நடப்பு நிகழ்வுகள் - CURRENT AFFAIRS
இந்தியா
முதல்மந்திரி பெயரில் புதிய மாம்பழ வகை !!
- உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் 2 நாள் மாம்பழ கண்காட்சியினை முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார்.
- இந்த கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 700 வகை மாம்பழங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
- நாட்டிலேயே அதிக அளவில் மாம்பழங்களை விளைவிக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம் என பெருமிதம் தெரிவித்தார்.
- விவசாயிகளின் வருவாய் மற்றும் தேவைகளை இரு மடங்காக உயர்த்த தோட்டக்கலை உதவும் எனவும், இந்த கண்காட்சி அதற்கான முயற்சியாக நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- இந்த கண்காட்சியில் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்தை கவுரவிக்கும் விதமாக உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் விளையும் மாம்பழ வகைக்கு ‘யோகி மாம்பழம்’ என பெயர் சூட்டப்பட்டது.
மஹாராஜா டேரக்ட் என்ற புதிய சேவையைத் தொடங்கியது ஏர் இந்தியா
- ஏர் இந்தியா நிறுவனம், மஹாராஜா டேரக்ட் (MaharajahDirect) என்ற புதிய பன்னாட்டு போக்குவரத்து சேவையை தொடங்கி உள்ளது.
- சொகுசு இருக்கைகள், பணியாளர்களுக்கு புதிய சீருடைகள் என முற்றிலும் வேறுபட்ட நவீன வசதிகளுடன் இந்த விமான சேவை தொடங்கப்பட்டிருப்பதாக பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் ஆர்.என். சவுபே (RN Choubey) தெரிவித்துள்ளார்.
- ஏர் இந்தியாவை மீட்டெடுக்க மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக புதிய சேவையைத் தொடங்கி வைத்த விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
- நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியாவின் பங்குகளை யாரும் வாங்க வராத நிலையில், அதனை மீட்டெடுக்கும் முயற்சியாக மத்திய அரசு இந்தப் புதிய சேவையைத் தொடங்கி உள்ளது.
தேநீர்க்கடைக்காரரின் மகள் இந்திய விமானப்படைக்குத் தேர்வு
- மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தேநீர்க்கடைக்காரரின் மகள், இந்திய விமானப் படைப் பிரிவில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் கங்வால் என்கிற தேநீர்க்கடைக்காரரின் மகள் ஆஞ்சல்.
- 2013ஆம் ஆண்டு உத்தரக்கண்டில் மழை வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டபோது, ஆஞ்சல் பன்னிரண்டாம் வகுப்புப் படித்து வந்துள்ளார்.
- அப்போது விமானப்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதைத் தொலைக்காட்சியில் பார்த்த ஆஞ்சலுக்குத் தானும் விமானப் படையில் சேர வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
- அதன்பின் விமானப் படையில் சேர விண்ணப்பித்து ஐந்து முறை தேர்வெழுதித் தோல்வியடைந்துள்ளார்.
- ஆறாம் முறையாக இவர் விண்ணப்பித்தபோது நாடு முழுவதுமிருந்து மொத்தம் 6லட்சம்பேர் தேர்வெழுதியுள்ளனர். அவர்களில் இருந்து 22பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- அதில் ஒருவரான ஆஞ்சல் வரும் முப்பதாம் தேதி ஐதராபாத்தில் உள்ள விமானப் படைப் பயிற்சி மையத்தில் பயிற்சியில் சேர உள்ளார்.
டெல்லி மெட்ரோவின் பச்சை வழித்தட சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...!
- பிரதமர் நரேந்திர மோடி 11 கி.மீட்டர் தொலைவு கொண்ட முண்ட்கா- ஹரியானாவின் பகதூர்கர் வரையிலான பச்சை வழித்தட மெட்ரோ ரெயில் சேவையை தனது அலுவலகத்தில் இருந்தபடி காணொளிகாட்சி வழியே இன்று தொடங்கி வைத்துள்ளார்.
- நுழைவு வாயிலாக உள்ள இந்த பகுதியில் தொடங்கவுள்ள மெட்ரோ சேவை மிக பயனுள்ள வகையில் இருக்கும் என கூறியுள்ளார்.
- குருகிராம், ஃபரீதாபாத் ஆகிய இரண்டு நகரங்களுக்கும் டெல்லியிலிருந்து ஏற்கெனவே மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது.
- இப்போது மூன்றாவதாக டெல்லியிலிருந்து பகதூர்கர் நகரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது.
- இந்த வழித்தடம் மூன்றாம் கட்ட திட்ட பணியில் அமைக்கப்பட்டதாகும். இந்தர்லோக் - முண்ட்கா வரையிலான பச்சை வழித்தடம் இப்போது முண்ட்கா முதல் பகதூர்கர் வரையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உயரும் விளம்பரச் செலவுகள்!!
- இந்தியாவில் விளம்பரங்களுக்கான செலவுகள் இந்த ஆண்டில் 13.2 சதவிகித உயர்வுடன் ரூ.69,347 கோடியாக இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
- மீடியா ஏஜென்சி நிறுவனமான குரூப்-எம், ‘திஸ் இயர் நெக்ஸ்ட் இயர்’ என்ற தலைப்பில் இந்தியாவின் விளம்பரங்களுக்கான செலவுகள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
- அதில், ‘இந்தியாவில் விளையாட்டு மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் பிரபலமாக இருப்பதால் தொலைக்காட்சி வாயிலான விளம்பரங்கள் சிறப்பான வளர்ச்சியைக் கொண்டிருக்கும். அதன்படி 2018ஆம் ஆண்டில் விளம்பரங்களுக்கான செலவுகள் 13.2 சதவிகித உயர்வுடன் ரூ.69,347 கோடியாக இருக்கும்.
- அதிகபட்சமாக டிஜிட்டல் விளம்பரங்களுக்கான செலவுகள் 30 சதவிகித உயர்வுடன் ரூ.12,337 கோடியை எட்டும். எனினும், அச்சு ஊடக விளம்பரங்களுக்கான செலவுகள் மிக மந்தமாக 4 சதவிகித வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.
- 2019ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில், விளம்பரங்களுக்கான செலவுகள் 14.2 சதவிகித உயர்வுடன் ரூ.79,165 கோடியாக இருக்கும் என்று இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.
- இதில் அதிகபட்சமாகத் தொலைக்காட்சி 45.6 சதவிகிதமும், செய்தித்தாள் 23.7 சதவிகிதமும், இணையம் 20.3 சதவிகிதமும் பங்களிப்பைக் கொண்டிருக்கும் என்று குரூப்-எம் நிறுவனம் தனது ஆய்வில் கணித்துள்ளது.
- முன்னதாக மேக்னா நிறுவனம் வெளியிட்டிருந்த டிஜிட்டல் விளம்பரங்களுக்கான ஆய்வறிக்கையில், 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் டிஜிட்டல் விளம்பரங்களுக்கான செலவுகள் 12.5 சதவிகித உயர்வுடன் ரூ.68,000 கோடியைத் தாண்டும் என்று மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வியட்நாமில் BEL அலுவலகம்!!
- பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வியட்நாமில் ஹனாயில், பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிஸ் லிமிடெட்-ன் முதல் பிரதிநிதித்துவ அலுவலகத்தை தொடங்கி வைத்தார்.
- இந்தியாவின் தற்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் - நிர்மலா சீத்தாராமன்
- பாரத் எலக்ட்ரானிஸ் லிமிடெட் - டின் தலைமையகம் பெங்களுருவில் அமைந்துள்ளது.
தமிழ்நாடு
தாய்ப்பால் சேமிப்பு வங்கி தொடக்கம்!!
- தாய்ப்பால் கிடைக்காத பச்சிளம் குழந்தைகளைக் காப்பதற்காக நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தாய்ப்பால் சேமிப்பு வங்கி தொடங்கப்பட்டது.
- மூன்றரை கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள மார்பக ஊடுகதிர் படக்கருவி, தாய்ப்பால் வங்கி, டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம், ஆதரவு சிகிச்சை மையம் ஆகியவற்றைத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத் துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- 6 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தாய்ப்பால் வங்கியும், 20 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவில் மார்பக ஊடுகதிர் படக்கருவியும் பதினாறரை லட்ச ரூபாய் செலவில் நோய் தணிப்பு ஆதரவுச் சிகிச்சை மையமும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
- திருச்சி காவிரி மருத்துவமனையில், புற்றுநோயைக் கண்டறிவதற்கான லாத் கேப் எனப்படும் அதி நவீன சிகிச்சை மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
உலகம்
தென்கொரியாவுடன் இணைந்து நடத்த இருந்த 2 போர்ப்பயிற்சிகள் தள்ளிவைப்பு
- தென்கொரியாவுடன் கூட்டாக இணைந்து 2 போர் ஒத்திகைகளை நடத்தத் திட்டமிருந்த அமெரிக்கா, அவற்றைக் காலவரையின்றித் தள்ளி வைத்துள்ளது.
- வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் கடந்த பன்னிரண்டாம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர்.
- இந்தப் பேச்சுவார்த்தையை முன்னிட்டுத் தென்கொரியாவுடன் அமெரிக்கப் படையினர் மேற்கொள்ள இருந்த போர்ப்பயிற்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
- இந்தப் பயிற்சி ஆகஸ்டு மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- இந்நிலையில் தென்கொரியாவுடன் இணைந்து அடுத்த 3 மாதங்களுக்குள் நடத்தத் திட்டமிட்டிருந்த 2 போர்ப் பயிற்சிகளைக் காலவரையின்றித் தள்ளிவைத்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ராவல்பிண்டி அருகே குருத்துவாரா செல்ல இந்திய தூதருக்கு தடை
- பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் அஜய் பிசாரியா (Ajay Bisaria) ராவல்பிண்டி அருகே குருத்துவாரா பஞ்ச சாஹிப் (Gurudwara Panja Sahib) செல்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் அஜய் பிசாரியா, ராவல்பிண்டி அருகே உள்ள குருத்வாரா பஞ்ச சாஹிப் செல்வதற்காக உரிய முன்அனுமதியைப் பெற்றுள்ளார்.
- மேலும் அங்கு சீக்கிய புனித பயணிகளையும் அவர் சந்திக்க இருந்த நிலையில், திடீரென அஜய் பிசாரியாவுக்கு அங்கு செல்ல பாகிஸ்தான் தடை விதித்தது.
கோவாவில் செல்பி எடுக்க தடை !!
- கோவாவில் கடற்கரையில் செல்பி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கடல் மட்டம் உயர்வதால் ஆபத்தான இடங்களில் நிற்க வேண்டாம் என்று சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பெண்கள் உட்பட பலர் செல்பி எடுக்கும் மோகத்தால் ஆபத்தை உணராது கடலுக்குள் இறங்கிச் செல்கின்றனர். இதனால் கோவாவின் அழகான கடலோரங்ளில் நீந்துவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் யோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை!!
- இங்கிலாந்தின் மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் பிரபல யோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை விரைவில் அமைக்கப்பட உள்ளது.
- சர்வதேச அளவில் புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியகம் லண்டனில் அமைந்துள்ளது. இங்கு உலக நாடுகளில் பிரபலமானவர்களின் மெழுகு சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
- அந்த வரிசையில், பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் மெழுகு சிலை இந்த அருங்காட்சியகத்தில் விரைவில் இடம் பெறவுள்ளது.
- இங்கு சிலை நிறுவப்படுவதன் மூலம் பல்வேறு நாட்டினர் யோகாவின் பெருமைகளை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று கூறினார்.
அலைச்சறுக்கு பயில இனி செயற்கை பயிற்சி மையம்!!
- இயற்கையை சார்ந்திருந்து செய்ய வேண்டிய இந்த அலைச் சறுக்கு பயிற்சியை உள்ளரங்கத்தில் வழங்க வசதியாக செயற்கை அலைச்சறுக்குப் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.
- தெற்கு கலிபோர்னியாவில் உலகின் மிகப்பிரம்மாண்டமான அலைச்சறுக்கு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டு உள்ளது.
- 11 முறை அலைச்சறுக்குதலில் உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்கரான கெல்லி ஸ்லாட்டர் இந்த செயற்கை அலைச்சறுக்கு மையத்தை உருவாக்கி உள்ளார்.
- டபுள்யு.எஸ்.எல். சர்ப் ராஞ்ச் என்ற பெயருடைய இந்த பயிற்சி மையம் லிமோர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த அலைச்சறுக்கு மையம் பார்க்க கடல் போல பிரமாண்டமாக காட்சி தருகிறது.
- மின்சாரம் மற்றும் எந்திரங்களின் உதவியுடன் செயற்கையாக அலைகள் உருவாக்கப்படுகின்றன. 6.5 அடி உயரம் முதல் பல அடி உயரங்களில் அலைகள் உருவாக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
- 50 விதமான அலைகள் மற்றும் சுழல்கள் உருவாக்கப்படுவது சிறப்புக்குரியது. இத்தகைய வினோத சுழற்சி அலைகளில் பயிற்சி பெறுவது அலைப்பயிற்சி வீரர்களுக்கு உற்சாகம் தருவதுடன், எத்தகைய கடினமான அலைகளிலும் சாதனை செய்யும் ஊக்கத்தை தரும் என்கிறார் பயிற்சி மைய நிர்வாகி கெல்லி.
விளையாட்டு
வில்வித்தை உலகக்கோப்பை!!
- அமெரிக்காவில் நடைபெற்று வரும் வில்வித்தை உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் அபிஷேக் இரண்டு பதக்கங்கள் வென்றார்.
- உலகக்கோப்பை வில்வித்தை தொடர் அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா அரையிறுதியில் ரஷியாவின் அன்டோன் புலாயெவ்-ஐ 150 புள்ளிகள் பெற்று வீழ்த்தினார்.
- ஆனால் இறுதிப்போட்டியில் டென்மார்க் வீரர் ஹன்செனிடம் சறுக்கினார். ஹன்சன் 140 புள்ளிகள் சேர்க்க, அபிஷேக் வர்மாவால் 123 புள்ளிகள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
- கலப்பு அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா உடன் இணைந்து விளையாடினார். இதில் இந்த ஜோடி 147-140 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.
- முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான தீபிகா குமாரி பெண்களுக்கான தனிப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
- பெண்களுக்கான அணிப்பிரிவில் அட்டானு தாஸ் உடன் இணைந்து வெண்கலப் பதக்கத்திற்கும் போட்டியிடுகிறார். இதனால் குமாரி இரண்டு பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ!!
- இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய கிரிக்கெட் அணி தயாராகியுள்ள நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உயர்த்தப்பட்ட சம்பள பாக்கியை வீரர்களுக்கு வழங்க பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
- உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டி தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வருகிறது. வினோத் ராய் தலைமையிலான இந்த நிர்வாக கமிட்டி, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டது.
- இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஊதிய உயர்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. ஏ+ பிரிவில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாயும், ஏ பிரிவில் உள்ளவர்களுக்கு 5 கோடி, பி பிரிவில் உள்ளவர்களுக்கு 3 கோடி மற்றும் சி பிரிவில் உள்ளவர்களுக்கு 1 கோடி ஆகிய முறைகளில் ஆண்டு ஊதியம் உயர்த்தப்பட்டது.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் போடப்பட்ட புதிய ஊதிய ஒப்பந்தப்படி ஊதிய உயர்வை வீரர்கள் பெறவில்லை என தகவல்கள் வெளியானது.
- வீரர்களுக்கான உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க நிர்வாகிகள் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உயர்த்தப்பட்ட சம்பள பாக்கியை வீரர்களுக்கு பிசிசிஐ வழங்கியுள்ளது.
அயர்லாந்து அணியில் இந்தியர்!!
- அயர்லாந்து கிரிக்கெட் அணியில் இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சிம்ரஞ்சித் சிங் இடம்பிடித்துள்ளார்.
- இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடன் ஜூன் 27, 29 ஆகிய தேதிகளில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இதற்கான 14 பேர் கொண்ட அயர்லாந்து அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- கேரி வில்சனைக் கேப்டனாகக் கொண்ட 14 பேர் அணியில் சிம்ரஞ்சித் சிங் என்ற வீரரும் இடம் பெற்றுள்ளார். சுழல் பந்துவீச்சாளரான இவர், இந்தியாவின் பஞ்சாபில் உள்ள பத்லானாவில் பிறந்தவர். இவர் சிறுவயதாக இருக்கும்போதே இவரது குடும்பம் அயர்லாந்திற்கு சென்றுள்ளது.
- 2017இல் அயர்லாந்து ஏ அணியில் சிறப்பாக விளையாடிய காரணத்தினால் ஒரு நாள் அணியில் சேர்க்கப்பட்டார். இதுவரை ஏழு ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 8 விக்கெட்டுகளும், 4 டி20 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
- இந்தியாவும் அயர்லாந்தும் இதுவரை ஒரேயொரு டி-20இல் மட்டுமே நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன. 2009ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் நடந்த அந்தப் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகம்
ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் பயணிகள் தாங்களே ஓட்டிச் செல்ல மின்சார வாடகை கார் அறிமுகம்
- ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில், தாங்களே ஓட்டிச் செல்லும் வாடகை மின்சார கார்களை ஷூம் கார் (Zoomcar) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
- மின்சார கார் வசதி மியாபூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஷூம் கார் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
- முதற்கட்டமாக, இருபத்தி ஐந்து Mahindra e2oPlus ரக கார்களை அறிமுகப்படுத்தியுள்ள ஷூம் கார் நிறுவனம், கிலோ மீட்டர் ஒன்றுக்கு 8 ரூபாய் 50 காசுகள் வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
- விரைவில் மாதாப்பூர் மற்றும் கச்சிபௌலி ரயில் நிலையங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக ஷூம் கார் நிறுவனம் கூறியுள்ளது.
நியமனங்கள்
பயிற்சியாளரை மாற்றும் இங்கிலாந்து!
- ஆஸ்திரேலியா மற்றும் இந்தியத் தொடருக்கான இங்கிலாந்து அணியின் தற்காலிகப் பயிற்சியாளராகப் பால் ஃபார்பேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இங்கிலாந்து அணியின் தற்போதைய பயிற்சியாளரான ட்ரேவர் பெய்லிஸ் இந்தியா ஏ, மேற்கிந்திய தீவுகள் ஏ அணிகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடரில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு பயிற்சியளிக்க உள்ளார். அது முடிந்து ஹாம்ப்ஷையர், கென்ட் அணிகள் பங்கேற்கும் கவுண்டி கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் பணியாற்ற இருக்கிறார்.
- இதற்கிடையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியத் தொடருக்கான இங்கிலாந்து அணிக்குத் தற்காலிகமாக பால் ஃபார்பேஸ் பயிற்சியளிக்க உள்ளார். இவர் தற்போது இங்கிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளராகச் செயல்பட்டுவருகிறார்.
- ஜூலை 12ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ட்ரேவர் பெய்லிஸ் மீண்டும் இங்கிலாந்து அணியில் இணைவார் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
- இங்கிலாந்தின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளரான ட்ரேவர் பெய்லிஸின் ஒப்பந்த காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து இங்கிலாந்தின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பால் ஃபார்பேஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
- முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பால் ஃபார்பேஸை இங்கிலாந்தின் டி20 அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க ட்ரேவர் பெய்லிஸ் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திட்டங்கள்
ரூ.3,866 கோடியில் மத்திய பிரதேசத்தில் நீர்ப்பாசன திட்டம் தொடக்கம்!!
- மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில், மோகன்புரா நீர்ப்பாசனத் திட்டத்தை பிரதமர் மோடி ஜூன் 23-ம் தேதி தொடங்கி வைத்தார்.
- இத்திட்டத்தில் ரூ.3,866 கோடியில்பிரம்மாண்டமான அணையும், கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.
- இதன்மூலம் 727 கிராமங்கள் பாசன வசதி பெறும்.
- பின்னர் மாநில அரசின் நகர்ப்புற போக்குவரத்து சேவைத் திட்டத்தை இந்தூரில் தொடங்கிவைத்தார்.
- சுத்ர சேவா என்ற பெயரில் மாநிலத்தின் 20 நகரங்களில் இந்த பேருந்து சேவையை அரசு வழங்கவுள்ளது.
- மேலும் ரூ.278.26 கோடி செலவில் 23 வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கூகுள் நிறுவனம் மற்றும் மத்திய நீர்வள ஆணையம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து!!
- இந்தியாவில் திறன் மிக்க வெள்ள மேலாண்மைக்கு உதவ கூகுள் நிறுவனத்துடன் மத்திய நீர்வள ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.
- இந்த ஒப்பந்தத்தின் கீழ், மத்திய நீர்வள ஆணையம் மற்றும் கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, இயந்திரம் கற்றல், புவி வெப்பமடைதல் வரைபடம், நீரியல் கண்காணிப்பு ஆகியவற்றில் தனது தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்கின்றன.
- 1. வெள்ள பெருக்கை முன்கூட்டியே கண்டறியும் அமைப்புகளை மேம்படுத்துவதுடன் இது இலக்கை சுட்டிக்காட்டக்கூடிய எச்சரிக்கையை வழங்குகிறது.
- 2. வெள்ள பெருக்கை உருவப்படுத்தவும், வெள்ள மேலாண்மையை மேம்படுத்துவதற்காக கூகுள் எர்த் இன்ஜின் என்ற மென்பொருளை பயன்படுத்தி உயர் முன்னுரிமை ஆராய்ச்சி மற்றும் இந்தியாவின் நதி திட்டங்களை விளக்கும் தேசிய அளவிலான கண்காட்சியை உருவாக்குவதற்கான கலாச்சார திட்டத்தை ஏற்படுத்த உதவும்.
அறிவியல் தொழில்நுட்பம்
சாதனைப் பெண்மணி – நாசா !!
- நாசாவின் சாதனைப் பெண்மணியான விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன், தனது கடைசியான மற்றும் நீண்ட விண்வெளி பயணத்திலிருந்து திரும்பிய ஒரு வருடத்திற்குள்ளாக ஒரு விண்வெளி வீரராக தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
- அவர் தனது பணியின் போது மொத்தம் 665 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து உலகம் முழுவதும் உள்ள பெண்களில் வேறு யாரும் புரியாத, வேறு எந்த நாசாவின் விண்வெளி வீரரும் புரியாத சாதனையைப் புரிந்துள்ளார்.
- உலகின் மிக அதிக அனுபவசாலியான, விண்வெளியில் நடக்கும் பெண் வீரரான இவர் மொத்தம் 60 மணிநேரம் 21 நிமிடங்களை மொத்தம் 10 முறை விண்வெளி உடையணிந்து சாதனை அளவில் நடந்துள்ளார்.
- சர்வதேச விண்வெளி நிலையத்தை இரு தடவை நிர்வகித்த முதல் பெண்மணி மற்றும் விண்வெளிக்குப் பறந்த வயதான பெண்மணி இவரேயாவார்.
- 2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையில் எப்பொழுதும் ஆண்களால் தலைமை தாங்கப்படும் நாசாவின் விண்வெளிப் படைக்கு தலைமை தாங்கிய முதல் மற்றும் ஒரே பெண்மணி (மேலும் முதல் ராணுவம் சாராத நபர்) இவரேயாவார்.
விவசாயம்
விவசாயிகளுக்கு வாட்ஸ் அப் குழு!!
- வேலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் விவசாயிகளுக்கென தனியாக வாட்ஸ் அப் குழுவை அம்மாவட்ட ஆட்சியர் தொடங்கியுள்ளார்.
- வேலூர் மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, விவசாயிகளின் குறைகளைத் தெரிவிக்கவும், அதற்கு உடனடியாகத் தீர்வு காணும் வகையில் வேலூர் FARMERS GROUP என்ற வாட்ஸ் அப் குழுவை ஆட்சியர் தொடங்கிவைத்தார். அதில், மாவட்டம் முழுவதுமுள்ள விவசாயிகள் இணைக்கப்படுவார்கள்.
- அவர்களின் தேவை, சந்தேகங்கள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்து, அதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர். இந்த குழுவில், தோட்டக்கலைத் துறை,விவசாயத் துறை, கால்நடைத் துறை என அனைத்துத் துறை அதிகாரிகளும் இணைக்கப்படுவார்கள்.
- இதில், வானிலை குறித்த தகவலும் தெரிவிக்கப்படும். இதனால், விவசாயிகள் அதி்காரிகளைத் தேடி செல்ல வேண்டாம். அவர்களுக்கு அலைச்சல் குறைவது மட்டுமில்லாமல், குறைகளை நேரடியாகக் ஆட்சியரிடமே தெரிவிப்பதால், தீர்வு கிடைக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.
- இந்த வாட்ஸ் அப் குழு விவசாயிகள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
தரவரிசை
பசியால் வாடும் 14 நாடுகள்!!
- உலக அளவில் பசியால் அதிகம் வாடும் 14 நாடுகள் பட்டியலில் போஸ்னியா, துருக்கி போன்றவை இடம் பிடித்துள்ளன.
- உலகம் முழுக்க உணவு கிடைக்காமல் பட்டினி கிடப்பவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் என்ற பரிதாபத் தகவலும் வெளியாகியுள்ளது.
- உலகில் எய்ட்ஸ், மலேரியா, காசநோய் உள்ளிட்ட நோய்களால் இறப்பவர்களைவிட பசியால் இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது.
- பசியால் வாடும் மக்கள் வசிக்கும் 119 நாடுகள் பட்டியலில் போஸ்னியா, துருக்கி உள்ளிட்ட 14 நாடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இந்தப் பட்டியலில் ரஷியா 22-வது இடத்திலும், சவுதி அரேபியா 27, சீனா 29, சுவிட்சர்லாந்து 71, இலங்கை மற்றும் நைஜீரியா 84, வங்காளதேசம் 88, இந்தியா 100-வது இடத்திலும் உள்ளன.
- ஆசிய நாடுகளில் ஆப்கானிஸ்தான் முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
- அன்றாட உணவில் ஊட்டச்சத்து எவ்வளவு கிடைக்கிறது என்பதன் அடிப்படையிலேயே ஒருவர் வறுமையில் வாடுகிறாரா இல்லையா என்பது கணக்கிடப்படுகிறது.
- உலகம் முழுவதும், போதிய உணவு கிடைக்காததே 50 சதவீத குழந்தைகளின் இறப்புக்குக் காரணம் என்பது மற்றோர் அதிர்ச்சித் தகவல்.
தூய்மையான நகரம் பட்டியலில் 13ஆவது இடத்தில் திருச்சி!!
- தூய்மை நகரங்களில் பட்டியலில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை 100ஆவது இடத்தை பிடித்திருக்கிறது...
- தேசிய அளவில், இந்தாண்டுக்கான தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதே மாநிலத்தின் தலைநகரான போபால் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.
- சண்டிகர் மூன்றாம் இடத்தையும், நாட்டின் தலைநகரான டெல்லி நான்காம் இடத்திலும் உள்ளன.
- கடந்த ஆண்டு 6ஆம் இடத்தில் இருந்த மலைக்கோட்டை மாநகரமான திருச்சி, இந்தாண்டு, கிடுகிடுவென, 13ஆம் இடத்திற்கு சரிந்திருக்கிறது.
- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரம், 16ஆம் இடத்தில் உள்ளது.
- மஞ்சள் நகரமான ஈரோடு 51ஆம் இடத்திலும், தமிழ்நாட்டின் தலைநகராக விளங்கும் சென்னை பெருநகரம் 100ஆவது இடத்திலும் உள்ளன.
- மதுரை மாநகரம் 123ஆவது இடத்திலும், திண்டுக்கல் 124ஆம் இடத்திலும், புதுக்கோட்டை 167ஆம் இடத்தை பிடித்துள்ளன.
- தூய்மையான நகரங்கள் பட்டியலில், புதுச்சேரி நகரம் 343ஆவது இடத்தில் உள்ளது.
முக்கிய தினம் / வாரங்கள்
ஜூன் 23 - சர்வதேச விதவைகள் தினம் !!
- உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விதவைப் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. சபை விவாதித்து ஜூன்-23 ஐ சர்வதேச விதவைகள் தினமாக 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.
- உலகம் முழுவதும் கணவன்மார்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சர்வதேச விதவைகள் தினம் (International Widow’s Day)கொண்டாடப்படுகிறது.
ஜூன் 23 - ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம் !!
- ஐக்கிய நாடுகளின் பொது சேவை நாள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 23 தேதி, ஐக்கிய நாடுகளின் பொதுசேவை தினமாக (United Nations Public Service Day)கொண்டாடப்படுகிறது.
- இந்நாளில் சிறப்பான பொதுசேவை செய்தவர்களுக்கு ஐ.நா. பொதுசேவை விருதுகள் வழங்கப்படுகின்றன.
இறப்பு
தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மறைவு!
- தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் 92 வயதில் முதுமை சார்ந்த உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளார்.
- தென் கொரியாவில் 1971-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் கிம் ஜாங் பில் (வயது 92). அதிகார பகிர்வு திட்டத்தின் கீழ் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையிலும் பிரதமராக இருந்துள்ளார். பிரதமராக இருந்தபோது, நாட்டின் உளவு பிரிவை உருவாக்கி அதற்கு தலைமையேற்றார்.
- 1961ல் ராணுவ தளபதி பார்க் தலைமையில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி கவிழ்ந்த போது, இந்த புரட்சியில் கிம் ஜாங் பில் முக்கிய பங்கு வகித்தார்.
Comments
Post a Comment