப்டிகல் பைபரில் பயன்படும் தத்துவம் முழு அக எதிரொளிப்பு.
- நாளொன்றிற்கு சுமார் 1,700 லிட்டர் ரத்தம் சிறுநீரகத்தின் வழியே வந்து திரும்புகிறது. இதில் சுமார் 1.5 லிட்டர் வடிநீர் கழிவுகளாக பிரித்தெடுக்கப்பட்டு சிறுநீராக வெளிவருகிறது.
- சிறுநீரகத்திற்கு ஒவ்வொரு நிமிடமும் சுமார் 1,200 மி.கி.ரத்தம் வருகிறது.
- 'மலேரியா' என்பது ஒரு இத்தாலியச் சொல். இதற்கு 'அசுத்தமான காற்று' என்று பொருள்.
- ஆஸ்திரேலியாவில் 10 மீட்டர் நீளத்தில் ஒரு வாழைப்பழ சிலை வைக்கப்பட்டு உள்ளது.
- உலக வரலாற்றில் சீனாவில் 1876 முதல் 1879 வரையிலான ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சமே உலகின் கொடிய பஞ்சமாக அறியப்படுகிறது. இதில் ஏறத்தாழ 90 லட்சம் மக்கள் பலியானார்கள் என்று கணக்கிடப்பட்டது.
- மேரிகியூரி அம்மையாரின் வீடு ஒரே குடும்பத்தில் 4 பேர் நோபல் பரிசு வென்ற சாதனைக் குடும்பமாக விளங்குகிறது.
- மண்ணில் குளோரைடு கலத்திருந்தால் நீர் சுவைக்கும்.ஆனால் சுத்தமான நீர் என்றால் சுவையே இருக்காது.
- தண்ணீருக்கு அதில் கலந்துள்ள உப்புக்களால் தான் சுவை ஏற்படுகிறது. மண்ணில் பை கார்பனேட் உப்பு அதிகமிருந்தால் நீர் உவர்க்கும்.
- 100 கிராம் பார்லியில் 54.4 சதவிகிதம் நார்ச்சத்து உள்ளது.ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவும்.
- குளிர் பானங்களில் உள்ள அமிலத்தின் பெயர் கார்போனிக்.
- வெள்ளை நிற தோல் உடையவர்களின் சருமத்தில் காணப்படாத நிறமி மெலனின்.
- பாலின் சுத்தத்தன்மையை அறிய உதவும் கருவி லாக்டோமீட்டர்.
- காலரா நோய் "விப்ரோகாமா" என்ற கிருமியால் பரவும் தன்மையுடையது.
- களிமண்ணின் அறிவியல் பெயர் "ஹைட்ரேடட் அலுமினியம் சிலிக்கெட்" என்பதாகும்.
- ஒலி வேகத்தில் செல்லும் வான ஊர்திகளின் வேகத்தை அளக்க "மாக்மீட்டர்" எனும் கருவியை பயன்படுத்துகிறார்கள்.
- எலும்பு முறிவினை கண்டறிய "எக்ஸ்-கதிர்கள்" பயன்படுகின்றன.
- தண்ணீர் "0" டிகிரியில் திடப்பொருளாகவும்,100 டிகிரியில் வாயுவாகவும் மாறும் தன்மை உடையது.
- மயக்கமருந்து,கால்சியம் போரான்,பேரியம் போன்ற மூலகங்களை கண்டுபிடித்தவர் சர் ஹம்பிரி டேவி ஆவார்.
- மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கின்றன.
- நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு வாயிலுள்ள உமிழ்நீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
- உமிழ்நீரில் மியூக்கஸ்,ப்ரோடீன்,தாது உப்புக்கள்,மற்றும் அமிலேஸ் என்கிற என்சைம் ஆகியவை இருக்கின்றன.
- சளிக்கான மருத்துவயியல் பெயர் "நேஸோபாரின்ஜிடிஸ்".
- பாலின் சுத்தத்தன்மையை அறிய உதவும் கருவி லேக்டோ மீட்டர்.
- முதுகுத்தண்டுவடம் 1.3 அங்குல விட்டமும் 18 அங்குல நீளமும் கொண்டது.
- வெப்பமானிகளில் அடைக்கப்பட்டுள்ள திரவம் பாதரசம்.
- மனித மூளையின் எடை 1.36 கிலோ கிராம்.
- உடலில் கருவிழியில் ரத்தம் பாயாது.
- ஒரு நாளில் 16 லட்சத்து 80 ஆயிரம் மைல்கள் தூரம் ரத்தம் உடலில் சுற்றுகிறது.
- 23 ஆயிரத்து 40 தடவைகள் நாம் ஒரு நாளில் சுவாசிக்கிறோம்.
- ஒரு நாளில் மூன்றேகால் பவுண்ட் எடையுள்ள உணவை சாப்பிடுகிறோம்.
- ஒரு நாளில் 750 தடவை தசைகளை அசைக்கிறோம்.
- ஒரு நாளில் 7 கோடி மூளை செல்களுக்கு வேலை கொடுக்கிறோம்.
- 0.000046 அங்குலம் நகம் ஒரு நாளில் வளர்கிறது.
- ஒரு நாளில் ஒன்றரை லிட்டர் நீரை சிறுநீரகம் வெளியேற்றுகிறது.
- பிறந்ததில் இருந்து உடலில் வளராத உறுப்பு கண்விழிகள் ஆகும்.
- பல்புகளில் ஒளிரும் இழையாக பயன்படுத்தப்படும் 'டங்ஸ்டன்' என்ற உலோகம் உருக 3 ஆயிரத்து 387 டிகிரி வெப்பம் தேவைப்படுகிறது.
- இரும்பு போன்ற சில உலோகங்கள் உருக 1000 டிகிரி வெப்பம் தேவைப்படுகிறது.
- 'காலியம்' என்ற உலோகத்தை நமது உள்ளங்கையில் வைத்தாலே உருகிவிடும். இவற்றின் உருகு நிலை நமது உடல் வெப்பநிலைக்கு கீழ்தான்.
- நமது உடலின் சராசரி வெப்பநிலை 36.9 டிகிரி செல்சியஸ்.
- சிறப்பு அதிக ஆற்றல் தரக்கூடியது ஓட்ஸ் உணவு. 100 கிராம் ஓட்ஸ் 607 கலோரி ஆற்றல் வழங்க வல்லது.
- செல்லின் ஊடுபரவல் அழுத்தத்தை சீராக வைக்கும் தாது "பொட்டாசியம்" ஆகும்.
- நமது உடலில் உதடுகளில் வியர்ப்பது இல்லை.
- எலும்புகளுக்கும், பற்களுக்கும் அவசியமான தாது கால்சியம்.
- நமது உடம்பில் உள்ள மிகச் சிறிய எலும்பு ஷ்டேபஸ்.
- பாக்சைட்டின் உலோகக் கலவை டியூரா அலுமினியம்.
- ஒரு நாளில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 689 தடவைகள் இதயம் துடிக்கிறது.
- சோடா நீரில் கார்பன்-டை-ஆக்சைடு வாயு கரைந்து இருக்கிறது.
- சிவப்பு ரத்த அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்.
- கடிகார ஓசையின் அளவு 30 டெசிபல்.
- மனிதனுடைய புற்று நோயை மிக துல்லியமாக கண்டுபிடிக்க உதவும் கருவி "எண்டோஸ்கோப்பி".
- நமது கைகள் ஒவ்வொன்றிலும் 100 தசைகள் உள்ளன.
- 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தினமும் 800 மில்லி கிராம் கால்சியம் தேவை.
- 10 முதல் 18 வயதுடையவர்களுக்கு ஆயிரம் மில்லி கிராம் கால்சியம் அவசியம்.
- மனிதன் உடலில் அநோபலேஸ் என்ற கொசுக்கள் கடிபதால் மலேரியா நோய் பரவுகுது.
- காந்தம் என்பது இயற்கை காந்தம்,செயற்கை காந்தம் என இரு வகைப்படும்.
- இரும்பு ஆக்சைடுடன் பேரியம் அல்லது ஸ்ட்ரான்சியம் எனும் உலோகத்தை கலந்து செயற்கை முறையில் தயாரிக்கப்படுபவை செராமிக் காந்தம் எனப்படும்.
- காந்தத்தின் திறனை காந்த மீட்டர் மூலம் அளவிடலாம்.
- காந்த சக்தியின் பயன்பாடு கி.பி 15 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்கியது.
- உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே 70% ஆகும்.
- நிலத்தடி நீரில் தாதுப் பொருட்கள் நிறைய அடங்கி உள்ளன.
- நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீர் பொதுவாக மென்மையாகவும்,நிலத்தடி நீர் கடின நீராகவும் இருக்கும்.
- கடின நீருடன் ஒப்பிடும்போது மென்னீர் நோய்களை குணப்படுத்தும்.
- ஒசோனை கொண்டு நீரை சுத்தப்படுத்தும் முறை கடந்த 75 ஆண்டுகளாகவே ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- "சோனோசோன்" என்று அழைக்கப்படும் புதிய முறையை கொண்டு சுத்தமில்லாத நீரை தூய்மையாக்க முடிகிறது.
- ரத்த அழுத்தத்தை அறிய பயன்படுத்தும் கருவியின் பெயர் "ஸ்பிக்மோ மீட்டர்".
- நீர் உறைந்து பனிக்கட்டியாக மாறும் போது அதன் பரிமாணம் அதிகரிக்கும்.
- இருதயம் துடிக்கும் முறையை படமாக வரைந்து காட்டும் முறை "எலெக்ட்ரோ கார்டியோகிராம்" என்று அழைக்கப்படுகிறது.
- ரத்தத்தில் 60% பிளாஸ்மா உள்ளது.
- நமது கண்ணிலுள்ள "ரெட்டினா" புகைப்படக் கருவியின் படச்சுருள் பாகத்தை போன்றது.
- பின்னால் வரும் வாகனங்களை கண்டறிய மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடி குவி ஆடி.
- "சோலார் செல்" என்பது சூரிய ஒளியை மின் சக்தியாக மாற்றுவது.
- நியூட்ரான்கள் இல்லாத ஒரே அணு ஹைட்ரஜன் அணு.
- பால்தயிராக மாறும் போது லேக்டிக் அமிலம் உருவாகிறது.
- மலேரியா தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்படுவது "குளோராகுயின்".
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment