பொது அறிவு
1 . உலகப் பயணம் செய்த முதல் கப்பலின் பெயர் என்ன?
விக்டோரியா
விளக்கம்:
விக்டோரியா கப்பல் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கப்பல் ஆகும். இது தான் முதன் முதலில் உலகப் பயணத்தை முடித்த கப்பல் ஆகும்.
2 . பேக்லைட்டை கண்டுபிடித்தவர் யார்?
பேக்லாந்து
விளக்கம்:
பேக்லைட்டை கண்டுபிடித்தவர் பேக்லாந்து என்ற விஞ்ஞானி ஆவார்.
3 . மெட்ரிக் அளவீட்டு முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது?
பிரான்ஸ்
விளக்கம்:
மெட்ரிக் முறை (Metric system) என்பது அனைத்துலக தசமப்படுத்தப்பட்ட அளவை முறை ஆகும். இந்த முறை, 1799 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டினால் அறிமுகப்படுத்தப்பட்ட mètre des archives மற்றும் kilogramme des archives போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. நாளடைவில் மீட்டர் மற்றும் கிலோகிராம் போன்ற அலகுகளுக்குரிய வரையறை நுண்ணியமாக திருத்தப்பட்டதோடு, மெட்ரிக் முறையின் கீழ் மேலும் பல அலகுகள் கொண்டுவரப்பட்டன. பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல்வேறு மாற்றுருவங்கள் மெட்ரிக் முறையில் வெளிப்பட்டாலும், ‘அனைத்துலக முறை அலகுகள்’ என்பதன் ஒத்தசொல்லே ‘மெட்ரிக் முறை’ என்பதாகும். இந்த அனைத்துலக முறையே உலகின் பெரும்பாலான நாடுகளின் அதிகாரப்பூர்வமான அளவீட்டு முறைமையாகும். மெட்ரிக் முறையை உபயோகிக்கலாம் என்பது 1866 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பளிக்கப்பட்டது. ஆனாலும் இன்னமும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மெட்ரிக் முறையை ஒரு அதிகாரப்பூர்வமான அளவு முறையாக பயன்படுத்தவில்லை. ஐக்கிய இராச்சியம் மெட்ரிக் முறையை அதிகாரப்பூர்வமான அளவு முறையாக பின்பற்றினாலும்கூட, அங்கு 'இம்பெரியல் முறை' (imperial system) எனும் அளவு முறையும் பரவலாக உபயோகத்தில் உள்ளது.
4 . கடிகாரத் தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற நாடு எது?
சுவிட்சர்லாந்து
விளக்கம்:
கடிகாரம், என்பது நேரத்தை காட்டுவதற்கும், அளவிடவும், அதனை ஒருங்கிணைக்கவும் பயன்படும் ஒரு கருவியாகும். கடிகாரத்தை மணிக்கூடு என்றும் குறிப்பர். கையில் கட்டப்படும் கடிகாரத்தினை கைக்கடிகாரம் என்பர். பொதுவாக கடிகாரம் எளிதில் தூக்கி செல்லக்கூடியதாக வடிவமைக்கப்படுவதில்லை. நாகரிக முதிர்ச்சியின் ஒரு கட்டமாக நேரத்தை அளவிடும் முறை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் பழைய மனித கண்டுபிடுப்புகளில் ஒன்றான இது பொதுவாக இயற்கையான அளவீடான ஒரு நாளினை விட குறுகிய கால அளவை அளக்க பயன்படுத்தப்படுகின்றது. பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் கடிகாரங்கள் இயற்பியல் செயல்முறைகளில் பல வளர்சியினை கண்டுள்ளது. கடிகாரத் தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற நாடு சுவிட்சர்லாந்து என்று சொல்லப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் எனப்படும் எச்.எம்.டி. தொழிலகம் இந்தியாவின் பழைய கடிகாரத் தொழிற்சாலைகளுள் ஒன்றாகும். இத்தொழிலகம் கடிகாரங்களைத் தயாரிப்பதற்கு முன்பு பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட கடிகாரங்களே நம் நாட்டில் பயன்படுத்தப் பட்டன. தற்போது இந்தியாவில் டைட்டான், டைமெக்ஸ், சிட்டிசன் போன்ற பல கம்பெனிகள் கடிகாரத் தயாரிப்பில் ஈடுபட்டு உலகத் தரத்திற்குக் கடிகாரங்களைத் தயாரித்து வருகின்றன.
5 . முதன் முதலில் தேசிய கீதம் பாடியவர்கள் யார்?
ஜப்பானியர்கள்
விளக்கம்:
முதன் முதலில் தேசிய கீதம் பாடியவர்கள் ஜப்பானியர்கள் தான். கி.பி 794 - கி.பி. 1185-ம் ஆண்டுகளில் ஜப்பானை ஆண்ட ‘ஹீயன்' வம்சத்தின் காலத்தில் இயற்றப்பட்டது ஒரு பாடல். அதன் பெயர் ‘வாக்கா'. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட பாடல் என்பதால், அதிலுள்ள பல சொற்கள் இன்று ஜப்பானிலே கூடப் புழக்கத்தில் இல்லை. 'வாக்கா' என்பது ஜப்பானின் செய்யுள் வடிவம் தான்.
6 . ஐஸ் டீயை எந்த நாடு முதன் முதலில் கண்டு பிடித்தது?
இங்கிலாந்து
விளக்கம்:
ஐஸ் டீயை 1904 ஆம் ஆண்டு இங்கிலாந்து தான் முதன் முதலில் கண்டு பிடித்தது.
7 . வால்ஸ்வேகன் கார் முதன் முதலில் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
ஜெர்மனி
விளக்கம்:
ஃபோல்க்ஸ்வேகன் (வோல்ஸ்வேகன், Volkswagen) எனபது வோல்ஸ்வேகன் குழும நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும். இது கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் ஜெர்மனியில் உள்ள வுல்ஃப்ஸ்பர்கில் 28 மே 1937ல் தொடங்கப்பட்டது. வோல்ஸ்க்வேகன் என்ற சொல் ஜெர்மானிய மொழியில் மக்களுடைய கார் என்று பொருள். ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து வோல்ஸ்வேகன் இந்தியாவில் செப்டம்பர் 2007 ம் ஆண்டு பஸட் மாதிரி காரை அறிமுகப்படுத்தியது. இப்படியாக வால்ஸ்வேகன் கார் முதன் முதலில் ஜெர்மனி நாட்டில் தான் தயாரிக்கப்பட்டது.
8 . மைக்ரோ போனை கண்டுபிடித்தவர் யார்?
பெர்லினர்
விளக்கம்:
மைக்ரோ போனை முதன் முதலில் கண்டு பிடித்தவர் பெர்லினர் தான்.
9 . 2016 ம் ஆண்டு அல்ட்ராசோனிக் அலைகளை கொண்டு துணிகளை துவைக்க உதவும் டோல்பி எனப்படும் மிகச் சிறிய கருவியை கண்டறிந்தவர் யார்?
லெனா சோலிஸ்
விளக்கம்:
ஒரு சோப் அளவுக்கு கையடக்கமாக இருக்கும் டோல்ஃபி, அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது.இதில் இருந்து வெளிவரும் அல்ட்ராசோனிக் அலைகள் விரைவில் துணியை துவைத்து விடுகிறது. இந்த அற்புத இயந்திரத்தை கண்டு பிடித்தவர் லெனா சோலிஸ் என்பவர் ஆவார்.
10 . கேஸ் ஸ்டவ்வைக் கண்டு பிடித்தவர் யார்?
ஜேம்ஸ் ஷார்ப்
விளக்கம்:
அடுப்பு என்பது விறகு, நிலக்கரி, சமையல் வாயு போன்ற எரிபொருள்கள் கொண்டு நெருப்பு உண்டாக்கப் பயன்படும் இடமாகும். வீட்டில் சமையல் தேவைகளுக்கும் தொழிற்சாலைகளிலும் இது பயன்படுத்தப்படுகின்றது. காற்று மாசைக் குறைக்க அடுப்புகளின் வடிவமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. மூன்று கண் அடுப்பு, வாயு அடுப்பு, கனல் அடுப்பு, மண்ணெண்ணை அடுப்பு எனப் பல வகையாக சமையல் அடுப்பைப் பிரிக்கலாம். பெரும்பாலும் கிராமங்களில் தமது வேலைகளுக்கு மூன்று கண் அடுப்பையும் நகரங்களில் சமையல் வாயு பயன்படுத்தும் அடுப்புக்களையும் உபயோகிக்கின்றனர். முதன் முதலில் கேஸ் ஸ்டவ்வைக் கண்டு பிடித்தவர் ஜேம்ஸ் ஷார்ப் ஆவார்.
11 . பத்திரிகையில் குறுக்கெழுத்துப் போட்டியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது?
அமெரிக்கா
விளக்கம்:
"குறுக்கெழுத்துப் புதிர் என்பது குறுக்கும் நெடுக்குமாக வரையப்படும் கோடுகளைனால் உருவாகும் கட்டங்களுக்கு இலக்கங்கள் இடப்பட்டு அக்கட்டங்களைச் சொற்களைக் கொண்டு நிரப்புவதற்கு உதவிக் குறிப்புகள் வழங்கப்படும் புதிர் ஆகும். குறுக்கெழுத்துப் புதிர்கள் பத்திரிகைகளில் பெருமளவில் வெளிவருகின்றன. அவற்றுக்கென வெளியாகும் நூல்களும் உள்ளன. இக்குறுக்கெழுத்துப் புதிரினை முதன்முதலில் அறிமுகம் செய்தவராக அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் வைன் இனங்காணப் பட்டுள்ளார். 1913 ஆம் ஆண்டில் ""நியூயோர்க் வேர்ல்ட்"" பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற இவர் அவ்வாண்டு கிறிஸ்மஸ் சிறப்பு மலரில் குறுக்கெழுத்துப் புதிரினை அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து ஏனைய அமெரிக்கப் பத்திரிகைகளும் குறுக்கெழுத்துப் புதிர்களை வெளியிடத் தொடங்கின. பின்னர் இங்கிலாந்துக்குப் பரவிய இப்புதிர் இப்பொழுது உலகெங்கும் பிரபல்யம் பெற்றுள்ளது."
12 . நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த முதல் இந்திய ஜனாதிபதி யார்?
திரு. ஏ.பி. ஜெ அப்துல் கலாம்
விளக்கம்:
நீர்மூழ்கிக் கப்பல் அல்லது நீர்மூழ்கிக் கலம் (submarine) என்பது நீரில் மூழ்கவல்ல, நீரில் மூழ்கியபடியே வெகுதொலைவு செல்லக்கூடிய, நீரூர்தி ஆகும். நீர்மூழ்கிக் கப்பல் என்னும் சொல் பொதுவான, பெரிய அளவிலான, மனிதர்களைத் தாங்கி செல்லவல்ல, தானியங்கு கலங்களைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. சில இடங்களில் இதே சொல் சிறிய உருவத்தில், தொலைக் கட்டுப்பாட்டுடன் இயங்கக்கூடிய இயந்திர உணர்கருவிகள் கொண்டடக்கிய ஆராய்ச்சிக் கலங்களையும் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல் என்று தமிழ் மொழியில் அழைக்கப்பட்டாலும், பொதுவாக மற்ற மொழிகளில் இவை நீர்மூழ்கிப் படகு என்றே அழைக்கப்படுகின்றன. ஏனெனில், வரலாற்றுப் பார்வையில், இவை கப்பல்களில் இருந்தே நீரில் இறக்கப் பட்டுப் பயன்படுத்தப்பட்டமையால் இவை படகுகள் என்றே அறியப்படுகின்றன. பரிசோதனைகளுக்காகப் பல நீர்மூழ்கிகள் முன்னர் உருவாக்கப்பட்டாலும், முழுமையான நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைப்பு 19-ஆம் நூற்றாண்டிலே தொடங்கப் பட்டது. முதல் உலகப் போரில் பல நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. இப்படிப் பட்ட நீர் மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமை நமது மக்களின் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களைத் தான் சேரும்.
13 . இந்தியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுநர் யார்?
சரேகா யாதவ்
விளக்கம்:
ஆசியாவிலேயே முதல் பெண் இரயில் ஓட்டுநர் இந்தியர் சுரேக்கா யாதவ் (வயது 51).1988 லிருந்து இவர் பணி தொடங்கியது.
14 . தந்தி முறை முதன் முதலில் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
1840
விளக்கம்:
தந்தி (Telegraph) எனப்படுவது ஓரிடத்திலிருந்து தொலைவில் உள்ள வேறோர் இடத்திற்கு விரைந்து செய்தியனுப்பப் பயன்படுத்தப்படும் கருவி ஆகும். இதில் செய்திகளை அனுப்ப எந்தவொரு பொருளும் எடுத்துச் செல்லப்படுவதில்லை. இதில் சங்கேத முறையில் அனுப்பப்படும் செய்தியைப் பெற அனுப்புநரும் பெறுநரும் இந்தக் குறிமுறையை அறிந்திருக்க வேண்டும். மின்சாரத் தந்தியில் கருவிகள் மின்காந்த சக்தியின் துணைகொண்டு இயக்கப்படுகின்றன. இக்கருவியை 1837 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவெல் மோர்சு என்பவர் கண்டுபிடித்தார்.
15 . உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் கார்ட்டூன் கதாபாத்திரம் எது?
மிக்கி மவுஸ்
விளக்கம்:
கேலிச் சித்திரங்கள் (cartoons) அல்லது கேலிப் படங்கள் எனப்படுபவை நகைச்சுவையைத் தூண்டும் வண்ணம் வரையப்படும் சித்திரங்கள் ஆகும். பல சொற்களில் தலையங்கம் எழுதி உணர்த்த முடியாத கருத்துக்களைக் கூடக் கேலிச் சித்திரங்களும் கருத்துப் படங்களும் எளிதாக உணர்த்துகின்றன. சமுதாயம், சமயம், அரசியல், பொருளாதாரத் துறைகளில் உள்ள குறைகளை நகைச்சுவையுடன் உணர்த்தும்படி கேலிப்படங்கள் அமைகின்றன.தமிழில் ஆனந்த விகடன், குமுதம், தினமணி போன்ற இதழ்களில் கேலிச் சித்திரங்கள் வெளி வருகின்றன. ஈழத்தில் சிரித்திரன் இதழில் வெளி வந்த கேலிச் சித்திரங்கள் புகழ் பெற்றவை. உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் கார்ட்டூன் கதாபாத்திரம் மிக்கி மவுஸ் தான். தமிழ்நாட்டில் முதன்முதலாக கார்ட்டூன் படங்களை வெளியிட்டவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தான். இவர் ஆங்கிலேயர் ஆட்சியின் குறைகளை “இந்தியா” எனும் இதழில் கேலிச்சித்திரங்களின் மூலம் வெளியிட்டார்.
16 . கணிதத்தில் பயன்படும் கிரா ஃ ப் முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது யார்?
ரெனி டெக்கார்டிஸ்
விளக்கம்:
ரெனி டெக்கார்டிஸ் என்பவர் தான் கணிதத்தில் பயன்படும் கிரா ஃ ப் முறையை முதன் முதலில் அறிமுகப் படுத்தியவர்.
17 . இந்தியாவின் முதல் ரப்பர் தோட்டம் எந்த மாநிலத்தில் உருவானது?
கேரளா
விளக்கம்:
இயற்கை மீள்மம் (இயற்கை ரப்பர் அல்லது இயற்கை இறப்பர், Natural Rubber ) என்பது சில வகை மரங்களில் இருந்து கிடக்க கூடிய பாலைப் போன்ற ஒரு மீள் திறன் கொண்ட ஒரு வகை திரவம் ஆகும் . அந்த மரங்களின் தண்டை கிழித்தால் வடிகின்ற பால் போன்ற வெள்ளை திரவமே மீள்மம் ஆகும். இறப்பர் மிகவும் மீள்தன்மையுடையதும், நீர் ஊடுபுகவிடுதிறன் மிகக் குறைந்ததுமாகும். எனவே இது சிறப்பான பொருட்களை உருவாக்கப் பயன்படுகிறது. இறப்பர் முதன்முதலில் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களால் தமது குடியேற்ற நாடுகளில் வர்த்தகப் பயிராகப் பயிரிடப்பட்டது. இன்று உலகில் 94%மான இயற்கை இறப்பர் ஆசியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இறப்பரை பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றன. இந்தியாவைப் பொறுத்த மட்டில் முதல் ரப்பர் தோட்டம் கேரளா மாநிலத்தில் உருவானது.
18 . உலகின் மிகப் பெரிய முதல் பயணிகள் கப்பலின் பெயர் என்ன?
டைட்டானிக்
விளக்கம்:
ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தின் போது ஏப்ரல் 14, 1912 இல் இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது; மோதி 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15, 1912 இல் முற்றாக மூழ்கியது. டைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு அமைதிக்காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது. கப்பலின் சேதமடைந்த பகுதிகளை செப்டம்பர் 1, 1985 இல் ரொபேர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வாளர் குழு ஒன்று கண்டு பிடித்தது. டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்கிலிருந்து 12,000 அடி ஆழத்தில் இருக்கின்றது. இவ்வாழத்தின் நீரின் அழுத்தம் ஒரு சதுர அங்கூலத்திற்கு 6000 இறாத்தல் (2700 கிகி) ஆக உள்ளது. உலகின் மிகப் பெரிய முதல் பயணிகள் கப்பல் இதுவே ஆகும். ஆனால், இது தனது முதல் பயணத்திலேயே மூழ்கிப் போனது.
19 . இந்தியாவின் முதல் தனியார் ரேடியோ எஃப் எம்மின் அலைவரிசை நிலையத்தின் பெயர் என்ன?
ரேடியோ சிட்டி
விளக்கம்:
ரேடியோ சிட்டி 1.7.2001 இல் துவங்கப்பட்டது. இது முதன் முதலில் துவங்கப்பட்ட இந்தியாவின் தனியார் வானொலி நிலையம் ஆகும். 91.1MHZ அலைவரிசையில் தனது சேவையை இந்நிறுவனம் தந்து வருகிறது.
20 . எந்த ஆண்டில் குவைத் நகரம் உருவானது?
1710
விளக்கம்:
குவைத் நாடு (State of Kuwait) என்பது தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். பாரசீக வளைகுடாவின் வடமுனையில் அமைந்துள்ள குவைத் நாட்டின் தெற்கே சவூதி அரேபியாவும், வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் எல்லை நாடுகளாக உள்ளன. 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 4 மில்லியன்கள் ஆகும்.
21 . ரேடியத்தை முதன் முதலில் கண்டு பிடித்தவர் யார்?
மேரி க்யூரி
விளக்கம்:
1898 ஆம் ஆண்டு ரேடியத்தை கண்டு பிடித்தார் மேரி க்யூரி. இதற்காக இவர் நோபல் பரிசை 1903 ஆம் ஆண்டு பெற்றார்.
22 . இந்தியாவில் எந்த ஆண்டு சைக்கிள் அறிமுகம் ஆனது?
1890
விளக்கம்:
மிதிவண்டி (தமிழகப் பேச்சு வழக்கு:சைக்கிள்) மிதிக்கட்டைகளில் கால்களை வைத்து அழுத்தி உந்தப்படும் மனித ஆற்றலால் இயங்கும் ஒரு வண்டி. மிதிவண்டிகளில் ஒன்றன் பின் ஒன்றாக இரு சக்கரங்கள் ஒரே தளத்தில் ஒரு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். முன் சக்கரத்தை இடமும் வலமுமாக கையால் திருப்பும் படி அமைப்புள்ள கட்டுப்பாட்டுத் தண்டு இருக்கும். மிதிவண்டிகள் முதன்முதலாக 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமாகின. தற்பொழுது உலகெங்கும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மிதிவண்டிகள் உள்ளன. உலகின் பல பகுதிகளில், குறிப்பாக சீனாவிலும் நெதர்லாந்திலும் போக்குவரத்திற்கான முதன்மையான வண்டியாக உள்ளது. உந்து ஆற்றலை சக்கரத்துடன் சங்கிலியால் பிணைத்து இயக்கும் தற்போதைய மிதிவண்டிகளின் வடிவத்தை 1885 இல் அடைந்த பிறகு பெரும் மாற்றம் ஏதும் நிகழவில்லை. போக்குவரத்து தவிர, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளாகவும் உடல் உறுதியை காப்பதற்காகவும் பாதுகாவற் பணிப் பயன்பாடுகளுக்காகவும் அஞ்சல் சேவைகளுக்கும் மிதிவண்டி விளையாட்டுக்களுக்கும் மிதிவண்டிகள் பயன்படுகின்றன. உலகில் முதன் முதலில் மிதி இயக்கி (Pedal) மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான மிதிவன்டியை கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan) என்பவர் வடிவமைத்தார். ஆகையால்தான் இன்று மிதிவண்டியைக் கண்டறிந்தவராக கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் அடையாளப்படுத்தப்படுகிறார். ஸ்காட்லாந்து நகரில் பட்டறை ஒன்றில் கொல்லராக வேலை பார்த்து வந்த இவர் திசைமாற்றி , தடை மற்றும் மிதிஇயக்கி ஆகிய அனைத்து பாகங்களும் கொண்ட முழுமையான மிதிவண்டி ஒன்றை 1839-ஆம் ஆண்டு வடிவமைத்தார். இந்தியாவில் 1890 இல் தான் சைக்கிள் அறிமுகம் ஆனது.
23 . முதன் முதலில் பைபிளை லத்தினில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
வில்லியம் டின்டேல்
விளக்கம்:
விவிலியம் ( புனித வேதாகமம், பைபிள்), யூதர் மற்றும் கிறித்தவர்களது புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியம் ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு, உலகில் அதிகளவு மொழிகளுக்கு பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரை கொண்டிருப்பினும் யூதரது மற்றும் கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும். கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது. அதை எபிரேய விவிலியம் என்றும் கூறுவர். கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர்.
24 . செயற்கைப் பல் பொருத்துவதை முதன் முதலில் கண்டு பிடித்தவர் யார்?
அந்தோணி. ஏ. பிளான்ட்சன்
விளக்கம்:
அமெரிக்காவைச் சேர்ந்த அந்தோணி ஏ. பிளான்ட்சன் என்பவர் தான் 1817 ஆம் ஆண்டு முதன் முதலில் செயற்கைப் பல் பொருத்துவதை கண்டு பிடித்தார்.
25 . இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் எது?
ஐ. என். எஸ். கல்வாரி
விளக்கம்:
இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஐ. என். எஸ். கல்வாரி தான். பிரான்சின் உதவியுடன் இந்த நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைக்கப்பட்டது. பின்னர் மும்பை Mazagon Dock லிமிடெட் என்ற நிறுவனம் இதனைக் கட்டியது.
Comments
Post a Comment