நிதிநிலை அறிக்கை 2019 -20:
சிறப்பு அம்சங்கள்
10 ஆண்டுகளுக்கான 10 அம்ச தொலைநோக்குத் திட்டம்
# மாசற்ற இந்தியாவை உருவாக்குவதன் மூலம், பசுமையான பூமித்தாய் மற்றும் நீல வானம் என்பதை அடைதல்.
# பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் டிஜிட்டல் இந்தியாவை அறிமுகப்படுத்துதல்.
# ககன்யான், சந்திரயான் மற்றும் பிற விண்வெளி மற்றும் செயற்கைக் கோள் திட்டங்களை செயல்படுத்துதல்.
# அமைப்ப ரீதியான மற்றும் சமூக கட்டமைப்புகளை உருவாக்குதல்.
# தண்ணீர், நீர்மேலாண்மை, தூய்மையான நதிகள்.
# நீலப் பொருளாதாரம்.
# உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் ஏற்றுமதி.
# ஆயுஷ்மான் பாரத் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குதல், ஊட்டச்சத்து மிகுந்த பெண்கள் & குழந்தைகள், குடிமக்கள் பாதுகாப்பு.
# இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டத்தின் கீழ் குறு, சிறு. நடுத்தர தொழில்கள், புதிய தொழில் தொடங்குதல், பாதுகாப்பு தளவாட உற்பத்தி, வாகனங்கள், மின்னணு சாதனங்கள், ஆடைகள் மற்றும் பேட்டரிகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தல்.
# “மக்களின் மனம் எதிர்பார்ப்பு, நம்பிக்கை, விருப்பங்கள் நிறைந்தது” என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி
# இந்தியப் பொருளாதாரம் நடப்பாண்டில் 3 டிரில்லியன் டாலர் உடையதாக மாறும்.
# இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்றுவதே அரசின் விருப்பம்.
# “இந்தியா இன்க். இந்தியாவின் வேலைவாய்ப்பு உருவாக்கும் அமைப்பாகவும், தேசத்திற்கான சொத்து உருவாக்கும் அமைப்பாகவும் உள்ளது” என நிதியமைச்சர் தெரிவித்தார்.
முதலீடு தேவைப்படும் துறைகள்:
# டிஜிட்டல் பொருளாதாரம்
# சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்
குறு சிறு நடுத்தர தொழில்களுக்கான திட்டங்கள்:
# ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு குறைவான வரவு-செலவு கொண்ட, சுமார் 3 கோடி சில்லரை வணிகர்கள் & சிறு வியாபாரிகளுக்கான ஓய்வூதிய பலன்.
# இந்தத் திட்டத்திற்கான உறுப்பினர் சேர்ப்பு எளிமையான முறையில் மேற்கொள்ளப்படும். ஆதார், வங்கிக் கணக்கு மற்றும் சுய உறுதிமொழி அடிப்படையில் இது நடைபெறும்.
# குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வட்டி மானிய திட்டத்தின் கீழ், ஜி.எஸ்.டி. பதிவு பெற்ற அனைத்து குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், 2 சதவீதம் வட்டி மானியம் (புதிய அல்லது கூடுதல் கடன்) வழங்க 2019-20 நிதியாண்டில் ரூ.350 கோடி ஒதுக்கீடு.
# குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்துவதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கும் வகையில், கணக்கு தாக்கல் மற்றும் கட்டணங்களை செலுத்துவதற்கென தனி அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.
# போக்குவரத்துக் கட்டணங்களை செலுத்துவதற்கு, இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தேசிய பொது போக்குவரத்து அட்டை (NCMC) திட்டம் மார்ச் 2019-ல் தொடங்கப்பட்டது.
# பேருந்து பயணம், சுங்கச்சாவடி கட்டணம், வாகன நிறுத்த கட்டணம் மற்றும் சில்லரை வணிக கட்டணம் போன்றவற்றை செலுத்த ஏதுவாக, ரூபே அட்டை அடிப்படையிலான ஒருங்கிணைந்த போக்குவரத்து அட்டை அறிமுகம் செய்யப்படும்.
# அனைத்து வகையான போக்குவரத்து வசதிகளுக்கும் அதிக முக்கியத்துவம்:
# பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம்
# தொழில் வளாக நெடுஞ்சாலைகள், பிரத்யேக சரக்குப் போக்குவரத்து பாதைகள்.
# பாரத் மாலா மற்றும் சாகர் மாலா திட்டங்கள், ஜல் மார்க் விகாஸ் மற்றும் உடான் திட்டங்கள்.
பாரத் மாலா திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மாநில சாலை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

# ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின் கீழ் சாகிப்கஞ்ச் மற்றும் ஹால்டியாவில் பன்நோக்குப் போக்குவரத்து முனையங்களை அமைப்பது மற்றும் ஃபராக்காவில் நேவிகேஷனல் லாக் வசதியை ஏற்படுத்துவதன் மூலம், 2019-20-க்குள் கங்கை ஆற்றில் போக்குவரத்துத் திறனை அதிகரித்தல்.
# அடுத்த 4 ஆண்டுகளில் கங்கை ஆற்றில் சரக்குப் போக்குவரத்து 4 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சரக்கு மற்றும் பயண கட்டணம் குறைவதோடு, இறக்குமதி செலவுகளும் குறையும்.
# 2018-2030 இடையிலான காலகட்டத்தில் ரயில்வே கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறது.
# அரசு-தனியார் ஒத்துழைப்பு மூலம், ரயில் பாதை அமைத்தல், ரயில் பெட்டி தயாரித்தல் மற்றும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகள் மேம்படுத்தப்படும்.
# நாடு முழுவதும் 657 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
# விமானப் போக்குவரத்துத் துறையில் தற்சார்பு அடையும் விதமாக, பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முழுமையான பழுது நீக்குதல் பணிகளை மேம்படுத்த புதிய கொள்கை முடிவுகளை மேற்கொள்ளுதல்.
# விமானப் போக்குவரத்திற்கான நிதியுதவி மற்றும் குத்தகை பணிகளுக்கான மையமாக இந்தியாவை உருவாக்குவதற்கான ஒழுங்குமுறை விதிகள் அரசால் உருவாக்கப்படும்.
# மின்சார வாகனங்கள் உற்பத்தி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி.
# மின்சார வாகன பயன்பாட்டை விரைவாக ஏற்றுக் கொள்ளும் விதமாக (FAME), இத்தகைய வாகனங்களின் கொள்முதல் மற்றும் சார்ஜிங் வசதிகளை ஏற்படுத்த ஊக்கத் தொகை வழங்குதல்.
# அதிநவீன பேட்டரி மூலம் இயங்கக் கூடிய மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்களுக்கு மட்டும் இந்த (FAME), திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
# நிதியுதவி அமைப்புடன் கூடிய தேசிய நெடுஞ்சாலை தொகுப்பை உறுதி செய்யும் விதமாக, தேசிய நெடுஞ்சாலை திட்டம், மாற்றியமைக்கப்படும்.
# “ஒரு தேசம், ஒரு தொகுப்பு” திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும்.
# எரிவாயு தொகுப்புகள், தண்ணீர் தொகுப்புகள், அதிநவீன சாலைகள் மற்றும் மண்டல விமான நிலையங்களுக்கென புதிய செயல் திட்டம் ஒன்று உருவாக்கப்படும்.
# உயர்மட்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் நடைமுறைபடுத்தப்படும்:
# மிகவும் பழமையான, செயல்திறனற்ற நிறுவனங்களுக்கு ஓய்வளித்தல்.
# இயற்கை எரிவாயு பற்றாக்குறை காரணமாக குறைந்த அளவிலான எரிவாயுவை பயன்படுத்தும் ஆலைகளின் திறனை மேம்படுத்துதல்.
# வெளிப்படையான விற்பனைக்கு உகந்த அல்லது தொழிற்சாலைகளுக்கான முதலீடு மற்றும் மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கான ஒட்டு மொத்த மானியங்கள் மீதான கூடுதல் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் உதய் (UDAY) திட்டத்தின்படி நீக்கப்படும்.
# மின்சார கட்டணங்கள் மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
# வாடகை வீட்டுவசதி திட்டத்தை ஊக்குவிப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
# மாதிரி வாடகை குடியிருப்போர் சட்டம் இறுதி செய்யப்பட்டு மாநிலங்களுக்கு சுற்றுக்கு விடப்படும்.
# பொது கட்டமைப்பு வசதிகள் மற்றும் மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வசமுள்ள நிலங்களை பயன்படுத்தி குறைந்த செலவில் வீடுகள் கட்டுவதற்கான கூட்டு நடைமுறைகள் உருவாக்கப்படும்.
அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவைப்படும் முதலீடுக்கான ஆதாரங்களை மேம்படுத்த நடவடிக்கை:
# 2019-20 ஆம் ஆண்டில் கடன் உத்தரவாத மேம்பாட்டுக் கழகம் உருவாக்கப்படும்.
# அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்கு நிதியுதவி திரட்டுவதற்கான நீண்ட கால கடன் பத்திரங்களுக்கான சந்தையை விரிவுபடுத்த செயல்திட்டம் ஒன்று உருவாக்கப்படும்.
# FII/FPI – யால் உள்நாட்டு முதலீட்டாளரிடம் மேற்கொள்ளப்படும் முதலீடு மாற்றம் / விற்பனை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் மேற்கொள்ள வகை செய்யப்படும்.
பங்கு பத்திர சந்தையை மேம்படுத்த நடவடிக்கை
# பெரு நிறுவனங்களின் பங்கு பத்திர வணிக நடைமுறையை எளிதாக்குவது குறித்து ஆய்வு செய்யப்படும்.
# சமூக பங்குச் சந்தை
# செபி வரம்பிற்குட்பட்டு, மின்னணு நிதி திரட்டும் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.
# சமூக நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளை பட்டியலிடுதல்.
# பங்குகள் கடன் அல்லது பரஸ்பர சகாய நிதி போன்றவற்றின் மூலம் முதலீடு திரட்டுதல்.
# பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் குறைந்தபட்ச பொது பங்குகளின் அளவை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்துவது குறித்து செபி பரிசீலிக்கும்.
# வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான, உங்களது வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் திட்டத்திற்கான விதிமுறைகள், முதலீட்டாளர்களுக்கு மேலும் உகந்தவாறு மாற்றியமைக்கப்படும்.
# பங்குச் சந்தைகளை பயன்படுத்தி, நிறுவனம் சார்ந்த வளர்ச்சியை அதிகரிக்க, சில்லரை முதலீட்டாளர்கள் அரசு கருவூல பட்டியல்கள் மற்றும் பங்கு பத்திரங்களில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அரசு உதவிகரமாக இருக்கும்.
அன்னிய நேரடி முதலீட்டுக்கு உகந்த இடமாக இந்தியாவை மாற்றுவதற்கான நடவடிக்கைகள்:
# காப்பீட்டு இடைத் தரகு நிறுவனங்களில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்.
# ஒற்றை குறியீட்டு சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான உள்ளூர் முதலீட்டு விதிமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.
·
·
# தேசிய கட்டமைப்பு முதலீட்டு நிதியை ஒரு ஆதாரமாக பயன்படுத்தி 3 வகையான சர்வதேச முதலீட்டாளர்கள் (ஓய்வூதியம், காப்பீடு மற்றும் இறையாண்மை நல நிதி) பங்கு பெறக் கூடிய, உலக முதலீட்டாளர் மாநாடு இந்தியாவில் அரசால் ஆண்டுதோறும் நடத்தப்படும்.
# ஒரு நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் FPI முதலீட்டுக்கான நிலையான உச்சவரம்பு 24 சதவீதத்திலிருந்து அன்னிய முதலீட்டு வரம்புக்கு ஏற்ப உயர்த்தப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது தொடக்க அளவை குறைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
# ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை மற்றும் கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளையால் வெளியிடப்படும் கடன் பத்திரங்களை வாங்க FPI-களுக்கு அனுமதி வழங்கப்படும்.
# வெளிநாடுவாழ் இந்தியர் முதலீடு திட்ட வழி, FPI-உடன் இணைக்கப்படும்.
# கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை, ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை போன்ற புதிய வகை நிதியுதவி அமைப்புகள் மற்றும் ToT மூலம் திரட்டப்படும் ஒட்டுமொத்த ஆதாரம் ரூ.24,000 கோடியை தாண்டும்.
# நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) என்ற பெயரில், விண்வெளித் துறையின் புதிய வணிக பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படும்.
# செலுத்து வாகனங்கள் போன்றவற்றின் உற்பத்தியை வணிக மையமாக்குவது, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் விண்வெளிப் பொருட்களை சந்தைப்படுத்துதல் போன்ற இஸ்ரோவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் மூலம் பலனடைதல்.
நேரடி வரிகள்
# ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலும், ரூ.5 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட வரி விதிக்கத்தக்க வருமானம் உடைய தனி நபர்களுக்கான கூடுதல் வரி உயர்த்தப்படும்.
# “வரி செலுத்துதல்” வகையின் கீழ், தொழில் தொடங்குவதை எளிமையாக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் 2017-ல் 172-வது இடத்தில் இருந்த இந்தியா, 2019-ல் 121-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
# அரசின் நேரடி வரிவருவாய் கடந்த 5 ஆண்டுகளில் 78 சதவீதம் உயர்ந்து ரூ.11.37 லட்சம் கோடியாக உள்ளது.
வரி எளிமைப்படுத்துதல் மற்றும் வாழ்க்கையை எளிதாக்குதல் – தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரி செலுத்துவதை எளிமையாக்குதல்

# வருமானவரி நிரந்தர கணக்கு எண் மற்றும் ஆதார் ஆகிய ஏதாவது ஒன்றை பயன்படுத்தும் வசதி.
o வருமானவரி நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்களும் ஆதாரை பயன்படுத்தி கணக்கு தாக்கல் செய்யலாம்.
o வருமானவரி நிரந்தர கணக்கு எண் தேவைப்படும் இடங்களில் ஆதாரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
# விரைவான மேலும் துல்லியமான கணக்கு தாக்கலுக்கு வருமானவரி கணக்கை முன்கூட்டியே தாக்கல் செய்யும் வசதி.
o பல்வேறு வருமானங்கள் மற்றும் கழிவுகள் பற்றிய கணக்கை முன்கூட்டியே தாக்கல் செய்யும் வசதி.
o வங்கிகள், பங்குச்சந்தைகள், பரஸ்பர நிதி திட்டங்கள் மூலம் தகவல் பெறப்படும்.
· முகம் இல்லாத மின்னணு மதிப்பீடு
· முகம் இல்லாத மின்னணு மதிப்பீடு
o மனித தலையீடு இல்லாத முகமற்ற மின்னணு மதிப்பீட்டு முறை தொடங்கப்படுகிறது.
o குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகள் அல்லது முரண்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டிய கணக்குகள், தொடக்கத்தில் இத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.
குறைந்த செலவில் வீட்டு வசதி
குறைந்த செலவில் வீட்டு வசதி
# 2020 மார்ச் 31 வரை ரூ.45 லட்சம் மதிப்புள்ள வீடுகளை வாங்குவதற்கான கடனுக்கான வட்டியில், கூடுதலாக ரூ.1.5 லட்சம் வரை கழித்துக்கொள்ளப்படும்.
o 15 ஆண்டுகள் வரையிலான கடனில் ரூ.7 லட்சம் வரை ஒட்டுமொத்த சலுகைகள்.
மின்னணு வாகனங்கள் ஊக்குவிப்பு
மின்னணு வாகனங்கள் ஊக்குவிப்பு
# மின்னணு வாகன கடனுக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை கூடுதல் வருமானவரி கழிவுத் தொகையாக கணக்கிடப்படும்.
# மின்னணு வாகனங்களுக்கான சில உதிரி பாகங்களுக்கு சுங்கவரியிலிருந்து விலக்களிக்கப்படும்.
பிற நேரடி வரி நடைமுறைகள்
பிற நேரடி வரி நடைமுறைகள்
# வரிச் செலுத்துவோர் எதிர்கொள்ளும் நியாயமான பிரச்சனைகளை களைய வரிச்சட்டங்களை எளிமைப்படுத்துதல்.
o வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களை தண்டிக்கும் விதமாக உயர் வரி கட்டமைப்பில் கொண்டு வருதல்.
o வருமானவரி சட்டப் பிரிவு 50சிஏ மற்றும் பிரிவு 56-ன் கீழ் துஷ்பிரயோக எதிர்ப்பு பிரிவுகளிலிருந்து குறிப்பிட்ட சில பிரிவினருக்கு விலக்களித்தல்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிவாரணம்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய விற்கப்படும் வீடுகளுக்கு மூலதன விலக்கு, 2021 நிதியாண்டு வரை விரிவாக்கம்.
ஏஞ்சல் வரி பிரச்சினை தீர்க்கப்பட்டது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திரட்டும் நிதிக்கு வருமான வரித்துறை ஆய்வு தேவையில்லை.
நிலுவையில் உள்ள மதிப்பீடுகள் மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சிறப்பு நிர்வாக ஏற்பாடுகள்.
சர்வதேச வங்கி சேவைகள் மையம்
முன்மொழியப்பட்ட நேரடி வரி உதவித் தொகைகள்
15 ஆண்டு காலத்திற்குள் உள்ள எந்த 10 ஆண்டு பிளாக்கிற்கும் 100 சத லாபத்துடன் இணைக்கப்பட்ட குறைப்பு.
ஈவுத்தொகை பட்டுவாடா வரியிலிருந்து விலக்கு.
அயல்நாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து பெறப்பட்ட கடனுக்கு வட்டி செலுத்தினால், அதற்கும் விலக்கு.
மறைமுக வரிகள்
மேக் இன் இந்தியா
பிவிசி, டைல்கள், ஆட்டோ பாகங்கள், மார்பிள் ஸ்லாப்புகள், கண்ணாடி இழை கேபிள், சிசிடிவி கேமரா ஆகியவற்றுக்கான அடிப்படை சுங்க வரி அதிகரிப்பு.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சில மின்னணு சாதனங்களுக்கு சுங்க வரி விலக்கு.
சிலவகையான தாள்களுக்கு விலக்கு.
இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களுக்கு 5 சதம் அடிப்படை சுங்க வரி.
சில கச்சாப் பொருட்களுக்கு சுங்க வரி குறைப்பு.
பாதுகாப்பு
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத பாதுகாப்பு கருவிகளுக்கு அடிப்படை சுங்க வரி விலக்கு.
பிற மறைமுக வரி கூறுகள்
கச்சா மற்றும் பாதி – மெருகேற்றப்பட்ட தோலுக்கு ஏற்றுமதி வரி சீரமைப்பு.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு, சிறப்பு கூடுதல் கலால் வரி மற்றும் உள்கட்டமைப்பு தீர்வை லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிப்பு.
தங்கம் மற்றும் பிற விலை மதிப்புள்ள உலோகங்களுக்கு சுங்கத் தீர்வை அதிகரிப்பு.
கிராமப்புற இந்தியா
கிராமப்புறங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்வையும் உஜ்வாலா மற்றும் சவுபாக்யா திட்டங்கள் பெருமளவு மாற்றியமைத்துள்ளன.
2022-ல் விருப்பமுள்ள அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் மின்சாரம், தூய்மையான சமையல் செய்யும் வசதி.
கிராமப்புற பிரதமர் வீட்டு வசதித் திட்டம் – 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கு –இரண்டாவது கட்டத்தில் (2019-20-லிருந்து 2021-22 வரை) தகுதியுள்ள பயனாளிகளுக்கு 1.95 கோடி வீடுகள், கழிப்பறை, மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்புகளுடன்.
பிரதமர் மத்சய சம்பதா திட்டம் – மீன்வள மேலாண்மை கட்டமைப்பு, மீன்வளத் துறை வாயிலாக அமைக்கப்படும் – உள்கட்டமைப்பு, நவீனமயமாக்கல், உற்பத்தி, உற்பத்தித் திறன், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை, தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கலான இடைவெளிகளுக்கு தீர்வு காணப்படும்.
பிரதமர் கிராமப்புற சாலைத்திட்டம் – அனைத்து குடியிருப்புகளையும் சாலை மூலம் இணைக்கும் இலக்கு 2022 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டிற்கு மாற்றியமைப்பு.
பசுமை தொழில்நுட்பம், வீணான பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி, 30,000 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில், ரூ.80,250 கோடி செலவில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 1,25,30 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகள் மேம்படுத்தப்படும்.
பாரம்பரியத் தொழில்களை மேம்படுத்தவும், புத்துருவாக்கம் செய்வதற்குமான நிதித் திட்டம்
பாரம்பரியத் தொழில்களைக் கூடுதல் உற்பத்தித் திறன், லாபம் மற்றும் நீடித்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறனுள்ளதாக உருவாக்கும் வகையில், ஒரே இடத்தில் பல தொழில்களை மேம்படுத்தும் பொது வசதி மையங்கள் அமைக்கப்படும்.
பொருளாதார மேம்பாட்டுத் தொடரில் 50,000 கைவினைத் தொழிலாளர்கள் இணையும் வகையிலும், மூங்கில் தேனி, காதி, ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையிலும் 2019-20 நிதியாண்டில் 100 புதிய தொழில் குழுக்கள் அமைக்கப்படும்.
புதிய கண்டுபிடிப்பு மேம்பாடு, ஊரகத் தொழில் மற்றும் தொழில் முனைவோரை ஒருங்கிணைப்பதற்கான திட்டம்.
உயிரோட்டமான 80 வணிகத் தொழில் நிறுவனங்களும், 20 தொழில்நுட்ப வணிகத் தொழில் நிறுவனங்களும், 2019-20-ல் அமைக்கப்படும்.
வேளாண்-ஊரக தொழில்துறை பிரிவுகளில் 75,000 தொழில்முனைவோருக்கு திறன் மேம்பாடு வழங்கப்படும்.
விவசாயிகள் விளை நிலங்களிலிருந்து உற்பத்தி செய்யும் பொருட்களை மற்றும் இது சார்ந்த செயல்பாடுகளை மதிப்புக் கூடுதலாக்கும் தனியார் தொழில் முனைவோருக்கு ஆதரவு அளிக்கப்படும்.
கால்நடைகளுக்கான தீவன உற்பத்தி, பால் கொள்முதல், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி பால்வளம், கூட்டுறவு அமைப்புகள் மூலம் ஊக்கப்படுத்தப்படும்.
விவசாயிகளின் பொருளாதார அளவு உயர்வதை உறுதி செய்யும் வகையில், 10,000 புதிய வேளாண் உற்பத்தியாளர்கள் அமைப்பு உருவாக்கப்படும்.
இ-சந்தை மூலம் விவசாயிகள் பயனடைய மாநில அரசுகளுடன் சேர்ந்து பணியாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதிகச் செலவில்லாத பண்ணைத் தொழிலில் சில மாநிலங்களின் விவசாயிகள் பயிற்சி பெற்றுள்ளனர். மற்ற மாநிலங்களிலும், இது பிரதிபலிக்கும்.
இந்தியாவின் நீர்ப்பாதுகாப்பு
நமது நீர்வளங்களை நிர்வாகம் செய்வதையும், ஒருங்கிணைந்த முழுமையான தண்ணீர் விநியோகத்தையும் புதிய ஜல்சக்தி அமைச்சகம் கவனிக்கும்.
ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் 2024-க்குள் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழி தண்ணீர் விநியோகிக்கப்படும்.
ஒருங்கிணைந்த தேவை மற்றும் விநியோகத்திற்காக, உள்ளூர் நிலையில், தண்ணீர் நிர்வாகத்தில் கவனம் செலுத்தப்படும்.
இந்த நோக்கங்களை நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகளின் இதரத் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படும்.
ஜல்சக்தி திட்டத்திற்காக நாட்டில் பரவலாக உள்ள 256 மாவட்டங்களில் 1592 அதிக பாதிப்புள்ள ஒன்றியங்கள் கண்டறியப்படும்.
இந்த நோக்கத்திற்கு, காடுகள் அழிப்புக்கு இழப்பீட்டு நிதி நிர்வாகம் மற்றும் திட்டமிடல் ஆணையத்தின் நிதி பயன்படுத்தப்படும்.
தூய்மை இந்தியா திட்டம்
2014 ஆம் ஆண்டு அக்டோபரிலிருந்து 9.6 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
5.6 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்காதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கிராமத்திலும் திடக்கழிவு மேலாண்மையை மேற்கொள்ள தூய்மை இந்தியா இயக்கம் விரிவுபடுத்தப்படும்.
பிரதமரின் கிராமப்புற டிஜிட்டல் மயத் திட்டம்
கிராமப்புறங்களில் வாழும் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் டிஜிட்டல் அறிவை பெற்றுள்ளனர்.
கிராமப்புற – நகர்ப்புற பாகுபாட்டை நீக்கி, இணைப்பை ஏற்படுத்துவதற்காக உள்ளாட்சிகளின் ஒவ்வொரு பஞ்சாயத்தும் பாரத் - நெட் அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு, இணையதள இணைப்பு உருவாக்கப்படும்.
பாரத் நெட் அமைப்பை விரைவுபடுத்த அரசு – தனியார் பங்களிப்பு ஏற்பாட்டின்கீழ், அனைவருக்கும் உதவி செய்யும் நிதி பயன்படுத்தப்படும்.
ஷாஹ்ரி பாரத் / நகர்ப்புற இந்தியா
பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் – நகர்ப்புறம்
4.83 லட்சம் கோடி முதலீட்டுடன் 81 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு, சுமார் 47 லட்சம் வீடுகளின் கட்டுமானப் பணித் தொடங்கியுள்ளது.
26 லட்சம் வீடுகளின் வேலை பூர்த்தி அடைந்து, சுமார் 24 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, 13 லட்சத்திற்கும் கூடுதலான வீடுகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன.
95 சதவீதத்திற்கும் அதிகமான நகரங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கப்படாதவை என அறிவிக்கப்பட்டுள்ளன
தூய்மை செயலியை சுமார் ஒரு கோடி மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
காந்திஜியின் தூய்மை இந்தியா கனவை நிறைவேற்றி 2019 அக்டோபர் 2-க்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கமே இல்லாத இந்தியாவை உருவாக்குவது இலக்காகும்.
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் 2019 அக்டோபர் 2 அன்று ராஜ்காட்டில் உள்ள காந்தி தர்ஷனில் தேசிய சுகாதார மையம் துவக்கப்படும்.
காந்தியத்தின் ஆக்கப்பூர்வமான மாண்புகள் குறித்து இளைஞர்களுக்கும் சமூகத்திற்கும் தெரிவிக்க அறிவியல் அருங்காட்சியகங்களுக்கான தேசிய கவுன்சில் காந்திபீடியா உருவாக்கப்படவுள்ளது.
தில்லி-மீரத் வழித்தடத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள மண்டல விரைவுப் போக்குவரத்து முறை போல, சிறப்பு நோக்க வாகனக் (எஸ்.பி.வி.) கட்டுமானங்கள் மூலம் புறநகர் ரயில்வேக்களில் அதிக முதலீடு செய்வது ஊக்குவிக்கப்படும்.
மெட்ரோ ரயில் சேவைகளை விரிவுபடுத்தும் உத்தேசத் திட்டங்கள்:
அதிக அளவில் அரசு தனியார்துறை பங்களிப்பை ஊக்கப்படுத்துதல்.
அனுமதிக்கப்பட்ட பணிகள் முடிக்கப்படுவதை உறுதிசெய்தல்.
போக்குவரத்து மையங்களைச் சுற்றி, வணிகச் செயல்பாடுகளை உறுதி செய்ய போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுக்கு ஆதரவு அளித்தல்.
இளையோர்
புதிய தேசிய கல்விக் கொள்கை முன்வைக்கும் யோசனைகள்
பள்ளி மற்றும் உயர்கல்வியில் பெரும் மாற்றங்கள்
சிறந்த நிர்வாக முறைகள்
ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் பெரும் கவனம்
தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் நோக்கம்
நாட்டில் ஆராய்ச்சிக்கு நிதி வழங்கி ஒருங்கிணைத்து மேம்படுத்துவது
பல்வேறு அமைச்சகங்கள் வழங்கும் சுயேச்சையான ஆராய்ச்சி மானியங்களை ஒருங்கிணைத்தல்
நாட்டின் ஒட்டுமொத்த சூழலியல் ஆய்வை வலுப்படுத்துதல்
கூடுதல் நிதி ஆதாரங்களுடன் போதிய உதவிகளை செய்தல்
2019-20 நிதியாண்டில் “உலகத் தரம்வாய்ந்த கல்வி நிறுவனங்களுக்கு” ரூ.400 கோடி ஒதுக்கீடு. இது முந்தைய ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட, மூன்று மடங்கு அதிகம்.
‘இந்தியாவில் படிப்பு’ என்ற யோசனை இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் பயில வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பது.
உயர்கல்வி நிறுவன ஒழுங்குமுறைகள் விரிவாக திருத்தியமைக்கப்படும்
மாபெரும் தன்னாட்சியை மேம்படுத்துதல்
சிறந்த கல்வி சார்ந்த விளைவுகளில் கவனம் செலுத்துதல்
இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்க சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்படவுள்ளது.
தேவையான அனைத்து நிதி ஆதாரத்துடன் விளையாடு இந்தியா திட்டம் விரிவுபடுத்தப்படும்.
அனைத்து நிலைகளிலும் விளையாட்டுக்களைப் பிரபலப்படுத்த விளையாடு இந்தியா திட்டத்தின்கீழ், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தேசிய விளையாட்டுக்கள் கல்வி வாரியம் அமைக்கப்பட உள்ளது.
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற இளைஞர்களைத் தயார்படுத்த மொழிப் பயிற்சி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) இணையப் பயன்பாட்டுக்கான அனைத்து விஷயங்கள் (ஐஓடி) பெரும் தகவல் திரட்டு, முப்பரிமாண அச்சு, மெய்நிகர் தோற்றம், ரோபோக்கள் செயல்பாடு உள்ளிட்ட உலக அளவில் மதிப்புறு திறன் மேம்பாட்டை அவர்களுக்கு அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்துதல்.
பன்முகத் தன்மை கொண்ட தொழிலாளர் சட்டங்களை முறைப்படுத்தி, பதிவு மற்றும் கணக்கு தாக்கலுக்கான நான்கு தொழிலாளர் சட்டங்களை இயற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தூர்தர்ஷன் அலைவரிசை தொகுப்புக்குள் புதிய தொழில் முயற்சிக்கான சிறப்புத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
2020-25 காலம் வரை எழுக இந்தியா திட்டம் நீடிக்கப்படும். தேவைப்படும் வணிக நிறுவனங்களுக்கு வங்கிகள் நிதியுதவி வழங்கும்.
வாழ்க்கையை எளிதாக்குதல்
அமைப்புசாரா மற்றும் முறைசாரா பிரிவுகளில் பணியாற்றுவோர் 60 வயதை எட்டும் போது மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் பெறுவதற்கான பிரதமரின் ஷ்ரம் யோகி மான்தன் திட்டத்தில் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் இணைந்துள்ளனர்.
உஜாலா திட்டத்தின்கீழ், சுமார் 35 கோடி எல்ஈடி விளக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.18,341 கோடி சேமிக்க வழி ஏற்பட்டுள்ளது.
எல்ஈடி விளக்குகள் இயக்க அணுகுமுறையைப் பயன்படுத்தி, சூரிய சக்தி அடுப்புகள், பேட்டரி சார்ஜர்கள் உருவாக்கப்பட உள்ளன.
ரயில் நிலைய நவீன மயத்திற்குப் பெருந்திட்டம் தொடங்கப்பட உள்ளது.
நாரியிலிருந்து நாராயணிக்கு / பெண்கள்
பெண்களை மையப்படுத்திய கொள்கை என்ற அணுகுமுறை பெண்கள் தலைமை வகிக்கும் திட்டங்கள் மற்றும் இயக்கங்கள் என்பதாக மாற்றம் செய்யப்படும்.
மகளிர் மேம்பாட்டுக்கு அரசு மற்றும் தனியார் இணைந்த குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.
சுயஉதவிக்குழுக்கள் (எஸ்.ஹெச்.ஜி.)
மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான உத்தேச மானியத் திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
சரிபார்க்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுவின் உறுப்பினர்கள் ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருந்தால், அவர்களுக்கு ரூ.5000 வரை வங்கியில் மிகைப்பற்று(ஓவர் டிராஃப்ட்) பெற அனுமதிக்கப்படும்.
ஒவ்வொரு சுயஉதவிக் குழுவிலும் ஒரு பெண் முத்ரா திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் ரூயாய் வரை கடன் பெறத் தகுதியுடையவராவார்.
இந்தியாவின் இணக்க அணுகுமுறை
இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வந்தவுடன் 180 நாட்கள் காத்திருக்காமல் ஆதார் அட்டை வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
தேவையான காப்புரிமை மற்றும் புவிசார் குறியீடுகளுடன் பாரம்பரிய கைவினைக் கலைஞர்களை உலகச் சந்தையுடன் இணைப்பதற்கான இயக்கம் தொடங்கப்பட உள்ளது.
ஆப்பிரிக்காவில் 18 புதிய இந்திய தூதரகங்கள் அமைக்க மார்ச் 2018-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவற்றில் 5 ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. மேலும் 4 புதிய தூதரகங்கள் 2019-20-ல் திறக்கப்பட உள்ளன.
இந்திய மேம்பாட்டு உதவித் திட்டத்தை மறுசீரமைக்கும் யோசனை உள்ளது.
17 சுற்றுலாத் தலங்கள் உலகத் தரத்திலான சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்பட உள்ளன.
வளமான பழங்குடி கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடனான தற்போதைய டிஜிட்டல் களஞ்சியம் வலுப்படுத்தப்படும்.
வங்கி மற்றும் நிதிப்பிரிவு
கடந்த ஆண்டில் வணிக வங்கிகளின் செயல்படாச் சொத்தின் மதிப்பு ரூ. ஒரு லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
சாதனை அளவாக, கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 4 லட்சம் கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளன.
7 ஆண்டுகளில் திரும்பப் பெறப்பட்ட கடன் விகிதத்தில் இதுவே அதிகபட்சமாகும்.
உள்நாட்டுக் கடன் 13.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள் தொடர்பான நடவடிக்கைகள்
கடன் வழங்குவதை ஊக்கப்படுத்த பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளுக்குப் புதிய தொழில்நுட்பத்தை அளிப்பதன் மூலம் இணையவழி தனிநபர் கடன் வழங்குதல், வீடு தேடி வங்கிச்சேவை, ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைத்து வங்கிகளிலும் சேவையைப் பெற வசதி செய்தல்.
பொதுத் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் வைப்புத் தொகையில் மற்றவர்கள் கட்டுப்பாடு மேற்கொள்ளாத வகையில், அதிகாரமளித்தலுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
பொதுத் துறை வங்கிகளின் நிர்வாகத்தை வலுப்படுத்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தொடர்பான நடவடிக்கைகள்
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மீதான இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை ஆணைய கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் யோசனைகள் நிதி மசோதாவில் இணைக்கப்படும்.
மக்களிடம் பங்குகளை விற்று, நிதி திரட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதை அடுத்து, வைப்புத்தொகையை திருப்பித்தர இயலாத நிலையில், அதற்கான வைப்புநிதி உருவாக்கத்தின் தேவை கைவிடப்படுகிறது.
வர்த்தக செயல்பாட்டின் ஒருங்கிணைந்த அமைப்பில் (டி.ஆர்.இ.டி.எஸ்.) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் நேரடியாகப் பங்குபெற அனுமதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வீட்டுவசதி நிதிப்பிரிவின் மீதான ஒழுங்குமுறை ஆணையக் கட்டுப்பாட்டினைத் தேசிய வீட்டுவசதி வாரியத்திலிருந்து (என்.ஹெச்.பி) இந்திய ரிசர்வ் வங்கிக்குத் திருப்பியளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் அடிப்படைக் கட்டமைப்பில் ரூ.100 லட்சம் கோடி முதலீட்டுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கான நிதிநிறுவனங்கள் மூலம் தேவையான நிதி கிடைத்தல் மற்றும் கட்டமைப்பு குறித்து பரிந்துரை செய்ய குழு அமைக்கப்பட உள்ளது.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திலிருந்து தேசிய ஓய்வூதிய நடைமுறை அறக்கட்டளையைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த சொந்த நிதிக்குத் தேவைப்படும் அளவை ரூ.5,000 கோடியிலிருந்து, ரூ.1000 கோடியாகக் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசக் காப்பீட்டுப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கு
சர்வதேச நிதிச்சேவைகள் மையத்தில் வெளிநாட்டு காப்பீட்டாளர்கள் கிளைகளைத் தொடங்க ஏதுவாக
மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான நடவடிக்கைகள்
2019-20 நிதியாண்டிற்குப் பங்குகள் விற்பனை மூலம் ரூ.1,05,000 கோடி நிதித் திரட்ட இலக்கு
ஏர் இந்தியாவின் பங்கு விலக்கலுக்கான நடைமுறை உத்தி பற்றி அரசு மறுமுயற்சி செய்யும். மேலும், பல பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் துறை பங்களிப்பு உத்தி மேற்கொள்ளப்படும்.
பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனையை அரசு மேற்கொள்ளும். நிதி சாராத பிரிவில் பொதுத் துறை நிறுவனங்களை ஒருமுகப்படுத்துவது தொடரும்.
பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொள்ள ஒவ்வொரு நிறுவனம் சார்ந்து பங்குகளின் இருப்பை 51 சதவீதத்திற்கும் குறைவாக வைத்துக் கொள்வது பற்றி அரசு பரிசீலிக்கும்.
51 சதவீத அரசுப்பங்கினை தக்கவைத்துக் கொள்வது என்ற தற்போதைய கொள்கையில் மாற்றம் செய்து அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களையும் உள்ளடக்கிய பங்கினை 51 சதவீதமாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஓரளவு பங்கேற்பும் ஊக்குவிக்கப்படும்.
கூடுதல் முதலீட்டைப் பெறுதவற்கான வழிகள்
பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகள் இருப்பை மறுசீரமைப்பது
வங்கிகளின் பங்குகள் பெருமளவு கிடைப்பதை அனுமதிப்பது, அதன் சந்தையை அதிகரிப்பது.
சம பங்குடன் இணைந்த சேமிப்பு திட்டங்களைப் போல் பங்குச்சந்தை வர்த்தக நிதியிலும், முதலீடு செய்ய அரசு அனுமதிக்கும்.
பட்டியலிடப்பட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பொதுமக்கள் பங்குகள் வைத்திருப்பதற்கான அளவை 25 சதவீதமாக்க அரசு நடவடிக்கை எடுக்கும். சந்தைக் குறியீட்டில் வளர்ந்து வரும் பொதுத்துறை நிறுவனங்களின் அதிகபட்சம் அனுமதிக்கப்பட்ட பிரிவுகளில் வெளிநாட்டு பங்குகளின் அளவு அதிகரிக்கப்படும்.
வெளிநாட்டுப் பணமதிப்புடன் வெளிநாட்டுச் சந்தைகளில் மொத்தமாகக் கடன் பெறும் திட்டத்தை அரசு அதிகரித்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் அரசின் பங்கு பத்திரங்களுக்குத் தேவையை அதிகரிப்பது இதன் பயனாக இருக்கும்.
பார்வைக் குறைபாடு உடையவர்களும் எளிதாக அடையாளம் காணும் வகையிலான ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விரைவில் வெளியிடப்படும்.
டிஜிட்டல் முறையில் பணம் வழங்குதல்
வங்கிக் கணக்கிலிருந்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக திரும்பப் பெறுவோருக்கு இரண்டு சதவீதம் வரிப்பிடித்தம் செய்யப்படும்.
ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கு மேல் வரவு-செலவு மேற்கொள்ளும் வணிக நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் வழங்கினால், கட்டணச் சலுகை இருக்கும். வாடிக்கையாளர்களுக்கோ, வியாபாரிகளுக்கோ கட்டணம் அல்லது வியாபாரப் பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
சூரியசக்தி மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் பெரு முதலீடு
செமி கண்டக்டர் ஃபேப்ரிக்கேஷன், சூரிய எரிசக்திக்கான செல்கள், லித்தியம் சேமிப்பு பேட்டரிகள், கணினி செர்வர்கள், மடிக்கணினிகள் போன்றவற்றின் உற்பத்தித் தொழில்களைத் தொடங்க உலக அளவிலான நிறுவனங்களுக்கு அழைப்பு விடும் திட்டம்.
மறைமுக வரிப் பயன்களுடன், முதலீட்டுடன் இணைக்கப்பட்ட வருமான வரி விலக்குகளும் கிடைக்கும்.
2014-19 காலத்தில் சாதனைகள்
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு டிரில்லியன் டாலர் சேர்க்கப்பட்டுள்ளது. (55 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது முதன்முறையாக ஒரு டிரில்லியன் டாலர் அளவு எட்டப்பட்டுள்ளது)
5 ஆண்டுகளுக்கு முன், உலகின் 11-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருந்ததோடு ஒப்பிடுகையில், தற்போது 6-வது பெரிய பொருளாதாரமாக உள்ளது.
வாங்கும் சக்தியில், உலகிலேயே 3-வது பெரிய நாடாக இந்தியப் பொருளாதாரம் உள்ளது.
2014-19 காலம் நிதி ஒழுங்கமைப்புக்குக் கடுமையான உறுதிப்பாட்டோடும், மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடு புத்தாக்கம் பெற்றதாகவும் திகழ்ந்தது.
மறைமுக வரிவிதிப்பு, திவால் மற்றும் மனை வணிகத்தில் கட்டுதிட்டமான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
2009-14-உடன் ஒப்பிடும் போது, 2014-19 காலத்தில் ஆண்டுதோறும் உணவுப் பாதுகாப்புக்கு செலவிட்ட தொகை சராசரியாக இருமடங்கு உயர்ந்துள்ளது.
2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 2017-18-ல் காப்புரிமைகள் அளித்தது மும்மடங்கு ஆகியுள்ளது.
நிதி ஆயோகின் திட்டமிடல் மற்றும் உதவியுடன் புதிய இந்தியாவுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்காலத்திற்கான திட்டம்
நடைமுறைகளை எளிமையாக்குதல்
செயல்பாட்டுக்கு ஊக்கமளித்தல்
சிவப்பு நாடா முறையைக் குறைத்தல்
தொழில்நுட்பப் பயன்பாட்டை சிறப்பாக்குதல்
இதுவரை மேற்கொள்ளப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்ட பெருந்திட்டங்களையும், சேவைகளையும் துரிதப்படுத்துதல்.

Comments
Post a Comment