####அறிவோம்####
இராமகிருசுண இயக்கம் (மிஷன்)
இராமகிருசுண இயக்கம்
ராமகிருஷ்ணா மிஷன்
சின்னம்
குறிக்கோள் உரை
"ஆத்மனோ மோக்சார்த்தம் ஜகத் ஹிதயா ச்ச," — "தன்னுடைய மீட்பிற்காகவும், உலக நல்வாழ்விற்காகவும்
உருவாக்கம்
1897
நோக்கம்
கல்வி, அறக்கட்டளை, சமயக் கல்வி, ஆன்மீகம்
தலைமையகம்
பேலூர் மடம்
சேவைப் பகுதி
உலகெங்கும்
இராமகிருஷ்ணா மிசன் கோவில், சென்னை
இராமகிருஷ்ணா மிஷன் மற்றும் இராமகிருஷ்ணா மடம் என்பவை இராமகிருஷ்ணா இயக்கம் அல்லது வேதாந்த இயக்கம் எனப்படும் உலகளாவிய ஆன்மீக இயக்கத்தின் இரட்டை அமைப்புகளாகும். இராமகிருஷ்ணா மிஷன் உதவிபுரிந்திடவும் மக்கள் பணியாற்றிடவும் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு மே 1,1897ஆம் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகாநந்தரால் நிறுவப் பட்ட அமைப்பாகும்.நலவாழ்வு, பேரழிவு மீட்பு பணிகள், கிராம வளர்ச்சி, பழங்குடி மேம்பாடு, துவக்க மற்றும் உயர்நிலைக் கல்வி மற்றும் பண்பாடு பேணுதல் என பல துறைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. தனது நூற்றுக்கணக்கான துறவிகளின் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்டு இப்பணிகளை அவ்வமைப்பு நிறைவேற்றி வருகிறது. கர்ம யோகம் எனப்படும் செயல்வழி வழிபாட்டு கொள்கைகளைக் கொண்டு இச்செயல்களை செய்து வருகிறது.
2013 ஆம் ஆண்டின் உத்தராகண்டம் பேரிடர் மீட்புப்பணியில் ராமகிருஷ்ண மிஷனின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்த மிஷனின் தலைமையகம் இந்தியா கொல்கத்தாவிலுள்ள பேலூர் மடத்தில் அமைந்துள்ளது.
யுனெஸ்கோ உடனான ஒப்புமை
1993 ஆம் ஆண்டு நிகழ்த்திய உரையில் யுனெஸ்கோ அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ஃபெடரிகோ மேயர், 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுனெஸ்கோவின் அடிப்படைச் சட்ட திட்டம் 1897 இல் ஆரம்பிக்கப்பட்ட ராமகிருஷ்ண மிஷனின் நோக்கம், செயல்பாடுகளோடு ஒத்திருப்பதைக் கண்டு வியந்து குறிப்பிட்டுள்ளார்.
விருதுகள்
காந்தி அமைதிப் பரிசு
1998 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதிப் பரிசு ராமகிருஷ்ண மிஷனுக்கு வழங்கப்பட்டது.
தேசிய விருது
இந்தியாவின் மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் தேசிய விருது, மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்விற்காக மிகச் சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக ராமகிருஷ்ண மிஷனின் கொல்கத்தா நரேந்திரப்பூர் ராமகிருஷ்ண மிஷனுக்கு வழங்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பார்வையற்ற மாணவர்கள் அகாடமி, பார்வையற்றவர்களின் கல்வி, வேலைப் பயிற்சிகள், சமூக, பொருளாதார மறுவாழ்விற்காகப் பாடுபட்டு வருகின்றது.2010 ஆம் வருடம் உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3 ஆம் தேதி குடியரசுத் தலைவரிடமிருந்து இவ்விருது பெறப்பட்டது
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
வார்தா கல்வித் திட்டம் வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. சிறப்பு அம்சங்கள் அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
Comments
Post a Comment