####அறிவோம்####
இந்திய வரலாற்றுக் காலக்கோடு
இந்திய வரலாற்றுக் காலக்கோடு
சிந்துசமவெளி பண்பாட்டு நகரங்களைக் காட்டும் வரைபடம்:
பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஹரப்பா மற்றும் மொகெஞ்சதாரோ மற்றும் மெகர்கர். இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் லோத்தல் & தோலாவிரா.
இந்திய வரலாற்று காலக்கோடுகள்
# சிந்துவெளி நாகரிகம் கிமு 3300 – 1700
# முந்தைய ஹரப்பா நாகரீகம் (Early Harappan Culture) கிமு 3300 – 2600
# லோத்தல், (குஜராத்) - கிமு 3300 – 2600
# பிந்தைய ஹரப்பா நாகரீகம், தோலாவிரா, (குஜராத்) - கிமு 2600 – 1900
பிந்தைய வேத கால இந்தியா, கிமு 1100- கிமு 500
வேத காலம்
# முந்தைய வேதகாலம் கிமு 1750 - கிமு 1100
# பிந்தைய வேதகாலம் - கிமு 1100 - கிமு 500
அசோகர் காலத்திய மௌரியப் பேரரசு
குப்தப் பேரரசின் வளர்ச்சியைக் காட்டும் வரைபடம்:இளம்பச்சை நிறப் பகுதிகளை முதலாம் சந்திரகுப்தர் விரிவாக்கம் செய்தது. செம்மண் நிறப்பகுதிகளை சமுத்திரகுப்தர் விரிவாக்கம் செய்தது. பச்சை நிறப்பகுதிகளை இரண்டாம் சந்திரகுப்தர் விரிவாக்கம் செய்தது.
பண்டைய இந்தியா
- பரத கண்ட நாடுகள்
- ஜனபதங்கள் (கிமு 1200 – கிமு 600)
- மகாஜனபதங்கள் (கிமு 600 – கிமு 300)
- மகத நாடு (கிமு 600 – கிமு 184)
- ஹரியங்கா வம்சம் (கிமு 550 - கிமு 413)
- மகாவீரர் கிமு 599 – 527
- கௌதம புத்தர் கிமு 563 - 483
- சிசுநாக வம்சம் (கிமு 413 – கிமு 345)
- நந்தப் பேரரசு (கிமு 424 – கிமு 321)
- மௌரியப் பேரரசு (கிமு 321 – கிமு 184)
- ரோர் வம்சம் - (கி மு 450 – கி பி 489)
- பாண்டியர் (கிமு 300 - கிபி 1345)
- சோழர் (கிமு 300 – கிபி 1279)
- சேரர் (கிமு 300 – கிபி 1102)
- மகாமேகவாகன வம்சம் (கிமு 250 – கிபி 400)
- பார்த்தியப் பேரரசு (கிமு 247 – கிபி 224)
- சாதவாகனர் (கிமு 230 – கிபி 220)
- குலிந்த பேரரசு (கிமு 200 – கிபி 300)
- இந்தோ சிதியன் பேரரசு (கிமு 200 – கிபி 400)
- சுங்கர் (கிமு 185 – கிமு 73)
- இந்தோ கிரேக்க நாடு (கிமு 180 – கிமு 10)
- கண்வப் பேரரசு (கிமு 75 – கிமு 30)
- மேற்கு சத்ரபதிகள் (கிபி 35 – கிபி 405)
- குசான் பேரரசு (கிபி 60 – கிபி 240)
- பார்சிவா வம்சம் (கிபி 170 – 350)
- பத்மாவதி நாகர்கள் (கிபி 210 – 340)
- வாகாடகப் பேரரசு (கிபி 250 – 500)
- களப்பிரர் (கிபி 250 – 600)
- குப்தப் பேரரசு (கிபி 280 – 550)
- கதம்பர் வம்சம் (கிபி 345 – 525)
- மேலைக் கங்கர் (கிபி 350 – 1000)
- பல்லவர் கிபி 300 – 850
- காமரூப பேரரசு (கிபி 350 – 1100)
- வர்மன் அரசமரபு கிபி 350 - 650
- மேலைக் கங்கர் (கிபி 350–1000)
- விஷ்ணுகுந்தினப் பேரரசு (கிபி 420–624)
- மைத்திரகப் பேரரசு (கிபி 475–767)
- இராய் வம்சம் (கிபி 489–632)
- சாளுக்கியர் (கிபி 543–753)
- மௌகரி வம்சம் (கிபி 550–700)
- கௌடப் பேரரசு (கிபி 590 - 626)
- ஹர்சப் பேரரசு (கிபி 606 – 647)
- கீழைச் சாளுக்கியர் (கிபி 624 – 1075)
- கார்கோடப் பேரரசு (கிபி 625 - 885)
- கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (கிபி 650 – 1036)
- மிலேச்சப் பேரரசு (கிபி 650 - 900)
- பாலப் பேரரசு (கிபி 750 – 1174)
- இராஷ்டிரகூடர் (கி பி 753 – 982)
- பரமாரப் பேரரசு (கிபி 800 – 1327)
- உத்பால அரச மரபு (கிபி 855 – 1003)
- தேவகிரி யாதவப் பேரரசு (கிபி 85 0– 1334)
- காமரூப பால அரசமரபு (கிபி 900 - 1100)
- சோலாங்கிப் பேரரசு (கிபி 950 – 1300)
- மேலைச் சாளுக்கியர் (கிபி 973 – 1189)
- சந்தேலர்கள் (கிபி 954 - 1315)
- லெகரா பேரரசு (கிபி 1003 – 1320)
- போசளப் பேரரசு (கிபி 1040 – 1346)
- சென் பேரரசு (கிபி 1070 – 1230)
- கீழைக் கங்கர் (கிபி 1078 – 1434)
- காக்கத்தியர் (கிபி 1083 – 1323)
- காலச்சூரி பேரரசு (கிபி 1130 – 1184)
- தேவா பேரரசு (கிபி 11-12 நூற்றாண்டு)
தில்லி சுல்தானகத்தின் வரைபடம்
விஜயநகரப் பேரரசின் (கி பி 1336 – 1646) வரைபடம்
மத்தியகால இந்தியா (1206 – 1596)
- தில்லி சுல்தானகம் (கி பி 1206 – 1526)
- மம்லுக் வம்சம் (கி பி 1206 – 1290)
- கில்ஜி வம்சம் (கி பி 1290 – 1320)
- துக்ளக் வம்சம் (கி பி 1321 – 1413)
- சையிது வம்சம் (கி பி 1414 – 1451)
- லௌதி வம்சம் (கி பி 1451 – 1526)
- வகேலா அரசு (கி பி 1243 – 1299)
- அகோம் பேரரசு (கி பி 1228 – 1826)
- ரெட்டிப் பேரரசு (கி பி 1325 – 1448)
- விஜயநகரப் பேரரசு (கி பி 1336 – 1646)
- கஜபதி பேரரசு (கி பி 1434 – 1541)
- தக்காணத்து சுல்தானகங்கள் (கி பி 1490–1596)
முகலாயப் பேரரசு உச்சத்தில் இருந்த போதான வரைபடம்
மராட்டியப் பேரரசின் வரைபடம் (மஞ்சள் நிறம்)
முந்தைய தற்கால வரலாறு (1526 – 1858)
- முகலாயப் பேரரசு (கி பி 1526 – 1712)
- சூர் பேரரசு (1540 - 1556)
- மராட்டியப் பேரரசு (கி பி 1674 – 1818)
- துராணிப் பேரரசு (கி பி 1747 – 1823)
- சீக்கியப் பேரரசு (கி பி 1799 – 1849)
பிரித்தானிய இந்தியாவின் வரைபடம், மஞ்சள் நிறப்பகுதிகள், பிரித்தானிய இந்தியாவின் கீழ் செயல்பட்ட சுதேச சமஸ்தானங்கள்.
குடிமைப்பட்ட கால இந்தியா (1757–1947)
- போர்த்துகேய இந்தியா (கி. பி 1510 – 1961)
- டச்சு இந்தியா (கி. பி 1605 – 1825)
- டேனிஷ் இந்தியா (கி. பி 1620 – 1869)
- பிரெஞ்சு இந்தியா (கி. பி 1759 – 1954)
- பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி (கி. பி 1757–1858)
- பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (கிபி 1858 – 1947)
- சுதேச சமஸ்தான மன்னராட்சிகள் 1818 - 1948
- இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் துவக்கம் - 1885
- இந்திய விடுதலை இயக்கம் 1905 - 1947
இந்தியாவின் 28 மாநிலங்களையும் 7 ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் காட்டும் சுட்டக்கூடிய நிலப்படம்
விடுதலை இந்தியா
- இந்திய விடுதலை நாள் 15 ஆகஸ்டு 1947
- காஷ்மீர் குறித்து இந்திய-பாகிஸ்தான் போர், 1947
- மகாத்மா காந்தி சுடப்பட்டு இறத்தல் 30 சனவரி 1948
- சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தல் 1948 - 1949
- இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நிறைவேற்றல் 26 ஜனவரி 1950
- இந்தியக் குடியரசு நாள் 26 சனவரி 1950
- இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951
- முதல் இந்தியப் பொதுத் தேர்தல் 1951 - 1952
- இந்திய மாநிலங்களை சீரமைத்தல் 1956 - 1957
- இந்திய சீனப் போர் 1962
- இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு இறப்பு - 1964
- இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆட்சிக் காலம்: 9 சூன் 1964 – 11 சனவரி 1966
- காஷ்மீர் குறித்து இரண்டாம் இந்திய-பாகிஸ்தான் போர் - 1965
- பிரதமர் இந்திரா காந்தி, ஆட்சிக் காலம் 24 சனவரி 1966 – 24 மார்ச் 1977 மற்றும் 14 சனவரி 1980 – 31 அக்டோபர் 1984
- 1971 - இந்திராகாந்தியின் உதவியினால் வங்காளதேசம் உருவாதல்
- 1974 - சிரிக்கும் புத்தர் எனும் பெயரில் முதல் அணுகுண்டு வெடித்துப் பரிசோதனை செய்தல் 18 மே 1974
- 1975 - நெருக்கடி நிலை அறிவிப்பு
- 1977 - இந்திய தேசிய காங்கிரசு கட்சி அல்லாத ஜனதா தளம் கட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் பதவியேற்றல்
- 1980 - இந்திராகாந்தி மீண்டும் பிரதமர் ஆதல் 14 சனவரி 1980 – 31 அக்டோபர் 1984
- சூன், 1984 - அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கியிருந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது நடவடிக்கைகள்.
- 1984 - இந்திராகாந்தி கொல்லப்படல்; ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்றல்
- டிசம்பர் 1984 - போபால் விஷ வாயு கசிவால் 6,500 இறத்தல்.
- 21 மே 1991 - விடுதலைப் புலி இயக்கத்தின், உலகின் முதல் மனித வெடி குண்டு வெடிப்பால் ராஜீவ் காந்திஇறத்தல்.
- 1991 - 1991 இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வென்று நரசிம்ம ராவ் பிரதமர் ஆதல்.
- 6 டிசம்பர் 1992 - அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிப்பு
- 12 மார்ச் 1993 - மும்பை தொடர் குண்டு வெடிப்புகள், 257 மரணம்
- 1998 - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசின் இந்தியப் பிரதமராக அடல் பிகாரி வாச்பாய் பதவியேற்றல்.
- மே, 1998 - இரண்டாவது அணுகுண்டு பரிசோதனை
- மே, 1999 - கார்கில் போர், பாகிஸ்தான் படைகள் தோல்வியுற்று பின்வாங்கியது.
- டிசம்பர், 2001 - பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தை தாக்குதல்
- பிப்ரவரி - மார்ச் 2002 - குஜராத் இரயில் எரிப்பு மற்றும் அதன் தொடர்பான வன்முறையில் 2,500 பேர் கொல்லப்பட்டனர்.
- 2004 - 2014 முடிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.
- மே, 2014 - நரேந்திர மோடி இந்தியப் பிரதமர் ஆதல்.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment