Skip to main content

தமிழ்நாடு

| சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது | நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930) | இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி | பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி | தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் | தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் | தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி | சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர் | சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார் | சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன் | ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975) | தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996) | தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை | தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி | தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS | தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண் | தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள் | தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) –கீசக வதம் (1916) | மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்) | தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் –காளிதாஸ் (1931) | தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும் | தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873) | தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882) | தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856) | இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு) | இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு) | தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்) | மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர் | மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ) | மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934) | மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது) | மிகப் பழமையான அணை – கல்லணை | மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை, முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை) | மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்) | மேற்குத் தொடர்ச்சி மலைகள் - நீலகிரி மலை, ஆனை மலை, பழனி மலை, கொடைக்கானல் குன்று, குற்றால மலை, மகேந்திரகிரி மலை, அகத்தியர் மலை, ஏலக்காய் மலை, சிவகிரி மலை, வருஷநாடு மலை | கிழக்கு தொடர்ச்சி மலைகள் - ஜவ்வாது மலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, பச்சை மலை, கொல்லி மலை, ஏலகிரி மலை, செஞ்சி மலை, செயிண்ட்தாமஸ் குன்றுகள், பல்லாவரம், வண்டலூர் | முக்கிய நதிகள் - காவேரி – 760 கி.மீ, தென்பெண்ணை – 396 கி.மீ, பாலாறு – 348 கி.மீ, வைகை – 258 கி.மீ, பவானி – 210 கி.மீ, தாமிரபரணி – 130 கி.மீ | தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் |தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி | தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர் | மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர் | மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர் | மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி) | மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் ) | மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர் | மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை | மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை | மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்) | மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் | மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம் | மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி) | மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m) | மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ] | (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km ) | மிக நீளமான ஆறு – காவிரி (760 km) | மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2) | மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2) | மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம் | கோயில் நகரம் – மதுரை | தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி) | (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம் | மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி


தமிழ்நாடு பொது தகவல்கள்

| இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது? - 7வது இடம் | இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? - 23 வது இடம் | இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? - 16வது இடம் | இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? - 15வது இடம் | இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? - 14வது இடம் | சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது? - மதுரை | சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? - 2004 | தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு? - 72993 | தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது? - சென்னை | தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு? - 1076 கி.மீ | தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது - 1986 | தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது? - கன்னியாக்குமரி (92.14 சதவீதம்) | தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்? - சென்னை (23,23,454) | தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? - சென்னை (46,81,087) | தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? - 68.45 ஆண்டுகள் | தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை? - 13 மாவட்டங்கள் | தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு? - 234 | தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு? - 1 | தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு? - 12 துறைமுகங்கள் தமிழகத்தில் உள்ளன. | பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது? - சென்னை | தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? - 71.54 ஆண்டுகள் | தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு? - 15979 | தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு? - 561 | தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு? - 146 | தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு? - 18 | தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு? - 39 | தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது? - தர்மபுரி (64.71 சதவீதம்) | தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? - பெரம்பலூர் 5,64,511 | தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்? - சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்) | தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது? - நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்) | தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை? - 32 | தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது? - அரியலூர் | தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது? - திருப்பூர் | தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்?- 80.33 சதவீதம் | தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு - 17.58 சதவீதம் | தமிழகததின் மாநில விலங்கு எது?- வரையாடு | தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது? - சென்னை, எண்ணூர், தூத்துக்குடி | தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது? - காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி | தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது? - 1. சென்னை 2. கோவை 3. மதுரை 4. திருச்சி 5 தூத்துக்குடி 6 சேலம் | தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு? - 999 பெண்கள் (1000 ஆண்கள்) | தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை? - 1. நீலகிரி 2. சேலம் 3. வேலூர் 4. கன்னியாக்குமாரி | தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை? - 1. திருவாரூர் 2. இராமநாதபுரம் 3. தூத்துக்குடி 4. கடலூர் | தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது? - மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997) | தமிழ்நாட்டின் இணைய தளம் எது? - www.tn.gov.in | தமிழ்நாட்டின் தலைநகரம் எது? - சென்னை | தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு? - ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர் | தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது? - திருவில்லிபுத்தூர் கோபுரம் | தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக? - கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல் | தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது? - நீராடும் கடலுடுத்த | தமிழ்நாட்டின் மாநில நடனம் எது? - பரத நாட்டியம் | தமிழ்நாட்டின் மாநில பறவை எது? - மரகதப்புறா | தமிழ்நாட்டின் மாநில மரம் எது? - பனைமரம் | தமிழ்நாட்டின் மாநில மலர் எது? - செங்காந்தர் மலா் | தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது? - கபடி | தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு? - 1,30,058 ச.கி.மீ | தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு? - 7,21,38,958 ஆண் 36158871 பெண் 35980087


பாரத ரத்னா விருது பெற்றவர்களின் விபரங்கள்

||| சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) - 1954 | சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - 1954 | சி.வி. ராமன் - 1954 பகவன் தாஸ் - 1955 | விஸ்வேஸ்வரய்யா - 1955 | ஜவாஹர்லால் நேரு - 1955 | கோவிந்த வல்லப பந்த் - 1957 | தோண்டோ கேசவ் கார்வே - 1958 | பிதான் சந்திர ராய் - 1961 | புருஷோத்தம் தாஸ் டாண்டன் - 1961 | ராஜேந்திர பிரசாத் - 1962 | ஜாகிர் ஹுசேன் - 1963 | பாண்டுரங்க் வாமன் கனே - 1963 | லால் பகதூர் சாஸ்திரி - 1966 | இந்திரா காந்தி - 1971 | வி.வி. கிரி - 1975 | கே. காமராஜ் - 1976 | அன்னை தெரசா - 1980 | ஆச்சார்ய வினோபா பாவே - 1983 | கான் அப்துல் கஃபார் கான் - 1987 | எம்.ஜி. ராமச்சந்திரன் - 1988 | பி.ஆர். அம்பேத்கர் - 1990 நெல்சன் மண்டேலா - 1990 | ராஜீவ் காந்தி - 1991 | வல்லபபாய் படேல் - 1991 | மொரார்ஜி தேசாய் - 1991 | மௌலானா அபுல் கலாம் ஆஸாத் - 1992 | ஜே.ஆர்.டி. டாடா - 1992 | சத்யஜித் ராய் - 1992 | குல்ஜாரிலால் நந்தா - 1997 | அருணா ஆசப் அலி - 1997 | ஏ.பி.ஜே. அப்துல் கலாம் - 1997 | எம்.எஸ். சுப்புலட்சுமி - 1998 | சிதம்பரம் சுப்ரமணியம் - 1998 | ஜெயபிரகாஷ் நாராயண் - 1999 | அமர்த்தியா சென் - 1999 | கோபிநாத் போர்தோலோய் - 1999 | பண்டிட் ரவிசங்கர் - 1999 | லதா மங்கேஷ்கர் - 2001 | உஸ்தாத் பிஸ்மில்லா கான் - 2001 | பீம்சேன் ஜோஷி - 2009 | சி.என்.ஆர். ராவ் - 2014 | சச்சின் டெண்டுல்கர் - 2014 | மதன் மோகன் மாளவியா - 2015 | வாஜ்பாய் - 2015 ||||


தமிழ்நாட்டிலுள்ள சாரணாலயங்கள்

| முண்டந்துறை (திருநெல்வேலி)-1962, கோடிக்கரை (நாகப்பட்டிணம்)-1967, களக்காடு (திருநெல்வேலி)-1976, வல்லநாடு வெளிமான் (தூத்துக்குடி)-1987, மலை அணில் (விருதுநகர்)-1988


தமிழ்நாட்டிலுள்ள பறவைகள் சரணாலயம்

| வேடந்தாங்கல் (காஞ்சிபுரம்)-1962, வேட்டங்குடி (சிவகங்கை)-1977, கரிக்கிலி (காஞ்சிபுரம்)-1989, புலிகாட் ( திருவள்ளூர்)-1980, காஞ்சிராங்குளம் (இராமநாதபுரம்)-1989, சித்ராங்குடி (இராமநாதபுரம்)-1989, உதய மார்த்தாண்டம் (திருவாரூர்)-1991, வடுவூர் (திருவாரூர்)-1991, கூத்தங்குளம் (திருநெல்வேலி)-1994, கரைவெட்டி (பெரம்பலூர்)-1997, வெல்லோடி (ஈரோடு)-1997, மேல்செவ்வனூர், கீழ்செவ்வனூர் (இராமநாதபுரம்)-1998


தமிழ்நாட்டிலுள்ள தேசிய பூங்காக்கள்

| முதுமலை (நீலகிரி)-1940, கிண்டி (சென்னை)-1976, மன்னார் வலைகுடா (இராமநாதபுரம்)-1980, இந்திராகாந்தி பூங்கா (கோயம்ப்த்தூர்)-1976, முக்குருத்தி (நீலகிரி)-1990


முக்கிய தினங்கள்

| குடியரசு தினம் - ஜனவரி 26 | உலக காசநோய் தினம் - பிப்ரவரி 25 | தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28 | உலக மகளிர் தினம் - மார்ச் 8 | நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15 | உலக பூமி நாள் - மார்ச் 20 | உலக வன நாள் - மார்ச் 21 | உலக நீர் நாள் - மார்ச் 22 | தேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5 | உலக சுகாதார நாள் - ஏப்ரல் 7 | பூமி தினம் - ஏப்ரல் 22 | உலக புத்தகநாள் - ஏப்ரல் 23 | தொழிலாளர் தினம் - மே 1 |உலக செஞ்சிலுவை தினம் - மே 8 | சர்வ தேச குடும்பதினம் - மே 15 | உலக தொலைத்தொடர்பு தினம் - மே 17 | தேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21 (ராஜிவ் காந்தி நினைவு நாள்) | காமன்வெல்த் தினம் - மே 24 | உலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26 | உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11 | கல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - ஜூலை 15 | ஹுரோஷிமா தினம் - ஆகஸ்ட் 6 | நாகசாகி தினம் - ஆகஸ்ட் 9 | சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15 | தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29 | ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5 | உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8 | சர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 16 | உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27 | உலக விலங்கு தினம் - அக்டோபர் 4 | விமானப்படை தினம் - அக்டோபர் 8 | உலக தர தினம் - அக்டோபர் 14 | உலக உணவு தினம் - அக்டோபர் 16 | ஐ.நா.தினம் - அக்டோபர் 24 | குழந்தைகள் தினம் - நவம்பர் 14 | உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1 | உடல் ஊனமுற்றோர் தினம்- டிசம்பர் 3 | இந்திய கப்பற்படை நாள் - டிசம்பர் 4 | கொடிநாள் - டிசம்பர் 7 | சர்வ தேச விமானப்போக்குவரத்து தினம் - டிசம்பர் 9 | மனித உரிமை தினம் - டிசம்பர் 10 | விவசாயிகள் தினம் - டிசம்பர் 23 |


####அறிவோம்####

| வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது. | தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன. | சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக். | பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார். | `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன். | ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது. | `வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால். | சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ். | `பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி. | சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள். | `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின். | இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில் அமைந்துள்ளது. | முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன். | `திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார். | பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது. | குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா. | இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது. | பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா. | முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா. | `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா. | இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி. | சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும். | ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது. | கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது. | நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும். | ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும். | பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது. | மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும். | நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது. | ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது. | ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும். | நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல். | நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது. | பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர். | ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும். | தந்தி அனுப்புவதற்கான சங்கேதக்குறியை, 1837-ம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார். | குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது.* தீப நகரம் என்று அழைக்கப்படுவது, மைசூர். | நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். | பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன. | அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது. | ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தவர், சர். சி.வி.ராமன். | அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி, அன்னை தெரசா.* கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு, பிரான்சு. | பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர். | மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி, ரெயின்கேஜ். | விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின். | ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள். | கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது. | இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் - திமிங்கலம். | விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல். | உலகின் வெண்தங்கம் - பருத்தி. | இந்தியாவின் முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு. | இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வரா கோவில் (கர்நாடகா). | ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா. | விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையது அகமது கான். | `குடியரசு' என்னும் நாளிதழை நடத்தியவர், பெரியார். | வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911. | இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர். | தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம். | சைக்கிளைக் கண்டுபிடித்தவர், மாக்மில்லன். | திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம். | `தாவர வகைப்பாட்டியலின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ். | ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள். | இந்திய துணை ஜனாதிபதியின் பதவிக்காலம், 5 ஆண்டுகள். | தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம், ஆனைமுடி.* நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை, புறா. | உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை. | பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி. | தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது. | `விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி.* பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால். | பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு. | நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. | அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ். | `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன. | ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி. | வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர். | உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919. | பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன். | பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது. | `உயிரின் ஆறு' என அழைக்கப்படுவது, ரத்தம். | ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும். | பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள். | ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன். | நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1986. | தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் சுமார் 1000 கிலோமீட்டர். | நிதி ஆணையத்தின் பதவிக்காலம், 5 ஆண்டுகள். | நம்முடைய கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன. | போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின். | அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27. | `ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர், ஜோசப் ஸ்டாலின். | தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர், டீனியா. | செஸ் விளையாட்டு தோன்றிய நாடு, இந்தியா. | வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன. | சிங்கப்பூரின் பழைய பெயர், டெமாஸெக். | வாவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர், ஜசக் நிïட்டன். | `திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், கால்டுவெல். | மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு, 1761. | வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது. | சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும். | இந்தியாவிலேயே அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம், கேரளா. | `செவாலியர்' விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ். | வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர், ஜார்ஜ் ஈஸ்ட்மன். | ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா. | `அரபிக்கடலின் ராணி' என்று வர்ணிக்கப்படும் நகரம், கொச்சி. | மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர். | `பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம், நிïயார்க். | `இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று போற்றப்படுபவர், ஏ.பி.ஜே. அப்துல்கலாம். | நீரைவிட ரத்தத்துக்கு 6 மடங்கு அடர்த்தி அதிகம். | ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம். | ஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம். | உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம், ஜெனீவா. | யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள். | உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்). | தெற்காசியாவின் மிகப்பெரிய காய்கறிச்சந்தை, ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல் மாவட்டம்) உள்ள காந்தி மார்க்கெட். | உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு, ஜப்பான். | புத்தர் பிறந்த இடம், லும்பினி. | `புனித நகரம்' என்று அழைக்கப்படுவது, ஜெருசலேம். | `பூகோள சொர்க்கம்' எனப்படும் இடம், காஷ்மீர் (இந்தியா). | உலகின் மிகப்பெரிய தீபகற்பம், அரேபியா. | தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு, அமெரிக்கா. | ஜப்பான் நாட்டில் தான் அதிக அளவில் ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன. | `கிரையோஜெனிக் என்ஜின்கள்', விண்வெளி ஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன. | சராவதி ஆற்றின் `ஜோக்' அருவி தான் (கர்நாடகா), இந்தியாவிலேயே மிக உயரமானது. | மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், `ராப்லேசியா'. | பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப்போன்று இரண்டு மடங்கு நீளமாக இருக்கும். | 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் பொருள், கண்ணாடி | 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம் லூயி. | `லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன். | `வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது, ஏலக்காய். | பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா. | இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், பொக்ரான் (ராஜஸ்தான்). | யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன. | நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது. | உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன. | இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன. | எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள். | முதலைக்கு 60 பற்கள் உண்டு. | உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா. | வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு'. | இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட். | இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர். | `கறுப்பு ஈயம்' எனப்படும் தாது, கிராபைட். | கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு'. | காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர். | `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு. | `திருமறைக்காடு' என்று அழைக்கப்படும் ஊர், வேதாரண்யம். | `பெருலா' என்ற செடியில் இருந்து வெளிவரும் ஒரு திரவப்பொருள் தான், பெருங்காயம். | கரிகால் சோழ மன்னனின் இயற்பெயர், திருமாவளவன். | உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது, ரேடியம். | மின்னூட்டத்தினை தேக்கி வைக்கும் சாதனம், மின்தேக்கி. | `சுங்கம் தவிர்த்த சோழன்' எனப் பெயர் பெற்ற மன்னன், முதலாம் குலோத்துங்க சோழன். | பாம்பு, நாக்கினால் வாசனையை நுகரும் திறன் கொண்டது. | கார்கள் அதிகமுள்ள நகரம், நியூயார்க். | யானை தினமும் சுமார் 300 பவுண்டு அளவுள்ள உணவை உட்கொள்ளும். | நாய்க்கு வியர்ப்பது கிடையாது. | `பறவைத்தீவு' என அழைக்கப்படுவது, நியூசிலாந்து. | நாகலாந்தில் ஒரே ஒரு ரெயில் நிலையம் தான் உள்ளது. | வீட்டிற்கு ஒரு பியானோ உள்ள நாடு, இங்கிலாந்து. | பழங்களின் அரசன் எனப்படுவது, மாம்பழம். | எலும்புக்கூடு இல்லாத உயிரினம், ஜெல்லி மீன்.* `ஆகஸ்டு புரட்சி' என அழைக்கப்படுவது, வெள்ளையனே வெளியேறு இயக்கம். | `வாதாபி கொண்டான்' என்று அழைக்கப்படும் மன்னன், நரசிம்ம பல்லவன். | தென்னிந்தியாவின் உயரமான மலைச்சிகரம், தொட்டபெட்டா. | வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு, கார்பன் மோனாக்சைடு. | `கூத்தராற்றுப்படை' என்று குறிப்பிடப்படும் சங்க இலக்கியம், மலைபடுகடாம். | டெல்லி யூனியன் பிரதேசத்தின் முதல் பெண் முதல்வர், சுஷ்மா சுவராஜ். | முன்னங்கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம், வெட்டுக்கிளி. | `உயிரியல் கவிஞர்' என்று அழைக்கப்படுபவர், சர் ஜெகதீஸ் சந்திரபோஸ். | ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. | பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும். | வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன. | மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும். | உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கரியமில வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த ஒரு வாசனை மட்டுமே தெரியும். | ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும். | சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து, தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன. | தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும். | உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரியசக்தி, 2 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம். | கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952. | மனித உடலில் அதிகளவில் உள்ள உப்பு, கால்சியம். | கடல்நீரில் உள்ள உப்பின் அளவு, 35 சதவீதம். | நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு, 1962. | ஒரு நாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம். | தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன. | மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவை மொட்டுகள் உள்ளன. | செஸ் போர்டில் உள்ள வெள்ளைக் கட்டங்களின் எண்ணிக்கை, 32. | ஒரு பென்சிலைக் கொண்டு சுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு கோடு வரைய முடியும். | மின்சார பல்பில் `இனர்ட்' என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது. | மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன. | மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையுமிடம், நீலகிரி. | இலைகளை உதிர்க்காத மர வகை, ஊசியிலை மரங்கள். | இளம்வயதில் ஓவியராக இருந்தவர், ஹிட்லர். | ஓர் எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி முட்டைகள் வரை இடும். | சில வகையான ஆந்தைகளுக்கு கொம்பு போன்ற தோற்றம் உண்டு. | உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர், ஜுலியஸ் சீசர். | தபால்பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் முதன்முதலில் 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. | செவ்வாய்க் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும். | இந்திய நாட்டுப் பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது; ஆப்பிரிக்க தேசத்துப் பெண் யானைகளுக்குத் தந்தம் உண்டு. | 24 மணி நேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.* அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம், 8 ஆயிரத்து 381 மீட்டர்கள். | ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம், சீர்கான். | முதன்முதலில் இந்தியாவின் உதவி ஜனாதிபதியாய் இருந்தவர், டாக்டர் ராதாகிருஷ்ணன். | ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருதை இரண்டு முறை பெற்ற இந்திய எழுத்தாளர், கே.கே. நாயர். | உலக சிகரங்களில், மூன்றாவது பெரிய சிகரம், கஞ்சன் ஜங்கா. | கியூபாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர், பிடல் காஸ்ட்ரோ. | சர் ஐசக் நிïட்டன் உருவாக்கிய கணித வகை, கால்குலஸ். | செங்குத்தான நிலையிலேயே நீந்திச் செல்லும் ஆற்றல் உள்ள மீன், கடற்குதிரை. | அமெரிக்க காந்தி என அழைக்கப்பட்டவர், மார்ட்டின் லூதர்கிங். | ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு, லிட்டில்பாய். | நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர் கிரான்ஸ்டட்.மனிதனைப் போலவே நடக்கக் கூடிய பறவை, பெங்குவின். | புறாப் பந்தயம் தோன்றிய இடம், பெல்ஜியம். | ஒலிம்பிக் போட்டியில் கபடி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952. | ஒருகாலத்தில் மாமன்னர்கள் மட்டுமே சாப்பிடும் பழமாக அத்தி இருந்தது. | துருப்பிடிக்கும் போது இரும்பின் எடை கூடுகிறது. | நெருப்புக்கோழியை, `ஒட்டகப்பறவை' என்றும் அழைக்கிறார்கள். | காகம் இல்லாத நாடு, நியூசிலாந்து. | பாம்பு இல்லாத தீவு, ஹவாய். | திரையரங்கு இல்லாத நாடு, பூட்டான். | எரிமலை இல்லாத கண்டம், ஆஸ்திரேலியா. | தலை இல்லாத உயிரினம், நண்டு. | அனிமாமீட்டர், காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது. | உலகிலேயே முதன்முதலில் அமெரிக்காவில் தான் கண்வங்கி தொடங்கப்பட்டது. | சென்னை விமான நிலையம், 1945-ம் ஆண்டு கட்டப்பட்டது. | உலகின் மிகப்பெரிய நகரம், ஷாங்காய். | புனிதபூமி என்று அழைக்கப்படுவது, பாலஸ்தீனம். | அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா தொடங்கப்பட்ட ஆண்டு, 1958. | `குளோரின்' என்பது கிரேக்க மொழி வார்த்தையாகும். | `நவீன இந்தியாவின் தந்தை' என்று போற்றப்படுபவர், ராஜாராம் மோகன்ராய். | தீக்குச்சியைக் கண்டுபிடித்தவர், லேண்ட் ஸ்டார்ம். | குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு, அம்மோனியா. | உலகின் முதல் மின்னணு கம்ப்ïட்டர், எனியாக். | எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம், பிளாட்டினம். | `இங்க் பேனா'வைக் கண்டுபிடித்தவர், லீவிஸ் வாட்டர்மேன். | இந்திய நீச்சல் தலைமைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு, 1948. | மிக விரைவில் ஆவியாகும் திரவம், ஆல்கஹால். | காற்றிற்கும் அழுத்தம் உண்டு எனக் கண்டுபிடித்தவர், டாரி செல்லி. | `அமைதியின் மனிதர்' என்று அழைக்கப்படுபவர், லால்பகதூர் சாஸ்திரி. | நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது. | பச்சையம் இல்லாத தாவரம், காளான். |நாட்டின் பெயரில் அமைந்துள்ள தனிமங்கள் அமெரீஷியம், பிரான்சிஷியம், ஜெர்மேனியம், பொலோனியம். | மார்ச் 21-ந் தேதியிலும், செப்டம்பர் 23-ந் தேதியிலும் பகலும், இரவும் சமமாக இருக்கும். | முட்டையின் ஓட்டில் உள்ள வேதிப்பொருள், கால்சியம் கார்பனேட். | மோரின் புளிப்புச் சுவைக்கு காரணம், லாக்டிக் அமிலம். | வைட்டமின் பி மற்றும் சி இரண்டும் நீரில் கரையக்கூடியவை. | இந்தியாவின் தலைசிறந்த பறவையியல் நிபுணர், சலீம் அலி. | சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன. | முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே விலங்கு, மனிதன் மட்டுமே. | தேனில், 31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது. | ஒரு மைக்ரான் என்பது, ஒரு மீட்டர் அளவை பத்து லட்சமாகப் பிரித்தபின் கிடைக்கும் ஒரு பகுதியாகும். | ஏப்ரல் முதல் தேதியை அனைவரும் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள். ||||||||||||| சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை இங்கு பார்ப்போம். 1793 - ஜப்பானில் உள்ள உன்சென் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 ஆயிரம் பேர் இறந்தனர். | 1935 - இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. | 1946 - மலாய் கூட்டமைப்பு உருவானது. | 1948 - பரோ தீவுகள், டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றன. | 1973 - புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம், இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது. | 1976 - ஆப்பிள் கணினி தொடங்கப்பட்டது. | 1979 - 98 சதவீத மக்கள் ஆதரவுடன் இஸ்லாமியக் குடியரசாகியது, ஈரான். | 2001 - நெதர்லாந்து, சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது. | 2004 - ஆயிரம் மெகாபைட் கொள்ளளவு கொண்ட ஜி-மெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது, கூகுள். | பறக்கத் தெரியாத பறவை, பெங்குவின். | கார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடு, ஜப்பான். | ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை உருவாக்கியவர், நேதாஜி. | கரையான் அரிக்காத மரம், தேக்கு. | ஏலக்காய்ச்செடி, சுமார் 40 ஆண்டுகள் வரை பலன் தரும். | அறிவு வளர்ச்சி அதிகமுள்ள கடல் பிராணி, டால்பின். | `திரவத்தங்கம்' என்று அழைக்கப்படுவது, பெட்ரோல். | உலகின் முதல் கண்வங்கி, அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் தொடங்கப்பட்டது. | கண்ணீர்ச் சுரப்பின் பெயர், லாக்ரிமல் கிளாண்ட்ஸ். | ரஷிய நாட்டு நாணயத்தின் பெயர், ரூபிள். | கணிதத்தில் பூஜ்யத்தைச் (0) சேர்த்தவர், ஆரியபட்டர். | 24 மணி நேரத்தில் (ஒருநாள்) சுமார் 3 அடி உயரம் வளரும் திறன் மூங்கிலுக்கு உண்டு. | ஆக்டோபசுக்கு 3 இதயங்கள் உள்ளன. | பெரும்பாலான உதட்டுச்சாயங்களில் (லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப் படுகின்றன. | அட்டைப்பூச்சிகளுக்கு 4 மூக்குகள் உள்ளன. | நீலநிறத்தைப் பார்க்க முடிந்த ஒரே பறவை, ஆந்தை. | கால் நகங்களைவிட, கை நகங்கள் 4 மடங்கு வேகத்தில் வளர்கின்றன. | மனிதனின் தொடை எலும்புகள், கான்கிரீட் கலவையை விட வலிமை வாய்ந்தவை. | நெருப்புக்கோழியின் கண்கள், அதன் மூளையைவிடப் பெரியதாக இருக்கும். | டால்பின்கள், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும். | 13-ம் நூற்றாண்டில், ஞானதேவ் என்ற கவிஞர் தான் `பரமபத' விளையாட்டைக் கண்டுபிடித்தார். | நத்தைகள், 3 ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை பெற்றவை. | ராணி எறும்புகள், 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும். | மனிதர்களின் தோலுக்கும், தசைக்கும் இடையிலான ஒட்டுதல் தான் கன்னத்தில் விழும் குழிக்கு காரணம். | இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை, பிரித்வி. |


இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு


                                        இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு இந்திய சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பினை பற்றியது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள்
  • சிவகங்கை இராணி வேலு நாச்சியார் ஆட்சிக்காலம் கி.பி 1780- கி.பி 1783சிவகங்கை தலைநகரான காளையார்கோயிலை கிழக்கிந்திய கம்பெனியின் படை முற்றுகையிட்டபோது சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதத்தேவரின் மனைவியான வேலுநாச்சியார் வீரத்தோடு எதிர்த்ததன் மூலம் தமிழக மகளிர் வீரத்தில் குறைந்தவர்கள் இல்லையென்பதை நிரூபித்தார். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையும் வேலுநாச்சியாருக்கே உரித்தாகும்.
  • 1806-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி அதிகாலையில் வேலூர் படைவீரர்கள் புரட்சி செய்தனர்,பெண்களும் பங்கு கொண்டனர். 
  • ராணி சென்னம்மா கர்நாடக மாநிலம் 1824-1829 
  • ராணி லட்சுமிபாய் வட இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடி பிரித்தானியருக்கு எதிராகப் படைகளை திரட்டினார். 1857ம் ஆண்டு, முதல் விடுதலைப் போரில் தீவிரமாக குதித்தார்.
  • ஜல்காரி பாய் 1857 - 58 ஆங்கிலேய அரசை ஏமாற்றும் நோக்கத்தில், ஜல்காரி பாய், ராணி லக்ஷ்மிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு, படைக்குத் தலைமை தாங்கினார். 
  • ராணி அவந்திபாய் நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்க உறுதி பூண்டார் அவந்திபாய். நான்காயிரம் வீரர்களைத் திரட்டிக் கொண்டு 1857 ஆம் வருடம், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படையெடுத்துப் புறப்பட்டார் 
  • ஜானகி ஆதி நாகப்பன் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணி படையில் துணைத் தளபதியாகப் பதவி உயர்ந்தவர். பர்மா இந்திய எல்லையிற் துப்பாக்கி ஏந்தி ஒரு போர் வீராங்கனையாகக் களம் கண்டவர். 
  • அன்னி பெசண்ட் ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல்' என்ற வாரப் பத்திரிகையை 1913 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். 1914 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். 
  • சரோஜினி நாயுடு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார். 
  • ருக்மிணி லட்சுமிபதி 1930ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார் 
  • கஸ்தூரிபாய்காந்தி மகாத்மாகாந்தியின் துணைவியார். 
  • விஜயலக்குமி பண்டிட் ( ஜவகர்லால் நேருவின் சகோதரி) 
  • சுசேதாகிருபளானி (ஆச்சாரிய கிருபளானியின் துணைவியார்) 
  • மீராபென் (1892 – 1982) ஆங்கிலேய பெண்மணி இந்தியாவில் தங்கி இருந்தபோது மகாத்மாகாந்தியின் உதவியாளராக பணிபுரிந்தார் ,கிருஷ்ண பக்தையான இவருக்கு மகாத்மாகாந்தி வழங்கிய பட்டம் மீராபாய். 

சுதேசி மற்றும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம்


                                                                             சிதம்பரனார் அவர்கள் சிறையில் பல கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டார். அவரின் தண்டனையைக் குறைக்கும் பொருட்டு அவர் மனைவி மீனாட்சியம்மாள் ஆளுநர், வைசிராய் மற்றும் இங்கிலாந்து மன்னருக்கு தந்தியும், மனுவும் அனுப்பி வேண்டுகோள் விடுத்தார். தன் கணவரின் விடுதலையின் பொருட்டு வழக்கு நடத்தியதால் தங்கள் நிதிநிலை மோசமாக உள்ளதாகவும், இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவர் விடுதலை பெறும் வாய்ப்புள்ளதாகவும் அதற்காக ரூ.10,000 தேவைப்படும் என்றும், தற்போதைய இயலாத சூழ்நிலையை தெரிவித்தும், உதவி கேட்டு 1908-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்திய செய்தியை படிப்போர் யாவரும் கண்கலங்கும்படியாக இருந்தது.


                                                 சிறையில் அவரை படாதபாடு படுத்தினர். அதனை தாங்கிகொள்ள இயலாதவராகி சிதம்பரனார் தன்னை தண்டனைக்கேற்ப அந்தமான் தீவுக்கே அனுப்புமாறு வைஸ்ராய்க்கு மனுசெய்தார். தன் கணவர் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்து வேதனையுற்ற மீனாட்சியம்மாள் தன் கணவரை தமிழ்நாட்டுச் சிறைகளில் வைத்து கொடுமை படுத்துவதைவிட அந்தமானுக்கே அனுப்புமாறு இங்கிலாந்து மன்னருக்கே மனுசெய்தார்.ஒரு தேச பக்தனின் மனைவியின் துயரத்திற்கு இவ்வம்மையாரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு. இவ்வாறுதான் ஒவ்வொரு தேசபக்தனின் மனைவியரும் நாட்டுப்பணிக்காக தங்கள் கணவன்மார்களை அர்ப்பணித்துவிட்டு துயர வாழ்க்கை வாழ்ந்தனர். தேசியகவி சுப்பிரமணிய பாரதியின் மனைவி செல்லம்மாள் பட்ட துயரம் எழுத்தால் வடிக்க முடியாதது.


சுயஆட்சி இயக்கம்


                                           சமூக கட்டுப்பாட்டிற்குள்ளாகி அடைப்பட்டுக் கிடந்த தமிழக மகளிரை அரசியலில் ஈர்த்தது அன்னிபெசன்ட் என்ற அயர்லாந்து அம்மையாரால் காங்கிரஸின் ஆதரவோடு 1916-இல் சென்னையில் தொடங்கப்பட்ட சுயஆட்சி இயக்கமாகும். ஆங்கில அரசை எதிர்த்து இந்தியா சுய ஆட்சி பெறவேண்டுமென்று போர்க்கொடி தூக்கியமையால் இவர் சிறை வைக்கப்பட்டார். இவ்வம்மையாரின் கைது ஏராளமான பெண்களை இவர் இயக்கத்தில் சேருமாறு தூண்டியது. அதில் குறிப்பிடத் தக்கவர் பம்பாய் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த மாணவி சிவகாமு அம்மா ஆவார். தான் மருத்துவராகி நாட்டிற்கு சேவை செய்வதைவிட இப்போராட்டத்தின் மூலம் ஏராளமான தேச சேவை செய்ய முடியமென்றுணர்ந்து படிப்பை விட்டுவிட்டு 1917-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வந்தார்.அம்மையார் கைதினை கண்டித்து சென்னையைச் சேர்ந்த சுமார் 300 பெண்கள் திருமதி டாரதி ஜீன ராசதாஸா தலைமையில் செம்டம்பர் 14-ஆம் நாள் பொதுக் கூட்டம் கூட்டினர். அக்கூட்டத்தில் சிவகாமு அம்மாள் சொற்பொழிவு ஆற்றினார். அதைத் தொடர்ந்து அன்னிபெசன்ட் அம்மையார் படமும் சுயஆட்சி கொடியும் கையில் ஏந்தி தடை உத்தரவையும் மீறி பெண்கள் ஊர்வலமாகச் சென்றார்கள். பின்னர் அம்மையார் விடுதலை பெற்று சென்னை வந்தபோது ஏராளமான பெண்கள் அவரை சூழ்ந்து வாழ்த்துத் தெரிவித்தனர்.


ஒத்துழையாமை இயக்கம்


                                                  1920-ஆம் ஆண்டு காந்தியின் தலைமையில் நாடு ஒத்துழையாமை இயக்கத்தை தழுவியது. இப்போராட்டம் சத்தியம், அகிம்சை, சாத்வீக எதிர்ப்பு என்ற அடிப்படையில் அமைந்ததால் காந்தியடிகள் பெண்கள் கலந்து கொள்வதை விரும்பினார். பெண்கள், காங்கிரஸ் திட்டங்களான அந்நியத் துணிகளைப் புறக்கணித்தல், அத்துணிக் கடைகள் மற்றும் மதுபானக்கடைகள் இவற்றை மறியல் செய்தல், கதர் துணி நெய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். ஒத்துழையாமை இயக்கத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது மதுபான கடைகள் மறியலாகும். இப்போராட்டத்தை ஈரோட்டைச் சேர்ந்த ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முன்னின்று நடத்தினார். போராட்டம் வெற்றிகரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்தபோது சென்னை அரசு அவரையும் மற்றும் பல தொண்டர்களையும் கைது செய்து சிறையிலடைத்தது. பின் அவர் மனைவி நாகம்மாளும், அவர் சகோதரி கண்ணம்மாளும் போராட்டத்தை ஈரோட்டில் தொடர்ந்து நடத்தினர். இப்போராட்டத்தை நிறுத்திவிடலாமா என்று காங்கிரஸார் காந்தியடிகளிடம் கேட்டபோது, அவர் "கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்தி விடுவது என்பது என் கையில் இல்லை, அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் தான் இருக்கிறது" என்று பதிலளிக்குமளவுக்கு இப்பெண்மணிகள் தீவிரமாக ஈடுபட்டனர். கதராடை உடுத்தினர். ஈ.வே.ரா தமது 80 வயது தாயாரையும் கதர் உடுத்தச்செய்தார்.


                                       இவ்வியக்கத்தின் இன்னொரு அம்சம், கதர் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் அந்நியத் துணிகளைப் புறக்கணித்து அரசுக்கு பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணவேண்டுமென்பதோடு, நம்மக்கள் பொருளாதார தன்னிச்சை பெறவேண்டும் என்பதாகும். இதை மிகச் சிறப்புடன் நிறைவேற்றியவர் மதுரையைச் சேர்ந்த பத்மாசனி அம்மாள் ஆவார். அம்மையார் தன் கணவர் ஸ்ரீனிவாச வரதன் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு கைதானவுடன் அவர் நடத்தி வந்த பாரத ஆசிரமத்தை திறம்பட நடத்தியதோடு, கதர் விற்கவும், பெண்களை காங்கிரஸ் அங்கத்தினராகச் சேர்க்கவும், பொதுக் கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்றவும் செய்து வரலானார். தனது கணவர் சிறையிலிருந்து விடுதலையாகி வரும் வரை ஆபரணங்களை கழற்றி வைத்து விட்டார். ஒரு வேளை சாப்பாடு, அதுவும் தனக்கு சாப்பாட்டிற்கு தேவையான வசதியிருந்தும் காலையிலெழுந்து நூல்நூற்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் சாப்பிடுவார். மாலையில் வீடு வீடாகச் சென்று கதர் விற்பார். கதர் நெய்வதும், விற்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய செயல்களாக இருந்தும், அரசின் ஆணையை மீறி அரசாங்க பதவியிலிருப்பவர்களாயிருந்தாலும் கண்டிப்பாக ஒரு கஜம் துணியாவது வாங்கும்படி செய்து விடுவார். பெண்களை ஒரு முழம் ரவிக்கைத் துணியாவது வாங்கும்படி தூண்டுவார். இவர் சிறந்த பேச்சாளர். தன் சொற்பொழிவுகளில் சில சமயங்களில் 1857-ஆம் ஆண்டு புரட்சி வீரர்களின் சரித்திரங்களை உணர்ச்சியுடன் எடுத்துச் சொல்வார்.ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றி தமிழ் மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியதோடு ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்களை காங்கிரஸ் அங்கத்தினர்களாகவும் ஆக்கினார்..

                                             கதர் உற்பத்தியை பெருக்க வேண்டுமென்று 1924-ஆம் ஆண்டில் இவ்வம்மையாரும் மேலும் தாயம்மாள், திருமதி. ஜோஸப், திருமதி. சுந்தரமையங்கார், சுப்புலட்சுமி அம்மாள், டி.வி.எஸ். சௌந்தரம் ஆகிய பெண்களும் காங்கிரஸின் உதவியால் மதுரையில் "சகோதரிகள் சங்கம்" என்ற அமைப்பை நிறுவினார். அச்சங்கத்தில் வெள்ளிக்கிழமைதோறும் சுமார் முப்பது பெண்மணிகள் இரண்டு மணிநேரம் நூல் நூர்பார்கள். அவர்களுக்கு வேண்டிய ராட்டினமும் பஞ்சும் தேசியப் பள்ளிக்கூடத்திலிருந்து கொடுக்கப்பட்டு வந்தது. இவர்களுடன் தாயாரம்மாள், சீதையம்மாள், முனியம்மாள், டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் ஆகியோரும் பணி புரிந்தனர். பல தேசியம் சம்பந்தமான செய்திகளையும் இவர்கள் விவாதித்தார்கள். இங்கு வரும் பெண்களுக்கும் ராட்டின பயிற்சி அளித்ததோடு அவர்களுக்கு கல்வியும் கற்றுக் கொடுத்தனர். போராட்ட காலங்களில் ஈடுபட்ட பெண்களுக்கு பெருத்த ஊக்கமளித்தது இச்சங்கம் தான். அந்நியத் துணிகளைப் புறக்கணிப்பதற்கு இவர்கள் தொண்டு மிகவும் உதவியது.


நீல் சிலை சத்தியாக்கிரகம்



முதன்மை கட்டுரை: நீல் சிலை சத்தியாக்கிரகம்‎

                                      
                            இச்சத்தியாகிரகம் 1927 ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி சென்னை மவுன்ட் ரோட்டிலுள்ள கர்னல் நீலின் சிலையை அகற்றுவதற்காகத் தொடங்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு தூண்டுதலாக இருந்த சம்பவம், திருமதி டி.வி.எஸ். சௌந்தரம் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட "1857 இந்தியாவில் முதல் சுதந்திரப் போராட்ட வரலாறு" என்ற வீரசாவக்கரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தடை செய்யப்பட்ட புத்தகமாகும். புத்தகம் இருக்கிறது என்று அரசாங்கத்திற்கு தெரிந்தால் உடனே அவர்கள் வீட்டில் சோதனை நடக்கும். 
                              
                            எவ்வளவோ கஷ்டங்களிருந்தும் தைரியமாகவும், வெற்றிகரமாகவும் இப்புத்தகத்தை பாண்டிச்சேரியிலிருந்து கொண்டு வந்து இவர் எளிய தமிழில் மொழி பெயர்த்துதவினார்.இப்புத்தகத்தை படித்தபின் தான் கர்னல் நீல் அவர்கள் 1857 புரட்சியின்போது செய்த கொடுமைகள் தெரிய வந்தன. அக்கொடியவன் சிலையை எப்படியாவது அகற்றிவிட வேண்டுமென்ற தேசபக்தி மேலோங்கியது. உடனே ரெ. சிதம்பர பாரதி, ரா. ஸ்ரீநிவாஸ வரதன், பத்மாசனி அம்மாள் ஆகிய மூவரும் போராட்டத்திற்கான திட்டம் வகுத்து, திருநெல்வேலி சுப்பராயலு நாயிடுவையும், இராமநாதபுரம் முகம்மது சாலியாவையும் போராட்டத்தை தொடங்குவதற்கு அனுப்பத் தீர்மானித்தனர்.
       
                            அவர்களுக்கு சென்னை செல்வதற்குரிய செலவை பத்மாசனி அம்மாள் தன் கொலுசை அடகு வைத்து கொடுத்து உதவினார். இருவரும் ஆகஸ்ட் 11-ஆம் நாள் தேசியக்கொடி, பூமாலை, உளி, சம்மட்டி, ஏணி முதலியவற்றுடன் சென்று சிலையை உடைக்க ஆரம்பித்தனர். சற்றுநேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடந்தது. பலர் கைதானார்கள். தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்தும் பெண்கள் வந்து இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

                            அவர்களில் ஒருவரான சேலம் அங்கச்சி அம்மாள் செப்டம்பர்    1-ஆம் நாள் கழுத்தில் மாலையுடனும் கையில் கோடரியுடனும் போலீசை மீறி சிலையை உடைக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலும், 7 ரூபாய் அபராதமும் விதித்து தண்டிக்கப்பட்டார். இப்போராட்டத்தில் கடலூரைச் சேர்ந்த அஞ்சலையம்மாளும் அவர் மகள் அம்மாகண்ணு அம்மாள் என்ற 12 வயது சிறுமியும் செப்டம்பர் 6-ஆம் நாள் கைது செய்யப்பட்டு அஞ்சலையம்மாளுக்கு 25 ரூபாய் அபதாரமும் அதில் தவறினால் ஒருவார கடுஞ்சிறைத் தண்டனையும் அம்மாகண்ணு அம்மாவுக்கு நான்கு வருடம் குழந்தைகள் இல்லத்தில் வைப்பது என்ற தண்டனையும் விதிக்கப்பட்டது.அஞ்சலையம்மாவைத் தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. இவர்பேச்சில் பெண்கள் வசீகரிக்கப்பட்டு தேச பக்தி கொண்டவர்களாகி விடுவார்கள். இவரை தென்னாற்காடு மாவட்ட வேலுநாச்சியார் என்று மக்கள் செல்லமாக அழைத்தனர்.


சைமன் குழு எதிர்ப்பு



                                   தமிழ்நாட்டில் சைமன் குழு எதிர்ப்பு நடவடிக்கைகளை முதலில் எடுத்தவர் அன்னி பெசன்ட் அம்மையார் அவர்களே. 1927-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் சென்னையில், பெண்கள் அடங்கிய குழு ஒன்றை சைமன் குழுவை எதிர்க்கும் பணிக்காகத் தோற்றுவித்தார்.ஏராளமான சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவற்றில் யாமினி பூர்ண திலகம்மா, திருமதி. மாசிலாமணி, திருமதி. ருக்மணி லட்சுமிபதி மற்றும் பலர் சொற்பொழிவாற்றினார்கள்.சென்னையைச் சேர்ந்த இந்தியப் பெண்கள் அமைப்பும் சைமன் குழுவை இரண்டு காரணங்களுக்காக எதிர்த்தது. ஒன்று அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறாதது. மற்றொன்று பெண்கள் இடம் பெறாதது


சட்டமறுப்பு இயக்கம்


                                                 சிறையிலடைக்கப்பட்ட பெண்கள் மிகவும் கொடுமைக்குள்ளானார்கள். வேலூர் மத்தியச் சிறையிலுள்ள பெண் அரசியல் கைதிகளிடம் குங்குமமும் அவர்கள் கையிலணிந்திருந்த வளையல்களும் பலாத்காரமாகப் பறிக்கப்பட்டன.அவர்களுக்கு அளிக்கப்பட்ட படுக்கைகள் மிகவும் அசுத்தமாக இருந்தன. அவர்களுக்கு ஒருவாரத்திற்கு குளிக்கக் கொடுக்கும் எண்ணெய் ஒருநாளைக்குக் கூட போதுமானதாக இராது. சாப்பிடக் கொடுக்கும் சாதத்திலும், மாவிலும் பூச்சிகள் நிரம்பி இருக்கும். நூறு பெண்கள் வரை ஒரு கழிப்பிடத்தைத்தான் பயன்படுத்த வேண்டும். கல் உடைத்தல், கம்பளி நெய்தல் போன்ற வேலைகள் செய்யவேண்டும். சென்னை குற்றவாளிகள் திருந்துவதற்கான சிறையில் அரசியல் கைதிகளும் மற்ற குற்றவாளிகளும் சேர்ந்து ஒரே பிரிவில் பன்னிரெண்டு பேர் தூங்க வேண்டும். இச்சத்தியாக்கிரகத்தில் சென்னை ராஜதானியில் மட்டும் பிப்ரவரி மாதம் 1933 வரை கைதாகி சிறை சென்றவர்கள் எண்ணிக்கை 13674. அவர்களில் 633 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


                                                 பெண்கள் அதிக அளவு ஈடுபட்ட போராட்டம் இதுவேயாகும். 1929 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் லாகூரில் நடந்த தேசிய காங்கிரஸ் மாநாடு சட்ட மறுப்பு போராட்டம் தொடங்க வேண்டுமென்று தீர்மானித்து காந்தியடிகளிடம் சகலப் பொறுப்புகளையும் ஒப்படைத்தது. காந்தியடிகள் வகுத்த திட்டங்களை அப்போதைய வைசிராய் இர்வின் பிரவு நிராகரித்தவுடன் தான் அறிவித்தபடி அவர் சபர்மதி ஆசிரமத்திலிருந்து சுமார் 150 தொண்டர்களுடன் பம்பாய்க் கடற்கரையிலுள்ள தண்டீ என்ற இடத்திற்கு உப்பெடுப்பதற்காக பாதயாத்திரை தொடங்கினார். அச்சம்பவத்தில் ஏராளமான சத்தியாக்கிரகிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். காந்தியடிகளுக்கு ஆறு வருடம் தண்டனை கொடுக்கப்பட்டது. உடனே தேசமெங்கும் சுதந்திர ஆர்வம் பொங்கி எழுந்தது.தமிழ்நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போராட்டம் நடத்த வேண்டுமென்று ராஜகோபாலாச்சாரி அவர்கள் விரும்பினார். தஞ்சாவூரிலுள்ள வேதாரண்யம் கடற்கரையில் உப்பெடுப்பதென்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1930 ஏப்ரல் 13-ஆம் தேதி வேதாரண்யம் சென்று உப்பு காய்ச்சத் தொடங்கியபோது கைது செய்யப்பட்டார். அடுத்து கே. சந்தானம் அவர்கள் இரண்டாவது தலைவராக நியமிக்கப்பட்டார். ருக்மணி லட்சுமிபதி அம்மையாரும் உடன் ஒத்துழைத்தார்.

                                                     இவ்வம்மையார் 1929-ஆம் ஆண்டில் "சென்னை இளைஞர் சங்கம்"’ என்ற அமைப்பை தொடங்கி இளைஞர்களிடமும், மகளிரிடமும் தேச பக்தியை ஏற்படுத்த உழைத்தார்.வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று நடத்தினார். இவர் இருநூறு ஆண் சத்தியாகிரகிகள் மத்தியில் ஒரே பெண.; முகாமில் ஆண்களுடனேயே தங்குவார். இவர் அரசு அலுவலர்கள்; வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அவர்கள் அரசாங்கத்திடம் கொண்டுள்ள பற்று குறைந்து தேசபக்தி ஏற்படும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கினார். சத்தியாக்கிரகத்தை அடக்குவதற்காக, மே மாதம் 14-ஆம் நாள் அம்மையார் அவர்கள் கைது செய்யப்பட்டு ஒருவருடம் சாதாரண சிறைத் தண்டனையில் தஞ்சாவூர் சிறையில் வைக்கப்பட்டார். வேதாரண்யத்தில் சத்திக்யாகிரகம் நடந்து கொண்டிருந்தபோது சென்னை நகரிலும் தி. பிரகாசம் அவர்கள் தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது. துர்காபாய் அம்மாள் என்ற பெண் தொண்டர் தலைமை ஏற்று உதயவரம் என்ற இடத்தில் முகாம் ஏற்படுத்தினார்கள்.

                                    மே மாதம் இரண்டாம் நாள் இவ்வம்மையார், கிருஷ்ணம்மா மேலும் சில பெண்கள் உப்புச் சட்டத்தையும், தடையுத்தரவையும் மீறி; சென்னை சாந்தோம் கடற்கரையில் உப்புக் காய்ச்சத் தொடங்கியபோது போலீஸார் அவ்வுப்புப்பானைகளை உடைத்ததோடு கூட்டத்தையும் கலைத்தனர்.துர்காபாய் அம்மையார் வட ஆற்காட்டிற்குச் சென்று ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றினார். பின்னர் மே மாதம் 25-ஆம் தேதி உப்புச் சட்டத்தை மீறி உப்புக் காய்ச்சினார். காந்தியடிகளின் விருப்பத்திற்கிணங்க, கல்லூரி, கல்விக் கூடங்கள், அந்நியத் துணிக்கடைகள், மதுபான கடைகள் இவற்றை மறியல் செய்யும் போராட்டத்திலும், கதர் உற்பத்தியிலும் பெண்கள் ஈடுபட்டனர். இவர்கள் கடமை என்னவென்றால் வியாபாரிகளை அணுகி அவ்வியாபாரத்தை விட்டுவிடுமாறும், வாடிக்கையாளர்களிடம் அப்பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்குமாறும் அறிவுரைக்க வேண்டும்.

                                   இவை பயன் தரவில்லையென்றால் கடைகளுக்கு முன்னால் படுத்து விற்பனையை தடை செய்யவேண்டும். இதுவே காந்தியடிகளின் அறிவுரை. இவ்வறிவுரைக்கு இணங்க தமிழகப் பெண்கள் காங்கிரஸ் கமிட்டிகளில் சேர்ந்து இப்போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார்கள். இவர்கள் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் லத்தியாலும், சிறை தண்டனையினாலும் ஒடுக்கியது. இந்த தண்டனைகளையெல்லாம் பொருட்படுத்தாது மேலும் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.


                                அந்நியத்துணிக்கடைகள் மறியல் போராட்டத்தில் முதன்மை வாய்ந்தவர் சென்னை எஸ். அம்புஜம்மாள் ஆவார். இவர் தன் தந்தை எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் விருப்பத்திற்கு மாறாக காந்தியடிகள்பால் கொண்ட பற்றினால் 1930-ஆம் ஆண்டில் பத்து நாட்கள் தொடர்ந்து துணிக்கடைமறியல் செய்தார். இவரும் ஞானம்மாள மற்றும் இதர பெண்களும் சென்னையில் ராட்டன் பஜாரில் உள்ள அந்நியத் துணிக்கடைகளின் முன்னால் மறியல் செய்தனர். இதைத் தடுப்பதற்காக இவர்கள் மீது ரப்பர் குழாய் மூலம் சாக்கடைநீர் வீசியடிக்கப்பட்டது. எனினும் அச்சமில்லாமல் தொடர்ந்து மறியல் செயதார்கள். அப்போது அரசு அம்மையாரை மட்டும் கைது செய்யவில்லை. ஆனால் அவரோடு உழைத்த ஏழு பெண்களும் கைதானர்கள். அந்நியத்துணிக்கடை மறியல் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட பி.லீலாவதி, லலிதா பிரபு ஆகியோரை தலைச்சேரி நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லும் வழியில் காவலர்களால் அவர்களது தாலி அறுக்கப்பட்டது. இச்சம்பவத்தினால் அவ்விடம் "தாலியறுத்தான் தலைச்சேரி" என்று வழங்கலாயிற்று.


                                    கல்லூரி மறியல் போராட்டத்தை டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் 1930-ஆம் ஆண்டு செப்படம்பர் 3-ஆம் நாள் தொடங்கினார். அம்மையாரும் அவரோடு சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்களும், கல்லூரிகளில் மாணவர்களும், ஆசியர்களும் நுழையாதவாறு தடுத்தார்கள். மேலும் மாணவர்கள் கல்லூரிகளைப் புறக்கணிப்பதற்கான துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். இதனால் ஏராளமான மாணவர்கள் தங்கள் படிப்பை விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால் அம்மையார் அவர்கள் போராட்டம் தொடங்கப்பட்ட அடுத்த நாளே கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறைத்தண்டனை அனுபவித்தார். இதைக் கண்டித்து சென்னை இராணிமேரிக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் கல்லூரியைப் புறக்கணித்தனர்.வா.வே.சு. ஐயர் மனைவி பத்மாவதி அம்மாவும் வேறு சில பெண்களும் தடை உத்தரவை மீறித் தேசிய கொடி வணக்கம் செய்தமையால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.


                                   தினசரி தெருக்கள் தோறும் உணர்ச்சிதரும் பிரச்சாரங்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டால் கடையடைப்பு, வேலை நிறுத்தம், ஊர்வலம், பொதுக்கூட்டங்கள் யாவும் நடைபெறும். வக்கீல்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஏராளமாகக் கலந்து கொண்டனர். ராட்டையும்; கையுமாகவே அனைவரும் தென்பட்டனர். தினசரி நடைபெறும் கூட்டங்களில் சத்தியாக்கிரக நிதிக்காக பணமும், காசும், நகையும், சாமான்களும் பலர் கொடுத்தனர். பலர் சிறை சென்றனர். பத்மாசனி அம்மாளும் சிறைத் தண்டனை பெற்றார். அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து உயர் பதவி வகித்த பெண்கள் தங்கள் பதவிகளை துறந்தனர், சென்னை சட்டசபையைச் சேர்ந்த ருக்மணிலட்சுமிபதியும், கமலாதேவி சட்டோபாத்யாவும் ராஜினாமா செய்தார்கள். காந்தியடிகள் கைதானதை எதிர்த்து திருமதி. முத்துலட்சுமி ரெட்டி சென்னை சட்டசபையின் துணை தலைவர் பதவியை துறந்தார்.


                                  கைதானவர்கள் 1931 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின்படி விடுதலையடைந்தனர். இவ்வொப்பந்தத்தின்படி நாடு முழுவதும் சாத்வீக மறியல் தொடங்கப்பட்டது. மதுரையில் அக்டோபர் மாதம் வரை அந்நியத் துணிக்கடைகள் மறியல் தீவிரமாக நடைபெற்றது. இதில் டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் தலைமையில் சுமார் ஐம்பது பெண்கள் மறியல் செய்தனர். இது தொடர்பாக மதுரை பத்மாசனி அம்மாள், சீதாலட்சுமி, தாயம்மாள் ஆகியோரின் தீவிரப் பிரச்சாரங்கள் குறிப்பிடத் தக்கவை.சென்னை நகரில் இப்போராட்டம் பெரும்பாலும் பெண்களால் மட்டுமே நடத்தப்பட்டது. 

                                 அவர்களுக்கு துர்காபாய் அம்மாளும், திருமதி கஸினும் தலைமை தாங்கினார்கள். காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை நிராகரித்து சாத்வீக மறியல் செய்தவர்களில் பலரை அரசாங்கம் கைது செய்தது. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாவும், திருவல்லிக்கேணியை சேர்ந்த கமலாபாயும் ஆவார்கள். இவர்களுக்கு ஆறுமாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் கிருஷ்ணாபாயும் வேறு இரண்டு பெண்களும், எண்பது தொண்டர்களும் சென்னை ராட்டன் கடை வீதி துணிக்கடைகளை மறியல் செய்தபோது கைது செய்யப்பட்டு சிறை வைக்கபடபட்டார்கள், இவர்களின் முயற்சியால், ஏராளமான அந்நியத் துணி வியாபாரிகள் தங்கள் கடைகளை மூடினர்.


                                    1932-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தத்திற்கு விரோதமாக அரசு நடந்து கொண்டமையால் காந்தியடிகள் காரிய கமிட்டியுடன் ஆலோசித்து போராட்டத்திற்கான பல திட்டங்களை வகுத்தார். இதை அறிந்த வைசிராய் வெல்விங்டன் காந்தியடிகளைக் கைது செய்து காவலில் வைத்தார். இச்செய்தி எட்டியதும் தேசம் முழுவதும் கடையடைப்பு, வேலை நிறுத்தம் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தி மக்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். நாடு முழுவதும் அடக்குமுறை தலைவிரித்தாடத் தொடங்கியது. முக்கிய அங்கத்தினர்களும், தலைவர்களும் கைது செய்பப்பட்டனர். காங்கிரஸ் குழுக்களை சட்ட விரோதமான ஸ்தாபனம் என்று அறிவித்து அவைகள் கலைக்கப்பட்டன.


                                   தமிழகத்தில், காந்தியடிகள் கைது மக்களை திரண்டு எழச் செய்தது, காங்கிரஸ் நியமித்துள்ள பிரதிநிதிகளான பத்மாசனி அம்மாள், தாயம்மாள் மற்றும் சீதாலட்சுமி, முத்தம்மாள், சித்து பாக்கியலட்சுமி அம்மாள், கொண்டாலட்சுமி அம்மாள், கே.டி. கமலா ஆகிய முப்பது பெண்கள் மதுரையில் மட்டும் கைதாகி சிறை சென்றனர்.இரண்டாவது தடவையாக 1932 ஆம் ஆண்டில் அம்புஜம்மாள் துணிக்கடை மறியல் செய்தபோது கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் காவலில் வைக்கப்பட்டார். சென்னையைச் சேர்ந்த ஞானம்மாளும் இப்போராட்த்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டவர்களில் ஒருவராவார். இப்போராட்டத்திலும் ருக்மணி லட்சுமிபதியும்;, துர்காபாயும் ஈடுபட்டார்கள்.


தேசபக்தி பாடல்கள்



                                  சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற காலத்தில், தேசபக்தர்கள் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளிலும் தேசபக்தி பாடல்களுக்கே முதலிடம் கொடுத்தனர். அரசியல் கூட்டங்களிலும் தேசபக்தி பாடல்கள் பாடப்படுவது வழக்கம். அந்நாளில் தேசபக்திபாடல்கள் பாடுவதில் தனிஆர்வம்காட்டி வந்தபெண்களில் கோதை நாயகி, கே.பி.சுந்தராம்பாள் மற்றும் டி.கே.பட்டம்மாளும் சிறப்புடையவர்கள. இவாகள் கணீரெனப் பாடும் தேசபக்தி பாடல்களால் ஈர்க்கப்பட்டு போராட்ட இயக்கங்களில் பங்குகொண்ட தொண்டர்கள் ஏராளம். பாரதியின் பாடல்களை சிறப்பாக பாடும் வல்லமை பெற்றவர் கோதை நாயகி. காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் இவ்வம்மையார் பெயர் இடம்பெற்றாலே கூட்டம் ஏராளம் சேரும். மதுரகவி பாஸ்கரதாஸ் இயற்றிய பாடல்களான
  • காந்தியோ பரமஏழை சந்நியாசி 
  • தாயிடம்அன்பில்லாத சன்மம் வீணே 
  • நம்பிக்கை கொண்டெல்லோரும ராட்டை சுற்றுவோம் 
  • காந்தி லண்டன் சேர்ந்தார் 

                    என்ற நான்குபாடல்களையும் கே.பி.சுந்தராம்பாள் அருமையான முறையில் இசைத்தட்டில் பாடி மக்களிடையே கொண்டு சேர்த்தார். பாரதியாரின் பாடல்களை சென்னை அரசு தடை செய்ததை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டங்களில் இவர் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற பாடலைப்பாடி மக்களை வீறுகொண்டெழச்செய்தார்.


                     உப்பு சத்யாக்கிரகத்தையொட்டி காந்தி சிறை சென்ற போது "காந்தியோ பரம ஏழை சந்நியாசி" என்ற பாடல் இவரால் பாடப்பட்டு இசைத்தட்டில் பதிவு செய்து நாடெங்கும் பரப்பப்பட்டது. காங்கிரஸ் கொள்கையில் பற்று ஏற்பட்டு அதனால் ஓய்வு நேரங்களில் நூல் நூற்று அதை காங்கிரஸ் குழவிற்கு அனுப்பி வைத்து கொண்டிருந்தார். 1931 ஆம் ஆண்டு தனது வீட்டிலிருந்த வெளிநாட்டுத் துணிகளை தீயிட்டுக் கொளுத்தினார். தானே கதர் துணிகளை முதுகில் சுமந்து கொண்டு மயிலாப்பூரிலுள்ள அறுபத்து மூவர் திருவிழாவில் விற்று காங்கிரஸ் குழவிற்கு அனுப்பியிருக்கிறார்.

                     1932 ஆம் ஆண்டு பகத்சிங், இராச குரு, சுகதேவ் என்ற மூன்று இளைஞர்களை தூக்கிலிட்டு கொன்றபோது அதை கண்டித்து எழுதப்பட்ட பாடலான “பகத்சிங், ராச குரு, சுகதேவ் சிறைவாயிலில் கண்ணீர் வடித்தாள் பாரத மாதா …பெறற்கரிய பகத்சிங், ராச குரு, சுகதேவைப் பிரிந்தே வருந்துகிறாள் நம் அன்னை பாரத மாதா” என்ற பாடலை கே.பி.சுந்தராம்பாள் பாடி இசைத்தட்டில பதிவு செய்துள்ளார். இதற்கும் தடைவரவே அது வெகுவாகப் பரவவில்லை. நாடகக்கலைஞர்கள் மூலமே இப்பாடல் பாமர மக்களைச் சென்றடைந்தது. இவ்வாறு பல பாடல்கள் மூலம் இவர் தேசபற்றினை மக்களிடம் ஏற்படுத்தினார். அந்நாளில் இவர் பாடியும், பேசியும் பெரும் கூட்டம் கூடியப் பிறகே காங்கிரஸ் தலைவர்கள் பேசத் தொடங்குவர்.

எஸ்.ஆர்.ரமாமணிபாய் பாடிய  

"ஆடு ராட்டே மகிழ்ந்தாடு ராட்டே 


சுய ஆட்சியைக் கண்டோமென்றாடு ராட்டே"


                                என்ற பாடல் கதராடை உற்பத்தி மூலம் சுய ஆட்சியை பெறமுடியுமென்ற கருத்தை வலியுறுத்தியது. மதுரை எம்.கண்ணம்மாள் பாடிய "சத்யமெங்குமே தளரா நாடு-இந்து தேசமதைப்புகழ்ந்துபாடு….” என்ற பாடலும் பிரபலமானவை.


                               தங்களின் எழுத்துக்கள் மூலமும் பலர் தேசபக்தியை மக்களிடம் பரப்பினர். அவர்களில் பெண்களும் அடங்குவர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பண்டிதை அசலாம்பிகை அம்மையார். அவர் இயற்றிய நூல்களான காந்திபுராணம் மற்றும் திலகர் புராணம் இவரின் தேசபற்றிற்கு எடுத்துக்காட்டு.



தனிநபர் சத்தியாகிரகம்



                                     அடக்குமுறை தீவிரமாகவே நாட்டில் இயக்கம் ஒருவாறு மந்தமடைந்தது. இதைப் பார்த்து தனிப்பட்ட சட்ட மறுப்புக்கு காந்தியடிகள் அனுமதி வழங்கினார். ஒவ்வொருவரும் கைதாகும் வரை சளைக்காது சேவைசெய்து கொண்டே இருக்கவேண்டும் என்று அவர் தனிப்பட்ட சட்டமறுப்பின் பெருமையை எடுத்துக் கூறினார். பின்னால் காந்தியடிகளும் சட்ட மறுப்பு செய்து தண்டிக்கப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் பல பெண்கள் பங்கு கொண்டு சிறை சென்றனர். 1940 நவம்பர் திங்கள் 21ஆம் நாள் ருக்மணி லட்சுமிபதி சத்தியாக்கிரகம் நடத்தியமையால் ஓராண்டு காலம் சிறைத்தண்டனை பெற்றார். மதுரையில் கே.பி.சானகிஅம்மாள் இரண்டாம் உலகப் போருக்கெதிராகப் பிரச்சாரம் செய்தபோது கைதானார். மேலும்; மதுரையைச் சேர்ந்த சொர்ணம்மாள் மற்றும் செல்லம்மாள் பொதுக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றியமைக்காகக் கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டனர். அவர்களைப் பின்பற்றி மதுரையில் அகிலாண்டத்தம்மாள், லட்சுமிகாந்தன்பாரதி, திருமதி. சௌந்தரம் ராமசந்திரன், திருமதி. கிருஷ்ணசாமி, திருமதி. ராமசாமி ஆகியோர் சிறை சென்றனர்.


                                 குமாரமங்கலத்து சமீந்தாரினி இராதாபாய் சுப்பராயன் உலகப்போருக்கெதிராக எட்டு பக்கங்களில் தட்டச்சு செய்யப்பட்ட பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.


                                 தூத்துக்குடியைச் சேர்ந்த சி.ஆர். சாரதாம்பாள் அம்மாள் மற்றும் கரூரைச் சேர்ந்த பியாரி பீபி, ஆகியோர் இச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டனர். சரஸ்வதி பாண்டுரங்கம் ஆறு மாத சிறைத்தண்டனை அடைந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் அவருடைய இரண்டு வயது மகளையும் ஆறு மாத மகனையும் இழந்தார்.



வெள்ளையனே வெளியேறு இயக்கம்


                               சுதந்திரப் போராட்டத்தின் கடைசி அத்தியாயம் 1942 ஆம் ஆண்டில் நடந்த 'வெள்ளையனே வெளியேறு' போராட்டமாகும். இப்போராட்டத்தின் முக்கிய அம்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம். அந்தோணி அம்மாளும், பேச்சியம்மாளும் பங்கஜ மில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கு பெற்றமைக்காகக் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் காவலில் வைக்கப்பட்டார்கள். கோயம்புத்தூரைச் சேர்ந்த குட்டியம்மாள் மற்றும் சோலையம்மாள் ரயில் தண்டவாளத்தைத் தகர்க்க முனைந்தமையால் கைது செய்யப்பட்டு முறையே மூன்று மாதம், ஆறு மாதம் தண்டனை பெற்று கோயம்புத்தூர் சிறையில் வைக்கப்பட்டார்கள். சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவிகளும் வகுப்பறைகளைப் புறக்கணித்து போராட்டத்திற்கு ஆரதவு தெரிவித்தனர்.


                              வெள்ளையரை எதிர்த்து மதுரையில் கண்டன ஊர்வலங்கள ஆகஸ்ட் மாதத்திலிருந்து அக்டோபர் வரை தொடர்ந்து நடத்தப்பட்டன. இதில் பெருமளவு பெண்கள் கலந்து கொண்டனர். இதனால் கோபமடைந்த போலீஸ் அதிகாரி தீச்சட்டி கோவிந்தன் மற்றும் பிற போலீசார் சொர்னம்மாள் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மதுரையில் வாழ்ந்து வந்த லட்சுமி பாய் ஆகிய இருவரையும் வாகனத்தில் ஏற்றிச் சென்று 8 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அழகர் கோவில் சாலையில் ஒரு காட்டில் இறக்கி அவ்விரு பெண்களின் ஆடைகளையும் பிடுங்கிக்கொண்டு அடித்து உதைத்தனர். இதுதான் சுதந்திரப்பாதை என்று கூறி ஒரு காட்டுப்பாதையில் அவர்களைத் தூக்கி வீசினர். இரவு முழக்க அங்கே மறைவிடத்தில் மறைந்திருந்துவிட்டு காலையில் அங்கிருந்த விவசாயிகள் உதவியால் ஆடைகள் பெற்று கட்டிக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தனர்.அண்ணாமலைப் பல்கலைக் கழகம், இராணி மேரி கல்லூரி மற்றும கிறித்தவக் கல்லூரி மாணவியர் கல்லூரிகளை புறக்கணித்துவிட்டு பேரணிகளும், மறியல் போராட்டங்களும் நடத்தினர். புகழ்பெற்ற ஹார்மோனியக் கலைஞரான எம்.ஆர்.கமலவேணி பல தேசியப்பாடல்கள் பாடியவர். மக்களின் தேசிய உணர்வை தூண்டிய இவரது பாடல்கள் இவ்வியக்கத்தின்போது தடை செய்யப்பட்டது. இவர் பின்வரும் பாடலான


அண்டம் கிடுகிடுங்க லண்டன் நடுநடுங்க
அகிம்சைப்போர்தொடுத்தார் காந்திமகான்


                                என்றப் பாடலை உணர்ச்சியோடு பாடி ஹார்மோனியம் வாசித்தார். இதனால் போலீசார் இவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். தன் ஒருவயது கை குழந்தையுடன ஆறுமாதம் சிறையிலிருந்தார்.


                             டி.கே.பட்டம்மாள் சிறுவயதிலேயே பாரதியின் பாடல்களைப் பாடி தேசப்பற்றினை வளர்த்தவர். காந்தியடிகள் காஞ்சிபுரம் வந்திருந்தபோது அவர் முன்னிலையில் "வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ…. கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம்வாங்கினால் கை கொட்டி சிரியாரோ…..” எனும் பாடலைப்பாடி பாராட்டினைப் பெற்றவர்.


                          பாடகியும், நடிகையுமான எம்.ஆர்.கமலவேணி தேசபக்தி பாடல்கள் தவிர வேறு எந்தப் பாடலும் பாடுவதில்லை என்று உறுதிமொழி எடுத்திருந்தார்.


நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய ராணுவம்


                     தமிழக மகளிர் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சென்று இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய நிகழ்ச்சிகள் உண்டு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் குடும்பத்தோடு மலேசியாவிற்குச் சென்ற வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்ற வீராங்கனை. இவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய ராணுவத்தில் சேர்ந்து இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்டவர். இந்திய சுதந்திரத்திற்காக தன் ராணுவத்திற்கு நிதி கொடுங்கள் என்று நேதாஜி கூறியதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு இவர் தான் போட்டிருந்த ஆறு பவுன் வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார். மீண்டும் நேதாஜி பாரத நாட்டுக்காக ராணுவப் படையில் அணிதிரளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தவுடன் தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு நன்கொடையாகக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், மகளிருக்கென்று அமைந்த 'ஜான்ஸிராணி ரெஜிமெண்ட்'டில் சிப்பாயாகச் சேர்ந்தார். 1000 பெண்கள் கொண்ட அப்படையில் முதலில் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பலரகத் துப்பாக்கிகளைச் சுடும் பயிற்சி தரப்பட்டது. அப்படி முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில் கோவிந்தாம்மாளும் ஒருவர். இவருடைய நேர்மையைப் பாராட்டி நேதாஜி இவருக்கு ‘லாண்ட்ஸ் நாயக்’ என்று பதவி உயர்வு அளித்தார். 1945 ஆம் ஆண்டு வரை இவர் அந்த இராணுவத்தில் பணியாற்றினார்.


                             லட்சுமிசுவாமிநாதன், ஆசாத் இந்து அமைச்சரவையில் சமூகப்பணி மற்றும் மருத்துவத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். மருத்துவப் பணியைத் துறந்துவிட்டு ஜான்சிராணி ரெஜிமென்ட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இவரை அழைத்தபோது எவ்விதத் தயக்கமும் காட்டாது மருத்துவப்பணியை துறந்துவிட்டு, அப்பொறுப்பை ஏற்று செயல்படத் தொடங்கினார். தமது இயக்கத்திற்கு ஆதரவு திரட்டும் பொருட்டு ஆசியாவின் பல பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களைச் சேர்த்து கொண்டார்.


                           ஜனவரி 1943 ஆம் ஆண்டில் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் ராதாபாய் சுப்புராயன் தலைமையில் தேசிய கொடியை உயர்த்தி வந்தேமாதரம் பாடி சுதந்திர தினம் கொண்டாடினார்கள். ஆதனால் ராதாபாயும் அவருடன் இருந்த தமயந்தி எனற பெண்ணும் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறையிலடைக்கப்பட்டனர். அம்முசுவாமி நாதனும், மஞ்சுபாசினியும் சென்னையில் ஊர்வலங்கள், கடையடைப்புகள் மற்றும் சொற்பொழிவுகள் நடத்த காரணமாக இருந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


                          மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகளிலிருந்து இந்தியா சுதந்திரமடைய வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் தங்களைப் போராட்டங்களில் அர்ப்பணித்த தமிழக மங்கையர்களின் வீரப் போரட்டம் நமக்குத் தெளிவாகிறது. சமூகக் கட்டுப்பாடுகளையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு வீராவேசத்துடன் வெளிவந்து விடுதலைக்கு வித்திட்ட இவ்வீர மகளிர் வரலாறு தமிழக வரலாற்றில் பொன்எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய ஒன்று.


ஜான்சி ராணி படை


                            ஜான்சி ராணி படை என்பது 1943ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கத்தின் பெண்கள் பிரிவாகும். இந்திய தேசிய ராணுவத்தின் ஆண்கள் படை போல் அல்லாமல் இந்த ஜான்சி ராணி படை முற்றிலும் வெளிநாட்டு இந்தியப் பெண்களை வைத்தே அமைக்கப்பட்டது. 20 சிங்கப்பூர் பெண்களை கொண்டு லட்சுமி சுவாமிநாதன் என்ற பெண்ணால் அமைக்கப்பட்ட இப்படையில் 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். 18 வயது முதல் 28 வயதுள்ள பெண்களே இப்படையில் இணைய முடியும் என்பது விதி என்றாலும் 12 வயதில் இருந்து 45 வயது வரை உள்ள பெண்களும் இப்படையில் உண்மையை மறைத்து இடம்பெற்றதாக கருதப்படுகிறது. இதில் உள்ள நிறைய பெண்கள் தன் தங்க நகைகளை படையின் பொருளாதாரத்துக்காக தானம் தந்தனர். ஜானகி ஆதி நாகப்பன் இப்படையின் துணைத்தளபதியாய் இருந்தார்.

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

இலக்கண குறிப்பு  தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம்  இலக்கண குறிப்பு  : 1. நீரோசை               ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை      - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை யாவரு

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்காக காமராஜர் ஆற்றிய பணிகளை ஆராய்க

காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்:                            பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.                              கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.                           மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.                           விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படு