####அறிவோம்####
யூனியன் பிரதேசங்கள்
ஒன்றியப் பகுதி (இந்தியா)
ஒன்றியப் பகுதி அல்லது யூனியன் பிரதேசம் (Union Territory) என்பது இந்தியாவில் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இது மாநிலங்களைப் போலல்லாமல் நேரடியாக நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் ஏழு ஒன்றியப் பகுதிகள் உள்ளன.
அவையாவன:
# அந்தமான் நிக்கோபார் தீவுகள்
# சண்டீகர்
# தமன் தியூ
# தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
# புதுச்சேரி
# லட்சத்தீவுகள்
# டெல்லி தேசிய தலைநகரப் பகுதி
இவற்றில் புதுச்சேரி மற்றும் டெல்லி தேசிய தலைநகரப் பகுதிகள் மாநில அந்தஸ்து உடையனவாகும். யூனியன் பிரதேசங்கள் நேரடியாக இந்தியக் குடியரசுத் தலைவரால் நிர்வகிக்கப்படுகிறது. பிற மாநிலங்களைப் போல் தேர்தல் மூலம் அரசமைக்காமல் குடியரசுத் தலைவர் அமைத்த ஆளுனரால் நிர்வாகம் செய்யப்படுகிறது. புதுச்சேரிக்கும் டெல்லிக்கும் தேர்தல் மூலம் அரசமைக்க உரிமை இருப்பினும், இவற்றுள் சில சட்டம் இயற்றுவதில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தேவையாக உள்ளது.
இந்தியாவில் மொத்தம் 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அவை அந்தமான் நிக்கோபார் தீவுகள், தமன் & தியூ, சண்டிகர், பாண்டிச்சேரி, டெல்லி, லக்ஷ்வதீப் மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி. இந்த 7 யூனியன் பிரதேசங்களிலும் கடற்கரைகள், கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள் என்று ஏராளமான சுற்றுலாத் தலங்கள் அமைந்திருக்கின்றன. எனினும் சில சுற்றுலாச் சிறப்பு வாய்ந்த இடங்கள் அதிகம் பயணிகள் பார்வை படாமல் அறியப்படாத இடங்களாகவே இருக்கின்றன. அந்த வகையில் இந்த 7 யூனியன் பிரதேசங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு சுற்றுலாத் தலங்களாக மொத்தம் 7 இடங்களை பற்றி பார்ப்போம்.
அந்தமானின் பவழப்பாறைகள்:
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பவழப்பாறைகளை ரசிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் போவதுகூட தெரியாது. அதிலும் குறிப்பாக ஜாலி பாய் தீவில் சிறிய படகுகளில் பயணம் செய்து இந்தப் பவழப்பாறைகள் கண்டு ரசிக்க முடியும். இந்த சிறு படகுகளின் அடிப்பாகம் ஃபைபர் கண்ணாடியால் ஆனவை என்பதால் நீருக்கு அடியில் காணப்படும் பவளப்பாறை வளர்ச்சிகளை பயணிகள் தெளிவாக பார்க்கலாம்.
சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில், டெல்லி:
இந்திய மண்ணின் பாரம்பரிய கோயிற்கலை மரபையும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் இந்த மஹோன்னத கோயில் வளாகத்தை உருவாக்குவதற்கு 5 வருடங்கள் பிடித்துள்ளன. முழுக்க முழுக்க நம் முன்னோர்களின் படைப்பைப்போன்றே உருவாக்க வேண்டும் எனும் நோக்கத்தில் நமது சம கால கலைஞர்கள் ஜெயித்தார்களா என்பது பற்றி நீங்கள் நேரில் இந்த கோயிலைப்பார்த்தபின் ஒரு முடிவுக்கு வரலாம்.
சண்டிகரின் ராக் கார்டன்:
40 வருடங்களுக்கு முன்னால் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கலைப்பூங்காவில் நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை கழிவுப்பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல கலைப்படைப்புகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது உடைந்த வளையல் துண்டுகள், பீங்கான் சில்லுகள், மின் கம்பிகள், பழைய வாகன உதிரிப்பாகங்கள், பழை மின்விளக்குகள் மற்றும் சாதாரணப்பொருட்களான கட்டிடக்கழிவுகள், முள் கரண்டிகள், களிமண் குண்டுகள் மற்றும் மண் பானைகள் போன்றவற்றையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் பல்வேறு நிர்மாணச்சிற்ப அமைப்புகளை இந்த பூங்காவில் பார்த்து ரசிக்கலாம்.
வசோனா லயன் சஃபாரி, தாத்ரா & நகர் ஹவேலி:
தாத்ரா & நகர் ஹவேலியின் தலைநகரான சில்வாசாவிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் வசோனா லயன் சஃபாரி காட்டுயிர் பூங்கா அமைந்துள்ளது. 'ஆசியச்சிங்கம்' எனப்படும் சிங்க இனத்திற்கான விசேஷ சரணாலயமாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு சஃபாரி வாகனங்கள் செல்வதற்காக 3 கி.மீ நீளமுள்ள ஒரு சாலையும் போடப்பட்டிருக்கிறது. எனவே இயற்கையான சூழலில் சுதந்திரமாக உலா வரும் ஆசிய சிங்கங்களை ஜீப் வாகனங்களில் பாதுகாப்பாக பயணித்தபடி சுற்றுலாப்பயணிகள் வெகு அருகில் கண்டு ரசிக்கலாம்.
தமன் & தியூவின் அழகிய கடற்கரைகள்:
தமன் & தியூ பிரதேசங்கள் அவற்றின் எழில் கொஞ்சும் கடற்கரைகளுக்காக மிகவும் பிரபலம். இந்த யூனியன் பிரதேசம் பல காலம் கோவா, தாத்ரா & நகர் ஹவேலி போன்றவற்றுடன் அரபிக்கடலோரம் போர்த்துகீசியரக்ளின் பகுதியாக இருந்து வந்தது. அதோடு கோவாவை போலவே தமன் & தியூவிலும் அட்டகாசமான பல கடற்கரைகள உள்ளன.
அரிக்கமேடு, பாண்டிச்சேரி:
அரிக்கமேடு பகுதியில் மார்ட்டிமோர் வீலர் என்பவர் 1940-களில் தொல்பொருள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இதன் காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அரிக்கமேடு பகுதி கருதப்படுகிறது. அதோடு வீலரின் கூற்றுப்படி சோழர் காலத்தில் மீனவ கிராமமாகவும், துறைமுக நகரமாகவும் இருந்த அரிக்கமேடு பகுதியில் சோழப் பேரரசிற்கும், ரோமானிய பேரரசிற்கும் இடையே வணிகப் போக்குவரத்து நடந்துள்ளது. மேலும் ரோமானிய பேரரசின் கலைநயத்தை விளக்கும் மட்பாண்டங்கள் பெருமளவில் அரிக்கமேட்டில் கிடைத்து வருகின்றன. எனவே நீங்கள் பாண்டிச்சேரி வரும்போது அரிக்கமேட்டை தவறவிட்டுவிடாதீர்கள்.
கட்மத் தீவு, லக்ஷ்வதீப்:
லக்ஷ்வதீப்பின் அமிந்திவி தீவுக்கூட்டத்தை சேர்ந்த கட்மத் தீவு , ஏலக்காய் தீவு என்ற பெயரில் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த தீவில் கடல் ஆழம் குறைவாக காணப்படுவதுடன் ஏராளமான பவளப்பாறைகளும் அமைந்திருக்கின்றன. இங்கு ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட நபர் ஒருவருக்கு 2500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் கடல் நீச்சல், ஸ்நார்க்கெலிங் போன்ற நீர் விளையாட்டுகளிலும் நீங்கள் ஈடுபட்டு மகிழலாம். அதுமட்டுமல்லாமல் இங்கு வரும் பயணிகள் மண் கோட்டை கட்டுவதிலும், மீன் பிடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
MINI CINI - TNPSCPNUSEN.BLOGSPOT.COM
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
வார்தா கல்வித் திட்டம் வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. சிறப்பு அம்சங்கள் அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
Comments
Post a Comment