####அறிவோம்####
புகழ்பெற்ற நூல் - நூலாசிரியர்
புகழ்பெற்ற நூல் - நூலாசிரியர்
1. குண்டலகேசியின் ஆசிரியர் யார்?
நாதகுத்தனார்.
2. பழமொழியின் ஆசிரியர் யார்?
மூன்றுரையரையனார்.
3. மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே.. தேனே - இவ்வரிகள் பயின்று வரும் நூல்?
சிலப்பதிகாரம்.
4. இராவண காவியம் நூலாசிரியர் யார்?
புலவர் குழந்தை.
5. சீறாப்புராணம் நூலாசிரியர் யார்?
உமறுப்புலவர்.
6. கலிங்கத்துப் பரணி நூலாசிரியர் யார்?
ஜெயங்கொண்டார்.
7. இயேசு காவியம் நூலாசிரியர் யார்?
கண்ணதாசன்.
8. நெடுந்தொகை என்ற சொல் குறிக்கும் நூல்?
அகநானுறு.
9. காமாட்சி நூலாசிரியர் யார்?
புலவர் குழந்தை.
10. பொன்னியின் செல்வன் என்ற நூலின் ஆசிரியர் யார்?
கல்கி கிருஷ்ணமூர்த்தி.
11. நான்மணிக்கடிகை நூலாசிரியர் யார்?
விளம்பிநாகனார்.
12. பாரதிதாசன் எழுதாத கவிதை நூல் எது?
ஞானரதம்.
13. ஆலாபனை நூலாசிரியர் யார்?
அப்துல் ரஹ்மான்.
14. ஆத்திச்சூடி பாடிய புலவர் யார்?
ஒளவையார்.
15. அறிவை வளர்க்கும் அற்புதக் கலைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஜானகி மணாளன்.
16. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர் யார்?
திரிகூட ராசப்பக் கவிராயர்.
17. திருவருட்பா நூலின் ஆசிரியர் யார்?
இராமலிங்க அடிகள்.
18. பிரபுலிங்க லீலை என்ற காப்பியத்தை எழுதியவர்?
சிவப்பிரகாசர்.
19. கண்ணதாசன் எழுதிய நூல்?
மாங்கனி, ஆட்டனத்தி ஆதி மந்தி, இயேசு காவியம்.
20. யாரைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து கலிங்கத்துப்பரணி பாடப்பெற்றது?
முதலாம் குலோத்துங்கன்.
21. மீனாட்சியம்மை குறம் எழுதியவர் யார்?
குமரகுருபரர்.
22. வடலூரில் இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்டது யாது?
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், சத்திய தருமசாலை, சத்திய ஞானசபை.
23. தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர் யார்?
வேதநாயகம் பிள்ளை.
24. சித்திரகவி எழுதுவதில் வல்லவர் யார்?
இராமச்சந்திர கவிராயர்.
25. பாரதியாரின் இயற்பெயர்?
சுப்பிரமணியன்.
Comments
Post a Comment