####அறிவோம்####
 
ஒலிவேறுபாடு:
1. அரம்  -  அராவும் கருவி
2. அறம் -  தருமம்
3. அரி    -   துண்டாக்கு, திருமால்
4. அறி   -  தெரிந்துக்கொள்
5. அருகு -  பக்கம்
6. அறுகு -  ஒருவகைப்புல்
7. அரை -  பாதி
8. அறை  -  கூறு
9. இரத்தல் -  யாசித்தல்
10. இறத்தல் -  சாதல்
11. இரை -  தீனி
12. இறை -  கடவுள்
13. உரவு -  வலிமை
14. உறவு -  சொந்தம்
15. உரி -  தோலை உரி
16. உறி -  பால், தயிர் வைக்கும் கயிற்றுத் தொங்கல்
17. உரை  -  சொல்,
18. உறை  -  வாசி, மேல் உறை
19. துரவு  -  கிணறு
20. துறவு -  சந்நியாசம்
21. கருத்து -  எண்ணம்
22. கறுத்து -  கருமை நிறம்
23. நரை  -  வெண்மயிர்
24. நறை -  தேன்
25. எரி  -   நெருப்பு
26. ஏறி  -   வீசுதல்
27. ஏரி  -   பெரிய நீர்நிலை
28. ஏறி  -  மேலே ஏறி
29. கரி   -  அடுப்புக்கரி, யானை
30. கறி   -  காய்கறி, மிளகு
31. கீரி    -  ஒரு விலங்கு
32. கீறி    -   பிளந்து
33. சுனை -  ஊற்று
34. சுணை -  சிறுமுள்
35. குனி    -   வளை
36. குணி   -   ஆலோசனை செய்
37. தின்    -   சாப்பிடு
38. திண்   -   உறுதி
39. கன்னி - இளம்பெண்
40.கண்ணி - மாலை
41. பனி - குளிர்ச்சி, பனித்துளி
42. பணி - வேலை, தொண்டு
43. தினை - ஒருவகை தானியம்
44. திணை - குளம், ஒழுக்கம்
45. பனை - ஒருவகை மரம்
46. பனண - மூங்கில்
47. கனம் - பளு
48. கணம் - கூட்டம், நொடிப்பொழுது
49. மன் - அரசன்
50. மண் - பூமி
51. வன்மை - வலிமை
52. வண்மை - கொடுக்கும் குணம்
53. அரன் - சிவன்
54. அரண் - மதில், கோட்டை
55. தின்மை - தீமை
56. திண்மை - வலிமை
57. இனை -  வருந்து
58. இணை - சேர், இரட்டை
59. மான் - ஒருவகை விலங்கு
60. மாண் - பெருமை
61. பொருப்பு - மலை
62. பொறுப்பு - கடமை
63. தரி - அணி
64. தறி - வெட்டு, நெசவு
65. பரி - குதிரை
66. பறி - பறித்தல்
67. சூல் - கருப்பம்
68. சூள் - சபதம்
69. சூழ் - நெருங்கு, வளை
70. தால் - நாக்கு
71. தாள் - பாதம், முயற்சி
72. தாழ் - பணி, தாழ்ப்பாள்
73. மூலை - கோணத்தின் ஓரம்
74. மூளை - உறுப்பு
75. மூழை - அகப்பை
76. அலகு  -  பறவை மூக்கு, அளவைக்கூறு
77. அளகு -  பெண் பறவை, காட்டுக்கோழி
78. அழகு  -  வனப்பு, அணி
79. தலை  -  சிரம், உடல் உறுப்பு
80. தளை  -  கட்டு, அடிமைத்தளை
81. தழை -  இலை
82. வலி - நோய், வலிமை
83. வளி - காற்று
84. வழி - பாதை
85. வால் - விலங்கின் வால்
86. வாள் - கத்தி, ஒளி
87. வாழ் - வாழ்தல்
88. வலை - மீன்பிடி வலை
89. வளை - பொந்து, வளையல் வளைவு
90. வழை - ஒருவகை மரம்
91. பொலி - விளங்கு
92. பொழி - ஊற்று
93. பொளி - கொத்து
94. அலை -  கடல் அலை
95. அளை -  வெண்ணை, புற்று
96. அழை -  கூப்பிடு
97. இலை  -  தழை
98. இளை -  உடல் மெலிவு
99. இழை -  நூல் இழை, அணிகலன்
100. உலை - நீர் உலை, வருந்து
101. உளை -  பிடரிமயிர்
102 . உழை - உழைத்தல், மான்
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment