####அறிவோம்####
பிரித்தெழுதுக
- அன்பகத்தில்லா - அன்பு + அகத்து + இல்லா
- வன்பாற்கண் - வன்பால் + கண்
- நாற்றிசை - நான்கு + திசை
- ஆற்றுணா - ஆறு + உணா
- பலரில் - பலர் + இல்(வீடுகள்)
- தாய்மையன் பிறனை - தாய்மை + அன்பின் + தனை
- சுவையுணரா - சுவை + உணரா
- வாயுணர்வு - வாய் + உணர்வு
- செவிக்குணவு - செவிக்கு + உணவு
- தந்துய்ம்மின் - தந்து +உய்ம்மின்
- வில்லெழுதி - வில் + எழுதி
- பூட்டுமின் - பூட்டு + மின்
- மருப்பூசி - மறுப்பு + ஊசி
- எமதென்று - எமது + என்று
- மொய்யிலை - மொய் + இலை
- வாயினீர் - வாயின் + நீர்
- வெந்துலர்ந்து - வெந்து + உலர்ந்து
- காடிதனை - காடு + இதனை
- கருமுகில் - கருமை + முகில்
- வெண்மதி - வெண்மை + மதி
- எழுந்தெதிர் - எழுந்து + எதிர்
- அறிவுண்டாக - அறிவு + உண்டாக
- இயல்பீராறு - இயல்பு + ஈறு + ஆறு
- நன்மொழி - நன்மை + மொழி
- எனக்கிடர் - எனக்கு + இடர்
- நல்லறம் - நன்மை + அறம்
- வழியொழுகி - வழி + ஒழுகி
- எள்ளறு - எள் + அறு
- புள்ளுறு - புள் + உறு
- அரும்பெறல் - அருமை + பெறல்
- பெரும்பெயர் - பெருமை + பெயர்
- அவ்வூர் - அ + ஊர்
- பெருங்குடி - பெருமை + குடி
- புகுந்தீங்கு - புகுந்து + ஈங்கு
- பெண்ணணங்கு - பெண் + அணங்கு
- நற்றிறம் - நன்மை + திறம்
- காற்சிலம்பு - கால் + சிலம்பு
- செங்கோல் - செம்மை + கோல்
- வெளியுலகில் - வெளி + உலகில்
- செந்தமிழ் - செம்மை + தமிழ்
- ஊரறியும் - ஊர் + அறியும்
- எவ்விடம் - எ + இடம்
- அங்கண் - அம் + கண்
- பற்பல - பல + பல
- புன்கண் - புன்மை + கண்
- மென்கண் - மேன்மை + கண்
- அருவிலை - அருமை + விலை
- நன்கலம் - நன்மை + கலம்
- செலவொழியா - செலவு + ஒழியா
- வழிக்கரை - வழி + கரை
- வந்தணைந்த - வந்து + அணைந்த
- எம்மருங்கும் - எ + மருங்கும்
- எங்குரைவீர் - எங்கு + உறைவீர்
- கண்ணருவி - கண் + அருவி
- உடம்பெல்லாம் - உடம்பு + எல்லாம்
- திருவமுது - திரு + அமுது
- மனந்தழைப்ப - மனம் + தழைப்ப
- நற்கரிகள் - நன்மை + கறிகள்
- இன்னமுது - இனிமை + அமுது
- வாளரா - வாள் + அரா
- அங்கை - அம் + கை
- நான்மறை - நான்கு + மறை
- பாவிசை - பா + இசை
- காரணத்தேர் - கரணத்து + ஏர்
- நாற்கரணம் - நான்கு + கரணம்
- நாற்பொருள் - நான்கு + பொருள்
- இளங்கனி - இளமை + கனி
- விண்ணப்பமுண்டு - விண்ணப்பம் + உண்டு
- பிநியறியோம் - பிணி + அறியோம்
- எந்நாளும் - எ + நாளும்
- நாமென்றும் - நாம் + என்றும்
- பணிந்திவர் - பணிந்து + இவர்
- சிரமுகம் - சிரம் + முகம்
- பெருஞ்சிரம் - பெருமை + சிரம்
- தண்டளிர்ப்பதம் - தண்மை + தளிர் + பதம்
- திண்டிறல் - திண்மை + திறல்
- எண்கினங்கள் - எண்கு + இனங்கள்
- வீழ்ந்துடல் - வீழ்ந்து + உடல்
- கரிக்கோடு - கரி + கோடு
- பெருங்கிரி - பெருமை + கிரி
- இருவிழி - இரண்டு + விழி
- வெள்ளெயிறு - வெண்மை + எயிரு
- உள்ளுறை - உள் + உறை
- நெடுநீர் - நெடுமை + நீர்
- அவ்வழி - அ + வழி
- தெண்டிரை - தெண்மை + திரை
- அன்பெனப்படுவது - அன்பு + எனப்படுவது
- பண்பெனப்படுவது - பண்பு + எனப்படுவது
- பற்றில்லேன் - பற்று + இல்லேன்
- போன்றிருந்தேன் - போன்று + இருந்தேன்
Popular posts from this blog
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் போதி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை யாவரு
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. விமான நிலையம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி மண்டபத்திற்கு என பலவற்றுக்கு காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு அவர் நினைவு போற்றப்படு
Comments
Post a Comment