####அறிவோம்####
என்சிசி ( NCC ) -யின் 71-ஆவது அமைப்பு தினம்
என்சிசி ( NCC ) -யின் 71-ஆவது அமைப்பு தினம்
உலகிலேயே மிகப்பெரிய சீருடை இளையோர் அமைப்பான தேசிய மாணவர் படை (என்சிசி)-யின் 71-ஆவது அமைப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டங்களை நேற்று தொடங்கிய பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார், என்சிசி தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜென்ரல் ராஜீவ் சோப்ரா ஆகியோர் தேச சேவையில் தியாகம் செய்தவர்களுக்காக புதுதில்லியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய போர்நினைவு சின்னத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். ஒட்டுமொத்த என்சிசி சார்பில் அவர்கள் மலர்வளையம் வைத்தனர். என்சிசி அமைப்பு தினம் நாடு முழுவதும் படைப்பிரிவினரின் பங்கேற்புடன் அணிவகுப்புகளாக, கலாச்சார நிகழ்வுகளாக, சமூக மேம்பாட்டுத் திட்டங்களாக கொண்டாடப்பட்டன.
இந்த ஆண்டு மகாராஷ்டிரா, பீகார், கேரளா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது, நிவாரண நடவடிக்கைகளில் என்சிசி மாணவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தினர். தூய்மைத் திட்டம், தூய்மைக்கான சைக்கிள் பேரணி, மாபெரும் மாசுத்தடுப்பு இருவார நிகழ்வு ஆகியவற்றிலும் இவர்கள் முழுமனதோடு ஈடுபட்டனர். டிஜிட்டல் கல்வியறிவு, சர்வதேச யோகா தினம், குருதிக்கொடை முகாம்கள், மரம் நடுதல், தடுப்பூசி முகாம்கள் போன்ற அரசின் பல்வேறு முன்முயற்சிகளிலும் விழிப்புணர்வை பரவச் செய்ததில் இவர்கள் முக்கியமான பங்களிப்பு செய்தனர். என்சிசி மாணவிகள் சிக்கிமில் உள்ள டென்சென்காங் மலையை (6010 மீட்டர்) வெற்றிகரமாக எட்டினர். இதேபோல், என்சிசி மாணவர்கள் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஹனுமார் டிப்பா மலையை (5982 மீட்டர்) வெற்றிகரமாக எட்டினர்.
பன்முக செயல்பாடுகளையும், மாறுபட்ட பாட முறைகளையும் என்சிசி வழங்குவதால், இளைஞர்கள் மேம்பாட்டிற்கு ஒப்பற்ற வாய்ப்புகள் கிடைக்கின்றன. விளையாட்டு மற்றும் சாகசங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியதன் மூலம் பலர் நாட்டிற்கும், அமைப்பிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக இளைஞர்களை உருவாக்கும் இடைவிடாத முயற்சிகளை என்சிசி தொடர்கிறது.
Popular posts from this blog
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை யாவரு
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படு
Comments
Post a Comment