####அறிவோம்####
அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்
அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்
1. அம்மீட்டர் - மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுகிறது.
2. அலிமோ மீட்டர் - காற்றின் வேகமும், வீசும் திசையும் அளந்தறிய உதவும் காற்று வீச்சளவி.
3. ஆடியோ மீட்டர் - கேள்வித்திறனை அளக்க உதவும் கேளொலி அளவி.
4. ஆல்டி மீட்டர் - குத்துயரங்களை அளக்க உதவும் ஒருவகை சிறப்பு திரவமில்லா அழுத்தமானி.
5. எலெக்ட்ரோஸ்கோப் - மின்னேற்றம் கண்டு துலக்க உதவும் மின்காட்டி.
6. கம்யுடேட்டர் - மின்னோட்டத் திசையை மாற்ற அல்லது திருப்ப உதவும் மின் திசை மாற்றி, டைனமோ இயந்திரத்தில் மாறு மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவது.
7. கோலரி மீட்டர் - நிறங்களின் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் நிற அளவி.
8. கலோரி மீட்டர் - வெப்பத்தை அளக்க உதவும் வெம்மையளவி.
9. கால்வனோமீட்டர் - மின்னோட்டத்தை அளக்க உதவும் நுண் மின்னளவி.
10. கிளினிக்கில் தெர்மோமீட்டர் - மனித உடல் வெப்ப நிலையை அளக்க உதவும் நோயறி வெப்ப அளவி.
11. குரோனா மீட்டர் - கடல்பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிந்து கொள்ள உதவும் கருவி போன்று துல்லியமாகக் கால அளவைக் காட்டும் கால அளவி.
12. சாலினோ மீட்டர் - உப்புக் கரைசல்களின் அடர்த்தியை அளப்பதன் மூலம் அவற்றின் கரைசல் செறிவைத் தீர்மானிக்க உதவும் ஒருவகை தரவமானி.
13. செய்ஸ்மோ கிராப் - நில நடுக்க அதிர்ச்சிகளின் தீவிரத்தையும், தோற்றத்தையும் பதிவு செய்ய உதவும் பூகம்ப அளவி.
14. குவாட்ரண்ட் - பயண அமைப்பு முறையிலும், வானவியலிலும் குத்துயரங்களையும், கோணங்களையும் அளக்க உதவும் செங்குத்து அளவி.
15. டிரான்சிஸ்டர் - மின்னாற்றலை மிகைப்படுத்துவதுடன், வெப்ப அயன வால்வுகளின் பண்புகளும் கொண்டதோர் சிறு மின் கூறுப் பொருள்.
16. டெலிபிரிண்டர் - தொலை தூர இடங்களுக்கு தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் ஏற்கவும், தகவல்களை அச்செழுதவும் உதவும் தொலை எழுதி.
17. டெலி மீட்டர் - வான் பயணத் தொலைவில் நிகழும் நிகழ்வுகளை பதிவு செய்யும் கருவி ( தொலை அளவி )
18. டெலஸ்கோப் - தொலைதூரப் பொருட்களை பெருக்கிக்காட்டும் தொலை காட்டி.
19. டைனமோ - இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் கருவி.
20. டைனமோ மீட்டர் - மின் திறனை அளக்க உதவும் மின்திறனளவி.
21. தெர்மோமீட்டர் - வெப்ப நிலையை அளக்க உதவும் வெப்ப அளவி.
22. தெர்மோஸ்கோப் - வெப்பத்தால் ஒரு பொருளின் பருமனில் ஏற்படும் அளவு மாற்றங்களைக் கொண்டு வெப்ப நிலை வேறுபாட்டைத் தோராயமாக அளக்க உதவும் வெப்பங்காட்டி.
23. தெர்மோஸ்டாட் - ஒரு பொருளின் வெப்பநிலையைத் தானாகவே ஒழுங்குபடுத்தும் கருவி.
24. பாரோமீட்டர் - வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் காற்றழுத்த அளவி.
25. பிளான்டி மீட்டர் - சமதளப்பரப்பளவைத் தொகுத்தளிக்க உதவும் கருவி.
26. பெரிஸ்கோப் - நேரிடைக் கண்ணோட்டத்திற்குக் குறுக்கே தடையிருப்பின் காண்பவர் கண் மட்டத்திற்கும் மேலாக மறைந்திருக்கும் பொருட்களை கவனிக்க உதவுவது.
27. பைக்னோ மீட்டர் - நீர்மத்தின் அடர்த்தியையும், விரிவாக்கக் குணத்தையும் அளக்க உதவும் அடர்வளவி.
28. பைனாகுலர்கள் - தொலை தூரப் பொருள்களை பெருக்கி இரு கண்களுக்கும் ஒரே சமயத்தில் காட்டும் இரட்டைத் தொலைகாட்டி.
29. பைரோ மீட்டர் - உயர்வெப்ப நிலைகளை அளக்க உதவும் கனல் அளவி.
30. மாக்னடோ மீட்டர் - காந்தத் திருப்புத் திறன்களையும், புலன்களையும் ஒப்புநோக்க உதவும் காந்த அளவி.
31. மானோ மீட்டர் - வளிமங்களின் அழுத்தத்தை அளக்க உதவும் திரவ அழுத்த அளவி.
32. மரீனர்ஸ் காம்பஸ் - முப்பத்திரண்டு திசைகளும் குறிக்கப்பட்ட மாலுமித் திசை காட்டி.
33. மைக்ரோ மீட்டர் - சிறு தொலைவுகள் மற்றும் கோணங்களைத் துல்லியமாக அளக்க உதவும் நுண்ணளவி.
34. மைக்ரோஸ்கோப் - நுண்ணிய பொருள்களை பன்மடங்கு பெருக்கிக் காட்டும் நுண்காட்டி.
35. ரிஃப்ராக்டோ மீட்டர் - ஒரு பொருளின் ஒளி விலகல் எண்ணினை அளக்க உதவும் விலகல் அளவி.
36. ரெசிஸ்டன்ஸ் தெர்மோ மீட்டர் - வெப்பத்தால் மின் கடத்திகளின் தடையில் எழும் மாற்றங்களை அளப்பத்தன் மூலம் வெப்பநிலையை கண்டறிய உதவும் மின்தடை வெப்ப அளவி.
37. ரெயின்கேஜ் - மழைப்பொழிவை அளக்க உதவும் மழை அளவி.
38. ரேடியோ மைக்ரோ மீட்டர் - வெப்பக்கதிர் வீச்சுக்களை அளக்க உதவும் கதிரலை நுண்ணளவி.
39. லாக்டோ மீட்டர் - பாலின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது.
40. வெர்னியர் - அளவுகோலின் மிகக் குறைத்த அலகின் உட்பகுப்புகளைச் சுத்தமாக அளக்க, பிரதான அளவுகோலில் சறுக்கி நகரக்கூடிய நுண்ணளவுகோல்.
41. வோல்ட் மீட்டர் - இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவும் மின்னழுத்த அளவி.
42. ஸ்டெதஸ்கோப் -இதயத்தின் நாடித்துடிப்பை அளக்க மருத்துவர் பயன்படுத்தும் இடையதுடிப்பளவி.
43. ஸ்பிக்மோமானோ மீட்டர் - இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் இரத்த அழுத்த அளவி.
44. ஸ்பிரிங் பாலன்ஸ் - பொருளின் எடையை அளக்க உதவும் சுருள் தராசு.
45. ஸ்பெக்ட்ரோ மீட்டர் - ஒளி விலகல் எண்களை மிக நுட்பமாக அளந்தறிவதற்கு உகந்த வகையில் திறம்படுத்தப்பட்ட ஒளியின் நிறமாலை அளவி.
46. ஸ்பெக்ட்ரோஸ்கோப் - மின் காந்த அலைவரிசையைப் பிரிந்து பகுப்பாய்ந்து காட்டும் நிரல்மாலைகாட்டி.
47. ஸ்ஃபியரோ மீட்டர் - கோளக வடிவப் பொருள்களின் வளைவைத் துல்லியமாக அளக்க உதவும் கோள அளவி.
48. ஹைக்ரோ மீட்டர் - வளிமண்டல ஒப்பு ஈரப்பதத்தை அளவிட உதவும் அளவி கருவி.
49. ஹைக்ரோஸ்கோப் - வளி மண்டல ஈரப்பதத்தை அளவு மாற்றங்களை கண்டறிய உதவும் ஈரப்பதங்காட்டி.
50. ஹைட்ரோபோன் - நீருக்கடியில் பேசும் குரலை கேட்க உதவும் நீரோலி வாங்கி.
51. ஹைட்ரோ மீட்டர் - நீர்மங்களின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது.
Popular posts from this blog
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை யாவரு
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படு
Comments
Post a Comment