####அறிவோம்####
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்களின் 50-ஆவது மாநாடு
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்களின் 50-ஆவது மாநாடு
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்களின் 50-ஆவது மாநாடு இன்று (24.11.2019) நிறைவடைந்தது. இதில் பழங்குடியினர் நலன் மற்றும் தண்ணீர், வேளாண்மை, உயர்கல்வி, வாழ்வதை எளிதாக்குதல் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இந்த விஷயங்கள் தொடர்பாக தங்களின் அறிக்கைகளை ஆளுநர்களின் ஐந்து குழுவினர் சமர்ப்பித்தனர். ஆளுநர்கள் சிறப்பாக பங்காற்ற முடிகின்ற, செயல்பாட்டுக்குரிய விஷயங்கள் இதில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் விவாதங்கள் பயனுள்ள நடைமுறைகள் என்பதை நிரூபித்துள்ளன என்றார். அமைச்சகங்கள் மற்றும் நித்தி ஆயோகின் பங்கேற்பு, விவாதங்களில் கவனம் குவிப்பதற்கும் செயல் திட்டங்களை உருவாக்குவதற்கும் உதவியாக இருந்தன என்று அவர் குறிப்பிட்டார். இந்த மாநாட்டின் முடிவுகளிலிருந்து பல பயனுள்ள தீர்வுகள் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஆண்டு நவம்பர் 26, நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் 70-ஆவது ஆண்டு என குடியரசுத் தலைவர் கூறினார். இந்நாளில் குடிமக்களின் அடிப்படை கடமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இயக்கம் ஒன்று தொடங்கப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார். அரசியல் அமைப்புச் சட்ட தினத்தை சிறப்பான முறையில் அனைத்து ஆளுநர் மாளிகைகளும் கொண்டாடும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மக்களிடையே அடிப்படை கடமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஆளுநர்கள் பெரும் பங்காற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.
நமது கூட்டாட்சி முறையில் ஆளுநர் பதவி முக்கியமான தொடர்புக்குரியது என்று கூறிய குடியரசுத் தலைவர், மத்திய மாநில அரசுகளுக்கு இடையே சிறந்த ஒத்துழைப்பை உறுதி செய்வதில் ஆளுநர்களுக்குப் பங்கு உள்ளது என்றார். மாநிலத்தின் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும், சாமானிய மக்களும் எளிதாக அணுகுவதற்கு உரியவையாகவும், கூடுதலாகக் கலந்துரையாடும் இடமாகவும், ஆளுநர் மாளிகைகளை ஆளுநர்கள் உருவாக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் யோசனை தெரிவித்தார்.
நிறைவு நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment