####அறிவோம்####
ஜி. எஸ். டி. வரி
- ஜி.எஸ் .டி வரிக்கொள்கை எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1,2017 முதல் உயர்திரு மோடி அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவின் கீழ் தனித்தனியாக வரி கட்டிய நிலை மாறி, பொதுவான ஒரே வரியாக மக்கள் செலுத்தலாம். இதனால் மக்களுக்கும் அரசுக்கும் பல்வேறு வகையான சாதக, பாதகங்கள் உள்ளன.சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்பட்ட பல அடுக்கு வரிகளுக்கு பதிலாக இந்தியா முழுவதும் பொருந்தும் ஒரு மறைமுக வரி ஆகும். அரசியலமைப்பு 122 வது திருத்தச் சட்டத்தின் படி, 2017, அரசியலமைப்பின் (ஒரு நூறு மற்றும் முதல் திருத்தம்) சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி ஒரு கவுன்சிலால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் அதன் தலைவர் இந்தியாவின் நிதி மந்திரி ஆவார்.
- ஜி.எஸ்.டி என்பது ஒரு மதிப்பு சேர்க்கப்பட்ட வரி (வாட்) ஆகும்., உற்பத்தி, விற்பனை மற்றும் பொருட்களின் நுகர்வு மற்றும் தேசிய மட்டத்தில் சேவைகள் மீது உள்ள விரிவான மற்றும் மறைமுக வரி விதிப்பு ஆகும். இந்திய மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் சரக்குகள் மற்றும் சேவைகளில் விதிக்கப்பட்ட அனைத்து மறைமுக வரிகளையும் அது மாற்றியமைக்கும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (GST) என்பது ஒரு மறைமுக வரி சீர்திருத்தமாகும், இது மாநிலங்களுக்கு இடையிலான வரி தடைகளை அகற்றும் மற்றும் ஒரு சந்தையை உருவாக்குவதாகும். அது நடக்க வேண்டுமென்றால் அரசியலமைப்பில் வரி செலுத்துவதற்கான பல்வேறு அதிகாரங்களின் சட்டங்களை அகற்றுவதற்கு முதலில் திருத்த வேண்டும்.
- ஜிஎஸ்டி நுகர்வு அடிப்படையிலான வரி என்பது "இலக்கு கோட்பாடு" அடிப்படையிலானது. உண்மையான நுகர்வு நடைபெறும் இடத்தில் சரக்குகள் மற்றும் சேவைகளில் பயன் டுத்தப்படுகிறது. விநியோகச் சங்கிலியில் விற்பனை அல்லது கொள்முதல் செய்யும் ஒவ்வொரு கட்டத்திலும் மதிப்பிடப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளில் GST சேகரிக்கப்படுகிறது.
- ஜிஎஸ்டிக்கு நீங்கள் பதிவு செய்தபின், உங்கள் விலையில் GST வசூலிக்க வேண்டும். இந்த ஜிஎஸ்டி கட்டணம் மற்றும் சேகரிக்கப்படும் வெளியீடு வரி என அறியப்படுகிறது. வணிக கொள்முதல் மற்றும் செலவினங்களில் (பொருட்களின் இறக்குமதி உட்பட) நீங்கள் செலுத்தும் GST உள்ளீட்டு வரி என அறியப்படுகிறது.
- இரண்டாவது விற்பனை (Second sales) என்பது இல்லை. ஒவ்வொரூ விற்பனையிலும் வரி உண்டு.
- ஆன்லைன் மூலம் மட்டுமே ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
- உள் மாநிலத்தில் செய்யும் வியாபாரத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு வியாபாரம் வேறு மாநிலத்திற்கு செய்தால் வரி விலக்கு இருந்தாலும் கண்டிப்பாக பதிவு செய்து கொண்டு உரிய வரி செலுத்த வேண்டும். ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். 10, 15, 20 ஆகிய தேதிகளில் மாதம் 3 தடவை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாக செலுத்தும் ஒவ்வொரூ நாளுக்கும் 100 ரூபாய் அபராதம். அதிகபட்சமாக ரூ 5000.
- Aggregated turnover என்பது வரிக்கு உட்பட்ட பொருட்கள் (taxable goods) + வரிக்கு விலக்களிக்கப்பட்ட பொருட்கள் (exempted good) + ஜீரோ மதிப்பு பொருட்கள் (Zero rated goods) + ஏற்றுமதி பொருட்கள் (Export goods) ஆகியவற்றின் கூட்டு தொகையாகும். மேலும் ஒரே பான் (PAN) எண்ணில் இரண்டு வேறு வேறு வியாபாரங்கள் செய்தால் அவற்றின் கூட்டு தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
- டின் எண் (Tin number) பெற்றவர்கள் VAT துறை கொடுக்கும் தற்காலிக முகவரி மற்றும் கடவுச்சொல் மூலம் GST வலைதளத்தில் பதிவு செய்ய முடியும். மற்றவர்கள் விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 30 நாட்களுக்கு உள்ளாக அல்லது முதல் பில் போடுவதற்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம். 10 ந்தேதிக்குள் பதிவு செய்து கொண்டால் அந்த மாதத்திற்குண்டான ITC கோர முடியும்.
வரி விகிதங்கள் 3 தலைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது
- 1. CGST - மத்திய சரக்கு மற்றும் சேவை வரி.
- 2. SGST - மாநில சரக்கு மற்றும் சேவை வரி.
- 3. IGST - ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி.
- இதில் IGST என்பது வேறு மாநிலத்துக்கு விற்பனை செய்யும் போது விலைப்பட்டியலில் குறிப்பிடவேண்டும். IGST தலைப்பில் வரி செலுத்த வேண்டும். IGST = CGST + SGST.
- வரி விதிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் அல்லது விற்கும் வியாபாரிகள் உரிய நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருந்தால் மற்றொருவரும் பாதிக்கபடுவர். உள்ளீட்டு வரி கடன் எடுக்க முடியாது. அந்த மாதத்தில் கூடுதல் வரி செலுத்த வேண்டும்.அல்லது அபராதம் செலுத்த நேரிடும்.
- விலைபட்டியலில் விலை குறிப்பிடும் போது வரி உள்ளடக்கியது என குறிப்பிடமுடியாது. வரி தணியே காண்பிக்க வேண்டும். அப்போதுதான் அவரிடம் வாங்குபவர் ITC தன்னுடைய ரிட்டர்ன் ல் காண்பிக்க முடியும். பேக்கிங் கட்டணங்கள், சரக்கு ஆகியவற்றை வரி கணக்கிடும்போது சேர்க்க தேவையில்லை. விற்பனை தொகைக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும்.
- விலைபட்டியல்கள் 3 நகல் இருக்க வேண்டும். நிதி ஆண்டின் துவக்கத்தில் இருந்து முடியும் வரை தொடர் எண்கள் இருக்கவேண்டும். முறையே வாங்குபவர், இடமாற்றி, விற்பவர் ஆகியோருக்கு 3 நகல்கள். உரிய அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்று குறிப்பு எண் (reference number) வாங்கி துணை விலைப்பட்டியல் போட்டு போக்குவரத்து ஆதரவு மூலம் சரக்குகள் அனுப்பலாம். துணை விலைப்பட்டியலில் அசல் விலைப்பட்டியல் எண் குறிப்பிடவேண்டும். அசல் விலைப்பட்டியலில் குறிப்பு எண் குறிப்பிடவேண்டும்.
- மூலதன பொருட்களுக்கும் ITC எடுக்கலாம். ஆனால் அவை வருமான வரி ரிடர்ன் – ல் தேய்மானம் (depreciation) கோராமல் இருக்க வேண்டும். இது குறித்து ஆடிட்டரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கலாம்.
- வணிகர்கள் கலப்பு திட்டம் மூலம் குறைந்த அளவு வரி செலுத்த முடியும். 50 லட்சம் ரூபாய் வரை "aggregated turnover" உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்பவர்கள் தகுதியானவர்கள். ஆனால் ITC எடுக்க முடியாது. சட்டம் அமலுக்கு வந்த30 நாட்களுக்கு உள்ளாக உரிய அனுமதி பெற்று செய்யலாம். வாங்கி விற்பவர்கள் மட்டும் தகுதியானவர்கள். உற்பத்தியாளர்களுக்கு அனுமதி இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரிட்டர்ன் தாக்கல் செய்தால் போதுமானது. ஆனால் கலப்பு திட்டம் மூலம் வியாபாரம் செய்யும் வணிகர்களிடம் இருந்து வாங்கி வியாபாரம் செய்யும் அடுத்த வணிகர் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். முடிந்தவரை கலப்பு வணிகர்களிடம் நுகர்வோரை தவிர மற்றவர்கள் வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது.
- சாதாரண வர்த்தகர் என்பவர் ஒரே இடத்தில் நிலையாக வியாபாரம் செய்யாமல் வேறு வேறு இடத்தில் இருந்து வியாபாரம் செய்பவர் ஆகும். உதாரணமாக பண்டிகை காலங்களில் மட்டுமே கல்யாண மண்டபம் மற்றும் வேறு இடங்களில் வியாபாரம் செய்பவர் ஆகும். அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பு இருந்தால் வருவாய் வரம்பு ஏதுமின்றி எல்லா விற்பனைக்கும் வரி செலுத்த வேண்டும். 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடையாது.
- GST சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நமக்கு மூலப் பொருட்கள் வழங்கும் வியாபாரிகள் கலப்பு திட்டம் மூலம் வியாபாரம் செய்கிறாரா அல்லது ITC எடுத்து வியாபாரம் செய்கிறார்களா என 100 சதவீதம் உறுதி செய்து கொள்ளவேண்டும் நுகர்வோரைத் தவிர மற்றவர்கள் கலப்பு திட்டம் மூலம் செய்யும் வியாபாரிகளை தவிர்ப்பது நல்லது. நாம் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். நமது வியாபாரம் மற்றவர்களைவிட குறைவாகவே நடக்கும்.
- வரி விதித்துள்ள பொருட்களை ஒரு வியாபாரி தனது பில்லில் வரி குறிப்பிடாமல் கொடுத்தால் அவர் கலப்பு திட்டம் மூலம் வியாபாரம் செய்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம். அல்லது 20 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
- GST ரிஜிஸ்டர் செய்து கொள்ள பதிவு கட்டணம் ஏதும் இல்லை. 20 லட்சம் ரூபாய் வரை job work செய்பவர்கள் பதிவு செய்து கொள்ள தேவை இல்லை.
- Job work கொடுக்கும் உற்பத்தியாளர்கள் உரிய முறையில், உரிய படிவத்தில் கொடுக்கவேண்டும்.180 நாட்களில் திரும்பி வராவிட்டால் அதை விற்பனை என கருதி அபராதம் விதிக்கப்படும்.
- B2C - பதிவுசெய்யப்படாத நபருக்கு விநியோகம். (i. e.) business to consumers. B2B – பதிவுசெய்யப்பட்ட நபருக்கு விநியோகம். (i. e.)business to business men.
- அரசு அறிவிக்கும் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள தவறியவர்கள் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தங்களது இருப்பு பொருட்களுக்கு உள்ளீடு கடன் கோர முடியாது. ஒரு வணிகர் ஒரு பில்லில் உள்ள ITC யை பில் தேதிகளில் இருந்து ஒரு வருடத்திற்குள் உபயோகித்து கொள்ள வேண்டும். ஒரு விலைப்பட்டியலில் பில் தொகை ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் இருந்தால் 1%TDS பிடித்து அடுத்த மாதம் 10 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
- வரி செலுத்தும் போது கீழ் கண்ட GST கணக்கு குறியீடு எழுத வேண்டும்.
- CGST -Tax 00010001,
- IGST -Tax-0002 0001
- SGST -Tax00030001
- வட்டி, கட்டணம், அபராதம், கூடுதல் வரி ஆகியவற்றிற்கு தனி தனி கணக்கு குறியீடுகள் உள்ளன.
- வரியுள்ள பொருட்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்தால் உள் மாநிலத்தில் அதற்கு வரி செலுத்த வேண்டும் அன்றிலிருந்து மாதாமாதம் படிவம் தாக்கல் செய்ய வேண்டும் வெளி மாநில வியாபாரங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு என்பது கிடையாது.
- ஒரு நிதியாண்டில் ஒரு கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டும் ஒரு வரி செலுத்தும் நபர் அவரது கணக்கை தணிக்கை செய்ய வேண்டும். அவர் தணிக்கை செய்யப்பட்ட வருடாந்திர கணக்குகளின் நகலை மற்றும் FORM GSTR-9B –ல் சான்றளிக்கப்பட்ட அறிக்கையை ஒரு பொது வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- ஒரு பில்லில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு மேல் வரியுள்ள பொருட்களை பதிவு செய்யப்படாத நபருக்கு விற்றால் அவருடைய முழு முகவரி மற்றும் டெலிவரி செய்யும் இடம், மாநிலம், மாநில எண் ஆகியவற்றை பில்லில் குறிப்பிட வேண்டும்.
- வெளி மாநில வியாபாரங்களுக்கு பில் போடும்போது வரியை IGST என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.உள்மாநில விற்பனை செய்யும் போது வரியை SGST, CGST என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.
- GST வரி செலுத்துபவர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு போக்குவரத்து வாடகை கொடுக்கும் போது இடமாற்றுபவர் கொடுக்கும் விலைப்பட்டியலில் உள்ள வரியை ITC-யாக எடுத்துக்கொள்ளலாம்.
- வருடாந்திர ரிட்டர்ன் அடுத்து நிதியாண்டு 31 டிசம்பருக்குள் தாக்கல் செய்ய வேண்டும். கலப்பு திட்டம் மூலம் வியாபாரம் செய்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை படிவம் GSTR-4, GSTR -4 A ஆகிய 2 படிவங்களும் GSTR-9A என ஒரு வருடாந்திர படிவமும் தாக்கல் செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்த வேண்டும். வெளி மாநில கொள்முதல் & விற்பனை செய்யக்கூடாது.
- ஒரு வியாபாரி வேறு மாநில நுகர்வோர் அல்லது பதிவு செய்யப்படாத நபருக்கு விற்றால், அதன் மதிப்பு ரூ 2,50,000 க்கு மேல் இருந்தால் அந்த விலைப்பட்டியலின் விளக்கங்கள் GSTR-1 ரிட்டர்னுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். ரூ 2,50,000 க்கு குறைவாக இருந்தால் மாநில வாரியாக மொத்த விற்பனை மதிப்பு மட்டும் தெரிவித்தால் போதுமானது.
- ஒரு மாதத்தில் ஒரு சலான் மூலம் ரூ. 10,000 வரையே ரொக்கம், காசோலை, அல்லது DD மூலம் வரி செலுத்த முடியும். அதற்கு மேல் எதுவும் செலுத்த வேண்டி இருந்ததால் இணைய வங்கி, கடன் அட்டை, பற்று அட்டை, RTGS மற்றும் NEFT மூலம் செலுத்த வேண்டும். NEFT அல்லது RTGS மூலம் செலுத்துவதாக இருந்தால் சலானுடன் இணைந்து வரும் படிவத்துடன் பேங்கில் கொடுக்க வேண்டும். விற்பனையை அதிகரிக்க கொடுக்கும் இலவச பொருட்களுக்கும் வரி செலுத்த வேண்டும்.
- GST slab rates - 5%,12%,18%,28%.
- Job work "சேவை " என்ற தலைப்பில் வரும். Job work செய்த இடத்தில் இருந்து நம் பார்ட்டிகளுக்கு பொருட்கள் அனுப்புவதாக இருந்தால் அவர் பதிவு செய்யப்படாத job worker ஆக இருந்தால் அவருடைய முழு முகவரிநம் ரிஜிஸ்டரேசன் சர்டிபிகேட்டில் இடம் பெற வேண்டும்.
- ஒரு பதிவு செய்யப்படாத jobworker - யிடம் jobwork கொடுக்கும் போது ஏற்படும் வேஸ்ட்களை அவர் விற்றால், அதற்கான வரியை நாம் செலுத்த வேண்டும்.
- நாம் அனுப்பிய சரக்குகளை ஏதாவது ஒரு காரணத்துக்காக நம் பார்ட்டி திருப்பி அனுப்பினோலோ அல்லது விலை வித்தியாசம் கேட்டாலோ அல்லது அவராகவே குறிப்பிட்ட தொகையை ஒரு பில்லில் பிடித்துக்கொன்டு மீதி அனுப்பினாலோ நாம் அவருக்கு GST சட்டத்தின்படி கடன் குறிப்பு அனுப்ப வேண்டும். அதை அந்த மாத ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும். நம் பார்ட்டியும் அவருடைய ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும்.
- பதிவு செய்யப்பட்ட வரி செலுத்தும் நபர் அட்வான்ஸ் வாங்கினால் அதை பற்றிய தகவல்களுடன் ரசீது கொடுக்க வேண்டும்.
- வரியானது பைசா கணக்கில் வந்தால் nearest rupee கணக்குப்படி round off செய்து கொள்ளலாம்.
- நாம் வாங்கிய மூலப்பொருட்கள் (வரிக்கு உட்பட்ட பொருட்கள்) நமக்கு வேண்டாம் என்று வாங்கியவர்களிடம் திருப்பி கொடுப்பதாக இருந்தால் 6 மாதத்திற்குள் திருப்பி கொடுத்து விட வேண்டும். ITC reverse செய்ய வேண்டும்.
- PAN எண் இல்லாமல் ஒரு வியாபாரி வேறு மாநில வியாபாரிக்கு பொருட்கள் அனுப்ப முடியாது
- ஒரு கோடியே ஐம்பது லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்கள் விலைப்பட்டியலில் HSN code குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து கோடி வரை வருவாய் ஈட்டுபவர்கள் முதல் 2 digit HSN code குறிப்பிட வேண்டும்.
- வண்டிகளில் பொருட்களை கொண்டு செல்லும் போது, வண்டியில் உள்ள பொருட்களின் மொத்த மதிப்பு ரூ ஐம்பதாயிரத்தை தாண்டினால் வண்டியில் உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் உரிய ஆவணங்களை கேட்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.
- கலப்பு திட்டம் மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரியுள்ள பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வரியற்ற பொருட்களை விற்பனை செய்ய கூடாது.
- 50 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்யும் உற்பத்தியாளர்கள் கலப்பு திட்டம் மூலம் வியாபாரம் செய்ய தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- GST கவுன்சிலால் குறிப்பிடப்படும் பொருட்களை தயார் செய்யும் உற்பத்தியாளர் மட்டுமே கலப்பு திட்டம் மூலம் வியாபாரம் செய்ய முடியும்.
- அரசு சில சமயம் சில பொருட்களுக்கு "reverse charge "முறையில் வரி விதிக்கும். அப்போது வாங்குபவர்கள் தான் வரி செலுத்த வேண்டும்.
- Aggregated turnover கணக்கிடும்போது value of supply கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது ஒரு பில்லில் உள்ள மொத்த மதிப்பு ஆகும். கமிஷன், சரக்கு, பேக்கிங் கட்டணம் சேர்த்து கணக்கிடபடும். சலுகை சேராது.
- GST நம்பர் எடுத்திருந்தால், வரி விலக்கு பொருட்களை விற்பனை செய்தாலும் கண்டிப்பாக nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
- GST நம்பர் எடுத்திருந்தாலே ஒவ்வொரு மாதமும் 3 முறை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். வியாபாரம் இல்லை என்றாலும் nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
- கலப்பு திட்டம் மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால், பொருளின் மதிப்பு ரூ 100 க்கு மேல் இருந்தால் அவர் வரி விலைப்பட்டியலுக்கு பதிலாக வேறு பில் கொடுக்கலாம்.Section 28 .3 (b).
- பில்லில் வரியை தவறுதலாக குறிப்பிட்டுவிட்டால் அதை சரி செய்ய கடன் குறிப்பு / பற்று குறிப்பு கொடுத்து சரி செய்ய வேண்டும்.
- GST நம்பர் எடுத்தவர்கள் தான் விற்கும் பொருட்களுக்கு முன்பணம் வாங்கியிருந்தால் ரசீது கொடுக்க வேண்டும். அதை ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும். Section 33.
- நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் ஏதாவது தவறு அல்லது விடுபட்டிருந்தாலோ, அதை சரி செய்யும் நாள் வரை உண்டான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டும்.
- முதன் முதலாக நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் உள்ள உள்ளீட்டு கடன் தொகை (நம்மிடம் உள்ள stock பொருட்களுக்கு) provisional ஆக எடுத்துச் கொள்ளப்படும். வித்தியாசம் இருந்தால் உரிய நடைமுறை பின்பற்றப்படும். Section 36
- GST சட்டத்தின்படி கணக்கு புத்தகங்களை, மற்ற ஆவணங்களை வருடாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்த பிறகு வரும் 60 மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.
- ரூபாய் ஒன்றறை கோடி வரை டர்ன்ஓவர் செய்யும் வியாபாரிகளில் 90 சதவீதம் மாநில அரசும் மீதி 10 சதவீதத்தை மத்திய அரசும் கண்காணிக்கும்.
- 15 நாள் நோட்டிஸ் கொடுத்து நமது இடத்தில் ஆவணங்களை, பொருட்களை பார்த்து ஆடிட் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. Section 63
- GST வரி வசூலித்த பிறகு, அந்த வரியை அரசுக்கு செலுத்தாமல் இருந்தால், பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, வியாபாரியின் சொத்தின்மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
- ஒரு வியாபாரியிடம் கணக்கிற்கு மேல் பொருட்கள் இருந்தால் அதை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- GST சட்டத்தின்படி மற்ற அரசு அதிகாரிகளும் GST அதிகாரிகளுக்கு உதவ அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
- GST சட்டத்தை மீறுபவர்கள் மீது அதிக பட்சம் 25000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். Section 85
- சிறிய தவறுகளுக்கும், ரிட்டர்னில் தவறுதலாக என்ட்ரி செய்திருந்தாலும் அபராதம் விதிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ 5000 வரை தவறு இருந்தால் திருத்திக்கொள்ள அபராதம் இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது. Section 86
- GST சட்டத்தின்படி முறையான ஆவணங்கள் இல்லாமல் பொருட்களை கொண்டு செல்லும் போது வழியில் அதிகாரிகள் சோதனை செய்தால் உரிமையாளர் தானே முன்வந்து வரி மற்றும் 100 சதவீதம் அபராதம் செலுத்தினால் வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் வரியும், பொருட்களின் மதிப்பில் 50 சதவீதம் செலுத்திய பிறகு வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். Section 89
- கூட்டு வியாபாரங்களில் இருந்து ஏதாவது ஒரு பார்ட்னர் விலகுவதாக இருந்தால் 30 நாட்களுக்குள் கடிதம் மூலம் கமிஷனருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
- Cenvat படி itc எடுக்க விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 90 நாட்களுக்கு முன்பு இருந்த பில்லில் உள்ள ITC யை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும் .Section 167.
- ஆர்டர், சம்மன் போன்றவற்றை வியாபாரியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினாலே அது பதிவு தபாலில் அனுப்பியதற்கு சமம் என்று Section 159 ல் கூறப்பட்டுள்ளது.
- புட்டா கட்டிங் செய்வது, துணிகளுக்கு பிராசசிங், கேலண்டரிங், பிரிண்டிங் செய்வது சேவை என்ற தலைப்பில் வரும். Schedule-2
- கலப்பு திட்டம் மூலம் வியாபாரம் செய்பவர்கள் வெளி மாநில கொள்முதல் செய்யலாம், வெளி மாநில விற்பனை செய்யக்கூடாது.
- நாம் 30 ம் தேதி பொருட்களை அனுப்பி அது அடுத்த மாதம் 16ம் தேதி நமது பார்ட்டிக்கு கிடைத்தால் GST சட்டத்தின்படி 30ம் தேதியே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அடுத்த மாதம் நாம் அதற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் 10ம் தேதிக்குள் நமது பில் பார்ட்டிக்கு கிடைத்தால் மட்டுமே அவர் ITC எடுக்க முடியும். நமது பில்லும் ஏற்றுக் கொள்ளப்படும். இல்லாவிட்டால் பொருந்தவில்லை என இருவருக்கும் அறிவிப்பு வரும்.
- வரி விகிதத்தில் மாற்றம் ஏற்படும் போது "time of supply "என்பது விலைப்பட்டியல் தேதி அல்லது பணம் வந்த தேதி இதில் எந்த செயல் முதலில் நடந்ததோ அது ஏற்றுக் கொள்ளப்படும்.
- நாம் நமது பார்ட்டிகளுக்கு தாமதமாக கட்டணம் செலுத்தி அதற்கு வட்டி, அபராதம் போன்றவற்றை செலுத்தி இருந்தால் அவையும் "Aggregated turnover "கணக்கிடும்போது சேர்த்துக் கொள்வர்.
- கூட்டு நிறுவனத்தில் கூட்டாளிகளில் மாற்றம் நடந்தால் அதை தெரியப்படுத்தி புதிய பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- அசல் பதிவு சான்றிதழ் கிடைத்த பிறகு, அந்த நாள் வரை ஏற்கனவே கொடுத்த விலைப்பட்டியல்களுக்கு பதிலாக வேறு திருத்தப்பட்ட விலைப்பட்டியலை பார்டிகளுக்கு கொடுக்கவேண்டும். Section 28
- நாம் பில்லில் தெரிவிக்கும் விலையின் மதிப்பு குறைவாக இருப்பதாக கமிஷனர் கருதினால் நமது கணக்கு புத்தகங்களை வேறு சார்ட்டர்ட் அக்கவுண்ட்டிடம் கொடுத்து தணிக்கை செய்ய கமிஷனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை நாம் கொடுக்க வேண்டும். Section 68
- மூல பொருள் சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஆகிய மூவரும் சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான படிவங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒவ்வொரு வரும் ITC CLAIM செய்ய முடியும்.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment