####அறிவோம்####
உவமையால் விளக்கப்படும் பொருள்
உவமையால் விளக்கப்படும் பொருள்
1.கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல் - அத்துமீறல்
2. அச்சில் வார்த்தாற் போல் - ஒரே சீராக
3. அவளை நினைத்து உரலை இடித்தாற் போல் - கவனம்
4. அரை கிணறு தாண்டியவன் போல் - ஆபத்து
5. இடி விழுந்த மரம் போல் - வேதனை
6. உமையும், சிவனும் போல் - நெருக்கம், நட்பு
7. ஊமை கண்ட கனவு போல் - தவிப்பு, கூற இயலாமை
8. எட்டாப்பழம் புளித்தது போல் - ஏமாற்றம்
9. ஏழை பெற்ற செல்வம் போல் - மகிழ்ச்சி
10. கயிரற்ற பட்டம் போல் - தவித்தல், வேதனை
11. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் - துன்பம், வேதனை
12. தொட்டனை தூறும் மணற்கேணி - அறிவு
13. உடுக்கை இழந்தவன் கைபோல் - நட்பு, உதவுதல்
14. நீரின்றி அமையாது உலகெனின் - ஒழுக்கம் இராது, ஒழுக்கு
15. தோன்றின் புகழோடு தோன்றுக - தோன்றாமை நன்று
16. வரையா மரபின் மாரி போல் - கொடுக்கும் தன்மை
17. பகல்வெல்லும் கூகையைக் காக்கைப் போல் - எளிதில் வெல்லுதல்
18. ஒருமையுள் ஆமை போல் - அடக்கம்
19. ஊருணி நீர் நிறைதல் - செல்வம்
20. மருந்தாகி தப்பா மரம் - தீர்த்து வைத்தல்
21. செல்வற்கே செல்வம் தகைத்து - அடக்கம்
22. பாராங்கல் மீது விழும் மழைநீர் போல் - சிதறிப்போதல்
23. மடவார் மனம் போல் - மறைந்தனர்
24. அகழ்வாரை தாங்கும் நிலம் போல் - பொறுமை, பொறுத்தல்
25. அத்தி பூத்தாற் போல் - அறிய செல்வம்
26. அனலில் இட்ட மெழுகு போல் - வருத்தம், துன்பம்
27. அலை ஓய்ந்த கடல் போல் - அமைதி, அடக்கம்
28. அழகுக்கு அழகு செய்வது போல் - மேன்மை
29. அடியற்ற மரம் போல் - துன்பம், விழுதல், சோகம்
30. இஞ்சி தின்ற குரங்கு போல் - துன்பம், வேதனை
31. இடி ஓசை கேட்ட நாகம் போல் - அச்சம், மருட்சி, துன்பம்
32. இழவு காத்த கிளி போல் - ஏமாற்றம், நினைத்தது கை கூடாமை
33. உயிரும் உடம்பும் போல் - ஒற்றுமை, நெருக்கம், நட்பு
34. உள்ளங்கை நெல்லிக்கனி போல் - தெளிவு
35. ஊசியும் நூலும் போல் - நெருக்கம், உறவு
36. எலியும் பூனையும் போல் - பகை, விரோதம்
37. எரிகின்ற நெய்யில் எண்ணெய் ஊற்றினார் போல் - வேதனையைத் தூண்டுதல்
38. ஒருநாள் கூத்திற்கு மீசை சிரைத்தாற் போல் - வெகுளித்தனம், அறியாமை
39. கல்லுப்பிள்ளையார் போல் - உறுதி, திடம்
40. சுதந்திர பறவை போல் - மகிழ்ச்சி, ஆனந்தம்
41. கடல் மடை திறந்தாற் போல் - விரைவு, வேகம்
42. கடலில் கரைத்த பெருங்காயம் போல் - பயனற்றது, பயனின்மை
43. கடன் பட்டான் நெஞ்சம் போல் - மனவருத்தம், கலக்கம்
44. காட்டாற்று ஊர் போல் - அழிவு, நாசம்
45. கிணற்றுத் தவளை போல் - அறியாமை, அறிவின்மை
46. கிணறு வேட்ட பூதம் பிறந்தது போல் - அதிர்ச்சி, எதிர்பாரா விளைவு
47. குன்று முட்டிய குருவி போல் - வேதனை, துன்பம், சக்திக்கு மீறிய செயல்
48. குட்டி போட்ட பூனை போல் - பதட்டம், அழிவு, துன்பம்
49. சாயம் போன சேலை போல் - பயனின்மை
50. சூரியனை கண்ட பணி போல் - மறைவு, ஓட்டம்
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment