####அறிவோம்####
விருதுகள் மற்றும் பரிசுகள்
விருதுகள் மற்றும் பரிசுகள்
1 . "ஆசியாவின் நோபல் பரிசு" என்று அழைக்கப்படும் விருது எது?
ரமோன் மக்சேசே விருது
2 . பொருளாதாரத்துக்காக நோபல் பரிசைப் பெற்ற முதல் இந்தியர் யார்?
அமர்தியா சென்
3 . பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது?
1969
4 . தேசிய அளவில் சாதனை படைக்கும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் விருதின் பெயர் என்ன?
அர்ஜுனா விருது
5 . 1959 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற பிரிட்டிஷ் அரசியல்வாதி யார்?
வின்ஸ்டன் சர்ச்சில்
6 . உலகின் பல்வேறு மக்களிடையே அன்பு, நட்பு மற்றும் புரிதலை வளர்க்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் இந்திய அரசின் சார்பாக வழங்கப்படும் விருதின் பெயர் என்ன?
ஜவகர்லால் நேரு விருது
7 . இந்தியாவில் சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருதின் பெயர் என்ன?
துரோணாச்சார்யா விருது
8 . இசைத்துறைக்கான உயர்ந்த விருதான கிராமி விருதுகளை எந்த நாடு வழங்கி வருகிறது?
அமெரிக்கா
9 . முதன் முதலாக சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழர் யார்?
ரா.பி. சேதுப்பிள்ளை
10 . ஞான பீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் யார்?
அகிலன்
Comments
Post a Comment