####அறிவோம்####
6 வகுப்பு வரலாறு
1. தமிழகத்தில் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்ட இடம்?
அரியலூர்.
2. தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம்?
ஆதிச்சநல்லூர்.
3. முது மக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட இடம்?
ஆதிச்சநல்லூர்.
4. வரலாற்றை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்?
இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்
1. வரலாற்றுக் காலம், 2. வரலாற்றுக்கு முந்தைய காலம்.
5. வரலாற்று காலம் என்றால் என்ன?
அக்கால மனிதர்கள் குறித்த எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும், பிற ஆதாரங்களை கொண்ட காலத்தை வரலாற்று காலம் எனலாம்.
6. வரலாற்று முற்பட்ட காலத்தை அறிய உதவும் ஆதாரங்கள்?
அக்காலத்தை சார்ந்த பொருள்கள், சிதைவுகள், கற்கள், மரங்கள், விலங்குகளின் கொம்புகள், எலும்புகள், கற்கருவிகள், மண்டை ஓடுகள், படிமங்கள்.
7. வரலாற்றுக்கு முற்பட்ட காலங்கள்?
பழைய கற்கலாம் - கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்
புதிய கற்கலாம் - கி.மு. 10,000 - கி.மு. 4000
செம்புக் கற்கலாம் - கி.மு. 3000 - கி.மு. 1500
இரும்புக் கற்கலாம் - கி.மு. 1500 - கி.மு. 600
8. பழைய கற்கால பெண்களும் வேட்டையாடினர் என்பதற்கு ஆதாரம்?
மடியில் குழந்தையைக் கட்டிக் கொண்டு ஒரு பெண் அம்பு விடுவது போன்ற ஓவியம் மத்திய பிரதேசத்திலுள்ள பிம்பேட்கா குகையில் உள்ளது.
9. பழைய கற்கால கருவிகள் கிடைக்கப்பட்ட இடங்கள் எது?
மத்திய பிரதேசம் ( சோன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கா, ம்ஹேஸ் வா )
ராஜஸ்தான் ( லூனி ஆற்றுச் சமவெளி )
கர்நாடகம் ( பாகல்கோட் )
ஆந்திரப்பிரதேசம் ( கர்நூல் குகைகள், ரேணி குண்டா )
தமிழ்நாடு ( வடமதுரை, அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் )
10. மனிதன் முதலில் பழக்கிய விலங்கு?
நாய்.
11. மனித பரிணாம வளர்ச்சியின் அடுத்த படிநிலை?
புதிய கற்கலாம்.
12. சக்கரம் உருவாக்கப்பட்ட காலம்?
புதிய கற்கலாம்.
13. முதலில் பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?
செம்பு.
14. புதிய கற்கால கருவிகள் கிடைக்கப்பட்ட இடங்கள்?
திருநெல்வேலி, தான்றிக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம்.
15. ஹரப்பா நகர நாகரீகம் எக்காலத்தை சார்ந்தது?
செம்பு கற்கலாம்.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment