நடப்பு நிகழ்வுகள் CURRENT AFFAIRS 21/06/2018
இந்தியா
ராஜஸ்தானில் ஒரே நேரத்தில் 1.05 லட்சம் பேர் யோகா செய்து கின்னஸ் சாதனை!!
- உலக யோகா தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தானில் நடந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 1.05 லட்சம் பேர் இணைந்து யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
- 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-வது வருடமாக இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில், அம்மாநில முதல்மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவும், யோகா பயிற்சியாளாரான ராம்தேவ் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
- மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.05 லட்சம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் அதிகம் பேர் ஒன்றிணைந்து யோகா பயிற்சி மேற்கொண்ட இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
கொல்கத்தா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் உதவியாளராக திருநங்கை:
- கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் நாட்டில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் அறுவைசிகிச்சை பிரிவில் தொழில்நுட்ப உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை ஜியா தாஸ்.
- கொல்கத்தாவில் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்காக நடத்தப்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்தார்.இந்த தொண்டு நிறுவன செயலாளர் பபாத்தியா முகர்ஜி சமூகத்தில் ஒதுக்கப்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் திருநங்கைகளுக்கு வாழ்வாதாரம் அவசியம். இதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அவர்களின் வேலைவாய்ப்புக்களுக்காக ஒரு முகாம் நடத்தினோம்.
- அப்போது சுகாதாரத்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இரண்டு திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை அரங்கின் தொழில்நுட்ப உதவியாளர் பயிற்சி அளிப்பதாக கூறினார்.
- அதன்படி, ஜியா தாசுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியில் சேர்ந்துள்ளார். இந்த வேலையில் திருநங்கை ஒருவர் சேருவது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என்று தெரிவித்தார்.
மும்பையில் சைக்கிள் ஆம்புலன்ஸ்!
- மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், முதியோருக்கு உதவும் வகையில், 'சைக்கிள்' ஆம்புலன்ஸ் சேவையை துவங்க, மாநில சுகாதார துறை திட்டமிட்டுள்ளது.
- அதன்படி, முதியோருக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளுடன், அவர்களது வீடுகளுக்கு சைக்கிளில் செல்லும், மருத்துவ உதவியாளர்கள், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பர்.
- மும்பையில், கடந்த ஆண்டு, மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குஜராத்: பௌத்த அடையாளங்கள் கண்டுபிடிப்பு!
- குஜராத் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள தாரங்கா மலைப் பகுதியில் இந்தியத் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் புத்த மத ஸ்தூபியைக் கண்டுபிடித்துள்ளனர்.
- குஜராத்தில் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள, தேவ்நீ மோரியில் கி.பி 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பௌத்த மதத்தின் பழங்காலப் பொருட்களும் ஸ்தூபியும் புத்த விஹார்களும் நீண்ட காலமாக இருந்து வருகின்றன.
- இந்த நிலையில், இந்தியத் தொல்லியல் துறையினர் தொடர்ந்து இந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது, ஸ்தூபி, மண் பாண்டம், கலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது க்ஷத்திரா காலத்தை (1கி.பி - 4கி.பி) சேர்ந்தவை என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்தூபியானது புத்த ஸ்தூபியைப் போன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் ஓய்வு பெறுகிறார்...!
- உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான ஜஸ்டி செல்லமேஸ்வர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
- நீதிபதி செல்லமேஸ்வர், ஏழு ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். ஆதார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளிலும் செல்லமேஸ்வர் தீர்ப்பளித்துள்ளார்.
- தமது கடைசி நாள் பணியாக மார்ச் 18ம் தேதி அவர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் வழக்கு விசாரணையில் கலந்து கொண்டார். அதன் பிறகு உச்சநீதிமன்றம் கோடைக்கால விடுமுறைக்காக மூடப்பட்டது. இந்நிலையில் நீதிபதி செல்லமேஸ்வர், தனது 65வது பிறந்த நாளான இன்று ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
டார்ஜிலிங்கில் ரஜினி தங்கிய அலிட்டா ஓட்டலின் பெயர் ரஜினி வில்லா #3 என மாற்றம்!!
- புதிய படத்தின் படப்பிடிப்புகாக டார்ஜிலிங்கில் நடிகர் ரஜினிகாந்த் தங்கி இருந்த ஓட்டல் பெயரை மாற்றிய அதன் உரிமையாளர் ரஜினி வில்லா என்று பெயர் சூட்டி கவுரவப்படுத்தி உள்ளார்.
- அலிட்டா ஓட்டல் ரிசார்ட் என்ற பெயரை `ரஜினிவில்லா #3' என்று மாற்றி அதன் பெயர் பலகையுடன் ஹோட்டல் உரிமையாளர் குடும்பத்தினர், ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் ராஜூமகாலிங்கம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
- ஒரு சிறந்த மனிதர் தங்களது ஹோட்டலில் தங்கிய மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தவே ஹோட்டலின் பெயரை மாற்றம் செய்ததாக ஓட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
யோகா தின மணற்சிற்பத்தில் உலகத் தலைவர்கள்!!
- சர்வதேச யோகா தினத்தன்று (ஜூன் 21) பூரி கடற்பகுதியில் உலக அமைதியை வலியுறுத்தி இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் யோகா செய்வது போன்று மணற்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ஒடிசாவின் பூரி கடற்பகுதியில், "அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான யோகா" என்ற தகவலுடன் பத்மஸ்ரீ விருது பெற்ற சுதர்சன் பட்னாயக் மணற்சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். ஐந்து டன் மணலைப் பயன்படுத்தி, 20 அடி உயரம் கொண்ட மணற்சிற்பம் உருவாக்கப்பட்டது.
- இதில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஸீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உள்ளிட்டோர் தங்களது நாட்டு தேசியக் கொடியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளனர்.
கார் வாங்க புதிய கட்டுப்பாடு!!
- அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, பார்கிங் இடம் இருந்தால் மட்டுமே புது கார்கள் வாங்க முடியும் என்ற புதிய சட்டத்தை கர்நாடக அரசு அமல்படுத்தியுள்ளது.
- தற்போது கர்நாடக அரசு வாகனப் பதிவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- தற்போது பெங்களூரில் புதிதாக 80 எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்க மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது.
ரயில்களில் அனைத்துப் புகார்களையும் தெரிவிக்கப் புதிதாக ரயில் கேப்டன் பதவி..!
- தென்மத்திய ரயில்வேயில் முதன்முதலாகக் கச்சிக்குடா - சித்தூர் இடையிலான வெங்கடாத்திரி விரைவு ரயிலில், ரயில் கேப்டன் என்கிற புதிய பதவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களின் அனைத்துக் குறைகளையும் ஒரே ஆளிடம் தெரிவிக்கும் வகையில் ஒரு பதவியை ஏற்படுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்தது. செகந்திராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட தென்மத்திய ரயில்வேயில் உள்ள ஆறு கோட்டங்களிலும் ஒவ்வொரு ரயில்களில் இந்தப் பதவியை ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது.
- முதற்கட்டமாகக் கச்சிக்குடாவில் இருந்து - சித்தூர் வரை செல்லும் வெங்கடாத்திரி விரைவு ரயிலில் ரயில் கேப்டன் என்னும் பதவி அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் பெயரும் செல்பேசி எண்ணும் பயணிகள் அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.
- ரயிலில் பயணத்தின்போது சேவைக் குறைபாடு, புகார்கள் ஆகியவற்றை அவரிடம் பயணிகள் நேரடியாகத் தெரிவிக்கலாம். இருக்கை படுக்கை ஒதுக்குதல், பயணச்சீட்டு ஆய்வு செய்தல், ஏசி சரிசெய்தல், படுக்கை விரிப்புகள் வழங்குதல், கழிவறைகளைத் துப்புரவு செய்தல், பாதுகாப்பு ஆகிய எதைப் பற்றி வேண்டுமானாலும் ரயில் கேப்டனிடம் பயணிகள் தெரிவித்தால் அதற்கான பணியாளருக்கு ரயில் கேப்டனே அறிவுறுத்துவார்.
- பயணச்சீட்டு ஆய்வு செய்யும் பணியில் உள்ள மூத்த அதிகாரிகளே ரயில் கேப்டன்களாக நியமிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு
சென்னை டிபிஐ வளாகத்தில் இயங்கும் பாடநூல் கழக நூலகத்தில் புதிய வசதி!
- சென்னை டிபிஐ வளாகத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சிறப்பு நூலகம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக் காக தமிழில் வெளியிடப்பட்ட பாடப்புத்தகங்கள் உள்ளன.
- கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியிடப்பட்ட அரசியல், வரலாறு, இயற்பியல், உளவியல், புவியியல், சமூகவியல், தத்துவம், மானிடவியல், வேதியியல், வேளாண்மை, பொறியியல், வானிலையியல் என பலதரப்பட்ட துறைகள் தொடர்பான அரிய புத்தகங்கள் இந்நூலகத்தில் உள்ளன.
- பல்வேறு தலைப்புகளில் தமிழில் வெளியிடப்பட்ட சுமார் 1,000 புத்தகங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை கட்டுப்படுத்த மத்திய அரசு உத்தரவு!
- 'பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்' என, விற்பனையாளர்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
- தமிழகத்தில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த, அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
- இதனால், உற்பத்தியாகும் உணவுப் பொருட்களிலும், மருந்துகளின் தாக்கம் உள்ளது. ரசாயனம் கலந்துள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதால், பொது மக்களுக்கு மட்டுமின்றி, விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
- ரசாயனம் கலந்துள்ளதாக கூறி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், தடை விதிக்கப்பட்டு வருகிறது.இது, விவசாயிகளுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடுகளை கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, புதிய சட்ட விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.
- மத்திய அரசின், புதிய விதிகள் குறித்து, தமிழக வேளாண் துறை வாயிலாக, தனியார் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை டிபிஐ வளாகத்தில் இயங்கும் பாடநூல் கழக நூலகத்தில் புதிய வசதி!
- சென்னை டிபிஐ வளாகத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சிறப்பு நூலகம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக் காக தமிழில் வெளியிடப்பட்ட பாடப்புத்தகங்கள் உள்ளன.
- கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியிடப்பட்ட அரசியல், வரலாறு, இயற்பியல், உளவியல், புவியியல், சமூகவியல், தத்துவம், மானிடவியல், வேதியியல், வேளாண்மை, பொறியியல், வானிலையியல் என பலதரப்பட்ட துறைகள் தொடர்பான அரிய புத்தகங்கள் இந்நூலகத்தில் உள்ளன.
- பல்வேறு தலைப்புகளில் தமிழில் வெளியிடப்பட்ட சுமார் 1,000 புத்தகங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை!
- சர்வதேச யோகா தினத்தையொட்டி நெல்லையில் 4ம் வகுப்பு மாணவி தண்ணீருக்குள் 8விதமான யோகாசனம் செய்து உலக சாதனைகளை நிகழ்த்தினார்.
- திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் – தேவிபிரியா தம்பதியரின் மகள் பிரிஷா இவருக்கு வயது 8 இவர் நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வருகிறார்.
- இவர் தனது 1 வது வயது முதலே அவருடைய தாயிடம் இருந்து யோகா கற்று வருகிறார். இவருடைய 5 வது வயதில் மாவட்டம் ,மாநிலம் மற்றும் தேசிய சர்வதேச அளவிலான யோகா போட்டிகளில் பங்கு பெற்று தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்துள்ளார்.
- இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட தங்கப்பதங்கங்களை வென்றுள்ளார்.மிகவும் சவால் நிறைந்த கண்ட பேருண்டா ஆசனத்தை 1 நிமிடத்தில் 16 முறைகள் விரைவாக செய்து முதல் உலக சாதனை படைத்துள்ளார்.
- சர்வதேச யோகா தினத்தில் நெல்லை, அரசு விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் 8 உலக சாதனைகளை செய்தார்.நீருக்குள் வாமதேவ ஆசனம் செய்தபடி பின்னோக்கி நீந்துவது, ஏகபாத வாமதேவ ஆசனத்தை நீருக்குள் முன்னோக்கி நீந்துவது,குப்த பத்மாசனம் என ஆசனங்களை நீருக்குள் செய்து 8 உலக சாதனைகளை படைத்தார்.
புதிய தீயணைப்பு நிலையம்!!
- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் புதிய தீயணைப்பு நிலையத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
சென்னையில் சர்வதேச எந்திர கருவிகள் கண்காட்சி !!
- சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சர்வதேச எந்திர கருவிகள் கண்காட்சி-2018 தொடங்கியது.
- மத்திய வர்த்தகம், தொழிற்துறை மந்திரி சுரேஷ்பிரபு கண்காட்சியை தொடங்கிவைத்தார்.
உலகம்
இந்தியா-அமெரிக்கா இடையே ஜூலை 6ம் தேதி வாஷிங்டனில் பேச்சுவார்த்தை!!
- இந்தியா -அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை வரும் ஜூலை மாதம் 6ம் தேதி வாஷிங்டனில் நடைபெறுகிறது. இந்தியா சார்பில் இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் , நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
- இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை கடந்த ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட இருந்த நிலையில் அதிபர் டிரம்ப் தமது அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனை நீக்கியதால் தடைப்பட்டது.
- தற்போது இந்தப் பேச்சுவார்த்தை ஜூலை 6ம் தேதி வாஷிங்டனில் நடைபெற உள்ளது. இதனால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கான சூழல் பிறந்துள்ளது.
- முதன் முறையாக நிர்மலா சீதாராமனும், சுஷ்மா ஸ்வராஜூம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோவுடன் பேச்சு நடத்த உள்ளனர்.
- கடந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடியும் அதிபர் டிரம்ப்பும் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இதற்கான திட்டம் உருவானது.
- பாதுகாப்பை பலப்படுத்துதல், பாதுகாப்புத்துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு, தீவிரவாத எதிர்ப்பு, உலகளாவிய பிரச்சினைகளை இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக எதிர்கொள்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இப்பேச்சுவார்த்தையில் இடம்பெறுகின்றன.
சுரிநாமுக்கு இந்தியா ரூ.347 கோடி நிதியுதவி!
- சுரிநாம் நாட்டுக்கு இந்தியா ரூ.347 கோடி நிதியுதவி வழங்கும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
- மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 19-ம் தேதி சுரிநாம் நாட்டுக்குச் சென்றார். அந்நாட்டு அதிபர் டிசையர் டிலானே பவுட்டர்சுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- பின்னர், சுரிநாமின் சூரிய ஒளி மின் திட்டம் உட்பட வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியா சார்பில் ரூ.347 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். கல்வி, தகவல் தொழில்நுட்பம் துறைகளில் இணைந்து செயல்பட இருநாடுகளும் ஒப்புக் கொண்டன.
- வெளிநாட்டைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் ஒருவர் சுரிநாம் நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
மேட்ச் பிக்சிங்கால் ஆறு ஆண்டுகள் விளையாட தடை பெற்ற டென்னிஸ் வீரர்!!
- அர்ஜெண்டினாவை சேர்ந்த டென்னிஸ் வீரரான நிகோலஸ் கிக்கர் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஆறு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அர்ஜெண்டினாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் நிகோலஸ் கிக்கர். 25 வயதாகும் அவர் கடந்த 2015-ம் ஆண்டு இத்தாலி மற்றும் கொலம்பியாவில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- நிகோலஸ் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. இதையடுத்து அவர் ஆறு ஆண்டுகள் விளையாட டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு தடை விதித்துள்ளது. அதோடு 25 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு தடை பாதியாக குறைக்கப்படுவதாகவும் டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு பின்னர் அறிவித்தது.
ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் கேப்டன் ஆனார் அதிரடி மன்னன் அந்த்ரே ரஸல்!!
- வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னனான அந்த்ரே ரஸல் ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அந்த்ரே ரஸல். இவர் உலகளவில் நடைபெறும் முன்னணி டி20 லீக்குகளான ஐபிஎல், சிபில், பிக்பாஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்காள தேச பிரீமியர் லீக்கில் விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு ஊக்கமருந்து சோதனைக்கு தன்னை உட்படுத்தாததால் ஓராண்டு தடைபெற்றார்.
- விரைவில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற இருக்கிறது. அதில் இடம்பித்துள்ள ஜமைக்கா தல்லாவாஸ் அணி அவரை கேப்டனாக நியமித்துள்ளார்.
துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர்!!
- கேஎஸ்எஸ் மெமோரியல் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் ஓம் பிரகாஷ் மிதர்வால், விஜய் குமார் தலா இரண்டு தங்கம் வென்றனர்.
- இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கேஎஸ்எஸ் மெமோரியல் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்ற வருகிறது. ஆண்களுக்காக 50மீ ப்ரீ பிஸ்டர் பிரிவில் ஓம்பிரகாஷ் மிதர்வால் 560 புள்ளிகள் பெற்ற தங்கப்பதக்கம் வென்றார்.
- 2010 காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஓம்காம் சிங் 559 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். 553 புள்ளிகளுடன் குர்பால் சிங் வெண்கல பதக்கம் வென்றார்.
- 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் அணிகள் பிரிவில் ஓம் பிரகாஷ், குர்பால் கிங், ஜெய்ன் சிங் அணி 1654 பள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றது. மோனு தோமர் தலைமையிலான அணி 1641 புள்ளிகள் பெற்றி 2-வது இடமும், ஓம்கார் சிங் அணி 1626 புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தது.
- 50மீ பிஸ்டல் ஜூனியர் பிரிவில் அன்மோல் ஜெய்ன் தங்கமும், சுரிந்தர் சிங் வெள்ளியும், சுராஜ் பாம்பானி வெண்கலமும் வென்றனர். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய் குமார், 25மீ சென்டர் பையர் தனிப்பிரிவு மற்றும் அணிப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
துபை மாஸ்டர்ஸ் கபடி போட்டி !!
- இந்தியா, பாகிஸ்தான், கொரியா, ஈரான், அர்ஜென்டினா, கென்யா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் துபை மாஸ்டர்ஸ் கபடி தொடர் துபாயில் நடைபெறுகிறது.
- வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
- விளையாட்டு
- இங்கிலாந்து பெண்கள் அணி 250 ரன்கள் குவித்து உலக சாதனை!!
- பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 250 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.
- நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது
- டவுன்டானில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்க அணிகள் மோதின.
- முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. டாமி பியூமோன்ட் 116 ரன்களும் (52 பந்து, 18 பவுண்டரி, 4 சிக்சர்), டேனியலி வியாட் 56 ரன்களும் விளாசினர்.
- அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்களே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து 121 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.
- பெண்கள் 20 ஓவர் போட்டி வரலாற்றில் இது தான் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.
- 20 ஓவர் போட்டியில் முதல்முறையாக சதம் அடித்த 27 வயதான பெண் டாமி பியூமோன்ட்.
உலக கோப்பை கால்பந்து !
- உலக கோப்பை கால்பந்து அரங்கில் குறைந்த வயதில் (19ஆண்டு ,183நாள்) கோல் அடித்த பிரான்ஸ் வீரர் என்ற சாதனையை படைத்தார் மபே.
- இதற்கு முன், டேவிட் டிரிக்கேட் 20 ஆண்டு, 246 நாள்களில் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது.
தேசிய கூடைப்பந்து போட்டியில் மாணவிக்கு தங்கம்!
- பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த மாதம் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை 68வது தேசிய அளவிலான கூடைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.
- இப்போட்டியில் தமிழக அணிகளின் சார்பில் திருவண்ணாமலை விடிஎஸ் ஜெயின் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு விடுதி மாணவி ஜி.சர்மிளா கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் ஷிகார் தவான் 10 இடங்கள் முன்னேற்றம்!!
- ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் ஷிகார் தவான் 10 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் அடித்து, மிக அரிதான சாதனையை அவர் படைத்தார்.
- இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 34ஆவது இடத்தில் இருந்த தவான் 10 இடங்கள் முன்னேறி 24ஆவது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தற்போது வரை இவர் பெற்ற சிறந்த தரம் இதுவாகும். இதேபோல் முரளி விஜய் 23ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
- சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்!
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அஹமத் சேஷாத் ஊக்க மருந்து பயன்படுத்தியது சோதனையின்போது தெரியவந்துள்ளது.
- பாகிஸ்தானின் ஐந்து உள்ளூர் அணிகள் பங்கேற்ற 'பாகிஸ்தான் கோப்பை' தொடர் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மே 1 வரை நடைபெற்றது.
- இந்தத் தொடரில் கோப்பையை வென்ற கைபர் பக்துன்குவா அணிக்காக விளையாடிய அஹமத் சேஷாத் 3 அரை சதம் மற்றும் ஒரு சதத்துடன்; 74.4 சராசரியுடன் 372 ரன்கள் குவித்தார்.
- இந்தத் தொடரின்போது வீரர்களுக்கு டோப் டெஸ்ட் எனப்படும் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. சமீபத்தில் வெளியான இந்தச் சோதனையின் முடிவில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அஹமத் சேஷாத் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
வர்த்தகம்
நலம்பேணும் நிறுவனத்துக்குத் தலைவராகும் இந்தியர்!!
- அமேசான், பெர்க்சயர், ஜேப்பி மோர்கன் ஆகியவை இணைந்து உருவாக்கும் நலம்பேணும் நிறுவனத்துக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரைத் தலைமைச் செயல் அலுவலராகத் தேர்ந்தெடுத்துள்ளன.
- அமேசான், பெர்க்சயர், ஜேப்பி மோர்கன் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து நலம்பேணும் நிறுவனத்தைத் தொடங்க உள்ளன. பாஸ்டனைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
- இந்நிலையில் புதிய நிறுவனத்தின் செயல்பாட்டுச் செலவைக் குறைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதுல் கவண்டே என்பவரை நலம் பேணும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக நியமிக்கத் தீர்மானித்துள்ளன.
- அதுல் கவண்டே புகழ்பெற்ற மருத்துவரும் எழுத்தாளரும் ஆவார்.
21st Century Fox நிறுவனத்தை வாங்குகிறது வால்ட் டிஸ்னி!!
- 21st Century Fox நிறுவனத்துக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் விலை கொடுக்க வால்ட் டிஸ்னி முடிவு செய்துள்ளது. ட்வெண்டி ஃபர்ஸ்ட் செண்ட்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தை வாங்க வால்ட் டிஸ்னி, காம்கேஸ்ட் நிறுவனங்கள் இடையே போட்டி நிலவியது.
- காம்கேஸ்ட் நிறுவனம் நான்கு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்க முடிவு செய்திருந்தது. தற்போது நடைபெற்ற ஏலத்தில் 21St செண்ட்சுரி ஃபாக்ஸ் நிறுவன சொத்துகளை 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்க வால்ட் டிஸ்னி முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு இந்தியா கூடுதல் வரி!!
- ஐரோப்பிய ஒன்றியம், சீனாவைத் தொடர்ந்து இந்தியாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு, இரும்பு மற்றும் சில வேளாண் விளைபொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தியுள்ளது.
- உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரியை அதிகரித்தது, அவற்றை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியமும், சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரியை உயர்த்தியுள்ளன.
- பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பிள்கள், வால்நட் (walnuts), அல்மாண்ட் (almonds), கொண்டைக் கடலை (chickpeas), லெண்டில் (lentils) பருப்பு ஆகியவற்றின் சில வகைகளுக்கு வரியை இந்தியா அதிகரித்துள்ளது.
- இதேபோல, சில வகை உருக்கு மற்றும் இரும்புப் பொருள் இறக்குமதிக்கும் வரியை இந்தியா அதிகப்படுத்தியுள்ளது. இதில் சில வரி உயர்வுகள் உடனடியாகவும், சில வரி உயர்வுகள் ஆகஸ்ட் 4ஆம் தேதியும் அமலுக்கு வருகின்றன.
- உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு அமெரிக்கா வரியை உயர்த்தியது குறித்து கடந்த மாதத்தில் இந்தியா உலக வர்த்தக கழகத்திடம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய தினம் / வாரங்கள்
உலக இசை தினம்: ஜூன் 21
- ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது.
- நாடு, மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. இசை இல்லாமல் வாழ முடியாது. இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை.
- இசை நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வு. பெரும்பாலனவர்களின் கவலையை தீர்க்கும் மருந்து; சிறந்த பொழுதுபோக்கு அம்சம். வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப் படுகிறது.
உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம்
- ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவித்தது. அதையடுத்து, உலகம் முழுவதும் அந்த நாளில் பொது இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
- இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான யோகா தினமான புதன்கிழமை, உலகின் பல்வேறு நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
- அமெரிக்காவின் ஐ.நா. வளாகம், பெரு நாட்டின் மாச்சு பிச்சு மலைக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அறிவியல் தொழில்நுட்பம்
புழுதி புயல் தாக்கியதில் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்!!
- செவ்வாய் கிரகத்தில் கடந்த ஒரு வாரமாக வீசி வரும் மாசு கலந்து புழுதி புயலினால் ஏற்பட்ட மாற்றங்களை கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
- செவ்வாய் கிரகத்தில் தூசு புயல் வீசவுள்ளதாக சமீபத்தில் நாசா தகவல் அறிவித்தது. இந்த புயலை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடிக்கும் எனவும், அந்த புயலினால் அதன் செயற்பாடுகளும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்திருந்தது.
- இதனிடையே கடந்த ஒரு வாரமாக செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல் வீசி வருகிறது. இந்த புழுதி புயலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
- இந்நிலையில், புழுதி புயலின் காரணமாக செவ்வாய் கிரகத்தின் சில பகுதிகளில் நிறம் மாறியுள்ளது. மஞ்சள் நிறமாக இருந்து பகுதிகள் சிவப்பு நிறமாக மாறியுள்ளன.
விருதுகள்
திருமாவளவனுக்கு அம்பேத்கர் விருது!!
- 2018 ஆம் ஆண்டிற்கான எஸ்டிபிஐ கட்சியின் விருதுகள் பெறுவோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அம்பேத்கர் விருது வழங்கப்படவுள்ளது.
- எஸ்.டி.பி.ஐ. கட்சி (இந்திய சமூக ஜனநாயகக் கட்சி) சார்பில் சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்குச் சேவையாற்றக்கூடியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- விருதுகளும் – பெறுபவர்களும்
- டாக்டர் அம்பேத்கர் விருது : திருமாவளவன் (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
- தந்தை பெரியார் விருது : திரு. ஹென்றி திபேன் (மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு, மதுரை)
- அன்னை தெரசா விருது : லலிதா தெரசா FCC (ஜீவோதயா நல்வாழ்வு மையம்)
- காமராஜர் விருது : திரு. C.M.N. சலீம் (ஆசிரியர், சமூக நீதி முரசு)
- காயிதே மில்லத் விருது : குமரிஅனந்தன் (மூத்த தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)
- நம்மாழ்வார் விருது : பேராசிரியர் ஜெயராமன் (மயிலாடுதுறை)
- கவிக்கோ விருது : செ. திவான் (வரலாற்று ஆய்வாளர்)
- பழனிபாபா விருது : குணங்குடி R.M. ஹனீபா
- சிறந்த மார்க்க அறிஞர் : A.E.அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி (ஜமாஅத்துல் உலமா சபை)
- சிறந்த அரசு அதிகாரி : செய்யது முனீர் கோதா,IAS(முன்னாள் தமிழக உள்துறை செயலாளர்)
- சிறந்த தொழிலதிபர் : S. அஹமது மீரான் (இயக்குநர் தி-புரபஷனல் கூரியர்)
- சிறந்த வழக்கறிஞர் : திரு. ப.பா. மோகன் (மூத்த வழக்கறிஞர்)
- சமூக அக்கரையுள்ள கலைஞர் : திரு. கோபி நயினார் (அறம் திரைப்பட இயக்குநர்)
- சிறந்த ஊடகவியலாளர் : கவின் மலர் (பொறுப்பாசிரியர், குங்குமம் தோழி)
- சிறந்த மாணவர் : S.பஸ்லுர் ரஹ்மான் (செங்கல்பட்டு)
- ராயபுரம் ரம்ஜான் மஹாலில் ஜூன் 25 அன்று நடைபெறும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முப்பெரும் விழாவில் இவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
முக்கிய குழு
ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் பணியாளர் சீரமைப்புக் குழு !!
- முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆதிசேஷய்யா தலைமையில் பணியாளர் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள ஊழியர் கட்டமைப்பை இந்த குழு ஆய்வு செய்யும்.
- முக்கியமில்லாத பணிகள் எவை எவை என்பதை குழு கண்டறிந்து அரசுக்கு அறிக்கை அளிக்கும்.
- தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கும் பணிகள் என்னென்ன என்பது கண்டறிருந்து தெரிவிக்கும்.
Comments
Post a Comment