இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
भारतीय रिज़र्व बैंक
Reserve Bank of India
இந்திய ரிசர்வ் வங்கியின் முத்திரை மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமைச் செயலகம்
தலைமையகம்
மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா
துவக்கம்
ஏப்ரல் 1, 1935
ஆளுனர்
உர்ஜித் பட்டேல்
மத்திய வங்கி, இந்தியா
நாணயம்,இந்திய ரூபாய் (₹)
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1935இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது. பொது மக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவது போல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமை (ஏஜன்ட்) ஏற்றுச் செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும். ரிசர்வ் வங்கியைப் பொது மக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் பொது மக்கள் நடத்தும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றைக் கண்காணித்தும் வருகிறது. இந்திய நாட்டின் நாணய மதிப்பு(அந்நியச் செலாவணிக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு) ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய இவ்வங்கி 1937-ஆம் ஆண்டு முதல் மும்பைநகரை தலைமையகமாக கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டாரக் கிளைகள் உள்ளன. தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் உர்ஜித் பட்டேல் ஆவார்.
வரலாறு
இந்திய ரிசர்வ் வங்கி , இந்தியாவின் மைய வங்கி நிறுவனம் ஆகும். இந்திய ரூபாய் மற்றும் கையிருப்பில் உள்ள 30,210 கோடி அமெரிக்க டாலர் (2011 ஆண்டு) தொடர்பான நாணயக் கொள்கைகளை தோற்றுவிக்கும் ஆணையமாகும். ரிசர்வ் வங்கி சட்டம், 1934 ரின் விதிகள் படி, பிரித்தானிய இந்தியாவில் ஏப்ரல் 1,1935 இல் நிறுவப்பட்டது. இதன் மூலதனம் முற்றிலும் தொடக்கத்தில் 100 ரூபாய் கொண்ட பங்குகளாகப் பிரிக்கப்பட்டு, தனியார் பங்குதாரர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி, அரசாங்கத்தின் வளர்ச்சியில் ஒரு முதன்மைப் பங்கினை வகிக்கிறது. இது ஆசிய தீர்வு ஒன்றியத்தின் உறுப்பினர் வங்கியாக உள்ளது .
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1935இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது. பொது மக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவது போல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமை (ஏஜன்ட்) ஏற்றுச் செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும். ரிசர்வ் வங்கியைப் பொது மக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் பொது மக்கள் நடத்தும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றைக் கண்காணித்தும் வருகிறது. இந்திய நாட்டின் நாணய மதிப்பு(அந்நியச் செலாவணிக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு) ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய இவ்வங்கி 1937-ஆம் ஆண்டு முதல் மும்பைநகரை தலைமையகமாக கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டாரக் கிளைகள் உள்ளன. தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் உர்ஜித் பட்டேல் ஆவார்.
வரலாறு
இந்திய ரிசர்வ் வங்கி , இந்தியாவின் மைய வங்கி நிறுவனம் ஆகும். இந்திய ரூபாய் மற்றும் கையிருப்பில் உள்ள 30,210 கோடி அமெரிக்க டாலர் (2011 ஆண்டு) தொடர்பான நாணயக் கொள்கைகளை தோற்றுவிக்கும் ஆணையமாகும். ரிசர்வ் வங்கி சட்டம், 1934 ரின் விதிகள் படி, பிரித்தானிய இந்தியாவில் ஏப்ரல் 1,1935 இல் நிறுவப்பட்டது. இதன் மூலதனம் முற்றிலும் தொடக்கத்தில் 100 ரூபாய் கொண்ட பங்குகளாகப் பிரிக்கப்பட்டு, தனியார் பங்குதாரர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி, அரசாங்கத்தின் வளர்ச்சியில் ஒரு முதன்மைப் பங்கினை வகிக்கிறது. இது ஆசிய தீர்வு ஒன்றியத்தின் உறுப்பினர் வங்கியாக உள்ளது .
1935-1950
இந்திய ரிசர்வ் வங்கி, முதல் உலக போருக்குப் பின்னர் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குப் பதிலளிக்க 1935 இல் ஹில்டன்-யங் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி நிறுவப்பட்டது. இந்த ஆணையம் 1926-இல் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது என்றாலும் அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் அமைப்புக்கு வந்தது. ரிசர்வ் வங்கியின் மத்திய அலுவலகம் ஆரம்பத்தில் கொல்கத்தாவில் நிறுவப்பட்டது, ஆனால் நிரந்தரமாக 1937 ஆம் ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்டது. ரிசர்வ் வங்கி, பர்மாவின் நடுவண் வங்கியாக, ஜப்பானின் பர்மா ஆக்கிரமிப்பு வரை மற்றும் 1937-ல் பர்மா, இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்த பின்னரும், 1947 வரை மியான்மரின் தலைமை வங்கியாகச் செயற்பட்டது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த பின்னர், பாகிஸ்தானின் தலைமை வங்கியாக 1948 வரைச் செயற்பட்டது. முதலில் ஒரு பங்குதாரர்கள் வங்கியாக அமைக்கப்பட்டது என்றாலும், இந்திய ரிசர்வ் வங்கி 1949 இல் தேசிய மயமாக்கப்பட்ட பின்னர், முழுமையாக இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமானது.
1950-1960
1950 மற்றும் 1960 இடையில், இந்திய அரசாங்கம், ஒரு மையப்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கையை உருவாக்கி விவசாயத் துறையில் கவனம் செலுத்தியது. நிர்வாகம், வர்த்தக வங்கிகளை தேசியமயமாக்கி, வங்கி நிறுவனங்கள் சட்டம்் 1949 னின் அடிப்படையில் (பின்னர் வங்கி ஒழுங்குமுறை சட்டம் என அழைக்கப்படுகிறது)மத்திய வங்கி ஒழுங்குமுறையை இந்திய ரிசர்வ் வங்கியின் ஒரு பகுதியாக நிறுவியது. மேலும், மத்திய வங்கியை, கடன்கள் மூலம் பொருளாதாரத்தை ஆதரிக்க உத்தரவிட்டது.
1960-1969
வங்கிகள் திவாலானதன் விளைவாக, ரிசர்வ் வங்கி ,ஒரு வைப்புத்தொகை காப்புறுதி முறையை நிறுவ மற்றும் கண்காணிக்க பறிந்துரைக்கப்பட்டது. இது "தேசிய வங்கி அமைப்பு" இல் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று 7 டிசம்பர் 1961 துவங்கப்பட்டது. இந்திய அரசாங்கம், பொருளாதாரத்தை ஊக்குவிக்க தேவையான நிதியை திரட்டி, "வளர்சியடையும் வங்கியியல்" என்ற கொள்கையைக் கடைப்பிடித்தது. இந்திய அரசு ,தேசிய வங்கி சந்தையை மறுசீரமைத்து மற்றும் பல நிறுவனங்களை தேசியமயமாக்கியது. இதன் விளைவாக, இந்திய ரிசர்வ் வங்கி,பொது வங்கி துறையின் மைய பகுதியாக விளங்கியது.
1969-1985
1969 மற்றும் 1980 இடையில், இந்திய அரசாங்கம் ,1969 ல் 14 முக்கிய வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை தொடர்ந்து , இன்னும் 6 வணிக வங்கிகளை அரசுடைமையாக்கியது. ( இந்திய ரிசர்வ் வங்கி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது). பொருளாதாரத்தின் கட்டுப்பாடு மற்றும் குறிப்பாக நிதி துறை வலுப்படுத்துதல் ஆகியவை இந்திய அரசால் 1970 மற்றும் 1980 களில் செயல்ப்படுத்தப்பட்டது.மத்திய வங்கி ,அதன் கொள்கைகளை, இருப்பு விகிதம் போன்ற பணிகளுக்காக அதிகரித்துக்கொண்டது . சிறந்த பொருளாதார வளர்ச்சி இலக்காக வைத்து இவை செய்யப்பட்டது.வங்கிகள் வேளாண் வணிகம் மற்றும் சிறிய வணிக நிறுவனங்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளுக்கு கடன் அளிக்கிறது . 1973 இல் கச்சா எண்ணெய் நெருக்கடியின் போது, அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி, விளைவுகளை குறைக்கும் நோக்கில் பணவியல் கொள்கைகளைக் கட்டுப்படுத்தியது.
1969 மற்றும் 1980 இடையில், இந்திய அரசாங்கம் ,1969 ல் 14 முக்கிய வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை தொடர்ந்து , இன்னும் 6 வணிக வங்கிகளை அரசுடைமையாக்கியது. ( இந்திய ரிசர்வ் வங்கி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது). பொருளாதாரத்தின் கட்டுப்பாடு மற்றும் குறிப்பாக நிதி துறை வலுப்படுத்துதல் ஆகியவை இந்திய அரசால் 1970 மற்றும் 1980 களில் செயல்ப்படுத்தப்பட்டது.மத்திய வங்கி ,அதன் கொள்கைகளை, இருப்பு விகிதம் போன்ற பணிகளுக்காக அதிகரித்துக்கொண்டது . சிறந்த பொருளாதார வளர்ச்சி இலக்காக வைத்து இவை செய்யப்பட்டது.வங்கிகள் வேளாண் வணிகம் மற்றும் சிறிய வணிக நிறுவனங்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளுக்கு கடன் அளிக்கிறது . 1973 இல் கச்சா எண்ணெய் நெருக்கடியின் போது, அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி, விளைவுகளை குறைக்கும் நோக்கில் பணவியல் கொள்கைகளைக் கட்டுப்படுத்தியது.
1985-1991
பலக் குழுக்கள், 1985 மற்றும் 1991 இடையில் இந்திய பொருளாதாரத்தை பகுப்பாய்வு செய்தது.அவைகளின் முடிவுகள் ரிசர்வ் வங்கியில் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுதியது.தொழில் மற்றும் நிதி புனரமைப்பு வாரியம், வளர்ச்சி ஆராய்ச்சி இந்திய பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற வாரியம், இந்திரா காந்தி நிறுவனம், ஒரு முழு தேசிய பொருளாதார ஆய்வை நடத்தி, மிகவும் சிறந்த, பயனுள்ள சந்தை முறைகள் மற்றும் முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு திட்டங்களை முன்மொழிந்தது .இந்திய நிதி சந்தை, "நிதி அடக்குமுறை"க்கு ஒரு முக்கிய உதாரணமாக திகழ்ந்தது.இந்திய தள்ளுபடி மற்றும் நிதி ஆணையம் , ஏப்ரல் 1988 ல் பண சந்தையில் அதன் நடவடிக்கைகளை தொடங்கியது. தேசிய வீடமைப்பு வங்கி, ஜூலை 1988 இல் நிறுவப்பட்டது. சொத்து சந்தையில் முதலீடு செய்தது மற்றும் ஒரு புதிய நிதி சட்டம் மூலம் , பல்துறைத்திறமையை நேரடி வைப்பு இன்னும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் உயர்த்தியது.
1991-2000
தேசிய பொருளாதாரம், ஜூலை 1991 இல் வீழ்ச்சியடைந்தது. ரூபாய், அமெரிக்க டாலர்க்கு எதிரான மதிப்பில் 18% இழந்தது. நரசிம்மஹன் குழு நிதித் துறையை மறுகட்டமைப்பு செய்ய ஆலோசனை வழங்கியது.புதிய வழிமுறைகள், தனியார் வங்கி துறையை நிறுவ, 1993 இல் வெளியிடப்பட்டது. இந்த முதல் கட்டம் வெற்றி பெற்றது.மத்திய அரசாங்கம் 1998 ல், உரிமையாளர் கட்டமைப்பை வேறுப்படுத்த,ஒரு வேற்றுமை தாராளமயம் கட்டாயத்தை உறுவாக்கியது.
2000 ஆம் ஆண்டிலிருந்து
அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம்(1999) ஜூன் 2000 இல் அமலுக்கு வந்தது. இது, இந்தியாவில் சர்வதேச முதலீடுகள் மற்றும் அந்நிய செலாவணி சந்தையை மேம்படுத்த வேண்டும்.இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த ஆண்டுகளில் நிதி சந்தையின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது. 2001 ல் ஆன்லைன் வங்கி அனுமதி மற்றும் 2004-2005 ல் ஒரு புதிய கட்டணம் செலுத்தும் முறையை உருவாக்கப்பட்டது. (தேசிய மின்னணு நிதி மாற்றம்).
ஒன்பது நிறுவனங்கள் ஒரு இணைப்பான, அச்சடித்தல் & மின்டிங் கழகம் ,இந்தியா லிமிடெட் 2006 இல் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் உற்பத்தி செய்ய நிறுவப்பட்டது. தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 2008-2009 கடைசி காலாண்டில் 5.8% கீழே வந்தது. மத்திய வங்கி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி நடந்த நிதிக்கொள்கை வெளியீட்டின் போது இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் சேமிப்புக்காணக்கிற்கான இருப்புத்தோகை குறைந்தால் அபராதம் வசூலிக்க கூடாது என்று உத்தரவு பிரப்பித்தது.
அமைப்பு
வங்கியின் பொது கண்காணிப்பு மற்றும் இயக்கம் 20 உறுப்பினர்களைக் கொண்டது. அவர்கள் ஆளுநர் மற்றும் நான்கு துணை ஆளுநர்கள், மத்திய நிதி அமைச்சகத்தின் ஒரு அரசு அதிகாரி, நாட்டின் பொருளாதார உறுப்புகளை பிரதிநிதித்துவம் செய்ய பத்து அரசு இயக்குநர்கள், மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் புது தில்லி தலைமையகங்களின் பிரதிநிதியாக நான்கு மத்திய அரசு இயக்குநர்கள் ஆகியோராவர். உள்ளூர் வாரியங்கள் ஒவ்வொன்றுக்கும் , பிராந்திய மற்றும் பொருளாதார நலன்களையும் ,கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வங்கிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், நான்கு ஆண்டுகளுக்கு, ஐந்து உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுவர்.
மத்திய இயக்குநர்கள் வாரியம்
மத்திய இயக்குநர்கள் வாரியம், மத்திய வங்கியின் முக்கிய குழுவாகும். இந்திய அரசு, நான்கு ஆண்டு காலத்திற்கு இயக்குனர்களை நியமிக்கிறது. ஒரு ஆளுநர், நான்கு துணை ஆளுநர்கள், பிராந்தியக் கிளைகளை பிரதிநிதித்துவம் செய்ய பதினைந்து இயக்குநர்கள், நிதி அமைச்சகத்திலிருந்து ஒருவர், மற்றும் பல்வேறு துறைகளில் இருந்து இதர பத்து இயக்குனர்களையும் கொண்டுள்ளது.
ஆளுநர்கள்
ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநராக உர்ஜித் பட்டேல் உள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியால், 2013 வரை கவர்னரின் காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போது நான்கு துணை ஆளுநர்கள், கே.சி. சக்ரபர்தி, ஸுபிர் கொகர்ன், ஆனந்த் சின்ஹா மற்றும் எச் ஆர் கான் உள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநராக உர்ஜித் பட்டேல் உள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியால், 2013 வரை கவர்னரின் காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போது நான்கு துணை ஆளுநர்கள், கே.சி. சக்ரபர்தி, ஸுபிர் கொகர்ன், ஆனந்த் சின்ஹா மற்றும் எச் ஆர் கான் உள்ளனர்.
ஆதரவு அமைப்புகள்
மேற்கே மும்பை , கிழக்கில் கொல்கத்தா, தெற்கே சென்னை மற்றும் வடக்கில் புது தில்லி :என இந்திய ரிசர்வ் வங்கி நான்கு பிராந்திய பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது. பிரதிநிதித்துவம், மத்திய அரசாங்கத்தால் நான்கு ஆண்டு காலத்துக்கு நியமனம் செய்யப்படும் ஐந்து உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படுகிறது. ரிசர்வ் வங்கி 22 வட்டார அலுவலகங்களைக் கொண்டுள்ளது. தாராபூர் குழு, இந்திய ரிசர்வ் வங்கியால் முன்னாள் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ் தாராபூர் நிர்வாக பொறுப்பின் கீழ் அமைத்தது. அந்த ஐந்து உறுப்பினர் குழு ,1999-2000 க்குள் இந்தியாவை மூலதன நாடாக மாற்ற மூன்று ஆண்டு கால அவகாசத்தை பரிந்துரைத்தது. ஜூலை 1,2007 அன்று வாடிக்கையாளர் சேவைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய வாடிக்கையாளர் சேவைத் துறையை உருவாக்கியது.
அலுவலகங்கள் மற்றும் கிளைகள்
இந்திய ரிசர்வ் வங்கி 4 மண்டல அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இது, மாநில தலைநகரங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 22 வட்டார அலுவலகங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் சில அகமதாபாத், பெங்களூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர் சென்னை, தில்லி, கவுகாத்தி, ஹைதெராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு,கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர் பாட்னா, மற்றும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளன. தவிர, அகர்தலா, டேராடூண், காங்டாக், கொச்சி, பனாஜி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகரில் துணை அலுவலகங்களைக் கொண்டுள்ளது. வங்கி, அதன் அதிகாரிகளுக்கு இரண்டு பயிற்சி கல்லூரிகள், புனேவில் உள்ள விவசாய வங்கிக் கல்லூரி மற்றும் சென்னை ரிசர்வ் வங்கி பணியாளர் கல்லூரி. பெலாப்பூர், சென்னை, கொல்கத்தா மற்றும் புது தில்லியில் நான்கு மண்டல பயிற்சி மையங்களும் உள்ளன.
வங்கியின் அடிப்படைச் செயல்பாடுகள்
- தேசிய நிதிக்கொள்கையை உருவாக்குதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்
- வங்கிகளின் பணக்கையிருப்பு விகிதம் முறைப்படுத்துதல்
- நிதிசார் துறைகளை முறைப்படுத்துதல் மற்றும் மேற்பார்வையிடல்
- பிற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நிதி சார்ந்த கோட்பாடுகளை வரையறுத்தல்
- அன்னியச் செலாவணி முறைப்படுத்துதல் சட்டம், 1999 தின் படி முறைப்படுத்துதல்
- இந்திய ரூபாய் நாணயம் மற்றும் தாள் அச்சிடுதல்
- பழைய தாள்களை புதிய தாள்களுக்குப் பரிமாற்றம் செய்தல்
- மத்திய மாநில அரசுகளின் முதன்மை வங்கியாக செயல்படல்
- ரூபாய் நோட்டுக்களை வெளியிடுதல்
- இந்தியாவின் பண நிலைத் தன்மையை பாதுகாக்கும் அளவுக்கு இருப்புக்கள் வைத்தல்
- பொதுவாக நாணயம் மற்றும் கடன் திட்டங்களை நாட்டின் சிறந்த நலனுக்காகச் செயல்படுத்தல்
ஆகியவற்றை வங்கியின் அடிப்படைச் செயல்பாடுகளாக ரிசர்வ் வங்கியின் அறிமுகவுரை முன்வைக்கிறது.
வெளியீட்டு வங்கி
இது ரிசர்வ் வங்கியின் ஒரு பிரிவாகும். நாணயங்களைப் பொது மக்கள் புழக்கத்திற்காக வங்கிகள் மற்றும் அரசாங்கக் கருவூலங்கள் வழியாக வெளியிடும் துறையாகும். முதலில், வெளியீடுத் துறையின் சொத்துக்கள், ஐந்தில் இரண்டு பங்குக்கு தங்க நாணயம், தங்கப் பொன் அல்லது ஸ்டெர்லிங் பத்திரங்களின் மதிப்புக்கு ₹ 40 கோடி (₹ 400 மில்லியன்) விட குறைவாக இருக்கக்கூடாது என்றும் மீதமுள்ள சொத்துக்கள் - ரூபாய், நாணயங்கள்ள்ள்ள், இந்திய ரூபாய் பத்திரங்கள், பரிமாற்றம் மற்றும் இந்தியாவில் செலுத்த வேண்டிய உறுதிமொழி நோட்டுகள் என வைத்துக்கொள்ளாம். இரண்டாம் உலக போர் மற்றும் பிந்தையப் போர் காலத்தில் தேவைகளை பூர்த்தி செய்யவும் காரணமாக, இந்த விதிகள் கணிசமாக திருத்தியமைக்கப்பட்டன.
பண ஆணையம்
இந்திய ரிசர்வ் வங்கி, நாட்டின் முக்கிய பணவியல் ஆணையமாகும் மற்றும் மத்திய வங்கி தேசிய மற்றும் மாநிலஅரசாங்கங்கள் வங்கியாக செயல்படுகிறது. இது, உற்பத்தித் துறைகளில் போதுமான அளவு கடன் ஓட்டத்தை உறுதிப்படுத்ததுகிறது, அதே போல் பணவியல் கொள்கை கண்காணிக்கிறது. அதன் நோக்கங்கள், விலை நிலைத்தன்மையை பராமரிப்பது மற்றும் உற்பத்தி துறைகளில் போதுமான கடன் ஓட்டத்தை உறுதிப்படுதுவது. தேசிய பொருளாதாரம், பொதுத் துறையை சார்ந்தது ஆனால், மத்திய வங்கி, 1990 நிதி சந்தை சீர்திருத்தங்கள் முதல் தனியார் துறைக்கு தள்ள ஒரு பிரம்மாண்டமான பணவியல் கொள்கையை ஊக்குவிக்கிறது.செயல்படுத்தப்படுகிறது மற்றும் உற்பத்தி துறைகளில் கடன் போதுமான அளவு ஓட்டம் உறுதிப்படுத்த வேண்டும், அதே போல் பணவியல் கொள்கை கண்காணிக்கிறது. நோக்கங்கள் விலை நிலைத்தன்மையை பராமரிப்பது மற்றும் உற்பத்தி துறைகளில் கடன் போதுமான ஓட்டம் உறுதி. தேசிய பொருளாதாரம் பொது துறை சார்ந்தது மற்றும் மத்திய வங்கி 1990 நிதி சந்தை சீர்திருத்தங்கள் முதல் தனியார் துறை தள்ள ஒரு பிரம்மாண்டமான பணவியல் கொள்கை ஊக்குவிக்கிறது.
அந்நிறுவனம், மேலும் நிதி அமைப்பின் சீராக்கி மற்றும் மேற்பார்வையாளராகவும் மற்றும் வங்கி நடவடிக்கைகளை ,செயல்ப்பாடுகளை பரந்த அளவுருக்கள் உரைக்கிறது.அதன் நோக்கங்கள், அமைப்பில் பொது நம்பிக்கையை தக்க வைப்பது, வைப்புத்தொகையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது மற்றும் பொதுமக்களுக்கு செலவு குறைந்த வங்கிச் சேவைகளை வழங்குவது.
வங்கி ஓம்புட்ஸ்மன் திட்டம், வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு திறமையான தீர்வு கான வுருவாக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி, பணப் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தும், மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற பொருளாதார குறியீடுகளை கண்காணிக்கும்,மற்றும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் வடிவமைப்பு தொடர்பான முடிவை எடுக்கும்.
செலாவணி கட்டுப்பாட்டு மேலாளர்
மத்திய வங்கி, அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம், 1999 இலக்குகளை அடைய நிர்வகிக்கிறது. குறிக்கோள்: வெளிப்புற வர்த்தகம் மற்றும் பணம் செலுத்தும் வசதி மற்றும் இந்தியாவில் அந்நிய செலாவணி சந்தையின் ஒழுங்குமுறையில் மேம்பாடு மற்றும் பராமரிப்பு ஊக்குவிக்கம்.
நாணய வழங்குதல்
வங்கி, பண உற்ப்பத்தி,பரிமாற்றங்கள் அல்லது புழக்கத்தில் இருக்க தகுதியற்ற பணத்தை அழிக்கும்.அதன் நோக்கங்கள், நல்ல தரமான நாணயங்களைப் பொது மக்களுக்கு வழங்குவது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பராமரிக்க மற்றும் மேம்படுத்த வணிக வங்கிகளுக்கு கடன் வழங்கவது. ரிசர்வ் வங்கியின் அடிப்படை நோக்கங்கள், நாணயங்களை வழங்குதல்,நாட்டின் சிறந்த நன்மைக்காக நாட்டின் நாணயம் மற்றும் கடன் அமைப்பை பராமரித்தல் மற்றும் இருப்புக்களை தக்க வைத்துக்கொள்ளுதல். அது, விலை நிலைத்தன்மையை பராமரித்தல் ஆனால் அதே போல் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுதல் என்ற இரண்டு நோக்கங்களையும் அடைய இந்திய ரிசர்வ் வங்கி, நாட்டின் பொருளாதார அமைப்பை பராமரிக்கிறது.
வளர்ச்சி பங்கு
மத்திய வங்கி, தேசிய நோக்கங்கள் மற்றும் தொழில்களுக்கு ஆதரவு விளம்பரச் செயல்பாடுகளை பரவலாக செய்ய வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி, இடையேயான துறை மற்றும் உள்ளூர் பணவீக்கம் தொடர்பான பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. இந்த பிரச்சினைகளுள் சில, பொதுத்துறை ஆதிக்கத்தால் ஏற்படுகிறது.
இதரச் செயல்பாடுகள்
இந்திய ரிசர்வ் வங்கி ,அரசாங்கத்திற்கு ஒரு வங்கியாளர் மற்றும் மத்திய மாநில அரசாங்கங்களுக்கு வணிக வங்கியாளராகவும் செயல்படுகிறது. தேசிய வீடமைப்பு வங்கி (என் எச் பி) தனியார் மனை வணிகத்தை (ரியல் எஸ்டேட்) மேம்படுத்துவதற்காக 1988 இல் நிறுவப்பட்டது.மேலும் அனைத்து வங்கிகளின் வங்கி கணக்குகளையும் பராமரிக்கிறது.
அட்டவணை வங்கிகள்
பொது மக்கள் நடத்தும் வங்கிகளை மேல்பார்வையிடும் பொறுப்பும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு உண்டு. தகுதியானவை என்று தனக்குத் தோன்றும் வங்கிகளைத் தனது ஆட்சிக்கு உரியவையாக அமைத்துக் கொள்ளும். அவ்வாறு அமைத்துக் கொண்ட வங்கிகள் ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் அட்டவணையில் காணப்படும். அவையே அட்டவணை வங்கிகள் எனப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்கள் இத்தகைய வங்கிகளைக் கட்டுப்படுத்தும்.
அட்டவணையில்லா வங்கிகள்
இந்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணையில் சேர்க்கப்படாத வங்கிகள் அட்டவணையில்லா வங்கிகள் ஆகும். இவை மக்களால் மதிக்கப்பட்டதாகவும் தகுதி மிக்கதாகவும் இருந்தாலும் இவை அட்டவணையில் சேர்க்கப்பட்ட பிறகே அட்டவணை வங்கிகள் பட்டியலில் இடம் பெறும். ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்கள் இவ்வங்கிகளையும் கட்டுப்படுத்தும்.
இந்தியாவில் வங்கித்தொழில்
நடுவண் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
இந்தியப் பொதுத்துறை வங்கிகள்
- அலகாபாத் வங்கி
- ஆந்திரா வங்கி
- பரோடா வங்கி
- பேங்க் ஆப் இந்தியா
- மகாராஷ்டிர வங்கி
- பாரதிய மகிளா வங்கி
- கனரா வங்கி
- இந்திய மத்திய வங்கி
- கார்ப்பரேஷன் வங்கி
- தேனா வங்கி
- ஐடிபிஐ வங்கி
- இந்தியன் வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- வணிகத்திற்கான ஓரியண்டல் வங்கி
- பஞ்சாப் & சிந்து வங்கி
- பஞ்சாப் தேசிய வங்கி
- பாரத ஸ்டேட் வங்கி
- சிண்டிகேட் வங்கி
- யூகோ வங்கி
- இந்திய யூனியன் வங்கி
- இந்திய ஐக்கிய வங்கி
- விஜயா வங்கி.
தனியார்த் துறை வங்கிகள்
- ஆக்சிஸ் வங்கி
- கத்தோலிக்க சிரியன் வங்கி
- சிட்டி யூனியன் வங்கி
- டிசிபி வங்கி
- தன்லட்சுமி வங்கி
- பந்தன் வங்கி
- பெடரல் வங்கி
- எச்டிஎஃப்சி வங்கி
- ஐசிஐசிஐ வங்கி
- இன்டசுஇண்டு வங்கி
- ஐஎன்ஜி வைசியா வங்கி
- சம்மு & காசுமீர் வங்கி
- கர்நாடக வங்கி
- கரூர் வைசியா வங்கி
- கோடக் மகிந்தரா வங்கி
- இலட்சுமி விலாசு வங்கி
- நைனிதால் வங்கி
- ஆர்பிஎல் வங்கி (ரத்னாகர் வங்கி)
- சௌத் இந்தியன் வங்கி
- தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
- யெசு வங்கி
- எக்விடாஸ் வங்கி
- உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியுதவி வங்கி.
கூட்டுறவு வங்கிகள்
- ரெப்கோ வங்கி
- புல்தானா ஊரகம்
- காசுமோசு வங்கி
- சரசுவத் வங்கி
- சாம்ராவ் வித்தல் கூட்டுறவு வங்கி
வெளிநாட்டு வங்கிகள்
- ABN AMRO
- அபுதாபி வணிக வங்கி
- Antwerp Diamond வங்கி
- Australia and New Zealand வங்கிing Group
- வங்கி Internasional Indonesia
- வங்கி of America
- வங்கி of Bahrain and Kuwait
- இலங்கை வங்கி
- The வங்கி of Tokyo-Mitsubishi UFJ
- Barclays
- இந்திய சிட்டி வங்கி
- கிரெடிட் சூஸ்
- Deutsche வங்கி
- HSBC
- The Royal வங்கி of Scotland
- Scotiaவங்கி
- Standard Chartered
மண்டல ஊரக வங்கிகள்
- Andhra Pragathi Grameena வங்கி
- கேரள கிராம வங்கி
- Bangiya Gramin Vikash வங்கி
- Gramin வங்கி of Aryavart
- வடக்கு மலபார் கிராம வங்கி
- பாண்டியன் கிராம வங்கி
- Paschim Banga Gramin வங்கி
- Sarva UP Gramin வங்கி
- தெற்கு மலபார் கிராம வங்கி
- Uttar Bihar Gramin வங்கி
- Vananchal Gramin வங்கி
- பல்லவன் கிராம வங்கி
- புதுவை பாரதியார் கிராம வங்கி
- List of regional rural வங்கிs in Uttar Pradesh
வங்கிகளுக்கிடை பிணையங்கள்
- BANCS
- கேஷ்நெட்
- சிர்ரசு
- ஐஎம்பிஎசு
- MITR
- NFS
- பிளசு
- ரூபே
செயற்படா வங்கிகள்
- Alliance வங்கி of Simla
- Arbuthnot & Co
- பம்பாய் வங்கி
- கல்கத்தா வங்கி
- செட்டிநாடு வங்கி
- மதராஸ் வங்கி
- மதுரா வங்கி
- ராஜஸ்தான் வங்கி
- பெங்கால் சென்ட்ரல் வங்கி
- பாரத ஓவர்சீசு வங்கி
- பஞ்சாப் செஞ்சூரியன் வங்கி
- Chartered வங்கி of India, Australia and China
- இந்திய வணிக வங்கி
- தாஸ் வங்கி
- Exchange வங்கி of India & Africa
- Grindlays வங்கி
- Imperial வங்கி of India
- கிருஷ்ணர் வங்கி
- Mercantile வங்கி of India, London and China
- நாத் வங்கி
- நெடுங்காடி வங்கி
- இந்தியாவின் புதிய வங்கி
- Oriental வங்கி Corporation
- Oudh Commercial வங்கி
- பாலை மத்திய வங்கி
- சௌராஷ்டிரா ஸ்டேட் வங்கி
- இந்தூர் ஸ்டேட் வங்கி
- பாண்டியன் வங்கி
- ஐக்கிய தொழிற்துறை வங்கி
- Madhavpura Mercantile Cooperative வங்கி
- பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி
- ஐதராபாத் ஸ்டேட் வங்கி
- மைசூர் ஸ்டேட் வங்கி
- பாட்டியாலா ஸ்டேட் வங்கி
- திருவாங்கூர் ஸ்டேட் வங்கி
Comments
Post a Comment