####அறிவோம்####
 
பிழை திருத்தம்
 
வலுஉச் சொல்                                      திருத்தும்
1. அது அல்ல
                                          அது அன்று
2. அடமழை
                                            அடைமழை
3. அகண்ட
                                               அகன்ற
4. அதுகள்
                                                அவை
5. ஆத்துக்கு
                                            அகத்துக்கு
6. இன்னிக்கி
                                          இன்றைக்கு
7. இத்தினி
                                               இத்தனை
8. ஈர்கலி
                                                   ஈர்கொல்லி
9. உருச்சி
                                                 உரித்து
10. உந்தன்
                                              உன்றன்
11. கடக்கால்
                                         கடைக்காள்
12. காத்து
                                                காற்று
13. குளப்பாட்டி
                                    குளிப்பாட்டி
14. கோர்த்து
                                           கோத்து
15. கோடாலி
                                           கோடரி
16. தாவாரம்
                                           தாழ்வாரம்
17. நாகரீகம்
                                            நாகரிகம்
18. விக்குறான்
                                      விற்கிறான்
19. வெண்ணை
                                   வெண்ணெய்
20. வென்னீர்
                                         வெந்நீர்
21. அமக்களம்
                                     அமர்க்களம்
22. நோம்பு
                                             நோன்பு
23. பண்டகசாலை
                             பண்டசாலை
24. பேரன்
                                               பெயரன்
25. முழுங்கு
                                           விழுங்கு
26. மோர்ந்து
                                          மோந்து
27. வெங்கலம்
                                      வெண்கலம்
28. வேண்டாம்
                                      வேண்டா
29. அதுகள்
                                              அவை
30. அறுதலி
                                            அறுதாலி
31. ஆத்துக்கு
                                        அகத்துக்கு
32. ஆத்துக்காரி
                                  அகத்துக்காரி
33. அனியாயம்
                                    அநியாயம்
34. ஆவாரை
                                           ஆவிரை
35. ஊர்ச்சந்து
                                        உகிர்ச்சுற்று
36. ஒத்தடம்
                                             ஒற்றடம்
37. கடப்பாறை
                                      கடப்பாரை
38. கட்டிடம்
                                             கட்டடம்
39. குடும்பி
                                              குடுமி
40. குறித்து
                                              குருத்து
41. சிலது
                                                   சில
42. தாவடம்
                                            தாழ்வடம்
43. துளிர்
                                                  தளிர்
44. துலைத்தல்
                                     தொலைத்தல்
45. துறக்க
                                               திறக்க
46. தொவக்கம்
                                     துவக்கம்
47. நாத்தம்
                                             நாற்றம்
48. பட்டனம்
                                           பட்டணம்
49. பாதம் பருப்பு
                                  வாதுமைப் பருப்பு
50. பெறகு                                               
 பிறகு
51. பொடைத்தல்
                                  புடைத்தல்
52. முகந்து
                                               முகர்ந்து
53. விசிரி
                                                  விசிறி
பறவை விலங்குகளின் ஒலிகள்
1. சேவல் - கூவும்
2. கூகை - குழறும்
3. மயில் - அகவும்
4. கிளி - பேசும்
5. வண்டு - முரலும்
6. தேனி - ரீங்காரமிடும்
7. குருவி - கீச்சிடும்
8. ஆந்தை - அலறும்
9. காகம் - கரையும்
10. குயில் - கூவும்
11. வானம்பாடி - பாடும்
12. வாத்து - கத்தும்
13. கோழி - கொக்கரிக்கும்
14. குதிரை - கணைக்கும்
15. எருது - எக்காளமிடும்
16. அணில் - கீச்சிடும்
17. கழுதை - கத்தும்
18. பசு - கதறும்
19. புலி - உறுமும்
20. குரங்கு - அலப்பும்
தாவரங்களின் உறுப்பு பெயர்கள்:
- ஈச்சவோலை
- கமுகங்கூந்தல்
- தென்னை ஓலை
- பலா இலை
- தென்னங்கீற்று
- நெல்தாள்
- கேழ்வரகுத்தட்டை
- சோளத்தட்டை
- கம்பந்த்தட்டை
- பனையோலை
- மாவிலை
- முருங்கைக்கீரை
- மூங்கில் இலை
- வாழையிலை
- வேபந்த்தழை
- தினைத்தாள்
- வெங்காயத்தாள்
- தாழை மடல்
செடி, கொடி, மரங்களின் தொகுப்பிடம்:
- பூஞ்சோலை
- பூந்தோட்டம்
- வாழைத்தோட்டம்
- தேயிலைத்தோட்டம்
- வெற்றிலைத்தோட்டம்
- கம்பங்கொல்லை
- சோளக்கொல்லை
- ஆலங்காடு
- கொய்யாத்தோப்பு
- நெல் வயல்
- மாந்தோப்பு
- தென்னந்தோப்பு
- முந்திரித் தோப்பு
- வேலங்காடு
பறவை விலங்குகளின் இளமைப் பெயர்கள்:
- ஆட்டுக்குட்டி
- கழுதைக்குட்டி
- குதிரைக்குட்டி
- புலிப்பரள்
- குருவிக்குஞ்சு
- சிங்கக்குருளை
- மான்கன்று
- நாய்க்குட்டி
- பன்றிக்குட்டி
- பூனைக்குட்டி
- எலிக்குஞ்சு
- கீரிப்பிள்ளை
- பசுக்கன்று
- யானைக்கன்று
பறவை விலங்குகளின் வாழ்விடம்:
- ஆட்டுப்பட்டி
- எலி வளை
- குதிரைக் கொட்டில்
- குருவிக் கூடு
- கோழிக் கூண்டு
- கோழிப் பண்ணை
- மாட்டுத்தொழுவம்
- யானைக்கூடம்
பொருள்களின் தொகுப்பு:
- ஆட்டு மந்தை
- மாட்டு மந்தை
- பசு நிரை
- கற்குவியல்
- கள்ளிக்கற்றை
- சாவிக்கொத்து
- எறும்புச்சாரை
- யானைக்கூட்டம்
- மக்கள் கூட்டம்
- வீரர் படை
- விறகுக் கட்டு
- வைக்கோற்போர்
விலங்குகளின் மலம்:
- மாட்டுச்சாணம்
- ஆட்டுப்பிழுக்கை
- குதிரை இலத்தி
- யானை இலண்டம்
 
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment