####அறிவோம்####
 
வைட்டமின்கள்
VITAMINS
                     இவை கூட்டு அங்கக மூலக்கூறுகள். உணவில் மிகக்குறைவான அளவில் உள்ளன. இருப்பினும் உடல் வளர்ச்சி உடற்செயல் நிகழ்ச்சிகளுக்கு இவை அவசியமானவை. வைட்டமின்களால் நேரடியாகச் சக்தி தர இயலாது. ஆனால் சக்தியளிக்கும் உடற்செயலியல் மாற்றங்கள் நடைபெற இவை தேவை.
வைட்டமின்கள் வகைகள்
A வைட்டமின்கள்
B வைட்டமின்கள்
C வைட்டமின்கள்
D வைட்டமின்கள்
E வைட்டமின்கள்
K வைட்டமின்கள்
வைட்டமின் B, C நீரில் கரைபவை. இவை மிகுந்துள்ள காய், கனிகளை நறுக்கிய பின் நீரில் கழுவினால் நீரில் கரைந்து சென்றுவிடும்.
வைட்டமின் A, D, E, K அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் உடலில் தங்கி வைட்டமினோசிஸ் எனும் மிகு வைட்டமின் நோய்கள் ஏற்படும்.
வைட்டமின் D அல்லது கால்சிபெரால் நமது தோலுக்கடியில் உள்ள எர்கோஸ்டிரால் எனும் பொருளின் மீது சூரிய ஒளி படுவதால் தோன்றக்கூடியது எனவே இதற்குச் " சூரிய ஒளி வைட்டமின் " என்று பெயர்.
வைட்டமின்களின் முக்கிய வேலைகள்
1. உடற்செயல் நிகழ்ச்சிகள்
                          கண்பார்வை உணர்வில் வைட்டமின் A முக்கிய பங்கு வகிக்கிறது. விலங்குகளின் இனப்பெருக்கத் திறனுக்கு வைட்டமின் E அவசியம்.
                         
                         இரத்தம் உறைதல் வைட்டமின் K யால் நிகழும்.
                         வைட்டமின் C நோய்த் தடுப்பாற்றல் அளிப்பதுடன் வளர்ச்சியினை ஊக்குவிக்கும்.
2. உடல் திசுக்களைப் பாதுகாத்தல்
                          உடலின் எபித்தீலிய திசுக்கள் வைட்டமின் A மற்றும் B2 வால் பாதுகாக்கப்படுகின்றன.
                          எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் D தேவை.
                          திசுக்களுக்கான புத்துணர்ச்சியளிப்பதில் வைட்டமின் E பங்களிக்கும்.
                          நரம்பு செல்கள் உணவினைப்பெற வைட்டமின் B1 தேவை.
                          வைட்டமின் B12 இரத்தச் சிவப்பணுக்களை முதிர்ச்சியடையச் செய்யும்.
3. வளர்சிதை மாற்ற நிகழ்ச்சிகள்
                          கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றம் வைட்டமின் D யால் நிகழும்.
                          வைட்டமின் E ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட ஆகும்.
                          திசு வளர்சிதை மாற்றத்தில் வைட்டமின் B1 ஒரு கோ- என்சைமாகப் பயன்படும்.
                          மைய நரம்பு மண்டலத்தில் குளுக்கோஸ் ஆக்சிகரணத்தில் உதவும்.
                          வைட்டமின் B2 குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் உதவும். 
                           நயசின் ( வைட்டமின் B ) ஓர் கோ - என்சைமாக ஆக்சிகரண குறைப்பு நிகழ்ச்சியில் தேவைப்படும்.
                          இயல்பான அமினோ அமிலங்கள், கொழுப்பு வளர்சிதை மாற்றங்களுக்கு வைட்டமின் B6 தேவை.
                          பயோட்டின் எனும் B வைட்டமின் ஆக்சிகரண வளர்சிதை மாற்றங்களில் ஓர் துணை என்சைமாக உதவும். செல்லினுள் நடைபெறும் என்சைம் நிகழ்ச்சிகளை வைட்டமின் C தூண்டிவிடும்.
வைட்டமின் குறைபாடுகள்
வைட்டமின் A 
1. கண்ணீர்ச் சுரப்பி பாதிப்படைந்து கண்ணீர்ச் சுரப்புக் குறையும்.
2. விழிப்படல எத்திலீயம் உலர்ந்து சிவப்பு நிறமடையும் (Xerosis). படலம் சுருங்குதலடைந்து கடினப்படும் ( Xeropthalmia). கண்ணின் கருமைப் பகுதியில் வெண்புள்ளி (Bitot's spot) தோன்றும்.
3. விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் (Keratomalacia).
4. மாலைக் கண் நோய் ஏற்படும் (Nyctalopia).
வைட்டமின் D 
      எலும்புகளில் கால்சியம் படிதல் பாதிக்கப்படும். வளரும் குழந்தைகளுக்கு ரிக்கட்ஸ் நோயும், முதியவர்களுக்கு ஆஸ்டியோமலேசியா எனும் நோயும் தோன்றும்.
வைட்டமின் E  
       மனிதனில் இக்குறைபாடு நோய் கண்டறியப்படவில்லை. சோதனை விலங்குகளில் மலட்டுத்தன்மை ஏற்படும்.
வைட்டமின் K
1. இதன் குறைபாட்டால் இரத்தம் உறைதல் பாதிப்படையலாம்.
2. மனிதனில் இரத்தக் கசிவு குறைபாடுகள் தோன்றலாம்.
வைட்டமின் B1
          வைட்டமி B1 முற்றிலுமாக குறைவதால் பெரி பெரி எனும் நோய் ஏற்படலாம். இதனால் நரம்பு மற்றும் இதய - சுற்று மண்டலங்கள் பாதிப்படையும். சிறுவர்களின் இப்பாதிப்பு சற்று அதிகமிருக்கும்.
வைட்டமின் B2
           பசியின்மை ஏற்படும். இரைப்பை - குடல் குறைப்பாடுகள், உதடு, வாய், நாக்கு புண்கள் தோன்றும்.
வைட்டமின் நயசின் 
           இதன் குறைபாட்டால் பெல்லக்ரா எனும் நோய் தோன்றும். இதில் மறதி தோன்றும். தோல் பாதிப்பு, வாய்ப்புண் ஏற்படும். நாக்குச் சிவந்து வலி ஏற்படும்.
வைட்டமின் B6
           கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய உறுப்புகளை சுற்றிலும் தோல் பாதிப்புகள் ஏற்படும். உதட்டிலும் வாயின் ஓரங்களிலும் வெடிப்புகள் தோன்றும்.
வைட்டமின் B12
          இதன் குறைபாட்டால் இரத்தச் சோகை ஏற்பாடு. நாக்கு உலர்ந்து புண்ணாகும். தண்டுவடம் சார்ந்து நரம்புகளில் பாதிப்புகள் ஏற்படும்.
வைட்டமின் C 
         இதன் குறைபாட்டால் ஸ்கர்வி எனும் நோய் தோன்றும். இதில் பல் ஈறில் இரத்தக் கசிவு, பல் விழுதல், தசைகளில் இரத்தக் கசிவு போன்றவை ஏற்படலாம். இணைப்புத்திசு புரதங்கள் தயாரிப்பு பாதிப்படையும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment