####அறிவோம்####
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கான ஹெல்த்கேர் ப்ளஸ் காப்பீடு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக மேம்படுத்தப்பட்ட ஹெல்த்கேர் ப்ளஸ் காப்பீட்டு பாலிசியை யுனிவர்சல் சோம்போ பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலமாக அறிமுகம் செய்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு கர்ணம் சேகர், இந்தப் பாலிசியை இன்று சென்னையில் உள்ள வங்கியின் மைய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தார். யுனிவர்சல் சோம்போ பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் திரு. ஓ.என்.சிங் மற்றும் உயரதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த பாலிசியின் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.50,000, அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பாலிசி வழங்கப்படும். இந்த பாலிசிக்கு 50 வயது வரை மருத்துவப் பரிசோதனை தேவையில்லை என இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Popular posts from this blog
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
Comments
Post a Comment