நடப்பு நிகழ்வுகள் CURRENT AFFAIRS
இந்தியா
ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் ரூ. 2 ஆயிரம்; குப்பையை வீசினால் ரூ. 500 அபராதம் :
- ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் ரூ. 2 ஆயிரம்; குப்பையை வீசினால் ரூ. 500 இன்று முதல் அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
- ரயில்களில் நின்று கொண்டும், ரயில் நிலையங்களில் ரயில் செல்லும் போதும் செல்பி எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சிலர் பாலங்களில் ரயில் செல்லும் போதும், ரயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் செல்பி எடுக்கின்றனர்.
- இதனால், அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தண்டவாளத்தை கடக்கும்போது, ரயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட தற்போது, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்கும்போது, ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
- இதையடுத்து ரயில் நிலையங்கள், ரயில் நிலைய வளாகம், ரயில்வே நடைமேடை, ரயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மீறி செல்பி எடுப்பவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
- ரயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை வீசி எறிபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இதை கண்காணிக்க ரயில்வே நிர்வாகம் ஊழியர்களை நியமித்துள்ளது. மீறி செல்பி எடுத்தால், குப்பை கொட்டினால் அந்த இடத்திலேய அபராதம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !!
- மஹாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வருகிறது.
- கடந்த மார்ச் 23-ஆம் தேதி ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அடுத்த மூன்று மாதங்களில் அமலாகும் என்றும், அதற்குள் மாற்று ஏற்பாடுகளை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், பயன்பாட்டாளர்கள் செய்து கொள்ள வேண்டும் என்றும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது.
- அவகாசம் முடிந்து முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருவதாகவும், முதன் முறை பிளாஸ்டிக்குடன் பிடிபடுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் முறை 10 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் முறை 25 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
- மும்பை, மஹாராஷ்டிராவுக்கு சுற்றுலா வரும் பயணிகளும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வீசி எறிந்தால் இந்த தடை உத்தரவு பொருந்தும் எனவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு
- காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒன்பது பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- காவிரி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு இன்னும் தங்களது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. மேலும், நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் குமாரசாமி முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
- இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவை தவிர்த்து, மத்திய மற்றும் 3 மாநில உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை தலைவர் மசூத் ஹுசைன் அந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் அமையும் என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் தமிழகம் சார்பில் இரண்டு உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் கர்நாடக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை - புனே ஹைபர்லூப் திட்டத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடியில் 15 கி.மீ. சோதனை பாதை அமைக்க திட்டம்
- மும்பை - புனே இடையேயான ஹைபர்லூப் திட்டத்தின் முதல் கட்டமாக 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 15 கிலோமீட்டருக்கு சோதனை பாதையை அமைக்க விர்ஜீன் ஹைபர்லூப் ஒன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
- மும்பை - புனே இடையே பயண நேரத்தைக் குறைக்கும் ஹைபர்லூப் பாதை அமைப்பதற்கான அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டது. இதற்காக விர்ஜீன் ஹைபர்லூப் ஒன் (Virgin Hyperloop One) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் மும்பையில் இருந்து புனேவுக்கு மணிக்கு சுமார் 700 மைல் வேகத்தில், 25 நிமிடத்தில் செல்ல முடியும்.
- இந்நிலையில், 140 கி.மீ. தொலைவுக்கான இப்பாதையில் 15 கி.மீ. தொலைவுக்கு முதல் கட்டப் பணிகளை விர்ஜீன் நிறுவனம் தொடங்க உள்ளது என்றும் இப்பணிகளின் மதிப்பு ரூ.3000 கோடி என்றும் புனே மெட்ரோ நகர மேம்பாட்டு அமைப்பின் கமிஷனர் கிரண் கிட்டே கூறியுள்ளார்.
குளிர்சாதனப் பெட்டிகளுக்கான இயல்புநிலை அளவீட்டை 24 டிகிரி செல்சியசாக்க மத்திய அரசு முடிவு!
- மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், குளிர்சாதனப் பெட்டிகளுக்கான இயல்புநிலை அளவீட்டை 24 டிகிரி செல்சியசாக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
- ஓட்டல்கள், அலுவலகங்களில் தற்போது 18 முதல் 21 டிகிரி செல்சியஸ் அளவீட்டிற்கு ஏசி பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு டிகிரியை உயர்த்தும் போதும், 6 சதவீத மின்சாரம் சேமிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
- ஜப்பான் போன்ற நாடுகளில் ஏசிகளின் இயல்பு நிலை 28 டிகிரி செல்சியசாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பாக ஏசி உற்பத்தியாளர்களுடன் மின்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலான பயன்பாட்டுக்குரிய ஏசி பெட்டிகளை உற்பத்தி செய்யுமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 90 ஹிந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை!
- பாகிஸ்தானிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்த ஆமதாபாத் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஹிந்துகளில் 90 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது.
- குஜராத் மாநிலம், ஆமதாபாத் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் பாண்டே குடியுரிமைகளை அவர்களுக்கு வழங்கினார்.
- நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் இதுபோன்ற குடியுரிமை வழங்கப்பட்டது ஆமாதாபாத் மாவட்டத்தில்தான்.
- பாகிஸ்தானிலிருந்து வந்த ஹிந்துகளில் மொத்தம் 320 பேர் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பித்திருந்தனர். வங்கதேசத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களும் விண்ணப்பித்திருந்தனர்.
- இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டவர்கள் இனி ஆதார், கடவுச்சீட்டு உள்ளிட்ட அரசு ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றார் விக்ராந்த் பாண்டே.
உத்தரகண்ட் மாநிலத்தில் நீர்விளையாட்டுகள், படகு சவாரிக்குத் தடை!!
- உத்தரக்கண்ட் மாநிலத்தில் அனைத்து நீர்விளையாட்டுக்களுக்கும் படகு சவாரிக்கும் அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
- ரிசிகேசத்தைச் சேர்ந்த அரி ஓம் காஸ்யப் என்பவர் உத்தரக்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கங்கையாற்றின் கரையில் பல இடங்களில் தற்காலிகக் கட்டுமானங்கள் கட்டியிருப்பதாகவும், அதில் தனியார் சிலர் படகு குழாம் நடத்துவதாகவும், இவற்றால் ஆற்றின் புனிதத்தன்மைக்கு ஊறு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
- இதனால் படகு சவாரி, நீர்விளையாட்டுக்களை முறைப்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிடவும் அதுவரை படகு சவாரி, நீர்விளையாட்டுக்களுக்குத் தடைவிதிக்கவும் மனுவில் கோரியுள்ளார்.
- இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், விதிமுறைகளை வகுக்கும் வரை, அனைத்து நீர்விளையாட்டுக்களுக்கும், படகு சவாரிக்கும், வான்சாகச விளையாட்டுக்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டனர்.
2 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய 9 வயது சிறுமி!
- திரிபுராவில் மண்சரிவில் இருந்து ரெயிலை நிறுத்தி அதில் பயணம் செய்த 2000 பேரின் உயிரை காப்பாற்றிய பழங்குடி இனத்தை சேர்ந்த 9 வயது சிறுமி அம்மாநில மந்திரி விருந்தளித்து பாராட்டியுள்ளார்.
- திரிபுரா மாநிலம் தன்சேரா பகுதியை சேர்ந்தவர் சோமதி என்ற 9 வயது பழங்குடி இன சிறுமி. அந்த சிறுமியின் தந்தை ஸ்வபன் தெப்பர்மாவுக்கு ரெயில்வே துறையில் பணி வழங்கவும் திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
- திரிபுரா மாநில சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி சுதிப் ராய் பர்மன் அந்த சிறுமி மற்றும் அவளது தந்தை ஆகியோருக்கு பாராட்டி,விருந்து அளித்து மகிழ்வித்தார்.
ஆந்திராவில் கியா மோட்டார்ஸ் ஆலை!!
- தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியா தனது கார் ஆலையை ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் அமைக்க இருக்கிறது.
- இந்தியாவில் இந்த நிறுவனம் அமைக்கும் முதல் ஆலை இதுவாகும். 535 ஏக்கரில் அமைக்கப்படவுள்ள இந்த ஆலையின் மூலம் 3,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
- 2019-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த ஆலை செயல்பட ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் எஸ்யுவி ரக கார்களை மட்டும் இந்த ஆலையில் தயாரிக்க கியா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வடகிழக்கு சபையை மாற்றியமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
- மத்திய அமைச்சரவை உள்துறை அமைச்சரை (ராஜ்நாத் சிங்) வடகிழக்கு சபையின் அலுவல் வழித் தலைவராக நியமிப்பதற்கான வடகிழக்குப் பிராந்திய முன்னேற்றத்துறை அமைச்சரகத்தின் பரிந்துரையினை ஏற்றுக் கொண்டுள்ளது.
- வடகிழக்கு சபை அனைத்து எட்டு வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர் மற்றும் முதலமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சட்டரீதியான அமைப்பாகும்.
- வடகிழக்குப் பகுதி அமைச்சரகத்தின் மத்திய இணை அமைச்சர் இந்த சபையின் துணைத் தலைவராகப் பணியாற்றுவார்.
- வடகிழக்கு சபை என்பது வடகிழக்கு சபை சட்டம் 1971-ன் கீழ் சமச்சீரான மற்றும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தினை பாதுகாப்பதற்கும் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்திசைவினை வழிவகுப்பதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு உச்சநிலை அமைப்பாகும்.
தேசிய அளவிலான பழங்குடி அருங்காட்சியகம்!!
- தேசிய அளவிலான பழங்குடி ஆராய்ச்சி நிறுவனத்துடன் தேசிய பழங்குடியின அருங்காட்சியகத்தை தில்லியில் அமைக்க பழங்குடியின விவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
- பழங்குடியினத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களுக்கு ஆறு நிறுவனங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி 2016-ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் தனது உரையில் அறிவித்திருந்தார்.
- குஜராத் மாநிலத்தில் நர்மதா மற்றும் ராஞ்சியில் பிர்ஸா முண்டா சிறையில் அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு
அரசு பெண் ஊழியருக்கு இரண்டாம் பிரசவத்துக்கும் விடுமுறை அனுமதி - அரசாணை வெளியீடு
- முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த அரசு பெண் ஊழியருக்கு இரண்டாம் பிரசவத்துக்கும் விடுமுறை அனுமதிக்கலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அரசு பெண் ஊழியர்களுக்கு, இரண்டாம் பிரசவத்திற்காக அரசு விடுமுறை அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
- இதுபோன்ற பிரச்சினைகள் கோர்ட்டுகளிலும் தாக்கல் செய்யப்பட்டன. இரண்டாம் பிரசவத்துக்கு அரசு விடுப்பு கேட்டு, முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தையை பெற்ற அரசு பெண் ஊழியர்கள் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.
- அதன்படி, முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த அரசு பெண் ஊழியர்களுக்கும், இரண்டாம் பிரசவத்துக்கு மகப்பேறு விடுமுறையை அரசு அளிக்கலாம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாஸ்த்ரா மாணவருக்கு சர்வதேச ஊக்கத் தொகை!
- சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவருக்கு சர்வதேச ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
- சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.டெக். இயந்திரப் பொறியியல் நான்காம் ஆண்டு படித்து வருபவர் கண்ணன் வீரராகவன். இவர் தனது ஆய்வுப் படிப்புக்காக கேம்பிரிட்ஜ் இந்தியா ராமானுஜன் உதவித்தொகை பெற்றுள்ளார்.
- இந்த மதிப்புமிக்க விருதின் மூலம் இவர் லண்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆய்வு உதவித்தொகை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் கேம்பிரிட்ஜ் அறக்கட்டளை மூலம் வழங்கப்படுகிறது.
- கல்விக் கட்டணத்தை முழுமையாக அளிப்பதுடன், வருடாந்திர உதவித்தொகையாக 16,800 பவுண்ட்ஸ் கண்ணனுக்கு வழங்கப்படும்.
- கண்ணன் தனது பொறியியல் சார்ந்த ஆய்வுப் படிப்பை லண்டனிலுள்ள ராபின்சன் கல்லூரியில் பேராசிரியர் என். சுவாமிநாதனுடைய சூறாவளி தீவிரம் குறித்த மாடலிங் ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளவுள்ளார். இவர் தனது ஆசிரியர் ஆலோசகரான சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக முனைவர் கே. நரேனிடம் கணக்கீட்டு திரவ இயக்கவியல் ஆராய்ச்சி மேற்கொண்டார்.
- இந்தியாவிலிருந்து இந்த ஆய்வு உதவித்தொகைக்காகத் தேர்வு செய்யப்பட்ட 20 மாணவர்களில் கண்ணனும் ஒருவர்.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்கு ஆதார் அவசியம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
- எம்.பி.பி.எஸ். சேர்க்கையின்போது முறைகேடுகளைத் தடுக்க ஆதார் அட்டையைக் காண்பித்து, நகலை கட்டாயம் சமர்ப்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தமிழ்நாடு
- மானிய விலை ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்!!
- தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் நடைபெற்ற விழாவில் மானிய விலை ஸ்கூட்டர் உள்ளிட்ட 7 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
- மானிய விலை ஸ்கூட்டர்கள், பசுமை வீடுகளுக்கான பணியாணைகள், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பணி ஆணைகள் என மொத்தம் 527 பேருக்கு வழங்கப்பட்டன.
- ஓ.பன்னீர்செல்வம், மகளிர் மேம்பாட்டுக்காக அ.தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
கமல்ஹாசனின் கட்சியைப் பதிவு செய்தது தேர்தல் ஆணையம்!!
- நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது.
- மதுரையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய கமல், அதனைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.
- அதற்கான காலக்கெடு முடிவடைந்ததையடுத்து, தேர்தல் ஆணையத்தில் ஆஜரான கமல்ஹாசன், அதிகாரிகள் கோரிய ஆவணங்களைத் தாக்கல் செய்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தை அங்கீகரிக்கப்படாத மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
49 வயதில் திருமதி உலக அழகி பட்டம் வென்ற கோவை பெண்!
- அமெரிக்காவில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்று ‘திருமதி உலக அழகி’ பட்டத்தை கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ மகேஷ் வென்றுள்ளார்.
- கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ மகேஷ் (வயது 49). இவர் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணராக உள்ளார். இவருடைய கணவர் மகேஷ்குமார் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
- ஜெயஸ்ரீ மகேஷ் அமெரிக்காவில் கடந்த 13-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக நடந்த திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.
- இதில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 85 பேர் கலந்து கொண்டனர். இதில் திருமதி உலக அழகி பட்டத்தை ஜெயஸ்ரீ மகேஷ் வென்றார்.
- இவர் ஏற்கனவே கடந்த 2006-ம் ஆண்டு திருமதி கோவை அழகி பட்டத்தையும், 2016-ம் ஆண்டு திருமதி இந்திய அழகி பட்டத்தையும் வென்றுள்ளார்.
ஜூலை 1 முதல் சேலத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை!!
- சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாநகராட்சியில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கோப்பைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மருத்துவ பொருட்களுக்கான பிளாஸ்ட் உறைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- பாரம்பரிய முறைகளான வாழை இலைகள், பாக்குமட்டைகள் போன்ற பொருட்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் தலைமை கமாண்டோ சிலை திறப்பு!!
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ராணுவத்தின் முதல் தலைமை கமாண்டோவாக இருந்த கே.எம்.கரியப்பாவிற்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.
சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலை இன்று திறக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம்!
- நகரின் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.25 ஆயிரம் வரை அபராத தொகை விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- இதையடுத்து பொது சுகாதார சட்டத்தின் கீழ், பொது இடங்களில் குப்பை மற்றும் கழிவுகளை வீசுபவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராத தொகை உயர்த்தப்பட்டது.
- தெருக்களில் குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் குப்பை கொட்டினால் ரூ.1,000, வணிக வளாக உரிமையாளர் குப்பை வீசினால் ரூ.2 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட உள்ளது.
- இதேபோல பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் குப்பைகளை வீசினால் ரூ.25 ஆயிரம், சாலையோர வியாபாரிகள் குப்பை போட்டால் ரூ.100, சாலையோரங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.100 என அபராத தொகை விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- நகரின் தூய்மையை கருத்தில் கொண்டு இதனை தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
.
உலகம்
இலங்கையில் கழுதைகளுக்கான பிரத்யேக மருத்துவமனை தொடக்கம்!!
- இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்தில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கழுதைகளுக்கு பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.
- தமிழர்கள் வளர்க்கும் கால்நடைகளில் கழுதைக்கு முக்கியப் பங்கு உண்டு. சங்க இலக்கியங்களில் இவ்விலங்கு பொறைமலி கழுதை, நெடுஞ்செவிக் கழுதை என அகநானூற்றுப் பாடல்களிலும் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் என புறநானூற்றுப் பாடல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மிளகு மூட்டைகளையும், உப்பு மூட்டைகளையும் கழுதைகளின் மீது வணிகர்கள் ஏற்றிச் சென்றதை பொருநராற்றுப் படையும் (77-82), அகநானூறும் (207:5-6) குறிப்பிடப்பட்டுள்ளது.
- இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்தில் உள்ள கழுதைகள் இங்குள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் முத்து குளித்த முத்துக்களை மூட்டைகளாக கட்டி பொதி சுமக்கப் பயன்படும் வாகனங்களாக கழுதைகளே பயன்படுத்தப்பட்டன.
- மேலும் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து இருந்த காலகட்டத்தில் பயணிகளின் பொதிகளை சுமப்பதற்கும் அதிகளவில் கழுதைகள் ஈடுபடுத்தப்பட்டன.
- மன்னார் மாவட்ட கழுதைகளின் நலனை கவனத்தில் கொண்டும் கழுதைகள் குறித்து உள்ளூர் மக்களுக்கு புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் கழுதைகளுக்கான பிரத்யேக மருத்துவமனை மற்றும் பராமரிப்பு இல்லத்தை பிரிஜிங் லங்கா தன்னார்வ அமைப்பின் மூலம் மன்னாரில் தொடங்கப்பட்டது.
- இந்த மருத்துவமனையை உலக மிருகங்கள் பாதுகாப்பு மையத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஒட்டாரா குணவர்த்தன தொடங்கி வைத்தார்.
- இந்த மருத்துவமனையின் மூலம் மனிதர்கள் மூலம் காயமடைந்த கழுதைகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி மனிதர்கள் கழுதைகளை எப்படி செல்லப் பிராணிகளாகிக் கொள்வது என்று பயிற்சியும் வழங்க உள்ளது.
மெக்ஸிகோ, உயிரியல் பூங்காவில் முதன் முறையாக வைக்கப்பட்டுள்ள பாண்டா கரடி!!
- மெக்ஸிகோவில் உயிரியல் பூங்காவில் முதன் முறையாக வைக்கப்பட்டுள்ள பாண்டா கரடியை நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பேர் பார்க்க வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாண்டா கரடிகள் சீனாவில் இருந்தாலும் தற்போது மற்ற நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. அதன்படி மெக்ஸிகோவில் உள்ள உயிரியல் பூங்காவுக்கும் பெரிய அளவிலான பாண்டா கரடி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
- உலகின் அரிய வகையான, அழிந்து வரும் உயிரினங்கள் இந்த விலங்கியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்திய-சர்வதேச திரைப்பட அமைப்பான -IIFA வழங்கும் திரைப்பட விருதுகள் விழா!!
- இந்திய-சர்வதேச திரைப்பட அமைப்பான -IIFA வழங்கும் திரைப்பட விருதுகள் விழா தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது.
- அனில் கபூர், ஆயுஷ்மான் குரானா, வருண் தாவன், ஊர்வசி ரவுதாலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் விழாவில் பங்கேற்றனர். இவ்விழா வரும் 24 ம்தேதி நிறைவு பெறுகிறது.
விளையாட்டு
டிஎன்பிஎல் 2018 சீசனில் ஸ்பெக்டாகாம் தொழில்நுட்பம் அறிமுகம்
- டிஎன்பிஎல் 2018 சீசனில் பேட்டிங் தரத்தை கண்காணிக்க உதவும் ஸ்பெக்டாகாம் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
- வரும் ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை டிஎன்பிஎல்-இந்தியா சிமெண்ட்ஸ் போட்டிகள் சென்னை-திருநெல்வேலி, திண்டுக்கல் மைதானங்களில் நடக்கிறது.
- இவற்றில் ஸ்பெக்டாகாம் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலமாக ஒரு வீரரின் பேட்டிங் வேகம், திறன் மற்றும் பேட்டில் சரியான இடத்தில் பந்து பட்டதா போன்ற விவரங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும்.
- இந்ததொழில்நுட்பத்தை முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதிகாரபூர்வ கால்பந்தை சுமந்து சென்ற தமிழ்நாட்டு சிறுமி!!
- ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில், உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டம் நடைபெற்றது.
- உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில், கோஸ்டாரிகா அணியை 2க்கும் சுழியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, பிரேசில் அணி வாகை சூடியிருக்கிறது.
- இந்த போட்டியில், அதிகாரபூர்வ பந்தை சுமந்து சென்றதன் மூலம், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி நத்தானியா ஜான்(Nathania John) சுமந்து சென்று வரலாறு படைத்திருக்கிறார்.
ஸ்டார்பிக் விளம்பரத் தூதராக சுனில் செத்ரி !!
- இந்தியக் கால்பந்து அணியின் தலைவர் சுனில் செத்ரி ஆன்லைன் பொழுதுபோக்கு இயங்கு தளமான ஸ்டார்பிக்கின் விளம்பரத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- அதுமட்டுமின்றி, ரூ.20 கோடி பரிசுத் தொகை மதிப்பிலான 2018-ற்கான ஆன்லைன் இயங்குதள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியினை ஸ்டார்பிக் அறிவித்துள்ளது.
தரவரிசை
சர்வதேச அளவில் மதிப்புமிக்க பிராண்ட் பட்டியலில் ஹெச்டிஎஃப்சி வங்கி!
- சர்வதேச அளவில் மதிப்புமிக்கபிராண்ட்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட டாப் 100 நிறுவனங்களின் பட்டியலில் ஹெச்டிஎஃப்சி வங்கி 60-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
- ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 2,080 கோடி டாலராக (சுமார் ரூ.1.35 லட்சம் கோடி) மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும் நிறுவனம் 14 இடங்கள் முன்னேறியுள்ளது. அப்போது நிறுவனத்தின் மதிப்பு 1,420 கோடி டாலராக மட்டுமே காணப்பட்டது என்று ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.
- இப்பட்டியலில் கூகுள் முதலிடத்தையும், ஆப்பிள், அமேஸான், மைக்ரோஸாஃப்ட், டென்ஸன்ட், ஃபேஸ்புக், விஸா, மெக்டொனால்ட், அலிபாபா மற்றும் ஏடிடி அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
திட்டங்கள்
சமூக நிறுவன மேம்பாட்டுத் திட்டம் !!
- திம்புவைச் சார்ந்த சார்க் (SAARC) மேம்பாட்டு நிதி, இந்தியா உட்பட 8 உறுப்பினர்களின் 80 நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்காக சமூக நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினைத் தொடங்க உள்ளது.
- இந்த திட்டம் அனைத்து சார்க் உறுப்பினர் நாடுகளிலும் அமலாக்கப்பட்டுள்ளது. நன்கொடைகள் மற்றும் திரும்ப செலுத்தக் கூடிய முதலீடுகளினை பயன்படுத்தி சமூக நிறுவனங்களை அடையாளம் காண்பது மற்றும் கட்டமைப்பது இதன் நோக்கங்களாகும்.
- சமூக மேம்பாட்டு நிதி, சார்க் (SARRC)-ன் 8 உறுப்பினர் நாடுகளின் தலைவர்களால் 2010-ல் பூடானின் திம்பு நகரத்தில் நடந்த 16-வது சார்க் உச்சி மாநாட்டில் நிறுவப்பட்டது.
- ஆளும் பொது சபை இந்த எட்டு நாடுகளின் நிதி அமைச்சர்களை உள்ளடக்கியது. சமூக மேம்பாட்டு நிதியின் செயலகம் பூடானின் தலைநகரான திம்புவில் உள்ளது.
- இது தெற்காசிய மேம்பாட்டு வளர்ச்சி நிதியின் வழித்தோன்றலாகும். தெற்காசிய மேம்பாட்டு வங்கி, 1996-ல் நடப்பில் இருந்த இரண்டு முறைகளை இணைத்து உருவாக்கப்பட்டது.
- சார்க்-ன் பிராந்தியத் திட்டங்களுக்கான நிதி (SFRP) மற்றும் சார்க் பிராந்திய நிதி
- சார்க்-ன் முன்னேற்ற வளர்ச்சித் திட்டங்களுக்கான குடை போன்ற அமைப்பாக சமூக மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம்
அமெரிக்க பொருட்களுக்கு ரூ.22,120 கோடி வரி!
- அமெரிக்க பொருட்களுக்கு ரூ.22 ஆயிரத்து 120 கோடி அளவில் ஐரோப்பிய ஒன்றியம் வரி விதித்து எடுத்த நடவடிக்கை அமலுக்கு வந்தது.
- அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு இறக்குமதிக்கு 25 சதவீதமும், அலுமினியம் இறக்குமதிக்கு 10 சதவீதமும் வரி விதித்து கடந்த மார்ச் மாதம் நிர்வாக உத்தரவு பிறப்பித்தார்.
- டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றியம், கனடா, மெக்சிகோ மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.
- அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 2.8 பில்லியன் யூரோ (சுமார் ரூ.22 ஆயிரத்து 120 கோடி) வரி விதித்து எடுத்த நடவடிக்கை அமலுக்கு வந்தது.
- வரி விதிக்கப்படுகிற பொருட்களில் போர்போன் விஸ்கி, மோட்டார் சைக்கிள்கள், ஆரஞ்சு பழச்சாறு உள்ளிட்டவை அடங்கும்.
பொருளாதாரம்
அந்நிய நேரடி முதலீட்டு அறிக்கை 2018!!
- 2017ல் புதிதாக மேற்கொண்ட அந்நிய நேரடி முதலீட்டில் அமெரிக்கா முதல் இடம் கொண்டு இந்தியாவை மிஞ்சியுள்ளது.
- அந்நிய நேரடி முதலீடு புலனாய்வுத் துறையால் தொகுக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு அறிக்கை 2018-ன் படி இந்தியாவின் நேரடி முதலீடு இந்நிதி ஆண்டில் 21% குறைந்துள்ளது. எனினும் 2017-ல் அமெரிக்கா $87.4 பில்லியன் என்கிற அறிவித்த அளவை எட்டி, இந்தியாவில் குறிப்பிட்ட இடத்தினை மீட்டுள்ளது.
- இந்தியா 2015 மற்றும் 2016-களில் புதிதாக மேற்கொண்ட அந்நிய நேரடி முதலீட்டில் முதன்மையான இடத்தைக் கொண்டிருந்தது.
- மொத்த புதியத் திட்டங்கள் மற்றும் மூலதன முதலீடுகள் ஆகியவற்றில் மேற்கொண்ட அந்நிய நேரடி முதலீடுகளில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் சீனாவைத் தொடர்ந்த இடத்தில் இந்தியாவே உள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதி ரூ.29,236 கோடியாக அதிகரிப்பு !!
- நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் (எஸ்.இ.இசட்) ஏற்றுமதி சென்ற மே மாதத்தில் ரூ.29,263 கோடியாக அதிகரித்துள்ளது
- சென்ற மே மாதத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. குறிப்பாக, பயோடெக், ரசாயனம், மருந்து, கணினி, மின்னணு, பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் உற்பத்தி பங்களிப்பு முக்கியமானதாக காணப்பட்டது. இதையடுத்து, அம்மாதத்தில் ஏற்றுமதி கடந்தாண்டைக் காட்டிலும் 38 சதவீதம் அதிகரித்து ரூ.29,236 கோடியை எட்டியது.
- நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் மே வரையிலான கால அளவில் மட்டும் இம்மண்டலங்களின் ஏற்றுமதி 11 சதவீதம் உயர்ந்து ரூ.1.01 லட்சம் கோடியாக காணப்பட்டது
- சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது நாட்டின் ஏற்றுமதி வருவாய் பங்களிப்பில் நிச்சயம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த கவுன்சில் தெரிவித்துள்ளது
- கடந்த 2017-18 நிதி ஆண்டில் இம்மண்டலங்களின் ஏற்றுமதி 15 சதவீதம் உயர்ந்து ரூ.5.52 லட்சம் கோடியாக இருந்தது.
விருதுகள்
பால சாகித்ய, யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு- தமிழகத்தைச் சேர்ந்த 2 எழுத்தாளர்கள் தேர்வு
- இந்த ஆண்டிற்கான பால சாகித்ய விருதுகள் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த கிருங்கை சேதுபதி, சுனீல் கிருஷ்ணன் ஆகியோர் விருது பெறுகின்றனர்.
- இலக்கிய படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு ‘யுவ புரஸ்கார்’ விருதையும் சிறுவர் இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதையும் வழங்கி வருகிறது. இந்திய பிராந்திய மொழிப் படைப்புகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
- அதன்படி இந்த ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 23 எழுத்தாளர்களுக்கு பால சாகித்திய விருதுகளும் 21 எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
- அம்பு படுக்கை என்ற சிறுகதையை எழுதிய தமிழகத்தைச் சேர்ந்த சுனீல் கிருஷ்ணனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதுதவிர ஆஸ்தீக் வாஜ்பேயி (இந்தி), சம்ரங்னி பந்தோபாத்யா (பெங்காலி), ஈஷா தடாவாலா (குஜராத்தி), டோங்பிரம் அமர்ஜித் சிங் (மணிப்பூரி), துஷ்யந்த் ஜோஷி (ராஜஸ்தானி), முனி ராஜ்சுந்தர் விஜய் (சமஸ்கிருதம்) ஆகியோர் உள்ளிட்டவர்களின் 10 கவிதை தொகுப்புகள் யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2 நாவல்கள், ஒரு நாடகம் ஆகியவையும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- குழந்தைகளுக்கான பால் சாகித்ய புரஸ்கார் விருதுகளைப் பொருத்தவரை, தமிழகத்தைச் சேர்ந்த கிருங்கை சேதுபதி எழுதிய சிறகு முளைத்த யானை என்ற கவிதைத் தொகுப்புக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த விருதானது தாமிரப் பட்டயம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். பால புரஸ்கார் விருதுகள், குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுவ புரஸ்கார் விருது வழங்கும்தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
திருச்செங்கோடு அரசுப்பள்ளி மாணவருக்கு கவர்னர் விருது!
- பாரத சாரண, சாரணீய இயக்கம் சார்பாக சிறப்பாக செயல்படும் சாரண மாணவர்களுக்கு ராஜ்ய புரஸ்கார் விருது (கவர்னர் விருது) ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் தரணிதரனுக்கு நிகழ் ஆண்டுக்கான இராஜ்யபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
- ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக கல்வி அமைச்சர் முன்னிலையில் , தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இராஜ்ய புரஸ்கார் விருதை மாணவர் தரணிதரனுக்குவழங்கினார்.
- ஆளுநர் விருது பெற்ற மாணவர் தரணிதரன் மற்றும் அதற்கு ஊக்குவித்த பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் லோகநாதன், சாரண ஆசிரியர் திருவருள் செல்வன் ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் மாவட்ட செயலர் குமார், துணைச் செயலர் விஜய், பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் செந்தில்குமார் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
செயற்கைக்கோள் / ஏவுகணை
க்ளோனாஸ்-எம் செயற்கைக்கோள்!!
- சோயுஸ்-2.1பி ராக்கெட்டால் தாங்கி செல்லப்பட்ட க்ளோனாஸ்-எம் செயற்கைக் கோளை ப்ளெஸ்டெஸ்க் விண்வெளி மையத்திலிருந்து ரஷ்யா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இருக்கின்றது.
- க்ளோனாஸ் பிணைய அமைப்பானது நில மேற்பரப்பு, கடல் மற்றும் வான்வழி பொருட்களின் உண்மையான நிலைகளைப் பற்றியத் தகவல்களை தரக்கூடியது. இது S-ன் புவியிடங்காட்டி துல்லியத் தன்மைக்கு இணையானதாக இருக்கும்.
- இதன் வெளியீட்டுடன் சுற்று வட்டப்பாதையில் இப்பொழுது 26 க்ளோனாஸ் செயற்கைக் கோள்கள் உள்ளன.
- இது ரெஸெட்நெவ் தகவல் செயற்கைக்கோள் அமைப்பால் நிறுவப்பட்டது. (Formerly NPO-PM). இது 7 வருட வாழ்நாளைக் கொண்டது. இது குறிப்பிடத்தக்க அளவில் முந்தைய தலைமுறையின் க்ளோனாஸ் செயற்கைக் கோளை விட அதிகமாகும்.
- இந்த செயற்கைக் கோளின் இதயமாக சீசியம் அணுக் கடிகாரம் செயல்படுகிறது. இது துல்லியமான வழிகாட்டுத் தகவல்களை வழங்குகிறது.
- க்ளோனாஸ் ரஷ்யாவின் வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பு ஆகும்.
அறிவியல் தொழில்நுட்பம்
சூரியனைப் போன்று நட்சத்திரத்தை சுற்றி வரும் புதிய கோள்: ஆமதாபாத் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
- பால்வெளி மண்டலத்தில் சூரியனைப் போன்று நட்சத்திரத்தைச் சுற்றி வரும், புதிய கோள் ஒன்றை ஆமதாபாத் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
- ஆமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சிக் கூடத்தைச் (பிஆர்எல்) சேர்ந்த பேராசிரியர் அபிஜித் சக்கரவர்த்தி தலைமையிலான விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் குழுவினர் புதிய கோள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
- சனிக் கிரக பாதைக்கு கீழும், நெப்டியூன் கிரகப் பாதைக்கு மேலும் இருக்கக்கூடிய அளவுள்ள, சூரியனைப் போன்று நட்சத்திரத்தைச் சுற்றி வரும், இந்தப் புதிய கோள் பூமியின் எடையைப் போன்று 27 மடங்கு பெரிதாகவும், பூமியின் ஆரத்தைப் போல 4 மடங்கு அதிகமும் கொண்டது.
- உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 1.2 மீட்டர் தொலைநோக்கியுடன் கூடிய பி.ஆர்.எல். மேம்பட்ட தேடல் (பாராஸ்) கருவியின் உதவியுடன் கோளின் எடையளவைக் கணக்கிட்டு இந்தப் புதிய கோள் துல்லியமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இந்த பாராஸ் நிற மாலைக் கருவிதான் ஆசியாவிலேயே முதலாவதாகும்.
ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)
மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் கனடாவின் Quebec மாகாணத்திற்கும் இடையே ஒப்பந்தம்
- பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக மகாராஷ்டிரா மாநில அரசுக்கும், கனடாவின் Quebec மாகாணத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
- முக்கிய நபர்கள்
- 6 நாள் பயணமாக இந்தியா வந்தார் செஷெல்ஸ் அதிபர்
- செஷெல்ஸ் அதிபர் டேனி பவுரி 6 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார்.
- செஷெல்ஸ் இந்தியப் பெருங்கடலில் ஒரு தீவு நாடு ஆகும். ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்து 1,500 கி. மீ தூரத்தில் அமைந்த சேஷெல்ஸ் குடியரசில் 155 தீவுகள் உள்ளன. இது பிரட்டனிடம் இருந்து 1976-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி விடுதலை பெற்றது. அந்நாட்டின் சிறிய தீவு ஒன்றில் கடற்படை தளம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
- இந்நிலையில், அந்நாட்டு அதிபர் டேனி பவுரி 6 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார்.
Comments
Post a Comment