இந்தியாவில் கம்பெனி ஆட்சி
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி (இந்தியா)
حاکمیت شرکت بر هند
பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனி ஆட்சி
1757–1858
கொடி
முத்திரை
குறிக்கோள்
Auspicio Regis et Senatus Angliae
"பிரித்தானிய மன்னர் மற்றும் நாடாளுமன்றத்தின் கட்டளைப்படிB"
தலைநகரம்
கொல்கத்தா
மொழி(கள்)
ஆங்கிலம், பாரசீகம், மற்றும் பிற மொழிகள்
அரசியலமைப்பு
பிரித்தானிய நாடாளுமன்ற வழிகாட்டுதலின்படி பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின்நிர்வாகம்.
பிரித்தானிய இந்தியப் பேரரசின்தலைமை ஆளுனர்
1774–1775
வாரன் ஹேஸ்டிங்ஸ்(முதல்)
1857–1858
சார்லஸ் கன்னிங் (இறுதி)
வரலாறு
பிளாசிப் போர்
10 மே 1757
அலகாபாத் ஒப்பந்தம்
1765
ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை
1792
பாசின் உடன்படிக்கை 1802 (Treaty of Bassein)
1802
யாந்தபொ உடன்படிக்கை (Treaty of Yandabo)
1826
இந்திய அரசுச் சட்டம் 1858
2 ஆகத்து 1858
நாணயம்
ரூபாய்
முந்தையது பின்னையது
முகலாயப் பேரரசு
மைசூர் அரசு
மராட்டியப் பேரரசு
சீக்கியப் பேரரசு
வங்காள நவாப் அரசு
பிரித்தானிய இந்தியப் பேரரசு
தற்போதைய பகுதிகள்
வங்காளதேசம்
இந்தியா
மலேசியா
மியான்மர்
பாக்கித்தான்
சிங்கப்பூர்
இலங்கை
யேமன்
இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி அல்லது கம்பெனி ஆட்சி (Company rule in India) or (Company Raj). 1757ஆம் ஆண்டில் நடந்த பிளாசி சண்டைக்குப்பின், வங்காள நவாப், பிரிட்டன் கிழக்கிந்திய கம்பேனி நிறுவனத்திடம் சரண் அடைந்த பின், இந்திய துணைக் கண்டத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனியின் ஆட்சி காலூன்றியது. 1765 ஆண்டு முதல் வங்காளம், ஒரிசா மற்றும் பிகாரில் திவானி எனும் நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது.
1773ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பேனியின் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பின், தலைமை ஆளுனர், வாரன் ஹேஸ்டிங்ஸ் நேரடி நிர்வாகத்தில், கல்கத்தா நகரை தலைமையகமாகக் செயல்பட்டது. கிழக்கிந்திய கம்பேனி நிறுவனம் பல பங்குதாரர்களைக் கொண்ட, லாப நோக்கத்துடன் செயல்படும், தனியார் கூட்டு வர்த்தக நிறுவனம் ஆகும். இதன் நிர்வாகக் குழு மற்றும் தலைமையகம் லண்டனில் அமைந்திருந்தது. கிழக்கிந்திய கம்பேனி தனக்கென காவல் படை, இராணுவப் படை மற்றும் நீதிமன்றங்கள் கொண்டது.
கிழக்கிந்திய கம்பேனி நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊழல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் தடுத்து நிறுத்திட, பிட்டின் இந்தியா சட்டம், பிரித்தானிய அரசு நடைமுறைப்படுத்தியது. கிழக்கிந்திய நிறுவனச் சட்டம், 1784, சிப்பாய்க் கிளர்ச்சி, 1857க்குப் பின், பிரித்தானிய அரசு கொண்டு வந்த இந்திய அரசுச் சட்டம், 1858க்கு பின்னர் முடிவடைந்தது. 1858ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டு, இந்தியத் துணைக் கண்டத்தை, இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேறிய அதிகாரிகளின் நிர்வாகத்தில், பிரித்தானியப் பேரரசு தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது.

எல்லைகளை விரிவு செய்தல்
1765 மற்றும் 1805இல் இந்தியா, பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பேனி ஆட்சிப் பகுதிகள், இளஞ்சிவப்பு நிறத்தில்.
1837 மற்றும் 1857இல் இந்தியா, பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பேனி ஆட்சிப்பகுதிகள் (இளஞ்சிவப்பு நிறத்தில்) மற்றும் பிற பகுதிகள்
இந்தியத் துணைக் கண்டத்தில் வணிகம் செய்து லாபம் ஈட்டும் நோக்கத்தில், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனி, பிரித்தானிய வணிகர்களால் லண்டனில் 1600ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியாவில் ஆந்திராமாநிலத்தின் மசூலிப்பட்டணக் கடற்கரையில் 1611ஆம் ஆண்டிலும், சூரத்தில் 1612ஆம் ஆண்டிலும், 1640இல் விஜயநகரப் பேரரசின் அனுமதியுடன், சென்னையிலும். பின் பம்பாய் நகரிலும் வணிகக் கூடங்களை திறந்தனர்.
இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் 1640ஆம் ஆண்டில் கல்கத்தாவில் தொழிற்கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தொடங்கினர். போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி, பிரான்சு இந்திய கம்பேனி, டச்சு இந்திய கம்பேனிகளுடான போட்டியில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வெற்றி அடைந்தது.
ராபர்ட் கிளைவ் மற்றும் ஆண்ட்ரே பஸ்தாமாண்டி ஆகிய கிழக்கிந்தியக் கம்பேனியின் படைத் தலைவர்களின் தலைமையிலான படைகள், 1757இல் நடந்த பிளாசிப் போர் மற்றும் 1764இல் நடந்த பக்சார் போர்களில் பெற்ற வெற்றியால், வங்காளம், ஒரிசா மற்றும் பிகாரில் நிலவரி வசூலிக்கும் உரிமையும், 1773இல் கீழ் கங்கைப் பகுதிகளில் பல நிலப்பரப்புகளும் அடைந்தனர்.
கர்நாடகப் போர்கள் (1746 – 1758), ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் (1766-1799), ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் (1772-1818), ஆங்கிலேய-நேபாளப் போர் (1814 - 16), ஆங்கிலேய-பர்மியப் போர்கள் (1824-1826), இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போர்கள் (1849-1856) மூலம் வட மேற்கு இந்தியாவிலும், மேற்கு இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும், வடகிழக்கு இந்தியாவிலும், கிழக்கிந்தியக் கம்பெனியினர தங்களது ஆளும் நிலப்பரப்பை விரிவுபடுத்திக் கொண்டனர்.
ஆங்கிலேய-நேபாளப் போர் (1814–16) முடிவில் ஏற்பட்ட சுகௌலி உடன்படிக்கை மூலம், நேபாள இராச்சியத்தின் கார்வால், குமாவுன், சிக்கிம், டார்ஜிலிங் மற்றும் மேற்கு தராய் சமவெளிப் பகுதிகள் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியினர் கைக்கு வந்தது.
ஆங்கிலேய-பர்மியப் போர்கள் மூலம் அசாம், மணிப்பூர், அரக்கான் பகுதிகளை, பர்மாவிடமிருந்து கைப்பற்றினர்.
ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் மூலம் குஜராத், ராஜபுதனம், மத்திய இந்தியா மற்றும் மகாராட்டிரா பகுதிகளை, மராட்டியர்களிடமிருந்துகைப்பற்றினர்.
ஆங்கிலேய–சீக்கியர் போர்களின் (1848 - 1849) முடிவில், சீக்கியப் பேரரசிடமிருந்த பஞ்சாப் பகுதி|பஞ்சாப்]] மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணப்பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.
சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்களைத் தலைநகராகக் கொண்ட நிலப்பரப்புகள் என்றும், கிழக்கிந்தியக் கம்பேனியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான ரோகில்கண்ட், கோரக்பூர், தோவாப், தில்லி, அசாம், சிந்து, பஞ்சாப் மாகாணம், வடமேற்கு எல்லைப்புற மாகாணம்மற்றும் காஷ்மீர் பகுதிகள் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் நேரடி நிர்வாகத்தில் இருந்தன.
மேலும் ஆண்டு தோறும் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பேனிக்கு கப்பம் கட்டிக் கொண்டு, தன்னிச்சையாக ஆண்ட மன்னர்களின் நிலப்பரப்புகள் (தனக்கென தனி இராணுவப் படைகள் வைத்துக் கொள்ளாத) எண்ணற்ற சுதேச சமஸ்தானங்கள், கிழக்கிந்திய ஆட்சிப் பகுதிகள் இருந்தது.
19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியத் துணை கண்டத்தின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள், இந்து, இசுலாமிய மற்றும் சீக்கிய சுதேச சமஸ்தான மன்னராட்சியில் இருந்தன.

சென்னை மாகாணத்தில் கம்பனி ஆட்சி (1684-1858)
தமிழகத்தில் முதன் முதலில் ஆங்கிலேயர் பதினாறாம் நூற்றாண்டில் கால் பதித்தனர். தற்கால சென்னை நகரத்தில், புனித ஜார்ஜ் கோட்டையைக்கட்டினர். முதலில் வர்த்தகம் மட்டும் செய்து வந்த ஆங்கில கிழக்கிந்தியக் கம்பனி, பின் மெல்ல மெல்ல உள்ளூர் அரசியல் விவகாரங்களில் தலையிடத் தொடங்கியது. 1684 ஆம் ஆண்டு தென்னாட்டில் உள்ள கம்பனி பிரதேசங்கள், சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில், நடைபெற்ற கர்நாடகப் போர்களால், ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. ஆற்காடு நவாப் மற்றும், ஃபிரஞ்சுப் படைகளை வென்றதால், அவர்களின் ஆதிக்கத்திலிருந்த பல பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தன. ஹைதர் அலி, மற்றும் திப்பு சுல்தானை வீழ்த்தியதின் மூலம் மேற்கிலும், கட்டபொம்மன், மருது பாண்டியர் முதலிய பாளையக்காரர்களை வென்றதன் மூலம் சென்னை மாகாணத்தில் கம்பெனி ஆட்சி வலுப்பெற்றது.

இராணுவம் மற்றும் குடிமைப் பணிகள்
1772ஆம் ஆண்டில் வாரன் ஹேஸ்டிங் முதல் கவர்னர் ஜெனரலாக, கொல்கத்தாவில் பதவியேற்றவுடன், கிழக்கிந்தியக் கம்பெனியின், வங்காள மாகாண இராணுவத்தை விரைவாக பெருக்கினார். அயோத்தி வீரர்கள், இராஜபுதன ராஜபுத்திரர்கள் மற்றும் பிராமணர்களை கம்பேனி படையணிகளில் திரட்டினார்.
1796க்குப் பின் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள்
மொத்த இந்தியப் படைகள்: 57,000
மொத்த ஆங்கிலேய மற்றும் இந்தியப்படைகள்: 70,000
மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போருக்குப்பின் 1791இல் சென்னை மாகாணப் படைகளுக்கு ஆதரவாகவும், ஜாவா, இலங்கை போன்ற வெளி நாட்டுப் போர்களுக்குத் துணையாக வங்காள மாகாணப் படைகள் பயன்பட்டன.
வேலூர் சிப்பாய் எழுச்சியின் போது, 1806இல் கிழக்கிந்திய கம்பேனியின் படையில் 1,54,500 படைவீரர்களும் அதிகாரிகளும் இருந்தனர்.
வேலூர் சிப்பாய் எழுச்சியின் போது கம்பேனிப் படைகள்

பிரித்தானியப் படைகள்
இந்தியப் படைகள்
வங்காள மாகாணம்
சென்னை மாகாணம்
பம்பாய் மாகாணம்
மொத்த இந்தியப் படைகள்: 57,000
மொத்த ஆங்கிலேய மற்றும் இந்தியப்படைகள்: 70,000
மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போருக்குப்பின் 1791இல் சென்னை மாகாணப் படைகளுக்கு ஆதரவாகவும், ஜாவா, இலங்கை போன்ற வெளி நாட்டுப் போர்களுக்குத் துணையாக வங்காள மாகாணப் படைகள் பயன்பட்டன.
வேலூர் சிப்பாய் எழுச்சியின் போது, 1806இல் கிழக்கிந்திய கம்பேனியின் படையில் 1,54,500 படைவீரர்களும் அதிகாரிகளும் இருந்தனர்.
வேலூர் சிப்பாய் எழுச்சியின் போது கம்பேனிப் படைகள்
மாகாணங்கள்
ஆங்கிலேயப் படைகள்
இந்தியப் படைகள்
1857, சிப்பாய் கலவரத்தின் போது, கம்பேனி படைகள்
மாகாணங்கள்
பிரித்தானியப் படைகள்
இந்தியப் படைகள்
குதிரைப் படை
பீரங்கிப் படை
தரைப் படை
வளர்ச்சிப் பணிகள்
அஞ்சல், தந்தி சேவைகள் தொடங்கப்பட்டது. ஆங்கிலேய முறை கல்வி வளர்ந்தது. தொடருந்து சேவை துவக்கப்பட்டது.
தலைமை ஆளுனர்கள்
பிரித்தானிய கிழக்கிந்திய ஆட்சியில், முக்கிய நிகழ்வுகளின் போது இருந்த தலைமை ஆளுனர்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமை ஆளுனர் பதவியில் நிகழ்வுகள்
வாரன் ஹேஸ்டிங்ஸ்
20 அக்டோபர் 1773 – 1 பிப்ரவரி 1785
வங்காளப் பஞ்சம் (1769–73)
ரோகில்லாப் போர் (1773–74)
முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் (1777–1783)
சாலிசா பஞ்சம்
(1783–84)
இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் (1780–1784)
1784 பிட்டின் இந்தியச் சட்டத்தின் (1784) மூலம் கம்பெனி ஆட்சியின் நடவடிக்கைகள் ஐக்கிய இராச்சியம்கட்டுப்படுத்துதல்.
சார்லஸ் காரன்வாலிஸ்
12 செப்டம்பர் 1786 – 28 அக்டோபர் 1793
காரன்வாலிஸ் நடைமுறைகள் (1793)
நிரந்தரக் குடியமர்வு
மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போர் (1789–1792)
1791-92ஆம் ஆண்டு மண்டையோடு பஞ்சம் (1791–92)
ஜான் சோர்
28 அக்டோபர் 1793 – மார்ச்சு 1798
முதல் மலபார் கிளர்ச்சியை (1793-1797) அடக்குதல். )
ஜெய்ப்பூர் (1794), திருவிதாங்கூர் (1795) மன்னராட்சி நாடுகள் கம்பெனி பாதுகாப்பில் கொண்டு வரல்.
அந்தமான் தீவுகள் கைப்பற்றல் (1796)
டச்சுகாரர்களிடமிருந்து இலங்கை கடற்கரை பகுதிகள் கைப்பற்றல் (1796).
ரிச்சர்டு வெல்லசுலி
18 மே 1798 – 30 சூலை 1805
ஹைதரபாத் நிஜாம் அரசு முதலில் துணைப்படைத் திட்டத்தில் சேருதல் (1798)
நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரில் (1798–1799)
இரண்டவது மலபார் கிளர்ச்சி (1800–1805)
அயோத்தி நவாப் உத்தௌலா, கோரக்பூர், ரோகில்கண்ட், அலகாபாத் மாவட்டம், பாதேபூர், கான்பூர், எடவா, மெயின்புரி, மிர்சாபூரின் சில பகுதிகள், குமாவன் பகுதிகளை கம்பேனி ஆட்சியாளர்களுக்கு விட்டு கொடுத்தல் (1801)<
1802ஆம் ஆண்டில் பாசின் உடன்படிக்கையின்படி (Treaty of Bassein) மராத்திய பேஷ்வா, இரண்டாம் பாஜி ராவ், துணைப்படைத் திட்ட திட்டத்தை ஏற்றல்.
இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் (1803-1805) மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட், தோவாப், தில்லி, ஆக்ரா பகுதிகளை மராத்திய அரசுகளிடமிருந்து கைப்பற்றல்
1804ஆம் ஆண்டு மலபார் நாட்டை இணைத்தல்
தில்லி போரில் (1803) தில்லியை கைப்பற்றல்
காரன்வாலிஸ்(இரண்டாம் பதவிக் காலம்)
30 சூலை 1805 – 5 அக்டோபர் 1805
தொடர் படையெடுப்புகள் விளைவாக ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பேனிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு அமைதி குலைதல்.
இந்தியாவில் அமைதியை நிலைநாட்ட கார்ன்வாலிஸ் மீண்டும் தலைமை ஆளுனராக நியமிக்கப்படுதல், பின் காஜிப்பூரில் இறத்தல்.
ஜார்ஜ் ஹிலாரியோ பார்லோ (George Hilario Barlow)
10 அக்டோபர் 1805 – 31 சூலை 1807
வேலூர் புரட்சி (10 சூலை 1806)
மிண்டோ பிரபு (கில்பர்ட் எலியட் முர்ரே)
31 சூலை 1807 – 4 அக்டோபர் 1813
பட்டயச் சட்டம், 1813
மொரிசியஸ் நாட்டை கைப்பற்றல் (1810-1968)
ஜாவாவை கைப்பற்றல்.
வாரன் ஹேஸ்டிங்ஸ்
4 அக்டோபர் 1813 – 9 சனவரி 1823
ஆங்கிலேய-நேபாளப் போரின் (1814–16) முடிவில் ஏற்பட்ட சுகௌலி உடன்படிக்கையின் படி, நேபாள இராச்சியத்தின் கார்வால், குமாவுன், சிக்கிம், டார்ஜிலிங் மற்றும் மேற்கு தராய் சமவெளிப் பகுதிகள் ஆங்கிலேயர்கள் பெற்றனர்.
1817இல் ராஜபுத்திர மன்னர்கள், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பேனியின் மேலாதிக்க நிலையினை ஏற்று கொள்தல்
1818இல் சிங்கப்பூர் நிறுவப்பட்டது.
1819இல் கட்ச் சமஸ்தானம், பிரித்தானியரின் மேலாதிக்க நிலையை ஏற்றது.
1819இல் மத்திய இந்திய மாகாணத்தை உருவாக்கியது. மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர் (1817 – 1818) விளைவாக மராத்தியப் பேரரசு வீழ்ந்ததது.
வில்லியம் பிட் பிரபு
1 ஆகஸ்டு 1823 – 13 மார்சு 1828
முதல் ஆங்கிலேய-பர்மியப் போரில், (1823–1826) அகோம் பேரரசு, பர்மா அரசின் கட்டுக்குள் இருந்த அசாம், மணிப்பூர் மற்றும் பர்மிய பகுதியின் அரக்கான் மலைப் பகுதிகளை கிழக்கிந்திய கம்பேனி ஆட்சியுடன் இணைத்தல்.
வில்லியம் பென்டிங்கு பிரபு
4 சூலை 1828 – 20 மார்ச் 1835
இராசாராம் மோகன் ராய் இந்துக்களின் மறுமலர்ச்சிக்கு பிரம்ம சமாஜம் துவக்கினார், உடன்கட்டை ஏறல்வழக்கத்தை ஒழித்தல் (1829)
வழிப்பறி கொள்ளையை கட்டுப்படுத்தும் சட்டம் இயற்றுதல்
மைசூர் மன்னராட்சிப் பகுதிகளை பிரித்தானியரின் நிர்வாக வரம்பில் கொண்டு வருதல் (1831–1881)
பகவல்பூர் மன்னர், பிரித்தானியரின் மேலாதிக்க நிலையை ஏற்றல் (1833)
கூர்க் பகுதி இணைத்தல் (1834).
ஜார்ஜ் ஈடன் பிரபு
4 மார்ச் 1836 – 28 பிப்ரவர் 1842
வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தை நிறுவுதல் (1836)
இந்தியா முழுவதும் அஞ்சலகங்கள் நிறுவுதல் (1837)
ஆக்ரா பஞ்சம், 1837–1838
ஏடன் நகரம் கைப்பற்றல் (1839)
முதல் ஆங்கிலேய-ஆப்கானியப் போர் (1839–1842)
எல்பின்ஸ்டோன் படைகள் நிகழ்த்திய படுகொலைகள் (Massacre of Elphinstone's army) (1842).
எல்லன்பரோ பிரபு
28 பிப்ரவர் 1842 – சூன் 1844
முதல் ஆங்கிலேய-ஆப்கானியப் போர் (1839–1842)
சிந்து நாட்டை இணைத்தல் (1843)
ஹென்றி ஹார்டிங்
23 சூலை 1844 – 12 சனவரி 1848
முதல் ஆங்கிலேய-சீக்கியப் போர் (1845–1846)
லாகூர் உடன்படிக்கையின்படி 1846இல் சீக்கியர்கள், ஜலந்தர், தோவாப், காஷ்மீர் பகுதிகளை பிரித்தானியருக்கு விட்டுக் கொடுத்தல்.
டல்ஹவுசி பிரபு
12 சனவரி 1848 – 28 பிப்ரவரி 1856
இரண்டாம் ஆங்கிலேய சீக்கியப் போர் (1848–1849)
பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களை இணைத்தல். (1849–1856)
இந்தியாவில் 1858 முதல் தொடருந்து, பம்பாய்க்கும், தானே இடையே அமைத்தல் (1853)
சாதித் தகுதியை ஒழித்தல் (1850)
முதன் முதலாக இந்தியாவில் தந்தி தகவல் சேவையை துவக்குதல் (1851)
இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போரில் (1852–1853), தெற்கு பர்மாவை கைப்பற்றுதல்
கங்கை ஆற்றில் கால்வாய்கள் அமைத்தல் (1854)
அவகாசியிலிக் கொள்கையின்படி சதாரா (1848), ஜெய்ப்பூர் மற்றும் சம்பல்பூர் (1849), நாக்பூர் மற்றும் ஜான்சி இராச்சியங்களை (1854) ஆங்கிலேயே அரசுடன் இணைத்தல்.
பேரர் பகுதி (1853) (Berar Province), தஞ்சாவூர் மராத்திய அரசு, 1855 மற்றும் அயோத்தி அரசு (Awadh) (1856) மன்னராட்சி நாடுகளை இணைத்தல்.
தந்தி சேவையை தொடங்குதல். (1855)
கானிங் பிரபு
28 பிப்ரவரி 1856 – 1 நவம்பர் 1858
விதவை மறுமணச் சட்டமியற்றல் (25 சூலை 1856)
சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 ஒடுக்கியது. (10 மே 1857 – 20 சூன் 1858)
1858ல் பிரித்தானிய இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றியது.
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் இந்தியாவில் கம்பெனி ஆட்சியை கலைத்தல் பின் 1858ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் பிரித்தானிப் பேரரசு ஆட்சி துவங்கியது.
சென்னைப் பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகம்ஆகியவைகள் 1858ல் நிறுவப்பட்டது.
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் வீழ்ச்சி
கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் அமைந்த கம்பெனி ஆட்சியின் நிர்வாகத்தில் ஊழல் பெருகியதாலும், கடுமையான பஞ்சத்தாலும் கம்பெனியின் நிதி திவாலா நிலைக்குச் சென்றதாலும், சிப்பாய்க் கிளர்ச்சிக்குப்பின் 1858ஆம் ஆண்டின் இறுதியில், கிழக்கிந்திய நிறுவனத்தை கலைக்கப்பட்டதால், இந்தியாவில் கம்பெனி ஆட்சி முடிவுற்று, பிரித்தானியா பேரரசின் கீழ் பதவி வகித்த வைஸ்ராய் தலைமையில் இந்திய துணைக் கண்டத்து ஆட்சியை தனது நேரடிக் கட்டுக்குள் கொண்டு வந்தது.
Comments
Post a Comment