Skip to main content

தமிழ்நாடு

| சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது | நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930) | இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி | பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி | தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் | தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் | தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி | சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர் | சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார் | சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன் | ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975) | தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996) | தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை | தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி | தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS | தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண் | தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள் | தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) –கீசக வதம் (1916) | மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்) | தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் –காளிதாஸ் (1931) | தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும் | தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873) | தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882) | தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856) | இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு) | இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு) | தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்) | மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர் | மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ) | மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934) | மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது) | மிகப் பழமையான அணை – கல்லணை | மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை, முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை) | மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்) | மேற்குத் தொடர்ச்சி மலைகள் - நீலகிரி மலை, ஆனை மலை, பழனி மலை, கொடைக்கானல் குன்று, குற்றால மலை, மகேந்திரகிரி மலை, அகத்தியர் மலை, ஏலக்காய் மலை, சிவகிரி மலை, வருஷநாடு மலை | கிழக்கு தொடர்ச்சி மலைகள் - ஜவ்வாது மலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, பச்சை மலை, கொல்லி மலை, ஏலகிரி மலை, செஞ்சி மலை, செயிண்ட்தாமஸ் குன்றுகள், பல்லாவரம், வண்டலூர் | முக்கிய நதிகள் - காவேரி – 760 கி.மீ, தென்பெண்ணை – 396 கி.மீ, பாலாறு – 348 கி.மீ, வைகை – 258 கி.மீ, பவானி – 210 கி.மீ, தாமிரபரணி – 130 கி.மீ | தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் |தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி | தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர் | மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர் | மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர் | மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி) | மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் ) | மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர் | மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை | மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை | மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்) | மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் | மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம் | மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி) | மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m) | மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ] | (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km ) | மிக நீளமான ஆறு – காவிரி (760 km) | மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2) | மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2) | மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம் | கோயில் நகரம் – மதுரை | தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி) | (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம் | மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி


தமிழ்நாடு பொது தகவல்கள்

| இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது? - 7வது இடம் | இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? - 23 வது இடம் | இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? - 16வது இடம் | இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? - 15வது இடம் | இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? - 14வது இடம் | சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது? - மதுரை | சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? - 2004 | தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு? - 72993 | தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது? - சென்னை | தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு? - 1076 கி.மீ | தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது - 1986 | தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது? - கன்னியாக்குமரி (92.14 சதவீதம்) | தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்? - சென்னை (23,23,454) | தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? - சென்னை (46,81,087) | தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? - 68.45 ஆண்டுகள் | தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை? - 13 மாவட்டங்கள் | தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு? - 234 | தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு? - 1 | தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு? - 12 துறைமுகங்கள் தமிழகத்தில் உள்ளன. | பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது? - சென்னை | தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? - 71.54 ஆண்டுகள் | தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு? - 15979 | தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு? - 561 | தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு? - 146 | தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு? - 18 | தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு? - 39 | தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது? - தர்மபுரி (64.71 சதவீதம்) | தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? - பெரம்பலூர் 5,64,511 | தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்? - சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்) | தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது? - நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்) | தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை? - 32 | தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது? - அரியலூர் | தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது? - திருப்பூர் | தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்?- 80.33 சதவீதம் | தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு - 17.58 சதவீதம் | தமிழகததின் மாநில விலங்கு எது?- வரையாடு | தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது? - சென்னை, எண்ணூர், தூத்துக்குடி | தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது? - காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி | தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது? - 1. சென்னை 2. கோவை 3. மதுரை 4. திருச்சி 5 தூத்துக்குடி 6 சேலம் | தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு? - 999 பெண்கள் (1000 ஆண்கள்) | தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை? - 1. நீலகிரி 2. சேலம் 3. வேலூர் 4. கன்னியாக்குமாரி | தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை? - 1. திருவாரூர் 2. இராமநாதபுரம் 3. தூத்துக்குடி 4. கடலூர் | தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது? - மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997) | தமிழ்நாட்டின் இணைய தளம் எது? - www.tn.gov.in | தமிழ்நாட்டின் தலைநகரம் எது? - சென்னை | தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு? - ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர் | தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது? - திருவில்லிபுத்தூர் கோபுரம் | தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக? - கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல் | தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது? - நீராடும் கடலுடுத்த | தமிழ்நாட்டின் மாநில நடனம் எது? - பரத நாட்டியம் | தமிழ்நாட்டின் மாநில பறவை எது? - மரகதப்புறா | தமிழ்நாட்டின் மாநில மரம் எது? - பனைமரம் | தமிழ்நாட்டின் மாநில மலர் எது? - செங்காந்தர் மலா் | தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது? - கபடி | தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு? - 1,30,058 ச.கி.மீ | தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு? - 7,21,38,958 ஆண் 36158871 பெண் 35980087


பாரத ரத்னா விருது பெற்றவர்களின் விபரங்கள்

||| சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) - 1954 | சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - 1954 | சி.வி. ராமன் - 1954 பகவன் தாஸ் - 1955 | விஸ்வேஸ்வரய்யா - 1955 | ஜவாஹர்லால் நேரு - 1955 | கோவிந்த வல்லப பந்த் - 1957 | தோண்டோ கேசவ் கார்வே - 1958 | பிதான் சந்திர ராய் - 1961 | புருஷோத்தம் தாஸ் டாண்டன் - 1961 | ராஜேந்திர பிரசாத் - 1962 | ஜாகிர் ஹுசேன் - 1963 | பாண்டுரங்க் வாமன் கனே - 1963 | லால் பகதூர் சாஸ்திரி - 1966 | இந்திரா காந்தி - 1971 | வி.வி. கிரி - 1975 | கே. காமராஜ் - 1976 | அன்னை தெரசா - 1980 | ஆச்சார்ய வினோபா பாவே - 1983 | கான் அப்துல் கஃபார் கான் - 1987 | எம்.ஜி. ராமச்சந்திரன் - 1988 | பி.ஆர். அம்பேத்கர் - 1990 நெல்சன் மண்டேலா - 1990 | ராஜீவ் காந்தி - 1991 | வல்லபபாய் படேல் - 1991 | மொரார்ஜி தேசாய் - 1991 | மௌலானா அபுல் கலாம் ஆஸாத் - 1992 | ஜே.ஆர்.டி. டாடா - 1992 | சத்யஜித் ராய் - 1992 | குல்ஜாரிலால் நந்தா - 1997 | அருணா ஆசப் அலி - 1997 | ஏ.பி.ஜே. அப்துல் கலாம் - 1997 | எம்.எஸ். சுப்புலட்சுமி - 1998 | சிதம்பரம் சுப்ரமணியம் - 1998 | ஜெயபிரகாஷ் நாராயண் - 1999 | அமர்த்தியா சென் - 1999 | கோபிநாத் போர்தோலோய் - 1999 | பண்டிட் ரவிசங்கர் - 1999 | லதா மங்கேஷ்கர் - 2001 | உஸ்தாத் பிஸ்மில்லா கான் - 2001 | பீம்சேன் ஜோஷி - 2009 | சி.என்.ஆர். ராவ் - 2014 | சச்சின் டெண்டுல்கர் - 2014 | மதன் மோகன் மாளவியா - 2015 | வாஜ்பாய் - 2015 ||||


தமிழ்நாட்டிலுள்ள சாரணாலயங்கள்

| முண்டந்துறை (திருநெல்வேலி)-1962, கோடிக்கரை (நாகப்பட்டிணம்)-1967, களக்காடு (திருநெல்வேலி)-1976, வல்லநாடு வெளிமான் (தூத்துக்குடி)-1987, மலை அணில் (விருதுநகர்)-1988


தமிழ்நாட்டிலுள்ள பறவைகள் சரணாலயம்

| வேடந்தாங்கல் (காஞ்சிபுரம்)-1962, வேட்டங்குடி (சிவகங்கை)-1977, கரிக்கிலி (காஞ்சிபுரம்)-1989, புலிகாட் ( திருவள்ளூர்)-1980, காஞ்சிராங்குளம் (இராமநாதபுரம்)-1989, சித்ராங்குடி (இராமநாதபுரம்)-1989, உதய மார்த்தாண்டம் (திருவாரூர்)-1991, வடுவூர் (திருவாரூர்)-1991, கூத்தங்குளம் (திருநெல்வேலி)-1994, கரைவெட்டி (பெரம்பலூர்)-1997, வெல்லோடி (ஈரோடு)-1997, மேல்செவ்வனூர், கீழ்செவ்வனூர் (இராமநாதபுரம்)-1998


தமிழ்நாட்டிலுள்ள தேசிய பூங்காக்கள்

| முதுமலை (நீலகிரி)-1940, கிண்டி (சென்னை)-1976, மன்னார் வலைகுடா (இராமநாதபுரம்)-1980, இந்திராகாந்தி பூங்கா (கோயம்ப்த்தூர்)-1976, முக்குருத்தி (நீலகிரி)-1990


முக்கிய தினங்கள்

| குடியரசு தினம் - ஜனவரி 26 | உலக காசநோய் தினம் - பிப்ரவரி 25 | தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28 | உலக மகளிர் தினம் - மார்ச் 8 | நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15 | உலக பூமி நாள் - மார்ச் 20 | உலக வன நாள் - மார்ச் 21 | உலக நீர் நாள் - மார்ச் 22 | தேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5 | உலக சுகாதார நாள் - ஏப்ரல் 7 | பூமி தினம் - ஏப்ரல் 22 | உலக புத்தகநாள் - ஏப்ரல் 23 | தொழிலாளர் தினம் - மே 1 |உலக செஞ்சிலுவை தினம் - மே 8 | சர்வ தேச குடும்பதினம் - மே 15 | உலக தொலைத்தொடர்பு தினம் - மே 17 | தேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21 (ராஜிவ் காந்தி நினைவு நாள்) | காமன்வெல்த் தினம் - மே 24 | உலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26 | உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11 | கல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - ஜூலை 15 | ஹுரோஷிமா தினம் - ஆகஸ்ட் 6 | நாகசாகி தினம் - ஆகஸ்ட் 9 | சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15 | தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29 | ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5 | உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8 | சர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 16 | உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27 | உலக விலங்கு தினம் - அக்டோபர் 4 | விமானப்படை தினம் - அக்டோபர் 8 | உலக தர தினம் - அக்டோபர் 14 | உலக உணவு தினம் - அக்டோபர் 16 | ஐ.நா.தினம் - அக்டோபர் 24 | குழந்தைகள் தினம் - நவம்பர் 14 | உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1 | உடல் ஊனமுற்றோர் தினம்- டிசம்பர் 3 | இந்திய கப்பற்படை நாள் - டிசம்பர் 4 | கொடிநாள் - டிசம்பர் 7 | சர்வ தேச விமானப்போக்குவரத்து தினம் - டிசம்பர் 9 | மனித உரிமை தினம் - டிசம்பர் 10 | விவசாயிகள் தினம் - டிசம்பர் 23 |


####அறிவோம்####

| வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது. | தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன. | சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக். | பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார். | `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன். | ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது. | `வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால். | சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ். | `பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி. | சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள். | `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின். | இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில் அமைந்துள்ளது. | முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன். | `திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார். | பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது. | குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா. | இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது. | பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா. | முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா. | `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா. | இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி. | சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும். | ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது. | கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது. | நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும். | ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும். | பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது. | மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும். | நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது. | ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது. | ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும். | நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல். | நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது. | பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர். | ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும். | தந்தி அனுப்புவதற்கான சங்கேதக்குறியை, 1837-ம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார். | குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது.* தீப நகரம் என்று அழைக்கப்படுவது, மைசூர். | நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். | பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன. | அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது. | ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தவர், சர். சி.வி.ராமன். | அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி, அன்னை தெரசா.* கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு, பிரான்சு. | பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர். | மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி, ரெயின்கேஜ். | விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின். | ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள். | கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது. | இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் - திமிங்கலம். | விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல். | உலகின் வெண்தங்கம் - பருத்தி. | இந்தியாவின் முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு. | இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வரா கோவில் (கர்நாடகா). | ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா. | விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையது அகமது கான். | `குடியரசு' என்னும் நாளிதழை நடத்தியவர், பெரியார். | வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911. | இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர். | தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம். | சைக்கிளைக் கண்டுபிடித்தவர், மாக்மில்லன். | திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம். | `தாவர வகைப்பாட்டியலின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ். | ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள். | இந்திய துணை ஜனாதிபதியின் பதவிக்காலம், 5 ஆண்டுகள். | தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம், ஆனைமுடி.* நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை, புறா. | உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை. | பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி. | தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது. | `விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி.* பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால். | பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு. | நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. | அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ். | `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன. | ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி. | வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர். | உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919. | பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன். | பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது. | `உயிரின் ஆறு' என அழைக்கப்படுவது, ரத்தம். | ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும். | பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள். | ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன். | நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1986. | தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் சுமார் 1000 கிலோமீட்டர். | நிதி ஆணையத்தின் பதவிக்காலம், 5 ஆண்டுகள். | நம்முடைய கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன. | போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின். | அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27. | `ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர், ஜோசப் ஸ்டாலின். | தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர், டீனியா. | செஸ் விளையாட்டு தோன்றிய நாடு, இந்தியா. | வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன. | சிங்கப்பூரின் பழைய பெயர், டெமாஸெக். | வாவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர், ஜசக் நிïட்டன். | `திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், கால்டுவெல். | மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு, 1761. | வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது. | சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும். | இந்தியாவிலேயே அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம், கேரளா. | `செவாலியர்' விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ். | வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர், ஜார்ஜ் ஈஸ்ட்மன். | ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா. | `அரபிக்கடலின் ராணி' என்று வர்ணிக்கப்படும் நகரம், கொச்சி. | மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர். | `பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம், நிïயார்க். | `இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று போற்றப்படுபவர், ஏ.பி.ஜே. அப்துல்கலாம். | நீரைவிட ரத்தத்துக்கு 6 மடங்கு அடர்த்தி அதிகம். | ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம். | ஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம். | உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம், ஜெனீவா. | யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள். | உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்). | தெற்காசியாவின் மிகப்பெரிய காய்கறிச்சந்தை, ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல் மாவட்டம்) உள்ள காந்தி மார்க்கெட். | உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு, ஜப்பான். | புத்தர் பிறந்த இடம், லும்பினி. | `புனித நகரம்' என்று அழைக்கப்படுவது, ஜெருசலேம். | `பூகோள சொர்க்கம்' எனப்படும் இடம், காஷ்மீர் (இந்தியா). | உலகின் மிகப்பெரிய தீபகற்பம், அரேபியா. | தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு, அமெரிக்கா. | ஜப்பான் நாட்டில் தான் அதிக அளவில் ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன. | `கிரையோஜெனிக் என்ஜின்கள்', விண்வெளி ஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன. | சராவதி ஆற்றின் `ஜோக்' அருவி தான் (கர்நாடகா), இந்தியாவிலேயே மிக உயரமானது. | மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், `ராப்லேசியா'. | பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப்போன்று இரண்டு மடங்கு நீளமாக இருக்கும். | 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் பொருள், கண்ணாடி | 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம் லூயி. | `லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன். | `வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது, ஏலக்காய். | பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா. | இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், பொக்ரான் (ராஜஸ்தான்). | யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன. | நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது. | உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன. | இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன. | எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள். | முதலைக்கு 60 பற்கள் உண்டு. | உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா. | வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு'. | இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட். | இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர். | `கறுப்பு ஈயம்' எனப்படும் தாது, கிராபைட். | கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு'. | காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர். | `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு. | `திருமறைக்காடு' என்று அழைக்கப்படும் ஊர், வேதாரண்யம். | `பெருலா' என்ற செடியில் இருந்து வெளிவரும் ஒரு திரவப்பொருள் தான், பெருங்காயம். | கரிகால் சோழ மன்னனின் இயற்பெயர், திருமாவளவன். | உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது, ரேடியம். | மின்னூட்டத்தினை தேக்கி வைக்கும் சாதனம், மின்தேக்கி. | `சுங்கம் தவிர்த்த சோழன்' எனப் பெயர் பெற்ற மன்னன், முதலாம் குலோத்துங்க சோழன். | பாம்பு, நாக்கினால் வாசனையை நுகரும் திறன் கொண்டது. | கார்கள் அதிகமுள்ள நகரம், நியூயார்க். | யானை தினமும் சுமார் 300 பவுண்டு அளவுள்ள உணவை உட்கொள்ளும். | நாய்க்கு வியர்ப்பது கிடையாது. | `பறவைத்தீவு' என அழைக்கப்படுவது, நியூசிலாந்து. | நாகலாந்தில் ஒரே ஒரு ரெயில் நிலையம் தான் உள்ளது. | வீட்டிற்கு ஒரு பியானோ உள்ள நாடு, இங்கிலாந்து. | பழங்களின் அரசன் எனப்படுவது, மாம்பழம். | எலும்புக்கூடு இல்லாத உயிரினம், ஜெல்லி மீன்.* `ஆகஸ்டு புரட்சி' என அழைக்கப்படுவது, வெள்ளையனே வெளியேறு இயக்கம். | `வாதாபி கொண்டான்' என்று அழைக்கப்படும் மன்னன், நரசிம்ம பல்லவன். | தென்னிந்தியாவின் உயரமான மலைச்சிகரம், தொட்டபெட்டா. | வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு, கார்பன் மோனாக்சைடு. | `கூத்தராற்றுப்படை' என்று குறிப்பிடப்படும் சங்க இலக்கியம், மலைபடுகடாம். | டெல்லி யூனியன் பிரதேசத்தின் முதல் பெண் முதல்வர், சுஷ்மா சுவராஜ். | முன்னங்கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம், வெட்டுக்கிளி. | `உயிரியல் கவிஞர்' என்று அழைக்கப்படுபவர், சர் ஜெகதீஸ் சந்திரபோஸ். | ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. | பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும். | வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன. | மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும். | உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கரியமில வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த ஒரு வாசனை மட்டுமே தெரியும். | ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும். | சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து, தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன. | தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும். | உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரியசக்தி, 2 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம். | கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952. | மனித உடலில் அதிகளவில் உள்ள உப்பு, கால்சியம். | கடல்நீரில் உள்ள உப்பின் அளவு, 35 சதவீதம். | நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு, 1962. | ஒரு நாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம். | தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன. | மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவை மொட்டுகள் உள்ளன. | செஸ் போர்டில் உள்ள வெள்ளைக் கட்டங்களின் எண்ணிக்கை, 32. | ஒரு பென்சிலைக் கொண்டு சுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு கோடு வரைய முடியும். | மின்சார பல்பில் `இனர்ட்' என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது. | மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன. | மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையுமிடம், நீலகிரி. | இலைகளை உதிர்க்காத மர வகை, ஊசியிலை மரங்கள். | இளம்வயதில் ஓவியராக இருந்தவர், ஹிட்லர். | ஓர் எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி முட்டைகள் வரை இடும். | சில வகையான ஆந்தைகளுக்கு கொம்பு போன்ற தோற்றம் உண்டு. | உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர், ஜுலியஸ் சீசர். | தபால்பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் முதன்முதலில் 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. | செவ்வாய்க் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும். | இந்திய நாட்டுப் பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது; ஆப்பிரிக்க தேசத்துப் பெண் யானைகளுக்குத் தந்தம் உண்டு. | 24 மணி நேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.* அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம், 8 ஆயிரத்து 381 மீட்டர்கள். | ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம், சீர்கான். | முதன்முதலில் இந்தியாவின் உதவி ஜனாதிபதியாய் இருந்தவர், டாக்டர் ராதாகிருஷ்ணன். | ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருதை இரண்டு முறை பெற்ற இந்திய எழுத்தாளர், கே.கே. நாயர். | உலக சிகரங்களில், மூன்றாவது பெரிய சிகரம், கஞ்சன் ஜங்கா. | கியூபாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர், பிடல் காஸ்ட்ரோ. | சர் ஐசக் நிïட்டன் உருவாக்கிய கணித வகை, கால்குலஸ். | செங்குத்தான நிலையிலேயே நீந்திச் செல்லும் ஆற்றல் உள்ள மீன், கடற்குதிரை. | அமெரிக்க காந்தி என அழைக்கப்பட்டவர், மார்ட்டின் லூதர்கிங். | ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு, லிட்டில்பாய். | நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர் கிரான்ஸ்டட்.மனிதனைப் போலவே நடக்கக் கூடிய பறவை, பெங்குவின். | புறாப் பந்தயம் தோன்றிய இடம், பெல்ஜியம். | ஒலிம்பிக் போட்டியில் கபடி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952. | ஒருகாலத்தில் மாமன்னர்கள் மட்டுமே சாப்பிடும் பழமாக அத்தி இருந்தது. | துருப்பிடிக்கும் போது இரும்பின் எடை கூடுகிறது. | நெருப்புக்கோழியை, `ஒட்டகப்பறவை' என்றும் அழைக்கிறார்கள். | காகம் இல்லாத நாடு, நியூசிலாந்து. | பாம்பு இல்லாத தீவு, ஹவாய். | திரையரங்கு இல்லாத நாடு, பூட்டான். | எரிமலை இல்லாத கண்டம், ஆஸ்திரேலியா. | தலை இல்லாத உயிரினம், நண்டு. | அனிமாமீட்டர், காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது. | உலகிலேயே முதன்முதலில் அமெரிக்காவில் தான் கண்வங்கி தொடங்கப்பட்டது. | சென்னை விமான நிலையம், 1945-ம் ஆண்டு கட்டப்பட்டது. | உலகின் மிகப்பெரிய நகரம், ஷாங்காய். | புனிதபூமி என்று அழைக்கப்படுவது, பாலஸ்தீனம். | அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா தொடங்கப்பட்ட ஆண்டு, 1958. | `குளோரின்' என்பது கிரேக்க மொழி வார்த்தையாகும். | `நவீன இந்தியாவின் தந்தை' என்று போற்றப்படுபவர், ராஜாராம் மோகன்ராய். | தீக்குச்சியைக் கண்டுபிடித்தவர், லேண்ட் ஸ்டார்ம். | குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு, அம்மோனியா. | உலகின் முதல் மின்னணு கம்ப்ïட்டர், எனியாக். | எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம், பிளாட்டினம். | `இங்க் பேனா'வைக் கண்டுபிடித்தவர், லீவிஸ் வாட்டர்மேன். | இந்திய நீச்சல் தலைமைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு, 1948. | மிக விரைவில் ஆவியாகும் திரவம், ஆல்கஹால். | காற்றிற்கும் அழுத்தம் உண்டு எனக் கண்டுபிடித்தவர், டாரி செல்லி. | `அமைதியின் மனிதர்' என்று அழைக்கப்படுபவர், லால்பகதூர் சாஸ்திரி. | நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது. | பச்சையம் இல்லாத தாவரம், காளான். |நாட்டின் பெயரில் அமைந்துள்ள தனிமங்கள் அமெரீஷியம், பிரான்சிஷியம், ஜெர்மேனியம், பொலோனியம். | மார்ச் 21-ந் தேதியிலும், செப்டம்பர் 23-ந் தேதியிலும் பகலும், இரவும் சமமாக இருக்கும். | முட்டையின் ஓட்டில் உள்ள வேதிப்பொருள், கால்சியம் கார்பனேட். | மோரின் புளிப்புச் சுவைக்கு காரணம், லாக்டிக் அமிலம். | வைட்டமின் பி மற்றும் சி இரண்டும் நீரில் கரையக்கூடியவை. | இந்தியாவின் தலைசிறந்த பறவையியல் நிபுணர், சலீம் அலி. | சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன. | முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே விலங்கு, மனிதன் மட்டுமே. | தேனில், 31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது. | ஒரு மைக்ரான் என்பது, ஒரு மீட்டர் அளவை பத்து லட்சமாகப் பிரித்தபின் கிடைக்கும் ஒரு பகுதியாகும். | ஏப்ரல் முதல் தேதியை அனைவரும் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள். ||||||||||||| சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை இங்கு பார்ப்போம். 1793 - ஜப்பானில் உள்ள உன்சென் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 ஆயிரம் பேர் இறந்தனர். | 1935 - இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. | 1946 - மலாய் கூட்டமைப்பு உருவானது. | 1948 - பரோ தீவுகள், டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றன. | 1973 - புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம், இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது. | 1976 - ஆப்பிள் கணினி தொடங்கப்பட்டது. | 1979 - 98 சதவீத மக்கள் ஆதரவுடன் இஸ்லாமியக் குடியரசாகியது, ஈரான். | 2001 - நெதர்லாந்து, சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது. | 2004 - ஆயிரம் மெகாபைட் கொள்ளளவு கொண்ட ஜி-மெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது, கூகுள். | பறக்கத் தெரியாத பறவை, பெங்குவின். | கார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடு, ஜப்பான். | ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை உருவாக்கியவர், நேதாஜி. | கரையான் அரிக்காத மரம், தேக்கு. | ஏலக்காய்ச்செடி, சுமார் 40 ஆண்டுகள் வரை பலன் தரும். | அறிவு வளர்ச்சி அதிகமுள்ள கடல் பிராணி, டால்பின். | `திரவத்தங்கம்' என்று அழைக்கப்படுவது, பெட்ரோல். | உலகின் முதல் கண்வங்கி, அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் தொடங்கப்பட்டது. | கண்ணீர்ச் சுரப்பின் பெயர், லாக்ரிமல் கிளாண்ட்ஸ். | ரஷிய நாட்டு நாணயத்தின் பெயர், ரூபிள். | கணிதத்தில் பூஜ்யத்தைச் (0) சேர்த்தவர், ஆரியபட்டர். | 24 மணி நேரத்தில் (ஒருநாள்) சுமார் 3 அடி உயரம் வளரும் திறன் மூங்கிலுக்கு உண்டு. | ஆக்டோபசுக்கு 3 இதயங்கள் உள்ளன. | பெரும்பாலான உதட்டுச்சாயங்களில் (லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப் படுகின்றன. | அட்டைப்பூச்சிகளுக்கு 4 மூக்குகள் உள்ளன. | நீலநிறத்தைப் பார்க்க முடிந்த ஒரே பறவை, ஆந்தை. | கால் நகங்களைவிட, கை நகங்கள் 4 மடங்கு வேகத்தில் வளர்கின்றன. | மனிதனின் தொடை எலும்புகள், கான்கிரீட் கலவையை விட வலிமை வாய்ந்தவை. | நெருப்புக்கோழியின் கண்கள், அதன் மூளையைவிடப் பெரியதாக இருக்கும். | டால்பின்கள், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும். | 13-ம் நூற்றாண்டில், ஞானதேவ் என்ற கவிஞர் தான் `பரமபத' விளையாட்டைக் கண்டுபிடித்தார். | நத்தைகள், 3 ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை பெற்றவை. | ராணி எறும்புகள், 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும். | மனிதர்களின் தோலுக்கும், தசைக்கும் இடையிலான ஒட்டுதல் தான் கன்னத்தில் விழும் குழிக்கு காரணம். | இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை, பிரித்வி. |


இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்


                இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தென்னிந்தியாவில் அதற்கு முன்னரே பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகப் பல போர்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றன.


பாளையக்காரர்களின் எதிர்ப்பு


                        மதுரை நாயக்க மன்னர்களுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக கப்பத்தொகையினை செலுத்திவந்த பாளையக்காரர்கள், மற்றும் மறவர்கள் மதுரை நாயக்க மன்னர்களின் மறைவிற்குப் பிறகு கப்பம் கட்ட மறுத்தனர். எனவே ஆற்காடு, மதுரை உள்ளிட்ட அரசுகள் நவாப்பின் ஆட்சிக்குட்பட்ட போது கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் தன்னாட்சி புரிந்து வந்த இவர்கள், கட்டுப்பட்டு கப்பம் செலுத்த மறுத்தனர். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க நவாப்புக்குப் படை உதவி செய்த ஆங்கிலேயர்களுக்கு நவாப், கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இது பெரும் கடன்தொகையாக மாறவே இப்பகுதிகளில் எல்லாம் வரி வசூல் செய்யும் உரிமையை கம்பனியார் பெற்றனர். இதனை அழகு முத்துக்கோன், பூலித்தேவன், கட்டபொம்மன் உள்ளிட்ட பலர் எதிர்த்தனர்.


அழகுமுத்து கோன்.

                       வீர அழகுமுத்துக்கோன் (1728-1757) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னருக்கு சிறந்த நண்பராக விளங்கினார்.. இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன் (1728-1757).

பூலித்தேவன்


பூலித்தேவன் சிலை


                    நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பூலித்தேவன் மற்றும் பூலித்தேவரின் சுற்று வட்டார பாளையங்களைச் சேர்ந்த வாண்டாயத்தேவன் போன்றவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகச் செயல்பட்டனர்.


                  1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்று அறிவித்தார். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றார் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது. பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


                      பின்னர் 1755 -ல் கப்பம் வசூலிக்க வந்த ஆங்கிலத் தளபதி அலெக்சாண்டர் கெரான் என்பவரோடு போரிட்டு வெற்றி பெற்றார். இதுவே பாளையக்காரர்கள்-ஆங்கிலேயர் மோதல்களில் ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட முதல் தோல்வியாகும். மேலும் பூலித்தேவன் 1750 முதல் 1767 வரை சுமார் 17 ஆண்டு காலம் தொடர்ந்து பல போர்களை நடத்திவந்தார்.

சிவகங்கை இராமநாதபுரம் பகுதிகள்

                         1752ல் மதுரையை ஆண்ட விசயகுமார நாயக்கர் மீது பரங்கியர் கேப்டன் கோப் தலைமையில் போர் தொடுத்து கைப்பற்றினர். அதையறிந்த முத்துவடுகநாதர் மதுரை மீது போர் தொடுத்து அங்கிருந்த கேப்டன் கோப்பையும் அவர் படைகளையும் விரட்டியடித்து மீண்டும் விசயகுமார நாயக்கரையே மதுரை மன்னராக பதவி அமர்த்தினார். அவரின் இறப்புக்கு பின்னர் அவரின் மனைவி வேலுநாச்சியாரும் படைத்தளபதிகளான மருது சகோதரர்களும் போராட்டத்தை தொடர்ந்தனர்.


                     1780-இல் , தனது பிரதானி தாண்டவராயப் பிள்ளையின் ஆலோசனையின் படி மருது சகோதரர்களின் உதவியோடும் கும்பினி எதிர்ப்புப்படை ஒன்றை அமைத்து சிவகங்கையை மீட்டவர் வேலுநாச்சியார்.

முத்துராமலிங்க சேதுபதி


                   இருபது ஆண்டுகளுக்கு மேலாக கப்பத் தொகையினை யாருக்கும் கட்டாமல் தன்னிச்சையாக இயங்கி வந்த இராமநாதபுரம் சேதுபதியை ஆயுத வலிமை கொண்டு அடக்கிட நாவாப் விரும்பினார். 1772-ல் நவாப் முகமது அலியின் மகனான உம் தத்துல் உம்ரா, கம்பனித் தளபதி ஜோசப் ஸ்மித் ஆக்யோர் தலைமையில் பெரும்படை ஒன்று இராமநாதபுர கோட்டையைக் கைப்பற்றினர். அங்கிருந்த ராணி, அவரது இரு பெண்குழந்தைகள் இளவல் முத்துராமலிங்க சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சி காரணமாக 1781-ல் நாவாப் சிறையிலிருந்த இளம் சேதுபதி மன்னருடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டு இராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர் தமது ஆட்சியைத் தொடர வழி கோலினார். சேதுபதி திருவிதாங்கூர் மன்னர் மற்றும் திருநெல்வேலிப் பாளையக்காரர்களுடன் நட்புகொண்டார். மேலும் நவாபுக்கும் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் எதிராக டச்சுக்காரர்களுடனும் உடன்பாடு செய்துகொண்டார்.


                        ஆற்காடு நவாப்பின் இறையாண்மைக்கு உட்பட்ட நிலையில் அவரது சலுகைகளை எதிர்பார்த்து தங்களது வணிகத்தைத் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர் சேது நாட்டின் வணிகத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்றனர். ஆனால் சேதுபதி மன்னர் மறுத்தார். எனவே பலவகையில் முயன்று ஆற்காட்டு நவாப்பிற்கும், ஆட்சியர் பவுனிக்கும் முறையிட்ட கம்பனியர் போர் தொடுக்க இரகசியத் திட்டம் தீட்டினர். மன்னருக்கு மிகவும் நம்பிக்கையான தளபதி மார்ட்டினிடம் கோட்டை வாசல் கதவுகளுக்கான சாவிகள் இருந்தன. எனவே 1795 பிப்ரவரி எட்டாம் நாள் கம்பெனியாரது படை இராமநாதபுரம் கோட்டை வாயிலைக் கடந்து அரண்மனையைச் சூழ்ந்து கொண்டது.


                      ஆயுதக் கிடங்கு, வெடிமருந்து இருப்பு, போர்வீரர் எண்ணிக்கை மற்றும் நாட்டுப்புறங்களில் பயிற்சிபெற்ற நாலாயிரம் போர்வீரகள், ஆயுதம் ஏந்தக் கூடிய ஆறாயிரம் குடிமக்கள் ஆகியோர் இருந்தும் மன்னர் வஞ்சகமாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்டார். மன்னரது தளபதி மயிலப்பன் சேர்வைக்காரன் என்பவர் மன்னரைத் தப்புவிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தபின் மக்களைத் திரட்டி ஆயுதக் கிளர்ச்சியொன்றைத் தொடங்கினார். முதுகுளத்தூர், அபிராமபுரம், கமுதி ஆகிய ஊர்களிலுள்ள கம்பெனியாரது தானியக் களஞ்சியம், கிடங்குகள் ஆகியன சூறையாடப்பட்டன இப்புரட்சியில், குளத்தூர், காடல்குடி, நாகலாபுரம், பாஞ்சலங்குறிச்சி மக்களும் கலந்துகொண்டனர். நாற்பத்து இரண்டு நாட்கள் நீடித்த இப்புரட்சி கம்பெனியாரது ஆயுத பலத்தினால் ஒடுக்கப்பட்டது. மன்னர் சேதுபதி திருச்சி சிறையிலிருந்து நெல்லூர் சிறைக்கு மாற்றப்பட்டர். அங்கு கொடுமைதாளாது, இரவுபகல் தெரியாமல் பதினான்கு ஆண்டுகள் கழித்தார். குற்றாச்சாட்டுகள், விசாரணைகள் என எதுவுமே இல்லாமல் தமது வாழ்நாளைச் சிறையில் கழித்த சேதுபதி மன்னர் 1809-ல் இறந்தார்.

கட்டபொம்மன்




தமிழ்நாட்டின் புரட்சிக் குழுக்கள்


                        சிற்றூர்களில் வாழும் மக்கள் தங்களுக்குள் அரிகாரன் எனப்படும் ஒற்றர்கள் மூலம் செய்தி பரப்பினர். கூட்டங்கள் கூடி புரட்சி குறித்து முடிவெடுத்தனர். தமிழகத்தில் அமைதியின்மை உருவாகிவிட்டதை அறிந்த மைசூரின் திப்பு சுல்தானும்பிரான்சு நாட்டு நிர்வாகக் குழுவினரும் இரகசியமாகத் தூதர்களை அனுப்பிவைத்தனர். இதன் விளைவாக விருப்பாச்சி கோபால நாயக்கர் தலைமையில் பழனியிலும், மருதுபாண்டியர் தலைமையில் சிவகங்கையிலும். மயிலப்பன்தலைமையில் இராமநாதபுரத்திலும், சிவகிரியின் மாப்பிள்ளை வன்னியத்தேவர் மற்றும் பாஞ்சாலங்குறிச்சியின் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் தலைமையில் திருநெல்வேலியிலும் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டன. இதே நேரம் தென்னிந்தியாவின் பிற பகுதிகளிலும் இத்தகைய புரட்சிக் குழுக்கள் தோன்றின. குறிப்பாக மலபாரில் கேரள வர்மா, கன்னட தேசத்தில் விட்டலஹெக்டே, அரிசிக்கரையில் கிருஷ்ணப்ப நாயக்கர், பெல்ஹாமில் தூந்தாஜி வாக் ஆகியோர் தலைமையில் குழுக்கள் உருவாயின.

படை உதவிகள்


                  இப்புரட்சியாளர்கள் மைசூர் அரசு, நிசாம் அரசு, குவாலியர் அரசு, மொகலாயர், சீக்கியர் போன்ற வட இந்திய ஆட்சிக்குடியினர் ஆகியோரிடம் ஆதரவு தேடினர். இவர்களுள் மைசூரின் திப்புவும், குவாலியரின் சிந்தியாவும் புரட்சியாளர்களின் நடவடிக்கைக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர். 1799-ல் திப்புசுல்தான், உரிய வெகுமதிகளுடனும் கடிதங்களுடனும் தம்முடைய பிரதி நிதிகளைப் பழனிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மார்ச் 5, 1799-ல் நடந்த ஆங்கிலேயர்களுக்கெதிரான போரில் திப்பு கொல்லப்பட்டார். வெற்றிக்குப்பின் மதராஸ் (இன்றைய சென்னை) ஆளுநர் எட்வர்டு கிளைவ் பாஞ்சாலங்குறிச்சியை வென்று அடிமைப்படுத்த தமது இராணுவத்தை அனுப்பினார். இப்படையினர் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றி கட்டபொம்மனைத் தேடிக் கண்டுபிடித்து தூக்கிலிட்டனர். கீழைப் பாளையக்க்காரர்களையும் ஒடுக்கினார்கள்.


                 இந்தியாவிற்கு வந்து திப்புவின் படைகளுடன் சேர்ந்து போரில் பங்கேற்கும் எண்ணத்தில் எகிப்து, சிரியா வரை படை நடத்தி வந்த நெப்போலியன் போனபார்ட் தமது கிழக்கிந்தியப் போர் நடவடிக்கையைக் கைவிட்டுப் பிரன்சுக்குத் திரும்பினார். எனவே, பிரெஞ்சு உதவியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பொய்த்தது.

தூந்தாஜி வாக்கின் ஆதரவு நடவடிக்கைகள்


               சூழ்நிலை பாதகமாக இருந்தாலும் திருநெல்வேலியிலும், மைசூரிலும் எஞ்சியிருந்த புரட்சியணியினர் சிவகங்கைக் காடுகளுக்கும் பழனிக்காடுகளுக்கும் வந்து சேர்ந்தனர். அடர்ந்த காடுகள் தந்த பாதுகாப்பின் காரணமாக புரட்சிக்கான சூழ்நிலை மீண்டும் உருவாகத் தொடங்கியது. விருப்பாச்சி கோபால நாயக்கர், மருது பாண்டியன் ஆகியோரின் ஊக்கத்தால் புரட்சியாளர்கள் விடுதலை பெறவேண்டுமென்ற தங்களது தீர்மானத்தினை செயல்படுத்துவதற்காக மீண்டும் இயக்கத்தினைக் கட்டமைத்தனர். கூட்டாளிகளின் ஆதரவின்றி இந்நோக்கம் எளிதில் நிறைவேற்ற இயலாது. எனவே தக்காணத்தில் தனக்கென ஒர் அரசை உருவாக்கிக்கொண்டு, இரு பேருலகுகளின் சக்கரவர்த்தி எனத் தம்மை அறிவித்துக் கொண்டு, பிரித்தானியர்களுடன் தொடர்ந்து போரிட்டு வந்த மராட்டியத் தலைவர் தூந்தாஜி வாக்கின் ஆதரவைப் பெற புரட்சியாளர்கள் முயன்றனர். ஈரோடு சின்னணகவுண்டர், வெங்கடரமணய்யா, பரமத்தி அப்பாஜிக்கவுண்டர் ஆகியோர் தலைமையில் இரகசியமாக மூன்று தூதுக்குழுக்களைத் தனித்தனியாக அனுப்பினர். இவர்கள் காட்டுவழிகளில் பயணம் செய்து தூந்தாஜி வாக்கின் முகாமை அடைந்தனர். தமிழர்கள் புரட்சிக்கு ஆயத்தமாக உள்ளனர் எனப் பலவிதங்களிலும் வலியுறுத்திக்கூறிய பின்னரே தூந்தாஜிவாக்கின் ஆதரவு குறித்த உறுதிமொழியைத் தூதுக்குழுவினரால் பெற முடிந்தது. அதன் பின்னர் தூந்தாஜி வாக், பெருந்துறை, கரூர், அரவக்குறிச்சி, காங்கேயம், மதுரை முதலிய பல ஊர்களின் மணியக்காரர்களுக்கு(நாட்டாண்மை) ஏராளமான கடிதங்களை எழுதி தூதுவர்களிடம் கொடுத்தார். புரட்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தனது பிரதிநிதியாக தும்பிச்சி முதலி என்பவரை நிர்ணயித்தார். நிஜாம் பகுதியைச் சேர்ந்த சர்தார்கள், விஜயநகர வம்சத்தவரான ஆனகுந்தி அரசர், ஷோலாப்பூர், ராயதுர்க்கம் ஆகியவற்றின் ஆட்சியாளர்கள் ஆகியோர் புரட்சியாளர்களுக்கு ஆதரவு அளித்தனர்.

கூட்டணி



திருப்பத்தூரில் மருது பாண்டியருக்கு அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூண்


                             1800- ஆண்டு ஜூன் மாதம் சிவகங்கை மருது, மராட்டியப் புரட்சியாளர்களுடன் உறுதியான பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு விட்டார் எனவும், தூந்தாஜி வாக் படையில் ஆயுதம் தரித்த ஆடவர் குழுக்கள் அணியணியாகச் சென்று சேர்வதாகவும் பிரித்தானிய நிர்வாகத்தினருக்கு அரிக்காரர்கள் மூலம் தகவல் கிடைத்தது. ஆங்கிலேய எதிர்ப்புக் குழுக்கள் ஒன்றுடனொன்று கூட்டணியமைத்து திட்டமிட்ட ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டதன் விளைவாக கிளர்ச்சியின் தாக்கம் திருநெல்வேலியிலிருந்து மலபாருக்கும், மலப்பாரிலிருந்து குவாலியருக்கும் விரவிப் பரவியது.

பழனிச் சதித்திட்டம்


                       1800-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் நாள் எதிர்ப்புப் படையினர் தமது செயல்திட்டத்தை வகுப்பதற்காகக் கூடினர். பழனி சதித்திட்டம் எனப்படும் இக்கூட்டத்தில் புரட்சியணியின் தலைவர்களும் அவர்களது உதவியாளர்களும் கலந்து கொண்டனர். இக்கால கட்டத்தைச் சேர்ந்த ஆங்கிலேயரின் குறிப்பேடுகளின், மராட்டியப் புரட்சியாளர்களின் பிரதிநிதிகள் ஏப்ரல் 28-ஆம் நாளன்று விருப்பாச்சியை அடைந்தனரென்றும், பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு 30 ஆம் தேதியன்று திரும்பினர் என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு கோபால நாயக்கர் தலைமை வகித்தார். 1800 ஜூன் 3 ஆம் நாள் கோயமுத்த்தூர் கோட்டையைத் தாக்குவதென்றும் பிரித்தானிய குதிரைப்படையின் ஐந்தாவது படை வகுப்பினை முற்றிலும் அழிப்பதென்றும்,. நாடுமுழுவதும் பிரித்தானியருக்கு எதிரான கிளர்ச்சியை வெடிக்கச் செய்வதற்கு இதுவே குறியீடாக இருக்கும் என்றும் இக்கூட்டம் முடிவு செய்தது.

கோயமுத்தூர் கோட்டை


                   புரட்சிப்பேரணியின் இரு பிரிவுகளான தென்னக மற்றும் வட இந்திய அணிகளுக்கிடையே கோயமுத்தூர் ஒரு பாலமாக விளங்கியதால், கோயமுத்தூர் கோட்டையைத் தேர்ந்தெடுத்தனர். 1800- ஜூன் 3 ஆம் நாளைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அந்நாள் முகர்ரம் விழாவின் இறுதிநாள் ஆகும். கோயமுத்தூர் கோட்டையைக் காக்கும் பொறுப்பு பெரும்பாலும் முகமதிய சிப்பாய்களையே கொண்டிருந்த ஐந்தாவது படை வகுப்பிடம் இருந்தது. எனவே முகமதிய வீரர்கள் பல இரவுகளாகத் தொடர்ந்து கண்விழித்து முகர்ரம் விழாவினைக் கொண்டாடி களைத்து ஓய்ந்திருப்பர் என புரட்சியாளர்கள் எதிர்பார்த்தனர்.


               போராளிகள் ஷேக் ஹுசைன் தலைமையில் அருகிலிருந்த மலைகளின் ஒளிந்துகொண்டு காத்திருக்கவும், திண்டுக்கல்லைச் சேர்ந்த புரட்சியாளர்கள் ஷேக் ஹுசைனுக்கு ஆதரவாக உரிய வேளையில் வந்து சேர்ந்துகொள்ளவும் தீர்மானித்தனர். தூந்தாஜி வாக் தமது குதிரைப்படையை கோயமுத்தூருக்கு அனுப்புவதென்றும் அக்குதிரைப்படைத் தொகுதி வந்து சேர்ந்ததும் மருது பாண்டியனும் அவருடைய கூட்டாளிகளும் ஒரே நேரத்தில் கலகத்தில் இறங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இக்கலகத்தில் சிற்றூர்களும் கலந்துகொண்டன. அவர்கள் படை உதவிக்கு விரைந்து வந்து சேர கிள்ளு என்ற அடையாள முறை பின்பற்றப்பட்டது. எதிரியின் ஆயுதப்படை பற்றி அறிந்திருந்ததால் கொரில்லாப்போர் முறையைப் பின்பற்றுவதென தேசபக்தர்கள் முடிவு செய்தனர்.

மருதுபாண்டியனின் நடவடிக்கைகள்


                  புரட்சி குறித்த கைப்பிரதிகள், குறிப்பாக திருச்சி மலைக்கோட்டையின் நுழைவாயிலிலும், திருவரங்கம் கோயில் கோபுரத்திலும் மருதுபாண்டியனின் பிரகடனங்கள் ஒட்டப்பட்டன. அவை பிரித்தானியரின் நம்பிக்கைத் துரோகத்தினையும், மக்களின் நிலை மற்றும் ஒற்றுமையின்மையையும், புரட்சியின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் வரையறுத்துக் கூறின. எதிரியுடன் நாம் நேருக்கு நேர் மொதுதலை விட கொரில்லாப்போர் முறையைப் பின்பற்றலாம் என திட்டம் தீட்டப்பட்டது. காட்டுச்சூழலைத் துணைகொண்டு எதிரியை அலைக்கழிக்க வேண்டுமென்பதில் மருதுபாண்டியன், செவத்தையா ஆகியோர் உறுதியுடன் இருந்ததனர்.

கோயமுத்தூர்க் கோட்டை மோதல்


            1800-ஆம் ஆண்டு மே மாதம் புரட்சியணி ஐந்து பகுதிகளாகப் பிரிந்து பழனி-திண்டுக்கல் பகுதிக்க்காடுகளிலிருந்து தாராபுரம் நோக்கி முன்னேறியது. இப்படை ஈட்டிகளையும் நெருப்புப்பற்றவைத்துச் சுடும் துப்பாக்கிகளையும் ஏந்தியிருந்தன. சின்னண கவுண்டர் இவ்வைந்து பிரிவுகளுக்கும் தலைமை வகித்தார். ஜூன் 3 ஆம் நாள் 600 பேர் கொண்ட புரட்சியாளர் படை கோயம்புத்தூர்க் கோட்டை கண்ணுக்குத் தென்படும் ஓர் இடத்தை அடைந்து முகமது ஹாஷமின் படைத் தொகுதியும் தூந்தாஜி வாக்கின் குதிரைப்படையும் வந்து சேரும் வரை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் காத்திருந்தது.


              கம்பெனியார் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக வடக்கிலிருந்து வந்து சேரவேண்டிய படைகள் வந்து சேரவில்லை.. மேலும் புரட்சியாளர்கள் பற்றி கோயமுத்தூர் வட்டாட்சியரின் மூலமாக செய்தி அறிந்த ஆங்கிலேயர்கள், கோட்டையில் ஐரோப்பிய மற்றும் இராஜபுத்திர வீரர்களைக் காவலுக்கு நிறுத்தினர். இஸ்லாமிய வீரர்களை வெளியே அனுப்பிப் போரிடவும் ஒளிந்துகொண்டிருக்கும் பிற புரட்சியாளர்களை வேட்டையாடவும் பணித்தனர். தலைமலையில் ஏற்பட்ட பின்னடைவால் புரட்சியாளர்கள் பலர் சிறைசெய்யப்பட்டனர். புரட்சியணித்தலைவர்களின் கடிதங்களை வைத்திருந்த முகமது ஹாஷம் சிறைபிடிக்கப்பட்டார். ஆனால் கடிதங்களை அழித்துவிட்ட ஹாஷம் 1800 ஜூன் 8-ஆம் நாள் தன் குரல்வளையை தாமே அறுத்துக்கொண்ட்டு தற்கொலை செய்துகொண்டு புரட்சியணியின் முதல் தியாகியானார்.


           அப்பாஜிக்கவுண்டர் மற்றும் 42 புரட்சியாளர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கப்பட்டது. கலகம் நிகழ்ந்த இடங்களான கோயம்புத்தூர், தாராபுரம், சத்தியமங்கலம் முதலிய இடங்களில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. மக்கள் முன் அச்ச உணர்வைப் பரப்புவதற்காக அரங்கேறிய இக்காட்டுமிராண்டித்தனம் நேர்மாறான விளைவை ஏற்படுத்தியது. இக்கொடுமையறிந்த பிற பகுதிகளிலிருந்த புரட்சியாளர்களும் உடனடியாக போரிலிறங்கக் களம் புகுந்தனர்.

கிளர்ச்சி பரவுதல்


                 புரட்சியாளர்கள் ஒன்றுபட்டு தக்காணத்தில் குந்தா, கன்னடப்பகுதி, பெல்காம், மைசூர் இராச்சியத்தின் மேற்குப்பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றினர். ஜமலாபாத், வனவாசி, கோண்டா ஆகிய ஊர்களில் இருந்த பிரித்தானிய இராணுவ நிலைகளைத் தாக்கி, அவற்றையும் கைக்கொண்டனர். மலபாரின் கேரள வர்மாவும், பழனியின் கோபால நாயக்கரும் மலைக்கோட்டைகளிலிருந்த பிரித்தானிய சிப்பாய்களை விரட்டிவிட்டு இராணுவப் பண்டகசாலைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.


             மருது பாண்டியன் பாளையங்கோட்டையில் இருந்த புரட்சியாளர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினார். 1799-ல் கட்டபொம்மன்உள்ளிட்ட பாளையக்காரரை அடக்கிய பின் பிரித்தானியர் அவரது தம்பிகளான செவத்தையா, ஊமைத்துரை உட்பட 17 புரட்சித் தலைவர்களை பாளையங்கோட்டையில் சிறை வைத்திருந்ததனர். 1801- ஆம் ஜனவரி மாதம் 200 புரட்சியாளர்கள், திருச்செந்தூருக்குத் திருத்தலப்பயணம் மேற்கொள்ளும் பரதேசிகள் போல வேடமிட்டு கோட்டைக்குள் நுழைந்து கைதிகளை விடுவித்துக் கொண்டு தப்பினர். துணிச்சலான இந்தச் செயல் தென்கோடிவரை புரட்சி பரவியதற்கு அடையாளமாக விளங்கியது.

கைப்பற்றிய பகுதிகள்


             பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தூத்துக்குடி கடற்கரைப் பகுதிவரை புரட்சியாளர்கள் கைப்பற்றினர். 1801-ஆம் ஆண்டு மே மாதத்தில் கலகக்காரர்கள் இராமநாதபுரத்தையும் தஞ்சையின் சில பகுதிகளிலும் ஊடுருவினர். இதனிடையில் திண்டுக்கல்லிலும் பழனியிலும் புரட்சியணியின் அதிகாரத்தைக் கோபால நாயக்கர் நிலைநாட்டினார். மதுரை இராச்சியத்தின் மேற்குப்பகுதியைக் கள்ளர் குலத்தவர் கைப்பற்றினர். கடற்கரைப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொணர்ந்த தேசப்பற்றாளர்கள் பெரிய தோணிகள் மூலமாகப் பண்டங்களையும் மளிகைப் பொருட்களையும் போர்த்தளவாடங்களையும் கொண்டுவந்து சேர்த்தனர்.

புரட்சியரசு ஆட்சி முறை

                ஆங்கிலேயரிமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை நல்ல முறையில் நிர்வகிக்கவும், அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படாமலிருக்க, விழிப்புடன் கண்காணிக்கவும் புரட்சியணித்தலைவர்கள் முயன்றனர். நிலவருவாய் நிர்ணயம் செய்து, வரிவசூல் செய்வதற்கு அமுல்தார்கள் எனப்படும் அதிகாரிகளை நியமித்தனர். தாணியமோ, விறகோ, வைக்கோலாகவோ புரட்சி நடவடிக்கையை ஊக்குவிக்க தம்மால் முடிந்தட ஏதாவது ஒரு பொருளை கொடுத்தால் போதும் என்பது மட்டும் குடிமக்களிடம் எதிர்பார்க்கப்பட்டது. புரட்சியரசிடம் பணிபுரியும் பொதுத்துறை ஊழியர்கள், மக்களுக்கு எதிராக முறையற்ற செயலில் ஈடுபட்டால் அதுபற்றியோ, ஐயத்துக்கிடமான நபர்களின் தவறான நடவடிக்கை பற்றியோ புரட்சியரசுக்குத் தெரிவிக்க அரிக்காரர்கள் நியமிக்கப்பட்டனர். புரட்சியின் அவசியத்தை அனைவரும் உணரவும், புரட்சியின் குறிக்கோள்கள் ஈடேறச்செய்யவும் அரசாங்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். கிராம சமுதாயம் மீண்டும் தனது பணியினைத் தொடங்கிச் செயல்பட உதவிக்கரம் நீட்டப்பட்டது. அதே வேளையில் படைக்கலன்கள் உருவாக்குவதற்கும் அவற்றை மாற்றார்க்குக் கிட்டாத இடங்களில் சேகரித்து வைப்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

கொரில்லாப்போர் முறை

                         புரட்சி அதி வேகத்தில் பரவியதும், அதனால் விளைந்த நன்மைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சியும் ஆங்கிலேயரை வியக்க வைத்தன. தமது பொது எதிரியான ஆங்கிலேயரை எதிர்க்க அனைத்துப் புரட்சியாளர்களும் ஒன்றுபட்டனர். எனவே எதிர்ப்பும் உறுதியாக இருந்தது. தாம் தாக்கப்படும்போது தகவல் தொடர்புகளைத் துண்டித்தும், எதிரி எதிர்பாராத வகையில் தங்களுடைய நிலைகளைத் தாங்களே தீயிட்டு அழித்துவிட்டு அடர்ந்த காடுகளில் ஓடி ஒளிந்துகொண்டும் கொரில்லாப் போர்முறையைப் பின்பற்றி பிரித்தானியப் படையினரை அலைகழித்துச் சோர்வுறச் செய்தனர். இந்த கொரில்லாப் போர்முறையை வேலு நாச்சியார் பெண்கள் படைப்பிரிவில் இருந்த குயிலி என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயப் பெண் பின்பற்றி உயிர் துறந்தது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியருக்கு சாதகமான சூழல்கள்


                     புரட்சியாளர்களுடைய போர் நடவடிக்கைகளால் எளிதில் இராணுவத்தின் கைகளில் பிடிபடாமல் தப்பினர். எனினும், பிரித்தானியருக்கு பல விதங்களில் நிலைமை சாதகமானதாக இருந்தது.
பிரித்தானியர் தம்முடைய அனுபவமிக்க படைத்தளபதிகள் மற்றும் தேர்ந்த பயிற்சியும் போர்க்கருவிகளும் உபகரணங்களும் பெற்றிருந்த படைகளைக் கொண்டு ஆங்கிலேயர் மைசூர், மராட்டியப் படைகளின் புரட்சிப்படையை முறியடித்தனர்.
                    கடற்படை வல்லமையால், புரட்சியணியினர்க்குரிய கடல்வழித் தகவல் தொடர்புகளைத் துண்டித்து விடவும், வங்காளம், மலேசியா, இலங்கை முதலிய இடங்களிலிருந்து படைகளைக் கொண்டுவந்து குவிக்கவும் இயன்றது.
                  இந்தியாவில் உள்ள அரசுகளான கர்நாடக அரசு, மைசூர் அரசு, தஞ்சாவூர் அரசு, திருவிதாங்கூர் அரசு, புனே அரசு, ஹைதராபாத் நிசாம் அரசுகள் ஆங்கிலேயருக்கு ஆதரவாக படைகளை அனுப்பியும், மளிகைச் சரக்குகள் முதலிய பண்டங்களை அனுப்பியும், உளவு செய்திகள் சொல்லியும் உதவின.
                ஆங்கிலேயர் இராணுவத் தளங்களைத் தமது கட்டுப்பாட்டில் உறுதியாக வைத்துக் காத்துவந்தனர்.
                புரட்சியாளர்கள் வசதி குறைந்த கிராமப்புறப்பகுதிகளை மட்டுமே ஆங்கிலேய அதிகாரத்திலிருந்து மீட்டனர். அங்கிருந்து எதிர்த்தாக்குதல் தொடுப்பதற்கு மட்டுமே அவர்களால் இயன்றது. 


புரட்சியாளர்களின் தோல்விகள்

               தமிழகப் புரட்சியாளர்களை அவர்களது வட இந்தியக் கூட்டாளிகளிடமிருந்து பிரித்துத் தனிமைப்படுத்தும் முயற்சியில் ஆங்கிலேயர் ஈடுபட்டனர். தொடக்கத்தில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த பிரித்தானியர் பேஷ்வா, நிசாம் முதலிய அச்சு அரசுகளின் உதவி கொண்டு மராட்டிய கர்நாடக, மலபார்ப் பகுதிகளைச் சேர்ந்த கலகக் காரர்களை ஒடுக்கியது. கர்னல் வெல்லெஸ்லி படை நடவடிக்கைக்குத் தலைமையேற்றார். தூந்தாஜி வாக் , ராணாபெத்னூர், சாவனூர் ஆகிய இடங்களில் தோவியைச் சந்தித்தார். எனவே புரட்சிப்படை ராய்ச்சூருக்குப் பின்வாங்கியது. இச்சண்டையில் 1800, செப்டம்பர் 10 ஆம் நாள் தூந்தாஜி வாக் கொல்லப்பட்டார். மலபாரில் செயல்திறம் மிக்க கேரள வர்மாவுக்குத் துணை நின்ற ஏமன் நாயர் தமது அணியின் இரகசியங்களை ஆங்கிலேயரிடம் தெரிவித்ததார், எனினும் தமது தொண்டர் படையின் நீண்ட நாட்கள் போராடிய கேரள வர்மா 1805, நவம்பர் 30 ஆம் நாள் கம்பெனியாரின் துருப்புப்பிரிவு ஒன்றினால் கொல்லப்பட்டார்.

தமிழகத்தில் அடக்குமுறைப்போர்

             தமிழகப் புரட்சியாளர்களுக்கு எதிராக புனித ஜார்ஜ் கோட்டை, புனித தாமஸ் மலை (பரங்கிமலை), ஆற்காடு, மலபார் ஆகிய இடங்களில் இருந்து துருப்புகள் கொணர்ந்து இறக்கப்பட்டது. அக்னியூ என்பவரின் தலைமையில் புறப்பட்ட இப்படை 1801, மே 24 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியைத் தாக்கி 1050 பேரைக் கொன்றது. செவத்தையா, ஊமைத்துரை உட்பட உயிர்பிழைத்தவர்கள் மருது சகோதரர்களின் உதவியை நாடினர். பிரித்தானியப் படை மானாமதுரை, பார்த்திபனூர் வழியாகப் பரமக்குடியைக் கைப்பற்றி மதுரையையும் புரட்சியாளர்கள் பிடியிலிருந்து விடுவித்தது. தொண்டிதுறைமுகத்தை அடைந்த ஆங்கிலேயப் போர்க்கப்பல் ஒன்று புரட்சியாளர்களுக்கு சரக்குகள் இறக்குமதி செய்வதற்காக வந்த பெரிய தோணிகளைத் தாக்கி அழித்தது.

இறுதித் தோல்வி

            1801, செப்டம்பரில் மருது பாண்டியர்களின் வலிமையான தளமாக விளங்கிய காளையார் கோவில் நடை ஆங்கிலேயப் படையின் மூன்று பிரிவுகள் ஒரே நேரத்தில் அதிரடியாகத் தாக்கிக் கைப்பற்றினர். ஆயினும் மருது சகோதரர்கள் தப்பித்து சிங்கம்புணரிக் காடுகளுக்குள் புகுந்து கொண்டனர். தப்பியோடிய பிற புரட்சியாளர்கள் ஊமைத்துரையின் தலைமையில் கோபால நாயக்கரின் அணியினருக்குப் பக்க பலமாகச் சென்று சேர்ந்தனர். 4000 பேருடன் பழனிமலைத் தொடரைப் பிடித்துகொண்ட ஊமைத்துரை எதிரி முன்னேறி வருவதைத் தடுக்க தடுப்புச் சுவர் எழுப்பினர். இருப்பினும் இன்னஸ் தலைமையில் வந்த படைகள் அதனைக் கைப்பற்றி, பிரித்தானியரின் அதிகாரத்தை நிலைநாட்டி புரட்சியாளர்களை விரட்டிச் சென்றது. திண்டுக்கல்லில் இருந்து வெற்றிலைக் குண்டு (வத்தலகுண்டு) வரை 51 மைல் தொலைவுக்கு மூன்று நாட்கள் உணவோ தண்ணீரோ இன்றிப் புரட்சியாளர்கள் போரிட்டுக்கொண்டே பின்வாங்கினர். தம் சக்தியை இழந்து சோர்ந்து போன புரட்சியாளர்கள் இறுதியில் முறியடிக்கப்பட்டனர்.

தண்டனைகள்

                                         தூக்கிலிடுதல்


                 துரோகிகள் சிலரின் உதவியோடு 1801 ஆம் ஆண்டு இறுதிக்குள் காடுகளில் ஒளிந்திருந்த மற்ற புரட்சியணித் தலைவர்களையும் ஆங்கிலேயர்கள் கண்டு பிடித்து சிறை செய்தனர். உடனடியாக விசாரனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.


               1801, அக்டோபர் 24 ஆம் நாள் வெள்ளை மருது, அவர்களுடைய மகன்கள் கருத்ததம்பி, முள்ளிக்குட்டித் தம்பி ஆகியோரும், மருது பாண்டியன் அவருடைய மகன் செவத்த தம்பி, சிறுவயதேயான பேரன் முத்துசாமி, இராமநாதபுரம் ராஜா என்றழைக்கப்பட்ட முத்துகருப்பத்தேவர், காடல்குடிப்பாளையக்காரர் ஆகியோர் உட்பட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் சிவகங்கைச் சீமையிலுள்ள திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.


               செவத்தையாவும் ஊமைத்துரையும் அவர்களுடைய நெருங்கிய சகாக்களும் பாஞ்சாலங்குறிச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒரே மரத்தில் அனைவரும் ஒன்றாகத் தூக்கிலிடப்பட்டனர்.

நாடு கடத்துதல்


              புரட்சியணித்தலைவர்கள் 73 பேருக்கு நாடு கடத்தப்படும் தண்டனை(தீவாந்தர சிட்சை) வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் 1802 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் அட்மிரல் நெல்சன் என்ற கப்பலில் ஏற்றப்பட்டு பினாங்கைச் சேர்ந்த பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு அனுப்பப்பட்டனர். இருவர் இருவராகச் சேர்த்துக் கைவிலங்கிடப்பட்டிருந்த இவர்கள் எழுபத்தாறு நாள்கள் நீடித்த இக்கடற்பயணத்த்தின் போது அடைந்த துயர் அவலமானது. இவர்களுல் ஒருவர் வழியிலேயே கடலில் விழுந்து இறந்தார். ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். பினாங்கைச் சென்றடைந்த பின்னர் தண்டனைக் காலம் ஐந்து மாதங்கல் கழிவதற்குள் 24 பேர் இறந்து போயினர்.

வேலூர் கலகம்



வேலூர் கோட்டை


                  புரட்சியணியில் எஞ்சியிருந்த வீரர்களை, அவர்களது பின்னனியைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமலேயே ஆங்கிலேயர்கள் வேலூர்க்கோட்டையில் பணியமர்த்தினர். ஐரோப்பியத் துருப்புகள் தவிர, 23-ஆம் படைவகுப்பின் இரன்டவது பட்டாளப்பிரிவும் வேலூர் கோட்டையில் இருந்தது. இந்த இரண்டாவது பட்டாளப்பிரிவு முழுவதும், புரட்சி ஒடுக்கப்பட்ட பின்னர், திருநெல்வேலியிலிருந்து தேர்ந்தெடுத்து நியமிக்கப்பட்ட வீரர்களைக் கொண்டதாகும். மேலும் வேலுர்க்கோட்டையில் திப்பு சுலதான்களின் மகன்கள் குறிப்பாக மூத்த மகன் பத்தே ஹைதர் இருப்பதை அவர்கள் கண்டனர். பத்தே ஹைதர் சிறையிருந்த போதும் பல்வேறு குறுநிலத் தலைவர்களுடன் கடிதத் தொடர்பு கொன்டு புரட்சியை மீண்டும் வடிவமைக்கும் துடிப்புடன் செயல்பட்டார். மேலும் புரட்சியாளர்களுக்கு மரணதண்டனை விதித்து அதனைத் தாமே தலைதாங்கி நடத்திய அக்னியூ வேலூர்க்கோட்டைத் தலைமையதிகாரி. எனவே புரட்சியாளர்கள் வேலூரை தமது நடவடிக்கைக்கான ஒரு மையமாக மாற்றினர்.


                இதே சமயத்தில் இராணுவ வீரர்கள், நெற்றியில் சமய வழிபாட்டுச் சின்னங்கள் எவையும் அணியக் கூடாதென்றும், காதணி போன்ற அணிகலன்கள் அணியக் கூடாதென்றும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. புதிய வடிவிலமைந்த தலைப்பாகையினை அணிய வேண்டுமென அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்ட்னர். இது வீரர்களிடையே கொதிப்பினை ஏற்படுத்தின. எனவே பிரித்தானியரின் அதிகாரத்தை வீழ்த்த வேண்டுமென புரட்சியாளர்கள் தீர்மானித்தனர். பள்ளிகொண்டா, வாலாஜாபாத், சித்தூர், ஆற்காடு, ஸ்ரீகாகுளம், ஐதராபாத் ஆகிய இடங்களில் தமக்கு ஆதரவு தேடினர். எனினும் மற்ற பகுதிகளின் புரட்சியணியினர் வேலூரில் நடக்கப்போகும் புரட்சியின் சாதக பாதகங்களை அறியக் காத்திருந்தன்ர்.


                      1806-ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் நாள் பொது எழுச்சியொன்றை நிகழ்த்தத் தீர்மானிக்கப்பட்டது, ஐதரபாத்திலும் வேலூரிலும் இருந்த இராணுவ முகாம்களில் இத்தேதி குறித்த செய்தி மறைமுகமாகப் பேசிக்கொள்ளப்பட்டது. ஆயினும் வேலூரில் ஜூலை, 10-ஆம் நாள் அதிகாலையிலேயே கலகம் வெடித்தது. புரட்சியாளர்கள், ஐரோப்பியப்படை வீரர் குழுவொன்றினைக் கொன்றொழித்து விட்டுக் கோட்டையைத் தங்கள் ஆதிக்கத்தில் கொணர்ந்தனர். திப்புவின் கொடியை கொடிமரத்தில் ஏற்றினர். இதைத் தொடர்ந்து வாலாஜாபாத்திலும், ஐதராபாத்திலும் 13 ஆம் தேதியன்று சிறுகலகம் ஏற்பட்டது. கர்னல் கில்லிஸ்பி வேலூர்க்கோட்டையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தான் 113 ஐரோப்பிய இராணுவ வீரர்களை இழந்த பிரித்தானியப்படை புரட்சியாளர்கள் 350 பேரை கொன்று 500 பேரைச் சிறை செய்து, கோட்டையைத் தனது கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்தது.

தமிழகத்தில் புரட்சி கால வரிசை முறை 

அழகு முத்துக்கோன், பூலித்தேவனும் அவரின் நண்பர்கள் மற்றும் தளபதிகளும், [[முத்து வடுகநாதர் – 1750ல் இருந்து 1770 வரை
வேலுநாச்சியார், மருதுபான்டியர் - 1770 முதல் 1790 வரை
வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை - 1790களுக்குப் பிறகு
வேலூர்ப்புரட்சி 1806
வேலூர் கலகத்துக்குப் பின்


               இதன் பின்னர் 1857 இல் நடைபெற்ற சிப்பாய் கலகம் வட இந்தியாவில் வெகுவாகப் பரவினாலும், தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை

அறவழிப் போராட்டத்தில்


                பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தோன்றிய இந்திய தேசிய காங்கிரசு இந்திய விடுதலை இயக்கத்துக்குத் தலைமை ஏற்று வன்முறை தவிர்த்த முறைகளில் ஈடுபட்டது. இந்த நடவடிக்கைகளில் தமிழக செயற்பாட்டாளர்கள் குறிபிடத்தக்க பங்கு வகித்தனர்.


                மதேவன் மகன் வைதிலிங்கம் -வடசேரி.நாகர்கோவில்.விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்றவர்.தாமரைப் பட்டயம் பெற்றவர்.மண்டைக்காடு கலவரத்தின் போது, அமைதி ஏற்பட தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் பெருமுயற்சி எடுத்துக் கொண்டவர்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விடுதலை வீரர்கள்



கல்கி, தி. சதாசிவம், கல்கி, ரா. கிருஷ்ணமூர்த்தி, வெ. அ. சுந்தரம்,
காந்தி ஆசிரமம் கிருஷ்ணன், குமராண்டிபாளையம் ஏ. நாச்சியப்பன்,
கோடை எஸ். பி. வி. அழகர்சாமி, கோவை என். ஜி. ராமசாமி,
கோவை சுப்ரி என்கிற சுப்ரமணியம், சாவடி அருணாச்சலம் பிள்ளை,
சீர்காழி சுப்பராயன், சேலம் ஏ. சுப்பிரமணியம், டாக்டர் பெ. வரதராஜுலு நாயுடு, டாக்டர் ருக்மிணி லக்ஷ்மிபதி, தஞ்சை ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார்,
தர்மபுரி குமாரசாமி, திண்டுக்கல் மணிபாரதி, 
தியாகி வைரப்பன் வேதாரண்யம், திருக்கருகாவூர் பந்துலு ஐயர்,
திருச்சி வக்கீல்ரா. நாராயண ஐயங்கார், திருச்சி டி. எஸ். அருணாசலம்,
திருச்சி டி. வி. சுவாமிநாத சாஸ்திரி, திருச்சி பி. ரத்னவேல் தேவர்,
திருப்பூர் பி. எஸ். சுந்தரம், தீரர் சத்தியமூர்த்தி, தியாகி த.தங்கவேல் நாடார், ஆறுமுகனேரி, தூக்குமேடை ராஜகோபால், தூத்துக்குடி பால்பாண்டியன்,
தேனி என். ஆர். தியாகராஜன், தோழர் கே. டி. கே. தங்கமணி,
நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை, பழனி கே. ஆர். செல்லம்,
பழனி பி. எஸ். கே. லக்ஷ்மிபதிராஜு, புலி மீனாட்சி சுந்தரம், பெரியகுளம் இராம. சதாசிவம், மட்டப்பாறை வெங்கட்டராமையர், மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி, மதுரை பழனிகுமாரு பிள்ளை, மதுரை ஜார்ஜ் ஜோசப், மதுரை ஸ்ரீநிவாச ஐயங்கார், முனகல பட்டாபிராமையா
மேயர் டி. செங்கல்வராயன், வத்தலகுண்டுபி. எஸ். சங்கரன்
வீரன் சுந்தரலிங்கம், வீரன் வாஞ்சிநாதன், ஸ்ரீமதி செளந்தரம் ராமச்சந்திரன்
அகினி திராவக அபிஷேகம், அசலாம்பிகை அம்மையார், அம்புஜம்மாள்,
மாவீரன் அழகுமுத்து கோன் (1728–1757), அ. வைத்தியநாதய்யர் மதுரை,
ஆர். வி. சுவாமிநாதன், ஆ. நா. சிவராமன், இராசம்மா பூபாலன், இராமு தேவர், இலட்சுமி சாகல், எம். சங்கையா, எம். பக்தவத்சலம், எம். பி. டி. ஆச்சார்யா, எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி, என். எம். ஆர். சுப்பராமன்
எஸ். என். சுந்தராம்பாள், எஸ். என். சோமையாஜுலு, ஏ. பி. சி. வீரபாகு
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், கட்டபொம்மன் (1760–1799), கடலூர் அஞ்சலையம்மாள், கண்ணம்மையார், க. சந்தானம், ப. ராமமூர்த்தி, 
கு. காமராசர், கு. ராஜவேலு, கே.கே.எஸ். காளியம்மாள், கே. பி. சுந்தராம்பாள்
கே. பி. ஜானகியம்மாள், கே. வி. ராமசாமி கோவை, கோவிந்தம்மாள்
கோவை அய்யாமுத்து, கோ. வேங்கடாசலபதி, சர்தார் வேதரத்தினம் பிள்ளை
ச. அ. சாமிநாத ஐயர், சின்ன மருது மகன் துரைச்சாமி, சி. பி. சுப்பையான் கோவை, சுத்தானந்த பாரதி, சுப்பிரமணிய சிவா, செங்காளியப்பன்
செண்பகராமன் பிள்ளை, செல்லம்மா பாரதி, சேலம் சி. விஜயராகாவாச்சாரியார், டி. என். தீர்த்தகிரி, டி. கே. மாதவன்
தியாகி விஸ்வநாததாஸ், திருப்பூர் குமரன், திரு. வி. கலியாணசுந்தரனார்
தி. சே. செள. ராஜன், தீரன் சின்னமலை, கருப்ப சேர்வை, நாகம்மையார்
நீலாவதி இராம. சுப்பிரமணியம், பங்கஜத்தம்மாள், ப. ஜீவானந்தம்
பாஷ்யம் என்கிற ஆர்யா, பி. எஸ். சின்னதுரை, பி. கக்கன், பி. சீனிவாச ராவ்
பி. வேலுச்சாமி, புதுச்சேரி சுப்பையா, பூமேடை ராமையா, பூலித்தேவன், (1715–1767), பெரிய காலாடி, மகாகவி பாரதியார், மணலூர் மணியம்மா,
மயிலப்பன் சேர்வைகாரர், மருதநாயகம் (1725–1764), மருது பாண்டியர்,
ம. சிங்காரவேலர், ம. பொ. சிவஞானம் கிராமணியார், மீனாம்பாள்,
முத்துலட்சுமி ரெட்டி, முத்துவிநாயகம், முஹம்மது இஸ்மாயில்,
மூவலூர் இராமாமிர்தம், மோகன் குமாரமங்கலம், ராமச்சந்திர நாயக்கர்
ராஜாஜி, ரா. கிருஷ்ணசாமி நாயுடு, வடிவு, வ. உ. சிதம்பரனார்
வ. வே. சுப்பிரமணியம், வாண்டாயத் தேவன், விருப்பாச்சி கோபாலநாயக்கர்
வெ. துரையனார், வேலு நாச்சியார் – முத்து வடுகநாதர், வை. மு. கோதைநாயகி, ஜானகி ஆதி நாகப்பன், ஜி. சுப்பிரமணிய ஐயர், ஸ்ரீநிவாச ஆழ்வார், ஹாஜி முகமது மெளலானா சாகிப், நீலகண்ட பிரம்மச்சாரி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஐ. மாயாண்டி பாரதி, என்.சங்கரய்யா
நீலமேகம் பிள்ளை, காமராசர்








 

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

இலக்கண குறிப்பு  தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம்  இலக்கண குறிப்பு  : 1. நீரோசை               ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை      - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை யாவரு

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்காக காமராஜர் ஆற்றிய பணிகளை ஆராய்க

காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்:                            பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.                              கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.                           மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.                           விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படு