####அறிவோம்####
வரலாற்றில் சில முக்கிய ஆண்டுகள்
வரலாற்றில் சில முக்கிய ஆண்டுகள்
1. 1600ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு நிறுவப்பட்டது.
2. 1613ஆம் ஆண்டு ஜஹாங்கீர் சூரத்தில் முதலாவது வணிகக்குழு அமைக்க அனுமதி வழங்கினார்.
3. 1639இல் பிரான்சிஸ்டே என்பவர் சென்னையை நிறுவி அங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அமைத்தார்.
4. 1668இல் அரசர் இரண்டாம் சார்லெசிடம் ஆண்டுக்கு பத்து பவுன்ட் வாடகைக்கு பம்பாய் நகரத்தை வணிகக்குழு பெற்றது.
5. 1690ஆம் ஆண்டு ஜாப் சார்னாக் என்ற வணிகக்குழு முகவர் சுதநூதி, கோவிந்தபூர், காளிகட்டம் என்ற மூன்று கிராமங்களை விலைக்கு வாங்கினார் பின்னர் அதுவே கொல்கத்தாவக மாறியது.
6. 1754ஆம் ஆண்டு பிளாசிப் போர்.
7. 1761ஆம் ஆண்டு மூன்றாம் பானிபட் போர்.
8. 1764ஆம் ஆண்டு பக்சார் போர்.
9. 1765 அலகாபாத் உடன்படுக்கை.
10. 1767 - 1769 முதலாம் ஆங்கிலேய - மைசூர் போர்.
11. 1772ஆம் ஆண்டு வணிகக்குழு வில்லியம் கோட்டையின் ஆளுநராக வாரன் ஹேஸ்டிங்ஸை (1772 - 1785 ) நியமித்தது.
12. 1773 ஒழுங்குமுறை சட்டம்.
13. 1774இல் அரசு பட்டையத்தின் படி உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது.
14. 1774 ரோகில்லா போர்.
15. 1775 - 1782 முதல் ஆங்கிலேய - மராட்டியப் போர்.
16. 1781இல் கொல்கத்தாவில் மதரசா நிறுவப்பட்டு அரபி, பாரசீக மொழிகள் உட்பட முஸ்லீம் சட்டங்கள் கற்ப்பிக்கப்பட்டன.
17. 1780 - 1784 இரண்டாம் ஆங்கிலேய - மைசூர் போர்.
18. 1784 பிட் இந்திய சட்டம்.
19. 1784 மங்களூர் உடன்படுக்கை.
20. 1786ஆம் ஆண்டு காரன் வாலிஸ் (1786 - 1793 ) பதவியேற்றார்.
21. 1790 - 1792 மூன்றாம் மைசூர் போர்.
22. 1791இல் காசியில் வடமொழி கல்லூரி நிறுவப்பட்டது. இந்து சட்டங்கள் கற்ப்பிக்கப்பட்டன.
23. 1792 ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்படுக்கை.
24. 1793 பட்டய சட்டம்
25. 1793 - 1798 சர் ஜான் ஷோர் பதவிவகித்தார்.
26. 1798 துணைப்படைத்திட்டம்.
27. 1798 - 1805 வெல்லெஸ்லி பிரபு பதவிவகித்தார்.
28. 1799 நான்காவது ஆங்கிலேய - மைசூர் போர்.
29. 1802 பசீன் உடன்படுக்கை.
30. 1803 - 1805 இரண்டாம் மராட்டிய போர்.
31. 1806 வேலூர் சிப்பாய் கலகம்.
32. 1813 பட்டய சட்டம்.
33. 1813 - 1823 ஹேஸ்டிங்ஸ் பிரபு பதவிவகித்தார்.
34. 1814 - 1816 கூர்க்காவினர்க்கு ஏதிரான போர்.
35. 1816 சகெளலி உடன்படுக்கை.
36. 1817 - 1818 மூன்றாம் மராட்டிய போர்.
37. 1817 நாக்பூர் உடன்படுக்கை.
38. 1818 இல் சமாச்சார் தர்பன் என்ற வங்காளமொழி வார இதழ் தோற்றுவிக்கப்பட்டது.
39. 1823 - 1828 ஆம்ஹர்ஸ்ட் பிரபு பதவிவகித்தார்.
40. 1825இல் உலகின் முதல் ரயில் பாதை இங்கிலாந்தில் போடப்பெற்றது.
41. 1829 இல் விதிமுறை 17 என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பெற்றது இதன் மூலம் சதி என்னும் உடன்கடை ஏறும் பழக்கம் ஒழிக்கப்பட்டது.
42. 1828 - 1835 வில்லியம் பெண்டிங் பிரபு பதவிவகித்தார்.
43. 1833 பட்டய சட்டம்.
44. 1833 மகல்வாரி முறை.
45. 1835ஆம் ஆண்டு ஆங்கிலம் இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது அதே ஆண்டு கொல்கத்தா மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பெற்றது.
46. 1836 - 1842 ஆக்லாந்து பிரபு பதவிவகித்தார்.
47. 1836 - 1842 முதல் ஆப்கானிய போர் நடைபெற்றது.
48. 1844 - 1848 ஹார்டிஞ்ச் பிரபு பதவிவகித்தார்.
49. 1844 - 1848 முதல் ஆங்கிலேய - சீக்கியர் போர்.
50. 1848 - 1856 டல்கெளசி பிரபு பதவிவகித்தார்.
51. 1853இல் பம்பையில் இருந்து தனேக்கு இரயில் பாதை தொடங்கப்பட்டது.
52. 1854இல் கொல்கத்தாவில் இருந்து ராணிகஞ்ச் நிலக்கரி சுரங்கம் வரை போடபெற்றது.
53. 1854இல் புதிய அஞ்சல் சட்டம்.
54. 1856இல் சென்னையில் இருந்து அரக்கோணம் வரை போடபெற்றது.
55. 1856 விதவைகள் மறுமண சட்டம்.
56. 1857இல் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டது.
57. 1857 சிப்பாய்க்கலகம்.
58. 1885 இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்.
59. 1905 வங்கப்பிரிவினை / சுதேசி இயக்கம்.
60. 1906 அகில இந்திய முஸ்லீம் லீக் தோற்றம்.
61. 1907 சூரத் பிளவு.
62. 1914 - 1918 முதல் உலகப் போர்.
63. 1916 தன்னாட்சி இயக்கம்.
64. 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை.
65. 1920 ஒத்துழையாமை இயக்கம்.
66. 1922 சுயராஜ்ஜியக் கட்சி.
67. 1928 சைமன் குழு வருகை / நேரு அறிக்கை.
68. 1929 பூரண சுயராஜ்ஜியம் அறிவிப்பு.
69. 1930 சட்டமறுப்பு இயக்கம் / தண்டி உப்பு அறப்போர்.
70. 1932 பூனா ஒப்பந்தம்.
71. 1935 இந்திய அரசு சட்டம்.
72. 1939 - 1945 இரண்டாம் உலகப் போர்.
73. 1940 தனி நபர் அறப்போர்.
74. 1942 கிரிப்ஸ் தூதுக்குழு / வெள்ளையனே வெளியேறு இயக்கம்.
75. 1946 காபினெட் தூதுக்குழு வருகை.
76. 1947 இந்திய விடுதலைச் சட்டம்.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment