####அறிவோம்####
இந்தியாவின் அணுசக்தி திட்டத்தை நுணுகி ஆராய்க.
இந்தியாவில் அணுசக்தி
இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்கள்
செயல்பாட்டில் உள்ள அணு உலைகள்
கட்டுமானத்தில் உள்ள அணு உலைகள்
அணுக்கரு ஆற்றல் இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அனல், புனல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அடுத்து நான்காமிடத்தில் உள்ளது. 2012 வரை, இந்தியாவில் ஆறு அணு மின் நிலையங்களில்இயங்கும் 20 அணுக்கரு உலைகளில் 4,780 மெவா மின்சாரம் உற்பத்தியாகிறது. மேலும் ஏழு அணுக்கரு உலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன; இவற்றின் மூலம் கூடுதலாக 5,300 மெகாவாட் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 2010இல் இந்தியாவில் "2032ஆம் ஆண்டுக்குள் 63,000 மெவா அணுமின் ஆற்றலை உற்பத்தி செய்ய திட்டமொன்றை" தீட்டியபோதும், "திட்டமிடப்பட்ட பகுதி மக்களின் எதிர்ப்புகளாலும் அணுக்கரு உலை குறித்த பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடாதிருத்தல் குறித்து எழுந்த புதிய ஐயங்களாலும்" இது தள்ளிப்போடப்படுள்ளது. மகாராட்டிரத்தில் பிரெஞ்சு நிறுவனம் அமைக்கும் 9900 மெவா கொள்ளளவு கொண்ட ஜெய்தாபூரிலும் தமிழ்நாட்டில் உருசிய கூட்டுறவுடன் நிறுவப்படும் 2000 மெவா கொள்ளளவு கொண்ட கூடன்குளத்திலும் பலத்த எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. மேற்கு வங்காள அரசும் அரிப்பூரில் நிறுவப்படத் திட்டமிட்டிருந்த 6000 மெவா திறன் கொண்ட ஆறு உருசிய அணு உலைகளுக்கு அனுமதி மறுத்துள்ளது. அரசின் அணுக்கரு ஆற்றல் திட்டதிற்கெதிராக பொது நல வழக்கொன்று உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இத்தகையத் தடங்கல்கள் இருப்பினும் 2011-12ஆம் ஆண்டில் இந்திய அணுமின் நிலையங்கள் தங்கள் திறனின் 79% அளவில் உற்பத்தி செய்தன; இந்த ஆண்டில் இருபது உலைகளில் ஒன்பது உலைகள் வரலாற்றுச் சிறப்பாக தங்கள் திறனின் 97% ஐ எட்டின.
இந்தியா வெளிநாட்டை நம்பியிருக்க வேண்டிய யுரேனியத்திற்கு மாற்றாக தோரியம் சார்ந்த அணு எரிபொருள்கள் குறித்தும் குறை செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் தோரியத்தைப் பயன்படுத்தும் அணுக்கரு உலை வடிவமைப்பில் ஆய்வு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. குளிர்ந்த அணுப்பிணைவு ஆய்வுகளில் இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் பெரிய, மிகவும் முன்னேறிய ஆய்வு டோகாமாக் அணுக்கரு இணைவு உலையான பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை திட்டத்திற்கும் ஆதரவளித்துள்ளது.
அணுக்கரு எரிபொருள் இருப்பு
இந்தியாவின் உள்நாட்டு யுரேனியம் இருப்புகள் மிகக் குறைவானவை; வெளிநாட்டிலிருந்தே தனது அணு மின் நிலையங்களின் தேவைக்காக இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. 1990களிலிருந்து இந்தியாவின் முக்கிய அணு எரிபொருள் வழங்குனராக உருசியா இருந்து வருகிறது.யுரேனியத்தின் உள்நாட்டு உற்பத்தி குறைந்த காரணத்தினால் அணு மின் உற்பத்தி 2006ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டில் 12.83% குறைந்தது. இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டினை அடுத்து செப்டம்பர் 2008இல் அணுவாற்றல் வழங்குவோர் குழுமம்பன்னாட்டு அணுவாற்றல் வணிகத்தை அனுமதித்த பின்னர் இந்தியா இருநாடுகளுக்கிடையேயான அணுவாற்றல் குடிசார் தொழில்நுட்பக் கூட்டுறவு உடன்பாடுகளை பல நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ளது. பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம்,கனடா. மற்றும் தென் கொரியா என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கன. மேலும் யுரேனியம் தாது பெறுதலுக்காக உருசியா, மங்கோலியா, கசக்ஸ்தான்,அர்கெந்தீனா மற்றும் நமீபியாயுடன் உடன்பாடுகள் கொண்டுள்ளது. இந்திய தனியார் நிறுவனமொன்றிற்கு யுரேனியம் படிவுகள் தேடலுக்கு நைஜரில் ஒப்பந்தப் புள்ளி வென்றுள்ளது.
மார்ச்சு 2011இல் ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தின் உள்ள தும்மலப்பள்ளி பகுதியில் இயற்கை யுரேனியப் படிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் யுரேனியம் தேடலுக்கான அமைப்பான அணுத் தாது தேடல் மற்றும் ஆய்வு இயக்ககம் இதுவரை 44,000 டன்கள் இயற்கை யுரேனியம் (U3O8) இருப்பை இப்பகுதியில் கண்டறிந்துள்ளது.
அணு மின் நிலையங்கள்
தற்போது இருபது அணு மின் உலைகள் 4,780.00 மெவா மின்சாரம் உற்பத்தி செய்கின்றன (மொத்த நிறுவப்பட்ட திறனளவில் 2.9%)
மின் நிலையம் | இயக்குனர் | மாநிலம் | வகை | அலகுகள் | மொத்த திறனளவு (மெவா) |
கைகா | இந்திய அணுமின் கழகம் | கர்நாடகம் | கனநீர் | 220 x 4 | 880 |
கக்ரபார் | இந்திய அணுமின் கழகம் | குசராத் | கனநீர் | 220 x 2 | 440 |
கல்பாக்கம் | இந்திய அணுமின் கழகம் | தமிழ்நாடு | கனநீர் | 220 x 2 | 440 |
நரோரா | இந்திய அணுமின் கழகம் | உத்தரப் பிரதேசம் | கனநீர் | 220 x 2 | 440 |
ரவத்பாட்டா | இந்திய அணுமின் கழகம் | இராசத்தான் | கனநீர் | 100 x 1
200 x 1
220 x 4 | 1180 |
தாராப்பூர் | இந்திய அணுமின் கழகம் | மகாராட்டிரம் | கொதிநீர் (கனநீர்) | 160 x 2
540 x 2 | 1400 |
| | | மொத்தம் | 20 | 4780 |
கீழ்காண்பவை கட்டமைக்கப்பட்டு வருகின்றன:
அணுமின் நிலையம் | இயக்குனர் | மாநிலம் | வகை | அலகுகள் | மொத்த திறனளவு (மெவா) |
கூடங்குளம் | இந்திய அணுமின் கழகம் | தமிழ்நாடு | விவிஈஆர் | 1000 x 2 | 2000 |
கல்பாக்கம் | பாவினி நிறுவனம் | தமிழ்நாடு | வேக ஈனுலை | 500 x 1 | 500 |
கக்ரபார் | இந்திய அணுமின் கழகம் | குசராத் | கனநீர் | 700 x 2 | 1400 |
ரவத்பாட்டா | இந்திய அணுமின் கழகம் | இராசத்தான் | கனநீர் | 700 x 2 | 1400 |
| | | மொத்தம் | 7 | 5300 |
MINI CINI -
http://tnpscpnusen.blogspot.com
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment