####அறிவோம்####
வாரன் ஹேஸ்டிங்ஸ் ( 1772 - 1785 )
வாரன் ஹேஸ்டிங்ஸ் ( 1772 - 1785 )
ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு
- 1600 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் ஆங்கிலயேய கிழக்கிந்திய வணிகக்குழு நிறுவப்பட்டது.
- இதற்கு அரசு பட்டயத்தை இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வழங்கினார்.
- 1608 ஆம் ஆண்டு கேப்டன் ஹாக்கின்ஸ் என்பவர் முகலாய பேரரசர் ஜஹாங்கிரிடம் சூரத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கு அனுமதி கோரியது ஆனால் ஜஹாங்கிர் மறுத்து விட்டார்.
- 1613 ஆம் ஆண்டு அனுமதி வழங்கினார் ஜஹாங்கிர்.
- சர் தாமஸ் ரோ என்பவர் வணிக நிலையத்திற்கு சலுகைகளும், உரிமைகளையும் வாங்கித்தந்தார்.
- 1639 ஆம் ஆண்டு பிரான்சிஸ்டே என்பவர் சென்னையை நிறுவி அங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அமைத்தார்.
- 1668 ஆம் ஆண்டு அரசர் இரண்டம் சார்லெஸிடம் ஆண்டுக்கு 10 பவுண்ட் வாடகைக்கு வணிகக்குழு மும்பை தீவை பெற்றது.
- 1690 ஆம் ஆண்டு ஜாப் சார்னாக் வணிகக்குழு முகவர் சுதநூதி, கோவிந்தபூர், காளிகட்டம் ஆகிய மூன்று கிராமங்களை விலைக்கு வாங்கினார் அதுவே பின்னர் கொல்கத்தா நகரமாக வளர்ச்சியடைந்தது.
- ஆங்கில அரசர் மூன்றாம் வில்லியம்ஸ் நினைவாக வில்லியம் கோட்டை நிறுவப்பட்டது அதற்க்கு ஜாப் சார்னாக் பெயரிட்டார்.
- 1757 ஆம் ஆண்டு பிளாசி போர் நடைபெற்றது, 1764 ஆம் ஆண்டு பக்சார் போர் நடைபெற்றது ஆகியவற்றின் விளைவாக வணிகக்குழு ஒரு அரசியல் சக்தியாக மாறியது.
- 1858 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்திய நிலப்பகுதிகளை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரும்வரை கிழக்கிந்திய வணிகக்குழு ஆட்சியே நடைபெற்றது.
- வில்லியம் கோட்டையின் முதலாவது ஆளுநராக ராபர்ட் கிளைவு பதவி வகித்தார்.
- 1772 ஆம் ஆண்டு வணிகக்குழு வில்லியம் கோட்டையின் ஆளுநராக வாரன் ஹேஸ்டிங்ஸை நியமித்தது.
வாரன் ஹேஸ்டிங்சின் சீர்திருத்தங்கள்:
1771 ஆம் ஆண்டு வாரன் ஹேஸ்டிங் பொறுப்பேற்றபோது அங்கு குழப்பம் நிலவியது ஆகவே பெருவாரியான சீர்திருத்தங்களை கொண்டுவரவேண்டியிருந்தது.
இரட்டையாட்சியை ஒழித்தல்:
- கிழக்கிந்திய வணிகக்குழு தாமே '' திவானி '' பொறுப்பை ஏற்றது தனது முகவர்கள் மூலமாக நேரடியாக நிலவரி வசூலிக்க தீர்மானித்தது.
- ராபர்ட் கிளைவின் இரட்டையாட்சி முறையை ஒழித்தார்.
- நவாபிற்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 32 லட்சத்தை பாதியாக குறைத்தது.
- முகலாய பேரரசுக்கு வழங்கப்பட்டு வந்த 26 லட்ச ஆண்டு ஓய்வூதியத்தை நிறுத்தினர்.
வருவாய் சீர்திருத்தங்கள்:
- கல்கத்தாவில் ஒரு வருவாய் வாரியம் ஏற்படுத்தப்பெற்றது. வரிவசூலை இது மேற்பார்வை செய்தது.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்கிலேய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டனர்.
- கருவூலம் முர்ஷிதாபாத்தில் இருந்து கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது. ஒரு தலைமை கணக்கரும் நியமிக்கப்பட்டார்.
- கல்கத்தா 1772இல் வங்காளத்தின் தலைநகராகியது, பின்னர் அது பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் தலைநகராகியது.
நீதி துறையை சீரமைத்தல்:
- ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டரின் கீழ் ஒரு உரிமையியல் நீதிமன்றமும், இந்திய நீதிபதியின் கீழ் ஒரு குற்றவியல் நீதிமன்றமும் செயல்படுத்தினார்.
- இரண்டு மேல்முறையீடும் நீதிமன்றங்கள் கல்கத்தாவில் அமைக்கப்பட்டது
- உரிமையியல் மேல்முறையீட்டு நீதிமன்றம் சதர் திவானி அதலத் என்றும்
- குற்றவியல் மேல்முறையீட்டு நீதிமன்றம் சதர் நிசாமத் அதலத் என்றும் அழைக்கப்பெற்றது.
- இந்து மற்றும் முஸ்லீம் சட்டவல்லுனர்கள் நியமிக்கப்பெற்றனர், இந்து ஆங்கில மொழியில் சட்ட தொகுப்பை வெளியிட்டவர் ஹால்ஹெட்.
வணிக விதிமுறைகளும் பிற சீர்திருத்தங்களும்:
- தஸ்தக்குகள் எனப்படும் இலவச அனுமதி சீட்டுகளை ஒழித்தார்.
- உள்நாட்டு வணிகத்தை முறைப்படுத்தினர், சுங்கவரி நிலையங்களை குறைத்தார்.
- இந்திய மற்றும் அயல்நாட்டு பொருள்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான சுங்கவரி 25 விழுக்காடு வரி வசூலிக்கப்பட்டது.
- ஒரே மாதிரியான முன் கட்டண அஞ்சல் முறையை அறிமுகப்படுத்தினார்.
ஒழுங்குமுறை சட்டம் ( 1773 ):
- 1773 ஆம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டம் கொண்டுவந்தார் வாரன் ஹேஸ்டிங்ஸ்.
- இங்கிலாந்தில் பிரதமராக இருந்த நார்த் பிரபு வணிகக்குழுவின் விவகாரங்களை விசாரித்து அறிய ஒரு தேர்வுக்குழுவை நியமித்தார்.அக்குழு அளித்த அறிக்கையே ஒழுங்குமுறை சட்டம் இயற்ற காரணமாகியது.
ஒழுங்குமுறை சட்டத்தின் விதிமுறைகள்:
- இயக்குனர் குழுவிலுள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் ஓராண்டிலேருந்து நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் ஆண்டு தோறும் ஒய்வு பெறுவார்.ஒய்வு பெற்றவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியை இழந்தவர்களாவர்.
- வங்காள ஆளுநர் இனி வில்லியம் கோட்டையின் தலைமை ஆளுநர் என அழைக்கப்படுவர், அவரது பதவி காலம் ஐந்து ஆண்டுகள்.
- தலைமை ஆளுநருக்கு உதவியாக நான்கு பேர் கொண்ட ஆலோசனைக்குழு ஏற்படுத்தப்பட்டது. பெருபான்மை முடிவுப்படியே அரசு இயங்க வேண்டும்.தலைமை ஆளுநருக்கு முடிவு செய்யும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
- தலைமை ஆளுநர் மற்றும் ஆலோசைக்குழுவிற்கு போர்,அமைதி,உடன்பாடு போன்ற விவகாரங்களில் மாற்ற மாகாணங்களை கட்டுப்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டது.
- கால்கத்தாவில் ஒரு உச்சநீதிமன்றம் ஏற்படுத்த இச்சட்டம் வழிவகை செய்தது. இதில் ஒரு தலைமை நீதிபதியும் மூன்று துணை நீதிபதிகளும் இருப்பார்கள்.1774 ஆம் ஆண்டு அரசு பட்டையத்தின்படி உச்சநீதிமன்றம் ஏற்படுத்தப்பெற்றது.
- தலைமை ஆளுநர்,ஆலோசைக்குழு உறுப்பினர்கள்,உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட வணிகக்குழுவின் பணியாளர்கள் எவரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பரிசுப் பொருள்கள், நிதி வெகுமதிகள் போன்றவற்றை பெறுவதற்கு இச்சட்டம் தடைவிதித்து.
சட்டத்தின் நிறைகுறைகள்:
- வணிகக்குழுவின் தன்னிசையான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தமையே இச்சட்டத்தின் முக்கிய நிறையாகும்.
- தலைமை ஆளுநருக்கு போதிய அதிகாரம் அளிக்கப்படவில்லை என்பதே இச்சட்டத்தின் முக்கிய குறையாகும்.
- இச்சட்டத்தின் பெரும்பான்மையான குறைகள் 1784 ஆம் ஆண்டு பிட்இந்திய சட்டத்தின் மூலம் சரி செய்யப்பட்டது.
வாரன் ஹேஸ்டிங்ஸின் விரிவாக்க கொள்கை:
வாரன் ஹேஸ்டிங்ஸின் விரிவாக்க கொள்கைக்கு புகழ் பெற்றவர். இவரது ஆட்சி காலத்தில் ரோகில்லா போர், முதல் ஆங்கிலேய மராத்திய போர், இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர்கள் நடைபெற்றன.
ரோகில்லா போர் ( 1774 ):
மராட்டிய பகுதிக்கும், அயோத்திக்கு இடைப்பட்ட ஒரு சிறிய அரசு ரோகில்கண்ட். இதன் ஆட்சியாளர் ஹபிஸ் ரஹ்மத் கான். மராட்டிய படையெடுப்பின் அச்சத்தின் காரணமாக ரஹ்மத் கான் அயோத்திய நவாப்பிடம் ஒரு பாதுகாப்பு உடன்படுக்கை செய்துகொண்டார். ஆனால் அத்தகைய படையெடுப்புகள் அதுவும் நடைபெறவில்லை. ஆனால், நவாப் அதற்க்கான கட்டணத்தை தருமாறு வற்புறுத்தினர். ரஹ்மத் கான் காலதாமதம் செய்யவே நவாப் பிரிட்டிஷ் உதவியுடன் ரோகில்கண்ட் மீது படையெடுத்தார். ரோகில்கண்டுக்கு எதிராக பிரிட்டிஷ் துருப்புகளை அனுப்பிய வாரன் ஹேஸ்டிங்ஸ் அத்தகயை செயலுக்கு கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
முதலாம் ஆங்கிலேய - மராட்டிய போர் ( 1775 - 1782 ):
- 1761 ஆம் ஆண்டு மூன்றாம் பானிபட்டு போர்ப் பின்பு மராட்டியர்கள் பெரும்பாலும் ஒற்றுமை இன்றி காணப்பட்டனர்.
- 1775 ஆம் ஆண்டு மாதவ ராவ் மற்றும் அவரது சித்தப்பா ரகுநாத ராவ் இருவருகிடையே பேஷ்வா பதவிக்காக போட்டி நிலவியது.
- 1775 மார்ச் திங்கள் பம்பையில் இருந்த பிரிட்டிஷ் அரசு ரகுநாத ராவுடன் சூரத் உடன்படுக்கையை ஏற்படுத்தியது.இதன்படி சால்செட், பசீன் பகுதிகளை பிரிட்டிஷாருக்கு தருவதாக அவர் வாக்களித்தார். பின்னர் அவர் தர மறுக்கவே பிரிட்டிஷார் அப்பகுதிகளை கைப்பற்றினர்.
- பம்பாய் அரசின் இந்த நடவடிக்கையை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஏற்கவில்லை. இச்சிக்கலை தீர்க்க வாரன் ஹேஸ்டிங்ஸ் 1776 இல் கர்னல் அப்டன் என்பவரை அனுப்பி வைத்தார்.
- சூரத் உடன்படுக்கையை ரத்து செய்துவிட்டு மற்றோரு மராட்டிய தலைவரான நானா பட்னாவிஸ் என்பவருடன் புரந்தர் உடன்படுக்கையை ஏற்படுத்திக்கொண்டனர்.இந்த உடன்படுக்கையின் படி இரண்டாம் மாதவராவ் பேஷ்வாவாக ஏற்றுக்கொள்ளப்படர்.
- ஆனால் தாய்நாட்டு அரசாங்கம் புரந்தர் உடன்படுக்கையை புறக்கணித்தது. வாரன் ஹேஸ்டிங்ஸ் புரந்தர் உடன்படுக்கையை வெற்று காகிதம் என கருதினர்.
- 1782 மே திங்கள் வாரன் ஹேஸ்டிங்ஸ் மகாதாஜி இடையே சால்பாய் உடன்படுக்கை கையெழுத்தானது. இதன்படி சால்செட், பசீன் பகுதிகளை பிரிட்டிஷ் கைப்பற்றியது ரகுநாத ராவுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இரண்டாம் மாதவராவ் பேஷ்வாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
இரண்டாம் ஆங்கிலேய - மைசூர் போர் ( 1780 - 1784 ):
- முதலாம் ஆங்கிலேய மைசூர் போர் 1767 - 1769 வரை நடைபெற்றது. பிரிட்டிஷாருக்கு எதிராக ஹைதர் அலி மாபெரும் வெற்றி பெற்றார்.
- பதினோரு ஆண்டுகளுக்கு பிறகு இரண்டம் ஆங்கிலேய மைசூர் போர் நடைபெற்றது.
இரண்டம் ஆங்கிலேய மைசூர் போருக்கான முக்கிய காரணம்:
- 1771இல் மராட்டியர் மைசூரை தாக்கியபோது பிரிட்டிஷார் ஹைதர் அலியுடன் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை மதிக்கவில்லை.
- அமெரிக்கா சுதந்திர போரின்போது ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலியின் கூட்டாளிகளான பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
- ஹைதர் அலியின் ஆட்சிப்பகுதிக்குள் இருந்த பிரிஞ்சு குடியிருப்பன மாஹி என்ற இடத்தை பிரிட்டிஷார் கைப்பற்றினர்.
- 1779இல் மராட்டியர் மற்றும் ஹைதராபாத் நிசாம் ஆகியோருடன் ஹைதர் அலி பிரிட்டிஷாருக்கு எதிராக ஒரு பெரும் கூட்டணியை உருவாக்கினார்.
- 1781இல் மார்ச் திங்களில் சர் அயர் கூட் பரங்கி பேட்டையில் ஹைதர் அலியை தோற்கடித்தார்.
- 1782 டிசம்பர் தனது அறுபதாவது வயதில் புற்று நோயால் ஹைதர் அலி இறந்தார்.
- 1784ஆம் ஆண்டு மங்களூர் உடன்படிக்கையின் படி இரண்டாம் மைசூர் போர் முடிவுக்கு வந்தது.
பிட் இந்திய சட்டம் ( 1784 ):
ஒழுங்கு முறை சட்டம் சில குறைபாடுகள் இருப்பதை கண்டோம். 1784 ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் இளையபிட் என்பவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியாவிற்கான வரைவு மசோதாவை கொண்டுவந்தார். இரு அவைகளிலும் வாக்குவாதம் நடைபெற்றபோதிலும் ஏழு மாதத்திற்கு பிறகு நிறைவேற்றபட்டது. 1784 ஆகஸ்டில் அரசு ஒப்புதலும் வழங்கப்பட்டது. இச்சட்டமே பிட் இந்திய சட்டம் என புகழ் பெற்றது.
முக்கிய விதிமுறைகள்:
- ஆறு உறுப்பினர்கள் கொண்ட கட்டுப்பட்டு வாரியம் அமைக்கப்பட்டது. அவர்கள் இங்கிலாந்து அரசால் நியமிக்கப்பட்டனர்.
- இயக்குனர்கள் குழுவில் எந்த மாற்றமும் இல்லை.
- இந்திய நிர்வாகத்தில் இந்த சட்டம் முக்கிய மாற்றங்களை கொண்டுவந்தது. தலைமை ஆளுநரின் அவையில் உறுப்பினர் எண்ணிக்கை 4இல் இருந்து 3ஆக குறைத்தது.
Popular posts from this blog
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை யாவரு
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படு
Comments
Post a Comment